உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பிரித்தானியாவின் Channel 4 தொலைக்காட்சி நேற்று (05) வௌியிட்ட நிகழ்ச்சியில் உள்ளடங்கியுள்ள விடயங்கள் தொடர்பில் உடனடி விசாரணை அவசியம் என கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை இன்று வலியுறுத்தியுள்ளார். தாக்குதல்கள் தொடர்பாக இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் மற்றும் ஆணைக்குழு அறிக்கைகள், இதுவரை சரியாக ஆராயப்படாத உண்மைகள் தொடர்பாக பக்கசார்பற்ற, வெளிப்படைத்தன்மையுடன் கூடிய பரந்த விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார். Read more
06.09.1987 இல் மன்னாரில் மரணித்த தோழர் சேகர் அவர்களின் 36ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் Volker Türk இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். உத்தேச ஒளிபரப்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு சட்டமூலம், சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் மீதான சர்வதேச கொள்கைக்கு முரணானது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்மொழியப்பட்ட உத்தேச ஒளிபரப்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு சட்டமூலமானது சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச சாசனத்தின் 19-3 பிரிவு மூலம் உத்தரவாதம் அளிக்கப்பட்ட கருத்துச் சுதந்திரத்தின் மீது தேவையற்ற கட்டுப்பாடுகளை விதிப்பதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் Volker Türk சுட்டிக்காட்டியுள்ளார்.
05.09.1986 இல் மரணித்த தோழர் ஐயர்(சுகுணன்)-ஆறுமுகம் சடாவதனன் – சுதுமலை) அவர்களின் 37ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…
2022 கல்வி பொது தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைய, இம்முறை 166,938 பேர் பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி பெற்றுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கமைய 63.3 வீதமானோர் பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
நவீனமயப்படுத்தல் செயற்பாடுகளுக்காக எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் வடக்கு ரயில் மார்க்கத்தை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 06 மாதங்களுக்குள் வடக்கு ரயில் மார்க்கத்தை நவீனமயப்படுத்த திட்டமிட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அதற்கமைய, கொழும்பிலிருந்து காங்கேசன்துறை வரை மணித்தியாலத்திற்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் ரயில்களை இயக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொலை உள்ளிட்ட பல்வேறு குற்றங்களைச் செய்து நாட்டை விட்டு தப்பிச் சென்ற 148 பாரிய பாதாள உலகக் குற்றவாளிகளைக் கைது செய்ய இன்டர்போல் சிவப்பு அறிவித்தலை விடுத்துள்ளது. திறந்த மற்றும் பொறுப்புமிக்க அரச துறைசார் கண்காணிப்புக்கான நாடாளுமன்றக் குழுவில் குற்றவியல் மற்றும் பிரதி காவல்துறைமா அதிபர் அசங்க கரவிட்ட தெரிவித்தார். சந்தேக நபர்கள் வேறு நாடுகளுக்கு தப்பிச் செல்வதை தடுக்கும் வகையில், இலங்கை காவல்துறை விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய சர்வதேச காவல்துறையினர் இந்த சிவப்பு அறிவித்தல்களை பிறப்பித்துள்ளதாக பிரதி காவல்துறை அதிபர் தெரிவித்துள்ளார்.
இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறலை கண்டித்து, இந்தியாவுக்கு படகு மூலம் சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபடப்போவதாக யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாகங்களின் சம்மேளனம் அறிவித்துள்ளது. தமிழகத்துக்கு, 14 பேர் கொண்ட வடபகுதி மீனவர்கள் கடல் வழியாக படகு மூலம் சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழக ஆளுநர் ரவி, தமிழக பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை ஆகியோரை சந்தித்து கலந்துரையாட தீர்மானித்துள்ளனர்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் (மானிப்பாய் தொகுதி) அமரர் வி.தர்மலிங்கம் அவர்களின் 38ஆம் ஆண்டு நினைவுப் பேருரை தர்மலிங்கம் தந்த கொடை என்னும் தலைப்பில் யாழ்ப்பாணம் கோப்பாய் தேசிய கல்வியியற் கல்லூரியின் பிரதான மண்டபத்தில் இன்று 04.09.2023 திங்கட்கிழமை காலை 08மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்றது. யாழ். தேசிய கல்வியியற் கல்லூரியின் பீடாதிபதி திரு. சுப்பிரமணியம் பரமானந்தம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கோப்பாய் ஆசிரியர் கலாசாலை அதிபர் செந்தமிழ்ச் சொல்லருவி ச.லலீசன் அவர்கள் நினைவுப் பேருரையினை நிகழ்த்தினார்.
உலகின் மிகப்பெரிய கப்பல் போக்குவரத்து நிறுவனமான ஃபார் ஷிப்பிங் நிறுவனம் இலங்கையில் பயிற்சி பெற்ற கப்பல் பணியாளர்களுக்கு தொழில் வாய்ப்புகளை வழங்க இணங்கியுள்ளதாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. அந்த நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் உள்ளிட்ட குழுவினர் நேற்று துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவைச் சந்தித்த போதே இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.