நீண்ட காலமாக இல.01, 03ஆம் குறுக்குத்தெரு யாழ்ப்பாணம் எனும் முகவரியில்  இயங்கி வந்த இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண அலுவலகம் புதிய இடத்திற்கு இடமாற்றம் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும் 01ஆம் (01.05.2024) திகதியிலிருந்து இல.42 கோவில் வீதி, யாழ்ப்பாணம் (42,Temple Road, Jaffna) முகவரிக்கு இடமாற்றம் செய்யப்படவுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய இணைப்பாளர் ரி.கனகராஜ் தெரிவித்துள்ளார்.

புதிய அலுவலகமானது பிரதான வீதியிலிருந்து கோவில் வீதியில் 150 மீற்றர் தூரத்திலும், வைத்தியசாலை வீதியிலிருந்து பிரதான வீதியை நோக்கிய கோவில் வீதியில் 50 மீற்றர் தூரத்திலும் அமைந்துள்ளது.

எனவே, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகத்தில் சேவைகளை பெறுவதற்காக மக்கள் மேற்படி முகவரியில் இருக்கும் புதிய அலுவலகத்தை நாட முடியும் என யாழ்ப்பாண பிராந்திய இணைப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.