‘சிறீலங்கா அரசின் அடக்குமுறைகளுக்கு எதிராக அணி திரள்வோம்’ எனும் அறைகூவலுடன், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி (DTNA) தனது தொழிலாளர் தினக் கூட்டத்தை, நாளை, மானிப்பாயில் அமைந்துள்ள வலிகாமம் மேற்குப் பிரதேச சபையின் மண்டபத்தில் காலை 09.00 மணிக்கு நடாத்தவுள்ளது. கூட்டணியுடன் இணைந்து பயணிக்கின்ற உழைக்கும் பெண்கள் அமைப்பின் அனுசரணையில், மேலும் பல தொழிற்சங்க அமைப்புகளும் இணைந்து, தொழிற்சங்க, சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் கூட்டணித் தலைவர்களின் பங்குபற்றுதலுடன் இத் தொழிலாளர் தின நிகழ்வு நடாத்தப்படவுள்ளது.
மே தினத்தை முன்னிட்டு இன்று முதல் விசேட பாதுகாப்புத் திட்டம் அமுல்படுத்தப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பு நகரம் உள்ளிட்ட மே தின பேரணிகள் முன்னெடுக்கப்படும் பகுதிகளை மையப்படுத்தி இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்தூவ குறிப்பிட்டார். சர்வதேச தொழிலாளர் தினத்தைக் கொண்டாடுவதற்கு பிரதான அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன.
பிரதம நீதியரசர் தவிர உயர் நீதிமன்ற நீதியரசர்களை நியமிக்கவோ அல்லது பரிந்துரைக்கவோ ஜனாதிபதிக்கு இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஒக்டோபர் 4 ஆம் திகதி வரை அமுலாகும் வகையில், ஜனாதிபதிக்கு உயர் நீதிமன்றத்தினால் இந்த இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் நீதிபதி நிஷங்க பந்துல கருணாரத்னவை உயர் நீதிமன்ற நீதியரசராக நியமிப்பதற்கு ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரையை நிராகரித்து,
முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவை ஊழல் வழக்கொன்றிலிருந்து விடுவிக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க இன்று உத்தரவிட்டார். அமைச்சராக செயற்பட்ட சந்தர்ப்பத்தில் முறையற்ற விதத்தில் ஈட்டிய 274 இலட்சம் ரூபா பணத்தினூடாக பொரளை கின்சி வீதியில் அதிசொகுசு வீடொன்றை கொள்வனவு செய்த சம்பவம் தொடர்பில், மஹிந்தானந்த அளுத்கமகேவிற்கு எதிராக இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.