நியூசிலாந்தின் தலைநகர் வெல்லிங்டனில் இலங்கையின் உயர்ஸ்தானிகராலயத்தைத் திறப்பதற்கான ஏற்பாடுகளுக்காக வெளிவிவகார அமைச்சின் குழுவொன்று நியூசிலாந்து செல்லவுள்ளது. எதிர்வரும் 22ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரையான காலப்பகுதியில் குறித்த குழுவினர் அங்கு தங்கியிருப்பார்கள் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. நியூசிலாந்தின் வெல்லிங்டனில் இலங்கையின் உயர்ஸ்தானிகராலயத்தை திறப்பதற்கு முன்னதாக அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி, வெளிவிவகார அமைச்சின் வெளிநாட்டு சொத்துக்கள் முகாமைத்துவம் மற்றும் அபிவிருத்தி பிரிவின் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட தரப்பினர் நியூசிலாந்துக்கு செல்லவுள்ளனர்.