இந்தோனேசியா இலங்கையுடனான தமது வர்த்தக உடன்படிக்கையை அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் நிறைவு செய்வதற்கு எதிர்பார்ப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, முன்னுரிமை வர்த்தக ஒப்பந்தம் குறித்த கலந்துரையாடல்களை ஏற்கனவே ஆரம்பித்துள்ளதாக இந்தோனேசிய வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது. சுதந்திர வர்த்தக உடன்படிக்கைக்கு வழிவகுக்கும் வகையில் இந்த முன்னுரிமை வர்த்தக உடன்படிக்கை கைச்சாத்தாகவுள்ளதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் பேச்சுவார்த்தைகளை நிறைவு செய்வதற்கு எதிர்பார்ப்பதாக இந்தோனேசிய வர்த்தக அமைச்சு கூறியுள்ளது.

இந்தநிலையில், இலங்கைக்கும் இந்தோனேசியாவுக்கும் இடையிலான இரண்டாம் சுற்று பேச்சுவார்த்தை எதிர்வரும் ஜூன் மாதம் 19ஆம் மற்றும் 20ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளன.