சட்டவிரோத மீன்பிடி முறைகளை நிறுத்துமாறு கோரி திருகோணமலை மீனவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருகோணமலை – சிறிமாபுரவிலிருந்து பேரணியாகச் சென்ற மீனவர்கள் திருகோணமலை நகரம் ஊடாக மீன்பிடி மற்றும் நீரியல்வள திணைக்களம் வரை சென்று அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 3 மணித்தியாலங்கள் கண்டி – திருகோணமலை வீதியை மறித்து மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். Read more
13.09.1987 இல் கிரானில் மரணித்த தமிழ் இளைஞர் பேரவைச் செயலரும், கழக வானொலி நிலைய இயக்குனரும்,” தமிழன் குரல்” பிரச்சார இதழின் ஆசிரியரும் , திம்புவின் தலைமைப் பேச்சாளரும் கழகத்தின் அரசியல் செயலருமான தோழர் இரா.வாசுதேவா, ஏகாதிபத்திய எதிர்ப்பாளரும், ” நிர்மாணம்” தத்துவ இதழின் ஆசிரியரும், கழகத்தின் படைத்துறைச் செயலருமான தோழர் கண்ணன் (சோதீஸ்வரன் – யாழ்ப்பாணம்) கழகத்தின் கிழக்கு மாகாண நடவடிக்கை பொறுப்பாளர் தோழர் சுபாஸ் ( பவானந்தன் – சந்திவெளி) மற்றும் தோழர்கள் ஆனந்தன் ( மணிவண்ணன்- மூளாய் ), ஈழமைந்தன் (ஹரிகரன் – பழுகாமம்),
சர்வதேச நாணய நிதியத்தின்(IMF) பிரதிநிதிகள் குழு இன்று(13) நாட்டிற்கு வருகை தரவுள்ளது. சர்வதேச நாணய நிதியத்துடன் முன்னெடுக்கப்படும் கடன் செயற்றிட்டத்தின் இரண்டாம் கட்ட மீளாய்வு நாளை(14) முதல் 24 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கியூபா மற்றும் அமெரிக்காவிற்கு விஜயம் செய்யும் நோக்கில் இன்று(13) அதிகாலை பயணமாகியுள்ளார். ”G77 குழு மற்றும் சீனா” உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காகவே ஜனாதிபதி கியூபாவிற்கு பயணிக்கின்றார். இதேவேளை, அமெரிக்காவில் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் 78 ஆவது கூட்டத்தொடரின் அரச தலைவர்கள் மாநாட்டிலும் ஜனாதிபதி பங்கேற்கவுள்ளார்.
வவுனியா பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தினால் நடாத்தப்படும் 34வது வவுனியா பிரதேச இளைஞர் விளையாட்டு விழாவின் ஒரு அங்கமாக தோழர் சுந்தரம் (சதாசிவம் சிவசண்முகமூர்த்தி) அவர்களின் ஞாபகார்த்த மென்பந்து கிரிக்கெற் சுற்றுப்போட்டி இடம்பெற்று தோழர் சுந்தரம் (சதாசிவம் சிவசண்முகமூர்த்தி) ஞாபகார்த்த வெற்றிக்கிண்ணம் வழங்கப்படவுள்ளது. அமரர் சதாசிவம் சிவசண்முகமூர்த்தி (சுந்தரம்) அவர்கள் கழகத்தின் ஸ்தாபக தலைவர்களில் ஒருவரும், முதல் படைத்தளபதியும், புதிய பாதை ஆசிரியருமாவார்.
இன்று (12) நள்ளிரவு முதல் ரயில் சேவையை அத்தியாவசிய சேவையாக அறிவிக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுப்பதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன இன்று தெரிவித்தார். Locomotive operator பொறியியலாளர் சங்கத்தினர் முன்னெடுத்துள்ள பணிப்பகிஸ்கரிப்பிற்கு பதில் வழங்கும் வகையில் அமைச்சர் இதனை கூறியுள்ளார். இன்று காலை முதல் முன்னெடுக்கப்படும் பணிப்பகிஸ்கரிப்பு காரணமாக குறைந்த எண்ணிக்கையிலான ரயில்கள் சேவையில் ஈடுபட்டமையினால், மக்கள் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர். இதேவேளை, இன்று காலை ஹொரபே ரயில் நிலையத்தில் அலுவலக ரயிலின் மேற்கூரையில் இருந்து வீழ்ந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நாடளாவிய ரீதியில் இன்று(12) பல்வேறு மாவட்டங்களிலும் அமைந்துள்ள வைத்தியசாலைகளில் வைத்தியர்கள் சாத்வீக போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. வைத்தியர்கள் நாட்டை விட்டுச் செல்கின்றமையினால் ஏற்பட்டுள்ள பாதிப்பு தொடர்பில் தீர்வொன்றைப் பெற்றுத்தருமாறு கோரி இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
அமரர்கள் மாணிக்கதாசன் இளங்கோ, வினோ ஆகியோரின் 24வது ஆண்டு நினைவாக தோழர் சிவாவின் ஒழுங்கமைப்பில் 10.09.2023 நடாத்தப்பட்ட கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் 10ற்கு மேற்பட்ட அணிகள் பங்குபற்றியதில் இறுதிப்போட்டிக்கு Superstar vs Firezone ஆகிய இரு அணிகள் தகுதிபெற்றிருந்தன.
தோழர் பிறேம் (மதியழகன் – பிரித்தானியா) அவர்களின் அன்புத் துணைவியார் திருமதி மரிஸ்தா றோஸ் ஜெயந்தி மதியழகன் அவர்கள் பிரித்தானியாவில் காலமானார் என்பதை மிகுந்த துயருடன் அறியத் தருகின்றோம். அவரின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர், உற்றார், உறவினர், நண்பர்களோடு தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாமும் இப்பெருந்துயரினை பகிர்ந்துகொண்டு அன்னார்க்கு எமது இதயபூர்வ அஞ்சலியைச் சமர்ப்பிக்கின்றோம்.
நாட்டின் கிழக்கு கடற்பரப்பில் சிறிய அளவிலான நில அதிர்வு பதிவாகியுள்ளது. 4.65 மெக்னிடியூட் அளவில் இந்த நில அதிர்வு பதிவாகியுள்ளது.மட்டக்களப்பில் இருந்து 310 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள கடற்பரப்பில் நில அதிர்வு பதிவாகியுள்ளதாக புவிசரிதவியல் அளவை சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. இந்த நில அதிர்வு காரணமாக இலங்கைக்கு எந்தவொரு தாக்கமோ, சுனாமி அபாயமோ ஏற்படவில்லை என பணியகத்தின் பதில் பணிப்பாளர் நாயகம் ஜனக அஜித் பிரேம குறிப்பிட்டுள்ளார்.