ஶ்ரீ லங்கன் விமான சேவையின் பயணங்கள் இரத்து செய்யப்படுகின்றமை, தாமதமாகின்றமை தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமை (01) கலந்துரையாடப்படவுள்ளது. ஶ்ரீ லங்கன் விமான நிலைய தொழிற்சங்க உறுப்பினர்கள் இதில் பங்கேற்கவுள்ளதாக துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா கூறினார். கடந்த சில நாட்களாக ஶ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானங்களின் பல விமானப் பயணங்கள் தாமதமடைந்ததுடன், சில விமானப் பயணங்கள் இரத்து செய்யப்பட்டிருந்தன. Read more
29.09.1991இல் வவுனியா நொச்சிமோட்டையில் மரணித்த தோழர்கள் கனி (செபமாலை ராயப்பு – கன்னாட்டி), இராசலிங்கம் ரஞ்சன் (செட்டிபாளையம்), நவீனன் (கந்தசாமி இன்பராசா – மகிழடித்தீவு) ஆகியோரின் 32ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…
முல்லைத்தீவு நீதவான் மற்றும் மாவட்ட நீதிமன்ற நீதிபதி T.சரவணராஜா தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். அவர் தனது இராஜினாமா கடிதத்தை நீதிச்சேவை ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மைக்காலத்தில் அதிகளவில் பேசப்பட்ட சில வழக்குகள் நீதவான் T.சரவணராஜா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.