மேலும் சில சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் பதில் செயலாளரின் கையொப்பத்துடன் இந்த அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது. அதற்கமைய, மின் விநியோகம் சார்ந்த அனைத்து சேவைகள், பெட்ரோலியம், எரிபொருள் உற்பத்தி மற்றும் விநியோகம் தொடர்பான அனைத்து சேவைகளும் அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன Read more
சட்டவிரோதமான முறையில் தொழிலுக்காக வௌிநாடு செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், இந்த எண்ணிக்கையில் அதிகரிப்பு காணப்படுவதாக வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் அவ்வாறான 2,500 வரையான சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பணியகத்தின் பிரதி பொது முகாமையாளர் காமினி செனவிரத்ன குறிப்பிட்டார். கடந்த வருடத்தில் குறித்த எண்ணிக்கை 1900 ஆகக் காணப்பட்டது. 
முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் அகழ்வுப் பணிகள் 10 ஆவது நாளாக இன்றும் முன்னெடுக்கப்படுகின்றன. முல்லைத்தீவு நீதவான் தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் தொடர்ச்சியாக அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. நேற்றுமுன்தினம் (14) முன்னெடுக்கப்பட்ட அகழ்வின் போது 5 எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. அத்துடன், துப்பாக்கி ரவை ஒன்றும் ஆடைகள் சிலவும் அங்கிருந்து மீட்கப்பட்டன. கடந்த 6 ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்பட்டு வரும் அகழ்வுப் பணிகளில் இதுவரை 14
இந்திய முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான முருகன் உள்ளிட்ட 4 பேரை இலங்கைக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது தொடர்பில் சென்னை உயர் நீதிமன்றில், இந்திய மத்திய அரசு பதில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளது. முருகனை திருச்சி அகதிகள் முகாமில் இருந்து விடுவித்து தன்னுடன் சேர்ந்து வாழ அனுமதிக்கக் கோரி நளினி வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
நாடளாவிய ரீதியில் பொலிஸ் நிலையங்களை கண்காணிக்கும் நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கடந்த மூன்று வருடங்களாக கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை என அதன் ஆணையாளர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தார். இதன் காரணமாக பொலிஸாருக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்து வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கியூப ஜனாதிபதி Miguel Díaz-Canel-ஐ சந்தித்துள்ளார். இதன்போது, கியூபாவிற்கும் இலங்கைக்கும் இடையில் பல உடன்பாடுகள் எட்டப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. G77 சீன அரச தலைவர்களின் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக கியூபா சென்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை அந்நாட்டு ஜனாதிபதி Miguel Díaz-Canel வரவேற்றார். கியூபாவுக்கு எதிரான தடைகளை நீக்குமாறு கோரும் ஐக்கிய நாடுகளின் தீர்மானத்திற்கு இலங்கை அனைத்து சந்தர்ப்பங்களிலும் ஆதரவளித்து வருவதாக ஜனாதிபதி இதன்போது கூறியுள்ளார்.
இந்திய கடற்படைக்கு சொந்தமான ‘INS Nireekshak’ போர்க்கப்பல் திருகோணமலை துறைமுகத்திற்கு வருகை தந்துள்ளது. இன்று (14) காலை வருகை தந்த கப்பலை இலங்கை கடற்படையினர் சம்பிரதாயபூர்வமாக வரவேற்றனர். Diving Support Vessel வகையான இந்திய போர்க்கப்பல், 70.5 மீட்டர் நீளமுடையது. கப்பலில் 137 கடற்படை ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்.
இலங்கைக்கான புதிய இந்திய உயர்ஸ்தானிகராக, அந்நாட்டின் சிரேஷ்ட இராஜதந்திரியான ஸ்ரீ சந்தோஷ் ஜாவின் (Shri Santosh Jha) பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராக தற்போது செயற்படும் கோபால் பாக்லே, அவுஸ்திரேலியாவிற்கான இந்திய உயர்ஸ்தானிகராக பெயரிடப்பட்டுள்ளார். இந்தியாவின் சிரேஷ்ட இராஜதந்திரியான ஸ்ரீ சந்தோஷ் ஜா (Shri Santosh Jha), தற்போது பெல்ஜியத்திற்கான இந்திய தூதுவராகக் கடமையாற்றுகின்றார்.
14.09.2014இல் மட்டக்களப்பில் மரணித்த தோழர் ராமையா (செல்லத்துரை தங்கராசா) அவர்களின் 9ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று..