 யாழ்ப்பாணத்திலுள்ள பிரபல பாடசாலை ஒன்றை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்தார். அதிகளவானோரை இணைத்துக்கொண்டு விளையாட்டுப் போட்டிகளை நடத்த அனுமதி மறுக்கப்பட்டிருந்த போதும், குறித்த பாடசாலையில் நேற்று மற்றும் இன்றைய தினங்களில் விளையாட்டுப் போட்டி நடத்தப்பட்டுள்ளது.

இதனால் பாடசாலை மாணவர்களின் நலனை கருத்திற் கொண்டு, பாடசாலையை தனிமைப்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், டொக்டர் ஆறுமுகம் கேதீஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளார்.