கரையோரப் பாதுகாப்பு நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக ஐரோப்பிய ஒன்றியத்தின் விசேட குழுவொன்று நாட்டிற்கு வருகை தந்துள்ளது. கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் அழைப்பிற்கிணங்க அந்த குழுவினர் நாட்டிற்கு வந்துள்ளனர். இலங்கையின் கரையோரப் பகுதிகளை பாதுகாப்பது தொடர்பில் 3 செயன்முறைகளின் ஊடாக, ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் இந்நாட்டு அதிகாரிகளை தௌிவுபடுத்தவுள்ளதாக கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. Read more
11.09.1987 இல் வவுனியாவில் மரணித்த தோழர் நவநீதன் ( இராஜலிங்கம் -அனந்தர்புளியங்குளம்) அவர்களின் 36 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று….
இன்று தனது எழுபத்தைந்தாவது பிறந்த நாளைக் கடந்து செல்லும் எமது தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களுக்கு எம் அனைவரினதும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள் உரித்தாகட்டும்.
பாரிய சைபர் தாக்குதல் காரணமாக அமைச்சரவை அலுவலகம் உள்ளிட்ட பல அரச நிறுவனங்களின் அதிகளவிலான தரவுகள் அற்றுப்போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ICTA எனப்படுகின்ற இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையம் இதனை உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியது. இந்த வருடம் மே மாதம் 17 ஆம் திகதி மற்றும் ஆகஸ்ட் 26 ஆம் திகதிகளில் இடம்பெற்ற பாரிய வைரஸ் தாக்குதல் காரணமாகவே இந்த தரவுகள் அற்றுப்போகும் நிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிறுவனம் கூறுகின்றது.
போக்குவரத்து கட்டமைமைப்பிலுள்ள பிரச்சினைகளை முன்வைக்கும் வகையில் தகவல் நிலையமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. 1958 என்ற இலக்கத்தின் ஊடாக மக்கள் தமது போக்குவரத்து சிக்கல்களை முன்வைக்க முடியும் என இலங்கை போக்குவரத்து சபையின் பதில் வர்த்தக முகாமையாளர் எரந்த தில்ஹான் தெரிவித்தார். இதேவேளை, சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் வகையில் போக்குவரத்து சேவையை ஆரம்பிக்கவும் திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
திருகோணமலை இலுப்பைக்குளம் பகுதியில் பொரலுகந்த ரஜமகா விகாரை என குறிப்பிடப்பட்டுள்ள பெயர் பலகையொன்றும் பௌத்த கொடிகளும் நடப்பட்டுள்ளமைக்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர். குறித்த பகுதிக்கு இன்று காலை பிரவேசித்த பௌத்த பிக்குகள் உள்ளிட்ட குழுவினரால் இந்த பெயர் பலகை நடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விகாரை நிர்மாண செயற்பாடானது இனங்களுக்கிடையே முறுகல் நிலையை ஏற்படுத்தும் என அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
09.09.2015 இல் திருகோணமலையில் மரணித்த பருத்தித்துறை நகரசபையின் முன்னாள் தலைவர் தோழர் கெனடி ( அந்தோனிப்பிள்ளை வின்சென்ட் கெனடி- யாழ்ப்பாணம்) அவர்களின் எட்டாம் ஆண்டு நினைவு நாள் இன்று…
09.09.2005 இல் வவுனியாவில் மரணித்த அமரர் கோபால் வில்வராசா (தோழர் கேதீஸ்) அவர்களின் 18ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று…
09.09.1991 இல் நாவற்குடாவில் மரணித்த தோழர் ரஞ்சன் ( மயில்வாகனம் சற்குணராஜா-வவுனியா) அவர்களின் 32ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று….