இந்திய நிதியுதவியின் கீழ் நிர்மாணிக்கப்படும் 10,000 பெருந்தோட்ட வீட்டுத் திட்டத்தின் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய வீடமைப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. 6 மாவட்டங்களின் பெருந்தோட்டப் பகுதிகளில் இந்த வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளதாக அதன் தலைவர் ரஜீவ் சூரியஆரச்சி தெரிவித்தார். ஒரு வீட்டிற்கு 28 இலட்சம் ரூபா செலவிடப்படவுள்ளது. பிரதேச செயலகங்கள் மற்றும் தோட்ட நிர்வாகங்களின் ஊடாக இந்த வீட்டுத் திட்டத்திற்குத் தகுதியான நபர்கள் தெரிவு செய்யப்படுவதுடன், அதன் நிர்மாணப் பணிகள் தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் முன்னெடுக்கப்படுகின்றன. Read more
ஏப்ரல் 21 தாக்குதல் சம்பவம் தொடர்பில் இதுவரையில் வெளிவராத 8 விடயங்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு நேற்று தகவல் வழங்கியதாக கொழும்பு ஆயர் இல்லத்தின் பேச்சாளர் அருட் தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக அருட்தந்தை சிறில் காமினி நேற்றைய தினம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்தார்.
நாட்டில் சுமார் 40,000 ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை நிலவுவதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று (19) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அதன் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இதனைத் தெரிவித்துள்ளார். குறிப்பாக மேல், கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதாக அவர் தெரிவித்தார்.
கடந்த 2 வருடங்களுக்குள் 1,800 வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அந்த சங்கத்தின் பேச்சாளர் சமில் விஜேசிங்க இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். குறித்த காலப்பகுதியில் சுமார் 300க்கும் மேற்பட்ட விசேட வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக அவர் தெரிவித்தார். இதனைக் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
நியூசிலாந்தின் தலைநகர் வெல்லிங்டனில் இலங்கையின் உயர்ஸ்தானிகராலயத்தைத் திறப்பதற்கான ஏற்பாடுகளுக்காக வெளிவிவகார அமைச்சின் குழுவொன்று நியூசிலாந்து செல்லவுள்ளது. எதிர்வரும் 22ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரையான காலப்பகுதியில் குறித்த குழுவினர் அங்கு தங்கியிருப்பார்கள் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. நியூசிலாந்தின் வெல்லிங்டனில் இலங்கையின் உயர்ஸ்தானிகராலயத்தை திறப்பதற்கு முன்னதாக அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் இலங்கை வருகையை இஸ்ரேலின் மொசாட் புலனாய்வு சேவையும், அமெரிக்க எப்.பி.ஐ உளவுத்துறையும் கண்காணித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தின் திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொள்வதற்காக ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி எதிர்வரும் புதன்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இந்நிலையில், இலங்கையில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைமுறையில் உள்ளதோடு, ஈரானிய சிரேஷ்ட பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் குழுவொன்று அண்மையில் இலங்கைக்கு வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டிருந்தது.