எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்கள், தமிழ் பொது வேட்பாளர் ஒருவருக்கு வாக்களிக்க வேண்டும் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். தமிழ் மக்களின் இருப்பை உறுதி செய்வதற்காக, தமிழ் பொது வேட்பாளர் ஒருவருக்கு ஆதரவு வழங்க வேண்டிய தேவையுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இம்முறை தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை, இலங்கைத் தமிழரசுக் கட்சியும் ஆதரிக்கும் என தாம் எதிர்பார்ப்பதாகவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் குறிப்பிட்டுள்ளார்.