இலங்கையினுள் சீனாவின் செயற்பாடுகள் இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக அமையக்கூடும் என இந்திய கடற்படையின் துணைத் தளபதி வைஸ் அட்மிரல் ஜி அசோக் குமார் தெரிவித்துள்ளார்.

சீனாவினால் இலங்கையில் புதிய துறைமுக திட்டத்தை பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளமை தொடர்பில் அந்நாட்டு பத்திரிக்கை ஒன்றுக்கு வழங்கிய செவ்வியின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக, பிராந்தியத்தில் சீனாவின் செயல்பாடுகளை இந்தியா கண்காணித்து வருவதாக அவர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், நாட்டின் கடல் எல்லையை பாதுகாக்க இந்திய கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளதால் எந்த ஒரு தரப்பினருக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்த முடியாது என அவர் மேலும் தெரிவித்தார்.