சில பல்கலைக்கழகங்களின் மாணவர்கள் இன்று முன்னெடுத்த எதிர்ப்பு நடவடிக்கைகளை கலைப்பதற்கு பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டனர். ஹோமாகம ஆதார வைத்தியசாலையை தனியார் பல்கலைக்கழகமொன்றின் பயிற்சிகளுக்காக பயன்படுத்துவதற்கு அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்தை கண்டித்தே மாணவர்கள் எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்தனர். ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றியம் ஏற்பாடு செய்திருந்த எதிர்ப்புப் பேரணி பல்கலைக்கழகத்திற்கு அருகிலிருந்து விஜேராம சந்தியை வந்தடைந்தது. Read more
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை தனியார் துறையினருக்கு குத்தகைக்கு வழங்குவது தொடர்பில் உள்நாட்டு, வௌிநாட்டு முதலீட்டாளர்களின் விருப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. அதற்கு பொருத்தமான முதலீட்டாளரைத் தெரிவு செய்ததன் பின்னர் மேலதிக பணிகள் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து, விடுதலை செய்யப்பட்ட முருகன், ஜெயகுமார், ராபர்ட் பயஸ் ஆகிய மூவரும் 35 ஆண்டுகளின் பின்னர் இன்று இலங்கை வந்துள்ளனர். திருச்சி சிறப்பு முகாமில் இருந்து இன்று காலை அழைத்துவரப்பட்ட குறித்த மூவரும் சென்னை விமான நிலையத்திலிருந்து இலங்கைக்கு வந்துள்ளனர். தற்காலிக விசாவில் குறித்த மூவரும் நாட்டிற்கு வருகை தருவதாக தமிழக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே, முருகனை அவரது துணைவியார் நளினி சென்னை விமான நிலையத்திற்கு வருகை தந்து வழியனுப்பினார்.
உயர் தொழில்நுட்ப கல்வி டிப்ளோமாவை பூர்த்தி செய்த 500 பேரை ஆங்கில ஆசிரியர்களாக சேவையில் இணைத்துக்கொள்ள கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. நாடளாவிய ரீதியில் உள்ள ஆங்கில ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் நோக்கில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 2021ஆம் ஆண்டு நடத்தப்பட்ட போட்டிப் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில் இந்த ஆட்சேர்ப்பு முன்னெடுக்கப்படும் என அமைச்சு தெரிவித்துள்ளது. தற்போது ஆங்கில ஆசிரியர் வெற்றிடங்கள் உள்ள தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளுக்கு அவர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.