முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விஸ்வநாதர் தர்மலிங்கம் அவர்களின் 38ஆம் ஆண்டு நினைவுதினம் இன்று (02.09.2023) முற்பகல் 11.30 மணியளவில் வலிதெற்கு பிரதேசசபை வளாகத்தில் அமைந்துள்ள அமரர் வி.தர்மலிங்கம் அவர்களது திருவுருவ சிலைக்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி நினைவு கூரப்பட்டது. அஞ்சலி நிகழ்வில் அமரர் வி.தர்மலிங்கம் அவர்களின் புதல்வரும், புளொட் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட்) சிரேஸ்ட உபதலைவர் ராகவன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பா. கஜதீபன், கட்சியின் முன்னாள் உள்ளூராட்சிசபை உறுப்பினர்கள், ஏனைய கட்சி உறுப்பினர்கள் மற்றும் நலன் விரும்பிகளும் கலந்து கொண்டிருந்தார்கள்.