சர்வதேச நாணய நிதியத்தின் முதல் பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் கீதா கோபிநாத்துடன் இருதரப்பு கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். இந்த கலந்துரையாடலின்போது, பணவீக்கக் குறைப்பு, வருமான அதிகரிப்பு மற்றும் நிர்வாக மறுசீரமைப்பு உள்ளிட்ட பல துறைகளில் ஏற்பட்டுள்ள நிலையான முன்னேற்றம் குறித்து இலங்கைக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சர்வதேச இறையாண்மை கடன் பத்திரதார்களுடனான பேச்சுவார்த்தையில் சர்வதேச நாணய நிதியம் வழங்கிவரும் ஆதரவுக்கு நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க இதன்போது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.