அமரர் கிறிஸ்டீனா நகுலா அவர்கள்Posted by plotenewseditor on 21 April 2024
Posted in செய்திகள்
அமரர் கிறிஸ்டீனா நகுலா அவர்கள்Posted by plotenewseditor on 21 April 2024
Posted in செய்திகள்
2019 ஏப்ரல் 21 ம் திகதி பயங்கரவாதிகளினால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடத்தப்பட்டு இன்றுடன் ஐந்து வருடங்கள் நிறைவு பெறுகின்றன. தாக்குதலில் உயிர்நீத்த அனைவருக்கும் எமது இதயபூர்வ அஞ்சலிகளை சமர்ப்பிப்பதுடன் அவர்களின் ஆன்மா அமைதி பெற பிரார்த்திக்கின்றோம்.Posted by plotenewseditor on 21 April 2024
Posted in செய்திகள்
மட்டக்களப்பில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் தொடர்புபட்ட சூத்திரதாரிகளை கைது செய்ய கோரி பொதுமக்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களினால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டம் மட்டு காந்தி பூங்காவின் முன்னால் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு குண்டுதாக்குதல் இடம்பெற்று 5 வருட நினைவு தினத்தையிட்டு கூத்திரதாரிகளை கைது செய்ய கோரி சமூக செயற்பாட்டாளர்கள் கவனயீர்ப்பு ஆர்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர். Read more
Posted by plotenewseditor on 21 April 2024
Posted in செய்திகள்
தியத்தலாவ Foxhill கார் பந்தயத்தின் போது இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஏழாக அதிகரித்துள்ளது.- தியத்தலாவ Foxhill கார் பந்தயத் திடலில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஐவர் உயிரிழந்துள்ளனர். விபத்தில் 21 பேர் வரை காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்தூவ தெரிவித்தார். Foxhill 2024 கார் பந்தயத்தின் போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. போட்டியில் பங்கேற்ற காரொன்று திடலை விட்டு விலகி பார்வையாளர்கள் மீது மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
Posted by plotenewseditor on 21 April 2024
Posted in செய்திகள்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிறைவேற்று குழு இன்றைய தினம் கோட்டேயிலுள்ள தனியார் விடுதியொன்றில் கூடியிருந்தது. அதன்போது, கட்சியின் நிறைவேற்றுக் குழுவினது ஏகமனதான தீர்மானத்துக்கமைய, அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் பதில் பொதுச் செயலாளர் சாரதி துஷ்மந்த மித்ரபால தெரிவித்துள்ளார். Read more
Posted by plotenewseditor on 21 April 2024
Posted in செய்திகள்
சர்வதேச நாணய நிதியத்தின் முதல் பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் கீதா கோபிநாத்துடன் இருதரப்பு கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். இந்த கலந்துரையாடலின்போது, பணவீக்கக் குறைப்பு, வருமான அதிகரிப்பு மற்றும் நிர்வாக மறுசீரமைப்பு உள்ளிட்ட பல துறைகளில் ஏற்பட்டுள்ள நிலையான முன்னேற்றம் குறித்து இலங்கைக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more