ஜனாதிபதி செயலகத்தில் பதவி வகிப்பதாக தெரிவித்து பலர் மோசடி சம்பவங்களில் ஈடுபடுவதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது. முதலீட்டாளர்கள், தொழில் கோரும் இளைஞர்கள் மற்றும் பல்வேறு நாடுகளுக்கு விசா பெற முயற்சிப்பவர்களிடம் அவர்கள் போலி ஆவணங்களைச் சமர்ப்பித்து, நிதி மோசடியில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. இவ்வாறான மோசடியாளர்கள் குறித்து அவதானமாக இருக்குமாறு ஜனாதிபதி ஊடகப்பிரிவு பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

அவ்வாறான செயற்பாடுகள் தொடர்பில், ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் ஜனாதிபதியின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் பிரசாத் செனரத்தை தொடர்பு கொள்ளுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.