இலங்கையின் பொருளாதாரம் இந்த ஆண்டில் 2.2 சதவீத வளர்ச்சியை எட்டும் என உலக வங்கி மதிப்பிட்டுள்ளது. உலக வங்கி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 2022ஆம் ஆண்டு இலங்கையின் பொருளாதாரம் வெகுவாக வீழ்ச்சியடைந்ததை தொடர்ந்து, இந்த வருடம் 2.2 சதவீதம் என்ற மிதமான வளர்ச்சியை எட்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இலங்கை பொருளாதார அபிவிருத்தி தரவுகளின் படி, பொருளாதாரம் மீட்சி அடைந்துவருவதுடன், பணவீக்கமும் வீழ்ச்சியடைந்து வருகிறது. புதிய நிதி கொள்கைகளை நடைமுறைப்படுத்தியதன் பின்னணியில் அதிக வருமானம் பெறும் வழிகளும் இனங்காணப்பட்டுள்ளன. Read more
வற் எனப்படும் பெறுமதி சேர் வரிச் சட்டத்தின் கீழான கட்டளை நாடாளுமன்றில் 36 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. இன்றைய தினம் உரையாற்றுவதற்காக நேரம் ஒதுக்கப்பட்டிருந்த ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலானோர் பிரசன்னமாகாதமையினால் சபை நடவடிக்கைகள் இன்று பிற்பகல் 4 மணிவரையில் ஒத்திவைக்கப்பட்டன. இதனையடுத்து 4 மணியளவில் சபை நடவடிக்கைகள் மீள ஆரம்பித்த போது எதிர்த்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெறுமதி சேர் வரிச் சட்டத்தின் கீழான கட்டளை தொடர்பில் விவாதத்தை கோரியிருந்தனர்.
தொடர்ச்சியாக நட்டமடைந்து வருடம் ஶ்ரீ லங்கன் விமான நிறுவனத்திற்கு மாதாந்தம் 1.5 மில்லியன் அமெரிக்க டொலர் செலவிட்டு நான்கு விமானங்களை குத்தகைக்கு பெற்றுக்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நான்கு விமானங்களை குத்தகை அடிப்படையில் பெற்றுக்கொள்வதற்காக துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கே அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. ORIX Aviation நிறுவனத்திடமிருந்து மாதாந்தம் 3,60,000 அமெரிக்க டொலர் குத்தகைக்கு, 6 ஆண்டுகளுக்கு இரு விமானங்களை கொள்வனவு செய்ய ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது.
வவுனியா கோயில்குளம் ரொக்கெட் விளையாட்டு கழகத்தினால் நடத்தப்பட்ட மாபெரும் மென்பந்து கிரிக்கெட் போட்டியின் இறுதி நிகழ்வில் கட்சியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் மத்தியகுழு உறுப்பினர் தோழர் க. சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்கள் கலந்து கொண்டு போட்டியில் வெற்றிய அணிகளுக்கான வெற்றிக் கேடயங்களை வழங்கி கௌரவித்த போது….