வவுனியா பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தினால் நடாத்தப்படும் 34வது வவுனியா பிரதேச இளைஞர் விளையாட்டு விழாவின் ஒரு அங்கமாக தோழர் சுந்தரம் (சதாசிவம் சிவசண்முகமூர்த்தி) அவர்களின் ஞாபகார்த்த மென்பந்து கிரிக்கெற் சுற்றுப்போட்டி இடம்பெற்று தோழர் சுந்தரம் (சதாசிவம் சிவசண்முகமூர்த்தி) ஞாபகார்த்த வெற்றிக்கிண்ணம் வழங்கப்படவுள்ளது. அமரர் சதாசிவம் சிவசண்முகமூர்த்தி (சுந்தரம்) அவர்கள் கழகத்தின் ஸ்தாபக தலைவர்களில் ஒருவரும், முதல் படைத்தளபதியும், புதிய பாதை ஆசிரியருமாவார்.

இறுதிச் சுற்றுப்போட்டியானது எதிர்வரும் 17.09.2023 ஞாயிற்றுக்கிழமை சமளங்குளம் பாடசாலை மைதானத்தில் இடம்பெறவுள்ளது.