ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 78 ஆவது கூட்டத் தொடரில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்றிரவு(21) உரையாற்றவுள்ளார். இலங்கை நேரப்படி இரவு 9.30 அளவில் ஜனாதிபதி உரையாற்றவுள்ளதாக வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 78 ஆவது கூட்டத்தொடர் கடந்த 18 ஆம் திகதி ஆரம்பமானது.
இலங்கையின் அபிவிருத்திக்காக 19 மில்லியன் டொலர்களுக்கும் அதிகமான நிதியுதவியை வழங்க தீர்மானித்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. நிதியமைச்சில் இடம்பெற்ற நிகழ்வின் போது இந்த அறிவிப்பு வௌியிடப்பட்டுள்ளது. சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகத்திற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையிலான அபிவிருத்திக்கான உடன்படிக்கையின் பிரகாரம், இந்த நிதியுதவி வழங்கப்படுவதாக கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் நேபாள பிரதமர் Pushpa Kamal Dahal ஆகியோருக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 78 ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி நியூயோர்க் சென்றுள்ள நிலையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பில் இருநாட்டு தலைவர்களும் ஆக்கபூர்வமான கலந்துரையாடலில் ஈடுபட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
மலர்வு: 1940.02.08 உதிர்வு: 2023.09.18
19.09.2005இல் வவுனியாவில் மரணித்த தோழர் சித்தப்பா (செ.யோகானந்தராசா – கணேசபுரம்) அவர்களின் 18ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…
பிரான்ஸில் தஞ்சம் கோரும் நோக்கில் சட்டவிரோதமாக ரீ யூனியன் தீவுக்கு சென்ற 7 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். நேற்றைய தினம் அவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் மட்டக்களப்பு மற்றும் புத்தளம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் செயற்றிட்டத்திற்கு ஆதரவளிப்பதாக தென் கொரிய ஜனாதிபதி Yoon Suk Yeol தெரிவித்துள்ளார். நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகளுக்கான தென் கொரிய நிரந்தர வதிவிட தூதுக்குழு அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இதனை கூறியுள்ளார். இலங்கை எதிர்கொண்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டையும் மக்களையும் விடுவிப்பதற்கான ஜனாதிபதியின் வேலைத்திட்டத்தை தென் கொரிய ஜனாதிபதி பாராட்டியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) இன் அரசியல் செயற்பாட்டு முன்னணியாக உருவாக்கப்பட்ட ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி, அரசியல் கட்சியாக பதிவு செய்யப்பட்டு இன்று முப்பத்தைந்து ஆண்டுகள் பூர்த்தியாகின்றன.
அமரர் தோழர் சந்ததியார் (வசந்தன்) அவர்கள் –
பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் பங்களாதேஷ் சபாநாயகர் ஷிரின் ஷர்மின் சவுத்ரி(Shirin Sharmin Chaudhury) ஆகியோருக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. அலரி மாளிகையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக பிரதமர் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இருநாட்டு பாராளுமன்றங்களுக்கும் இடையிலான தொடர்புகளை மேலும் மேம்படுத்துவதற்காக பாராளுமன்ற செயற்பாடுகள் தொடர்பான அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வது தொடர்பில், புதிய வேலைத்திட்டமொன்றை செயற்படுத்துவது தொடர்பில் பிரதமர் இதன்போது கவனம் செலுத்தியுள்ளார்.