அமரர் திருமதி பரமலிங்கம் மனோன்மணி அவர்கள்மலர்வு : 16.05.1943
உதிர்வு: 17.04.2024
கழகத்தின் அம்பாறை மாவட்ட அமைப்பாளர் மத்தியகுழு உறுப்பினர் தோழர் சங்கரி (ப. ரவிச்சந்திரன்) அவர்களின் தாயார் பரமலிங்கம் மனோன்மணி அவர்கள் இன்றுகாலை காலமானார் என்பதை மிகுந்த துயருடன் அறியத் தருகின்றோம்.
அன்னையின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர், உற்றார், உறவினர்கள் மற்றும் நண்பர்களோடு தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாமும் இப் பெருந்துயரினை பகிர்ந்து கொள்வதோடு அன்னைக்கு எமது இதயபூர்வ அஞ்சலியை சமர்க்கின்றோம்.
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(DPLF)
குறிப்பு:
இறுதி நிகழ்வுகள் இன்றுமாலை (17.04.2024) 5.00மணியளவில் இடம்பெறும்.
தொடர்புகட்கு
சங்கரி +94 (75) 498 0519
காரைதீவு 03