Header image alt text

18.04.2016ல் மரணித்த மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னாள் பிரதி முதல்வர் தோழர் சிங்கம் (பெனடிக்ட் தனபாலசிங்கம்) அவர்களின் எட்டாம் ஆண்டு நினைவு நாள் இன்று….
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பை வதிவிடமாகவும் கொண்ட பெனடிக்ட் தனபாலசிங்கம் (சிங்கம்) அவர்கள் தனது இளம் பராயத்திலேயே சமூக சேவைகளில் அதிக நாட்டம் கொண்டிருந்தார். தனது ஆரம்ப அரசியல் பணிகளை தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. செ.இராஜதுரை அவர்களுடன் இணைந்து பணியாற்றியதன் மூலம் முன்னெடுத்திருந்தார்.

Read more

Dialog  மற்றும் Airtel நிறுவனங்கள் இன்று தமது செயற்பாடுகளை ஒன்றிணைத்தன. Dialog Axiata PLC, Axiata Group Berhad),  Bharti Airtel Limited நிறுவனங்கள், ஒன்றிணைந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டன. இதற்கமைய, Dialog நிறுவனம், Airtel Lanka நிறுவனத்தினை இணைத்துக்கொண்டுள்ளதுடன், Bharti Airtel நிறுவனத்திற்கு Dialog  நிறுவனத்தின் பங்குகள் வழங்கப்படவுள்ளன. இந்த ஒன்றிணைந்த உடன்படிக்கைக்கு, பங்குதாரர்கள் மற்றும் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.

மியன்மாரில் மியாவாடி இணையக் குற்றப்பகுதியில் இருந்து மீட்கப்பட்ட 08 இலங்கையர்களும் நாட்டை வந்தடைந்துள்ளனர். தாய்லாந்தில் இருந்து இன்று (18) காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த UL 403 என்ற விமானத்தில் இவர்கள் நாடு திரும்பியுள்ளனர். இவர்களில் 06 ஆண்களும் 02 பெண்களும் உள்ளடங்குகின்றனர். கடந்த மார்ச் மாதம் 4ஆம் திகதி மியன்மாரில் மியாவாடி இணையக் குற்றப்பகுதியில், பலவந்தமாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த 08 இலங்கையர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை மியன்மார் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்டிருந்தனர். Read more

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தவிசாளராக மைத்திரிபால சிறிசேன செயற்படுவதை தடுக்கும் வகையில் விதிக்கப்பட்ட  தடையுத்தரவு எதிர்வரும் மே மாதம் 9ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. மைத்திரிபால சிறிசேன ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தவிசாளர் பதவியை வகிப்பதற்கு தகுதியற்றவர் என்பதால் அவரை அந்த பதவியில் இருந்து நீக்குவதற்கான நிரந்தர தடையுத்தரவை கோரி முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். Read more