தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு 779 சிறைக்கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளனர். ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. அரசியலமைப்பின் 34 (1) ஆவது சரத்தின் பிரகாரம், குறித்த 779 சிறைக்கைதிகளுக்கும் ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது. இதேவேளை, புனித ரமழான் நோன்புப் பண்டிகை மற்றும் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு எதிர்வரும் 11, 12, 13ஆம் திகதிகளில், சிறைக்கைதிகளைப் பார்வையிடுவதற்கு சிறப்பு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

சிறைச்சாலைகள் ஆணையாளரும் ஊடகப் பேச்சாளருமான காமினி பி. திஸாநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.

புனித ரமழான் நோன்புப் பண்டிகையை முன்னிட்டு சிறையில் உள்ள இஸ்லாமிய கைதிகளை எதிர்வரும் 11ஆம் திகதி பார்வையிட முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.