நாடளாவிய ரீதியில் தற்போது பணியில் உள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இன்றைய தினம் சுகவீன விடுமுறையை அறிவித்து பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளனர். அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சேவை சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது போக்குவரத்து மற்றும் காகிதாதிகள் உள்ளிட்டவற்றை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அந்தச் சங்கத்தின் தலைவர் அனுராத செனவிரத்ன தெரிவித்துள்ளார்.