திருகோணமலை – முத்துநகர் பகுதியில் விவசாய காணிகளை அபகரித்து ஏனைய நாடுகளுக்கு விற்க வேண்டாம் எனக் கோரி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. அங்குள்ள 200 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் தங்களின் பிரதான தொழிலாக விவசாயத்தையே நம்பி வாழ்வதாகவும், துறைமுக அதிகார சபையினர் தங்கள் காணிகளை பெற்று இந்தியாவுக்கு வழங்க முயற்சிப்பதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.

அரசாங்கம் குறித்த நடவடிக்கையை நிறுத்தி தமது காணிகளுக்கான உறுதிப் பத்திரங்களை வழங்க வேண்டும் எனவும் விவசாய குளங்கள் புனரமைக்கப்பட வேண்டும் எனவும் அந்த மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.