முன்னாள் நிதியமைச்சர் பெசில் ராஜபக்ஷ இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் இந்த தகவலை தமது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது. அரசியல் சூழ்நிலை உட்பட பரஸ்பர நலன்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.