Header image alt text

இலங்கைக்கான நீடிக்கப்பட்ட  கடன் வசதி  தொடர்பான முதலாவது மீளாய்வு குறித்த கலந்துரையாடலுக்காக  சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு கொழும்பில் இன்று (27) கூடியது. சர்வதேச நாணய நிதியத்தின் (IMF)  பிரதிநிதிகள் குழுவுடன் இலங்கை அதிகாரிகள் செப்டம்பர் 14 ஆம் திகதி முதல் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு இன்று மாலை இலங்கை மத்திய வங்கியில் ஊடகவியலாளர் சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தது.  இந்த சந்திப்பில் இலங்கைக்கான சிரேஷ்ட தூதுவர்  Peter Breuer மற்றும் Katsiaryna Svirydzenka ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர். Read more

இலங்கை அதிபர் சேவையின் தரம் III-இற்கான 4,718 வெற்றிடங்களை பூர்த்தி செய்வதற்காக கல்வி அமைச்சினால் எடுக்கப்பட்ட தீர்மானத்தை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த ஆட்சேர்ப்பிற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு மீதான இடைக்கால தடை உத்தரவு வாபஸ் பெறப்பட்டதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. விடயத்துடன் தொடர்புடைய மேலும் சில மனுக்களை வாபஸ் பெறுவதற்கு மனுதாரர்களினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. Read more

மேல் மற்றும் மத்திய மாகாணங்களில் வாகன வருமான வரி பத்திரம் விநியோகிக்கும் செயற்பாடு இன்று(27) முதல் எதிர்வரும் 2ஆம் திகதி வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது. இந்த காலப்பகுதியில் காலாவதியாகும் வாகன வருமான வரி பத்திரங்களுக்கு அபராதம் விதிக்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, எதிர்வரும் 6ஆம் திகதி நள்ளிரவு 12 வரை வாகன வருமான வரி பத்திரங்களுக்காக இணையத்தின் மூலம் விண்ணப்பிக்கும் மற்றும் விநியோகிக்கும் செயற்பாடு மத்திய மாகாணத்தில் தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளது. Read more

26.09.2000ல் மரணித்த தோழர் தேவன் (கந்தையா சண்முகராஜா) அவர்களின் 23ம் ஆண்டு நினைவுநாள் இன்று…

இந்திய – கனடா விவகாரத்தில், இலங்கை இந்தியாவிற்கு ஆதரவளிப்பதாக இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட தெரிவித்துள்ளதாக Hindustan Times செய்தி வௌியிட்டுள்ளது. சீக்கிய செயற்பாட்டாளர் கனடாவில் சுட்டுக்கொல்லப்பட்டதன் பின்னணியில் இந்திய அரசாங்கம் உள்ளதாக கனடா முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு இந்தியா வழங்கியுள்ள பதில் உறுதியானதும் நேரடியானதுமாக உள்ளது  என மிலிந்த மொரகொட தெரிவித்துள்ளதாக Hindustan Times-இல் குறிப்பிடப்பட்டுள்ளது. Read more

சீனாவுக்கு சொந்தமான Shi Yan 6 ஆய்வுக் கப்பல் ஒக்டோபர் மாதத்தில் நாட்டின் கடற்பரப்பிற்குள் நுழைவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை என வௌியுறவு அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். சர்வதேச செய்தி ஊடகமொன்றுக்கு அமைச்சர் அலி சப்ரியினால் கடந்த திங்கட்கிழமை (25) வழங்கப்பட்ட நேர்காணலை மேற்கோள்காட்டி இந்திய ஊடகங்கள் இந்த செய்தியை வௌியிட்டுள்ளன. பாதுகாப்பு தொடர்பான இந்தியாவின் கரிசனை இலங்கைக்கும் முக்கியமானது என வௌியுறவு அமைச்சர் அலி சப்ரி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார். Read more

கிழக்கு மாகாணத்தில், மேலும் 700 பட்டதாரி ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்குவதற்காக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குறித்த மாகாணத்தில் தொடர்ந்தும் நிலவி வரும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில், கிழக்கு மாகாண ஆளுநர், மாகாண பொது சேவை ஆணைக்குழுவில் இன்று கையெழுத்திட்டுள்ளார். அண்மையில், கிழக்கு மாகாணத்தில் 633 ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டிருந்தன. இந்தநிலையில், தற்போது 700 பட்டதாரி ஆசிரியர்களுக்கு புதிதாக நியமனங்கள் வழங்குவதற்காக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பிரபல வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் உடலை உறவினர்களிடம் கையளிக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு நீதிமன்றம் இன்று(25) உத்தரவிட்டது. இந்த வழக்கு புதுக்கடை இரண்டாம் இலக்க நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 2 வாரங்களுக்குள் உடலை அவரது உறவினர்களிடம் ஒப்படைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டதாக பொலிஸார் கூறினர். பிரபல வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் உடல் கடந்த மே மாதம் 25 ஆம் திகதி மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டது. Read more

சக்தி மாதர் சங்கத்தின் ஏற்பாட்டில் சிறு தொழிற்பயிற்சித் தொடக்கவிழா திருகோணமலை பாலையூற்று முருகன்கோயிலடி ரெட் டைமண்ட் விளையாட்டரங்கில் சக்தி மாதர் சங்கத்தின் தலைவி திருமதி வசந்தினி சந்திரன் தலைமையில் இன்று (24.09.2023) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.00 மணியளவில் ஆரம்பமாகி மாலை 5.00 மணிவரை நடைபெற்றது. நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் – செல்வன் பிரபாகரன் தயாகரன் ( தி/இ.கி.ச.ஸ்ரீ.கோணேஸ்வரா இந்து கல்லூரி பழைய மாணவர்.
Leo Club of Trincomalee Elite கழகத்தின் துணைதலைவர். தனியார் பிரத்தியேக வகுப்பு ஆசிரியர்- o/l maths & science
A/l – bio stream)

Read more

வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் மற்றும் நிகழ்நிலை காப்பு சட்டமூலம் என்பவற்றை உடனடியாக நீக்கிக் கொள்ளுமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளது. இந்த 2 சட்டமூலங்களும் மனித உரிமைகள், ஜனநாயகம் மற்றும் சட்டவாக்கத்தை அதிகளவில் பாதிப்பதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் நேற்று(23) ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. Read more