ஜனாதிபதி தேர்தலில் பொது தமிழ் வேட்பாளரை நிறுத்துவது சாத்தியமற்றது எனஇ இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தரும் வடக்கு மாகாண சபையின் முன்னாள் அவைத் தலைவருமான சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் கல்வியங்காட்டில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று (09) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், எதிர்வரும் ஐனாதிபதி தேர்தலில் தமிழர் தரப்பில் பொது வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்த வேண்டும் என்பது தொடர்பாக பரவலாக பேசப்பட்டு வருகின்றது.
இந்த விடயம் சம்பந்தமாக எங்களுடைய கட்சி இதுவரையில் கலந்துரையாடி ஒரு முடிவிற்கு வரவில்லை.
ஆனால் என்னைப் பொறுத்தவரையில் இந்த விடயம் நடைமுறைக்குச் சாத்தியமற்றது. பொது வேட்பாளரைத் தெரிவு செய்வதற்குள் முரண்பாடுகள் பல வந்து சேரும். ஏற்கனவே நிலைமைகள் அப்படித்தான் இருக்கின்றன.
பேரம் பேச வேண்டிய சூழ்நிலைக்கு ஒற்றுமையாக பலமாக நாங்கள் இருக்க வேண்டும் என்பதே தமது தனிப்பட்ட கருத்து என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தரும் வடக்கு மாகாண சபையின் முன்னாள் அவைத் தலைவருமான சீ.வீ.கே.சிவஞானம் குறிப்பிட்டுள்ளார்.