Posted by plotenewseditor on 29 April 2024
Posted in செய்திகள்
நீண்ட காலமாக இல.01, 03ஆம் குறுக்குத்தெரு யாழ்ப்பாணம் எனும் முகவரியில் இயங்கி வந்த இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண அலுவலகம் புதிய இடத்திற்கு இடமாற்றம் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும் 01ஆம் (01.05.2024) திகதியிலிருந்து இல.42 கோவில் வீதி, யாழ்ப்பாணம் (42,Temple Road, Jaffna) முகவரிக்கு இடமாற்றம் செய்யப்படவுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய இணைப்பாளர் ரி.கனகராஜ் தெரிவித்துள்ளார். Read more