X-Press Pearl கப்பல் விபத்திற்கான இடைக்கால இழப்பீட்டுத் தொகை நாட்டிற்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக சட்ட மா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, 878,650.53 அமெரிக்க டொலர் இடைக்கால இழப்பீடாக கிடைக்கப்பெற்றுள்ளது. எஞ்சிய 16 மில்லியன் ரூபா கொடுப்பனவு கிடைக்கப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த தொகையானது கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் செலவுகளுக்காகக் கிடைக்கப்பெற்றுள்ளது. Read more
கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சையை பிற்போட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். 2024 ஆம் ஆண்டுக்கான பாடநூல் விநியோகத்தை ஆரம்பித்து வைத்த நிகழ்விலேயே அவர் இதனை தெரிவித்தார். ஒரு மாதம் அல்லது ஒன்றரை மாதம் சாதாரண தர பரீட்சையை பிற்போட வேண்டி ஏற்படும் எனவும் அதனை உத்தியோகபூர்வமாக ஆணையாளர் அறிவிப்பார் எனவும் கல்வி அமைச்சர் கூறினார்.
நாட்டின் பாடசாலை மாணவர்களுக்கு அடுத்த ஆண்டிற்கு தேவையான சீருடைக்கு செலவாகும் முழுத் தொகையையும் வழங்க சீனா இணங்கியுள்ளது. கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சியில் கலந்துகொண்டு கருத்துரைத்த கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இதனை தெரிவித்தார். இந்த ஆண்டு 70 வீதமான பாடசாலை சீருடைகளை சீன அரசாங்கம் வழங்கியிருந்ததாக அமைச்சர் குறிப்பிட்டார். இந்த நிலையில், அடுத்த ஆண்டிற்கு தேவையான பாடசாலை சீருடைகளையும் வழங்க சீனா இணங்கியுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
பாராளுமன்ற குழுக்களை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமிற்கு தற்காலிகத் தடை விதிக்கும் தீர்மானம் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. சட்டவிரோதமான முறையில் தங்கம் மற்றும் பொருட்களை நாட்டிற்கு கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் அவருக்கு எதிராக பாராளுமன்ற ஒழுக்கக்குழு மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பான பிரேரணையை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச முன்வைத்ததுடன், எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல அதனை வழிமொழிந்தார்.
சீன அரசாங்கத்தினால் இலங்கைக்கு 10,000 ரயில் தண்டவாளங்கள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றை பிரதான ரயில் மார்க்கத்தில் மஹவ முதல் கொழும்பு வரையிலான வளைவுகளுடன் கூடிய இடங்களில் பொருத்த திட்டமிட்டுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் W.A.D.S.குணசிங்க தெரிவித்தார். குறித்த பகுதிகளில் திருத்தப்பணிகள் முன்னெடுக்கப்படாவிட்டால், ரயில்கள் தடம்புரளும் சம்பவங்கள் பதிவாகுமென அவர் சுட்டிக்காட்டினார்.
வவுனியா திருநாவற்குளம் உமாமகேஸ்வரன் முன்பள்ளியில் இன்று 21/09/2023 நடைபெற்ற சிறுவர்களுக்கான சந்தை நிகழ்வில் கட்சியின் மத்தியகுழு உறுப்பினரும், முன்னாள் நகரசபை உறுப்பினருமான க.சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார்.
21.09.2021 இல் மரணித்த தோழர் குரு (ஆறுமுகம் பொன்னுத்துரை) அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவுகள்…
மனித உரிமைகள் மற்றும் பெண் உரிமைகளுக்கான செயற்பாட்டாளர் அமரர் கலாநிதி ராஜினி திராணகம அவர்களின் 34ஆம் ஆண்டு நினைவுநாள் இன்றாகும். அமரர் ராஜினி திராணகம (ராஜினி ராஜசிங்கம் திராணகம) அவர்கள் யாழ். பல்கலைக்கழகத்தில் மருத்துவபீட உடற் கூறியல் விரிவுரையாளராகவும், அப்பிரிவின் தலைவராகவும் பணியாற்றியவர் என்பதுடன், உடற் கூறியல் துறையில் இங்கிலாந்தில் பட்டப்படிப்பையும் மேற்கொண்டவர்.
உலக சமாதான தினத்தையொட்டி நாட்டின் பல பகுதிகளிலும் இன்று போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. உண்மை கண்டறியப்படல் வேண்டும், நீதி மற்றும் பொறுப்புக்கூறல் விடயங்களில் மிகுந்த கவனம் செலுத்தப்பட வேண்டும், மனித உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் எனும் விடயங்களை முன் நிறுத்தி இந்த போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் போராட்டங்கள் இன்று இடம்பெற்றன.
நாகப்பட்டினம் – காங்கேசன்துறை இடையிலான கப்பல் போக்குவரத்து எதிர்வரும் ஒக்டோபர் மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தமிழ்நாடு அமைச்சர் E.V.வேலு தெரிவித்துள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருந்து இலங்கை, காங்கேசன்துறைக்கு இடையேயான கப்பல் போக்குவரத்தை ஆரம்பிக்கும் பணிகள் கடந்த சில ஆண்டுகளாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தமிழக அரசின் பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் E.V.வேலு, நாகப்பட்டினத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் பணிகளை நேற்று(20) நேரில் சென்று பார்வையிட்டார்.