Header image alt text

சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ்அரசியல் கைதிகளை விடுவிக்க வலியுறுத்தி யாழில் கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. சமூக நீதிக்கான வெகுஐன அமைப்பின் ஏற்பாட்டில் யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் இன்றுகாலை 10 மணிமுதல் 11 மணிவரை இப்போராட்டம் நடைபெற்றது.

இதன்போது அரசியல் கைதிகளின் கோரிக்கையை நிறைவேற்று, அனைத்து அரசியல் கைதிகளையும் பொதுமன்னிப்பில் விடுதலை செய், பயங்கரவாத தடைச் சட்டத்தை உடனே விலக்கு, உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகளின் உயிரைப் பறிக்காதே, நல்லாட்சி அரசே ஏமாற்றாதே, Read more

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கு பிரான்ஸின் அதி உயர்ந்த தேசிய விருது Commandeur de la Legion D’Honneur வழங்கப்பட்டுள்ளது. இவ்விருதை வென்ற முதலாவது இலங்கையர் என்ற பெருமையை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க பெற்றுள்ளார்.

இலங்கையில் உள்ள பிரான்ஸ் தூதுவரின் இல்லத்தில் நடைபெற்ற விசேட நிகழ்வில் பிரான்ஸின் ஜனாதிபதி எம்மானுவெல் மெக்ரோனின் சார்பில் இலங்கைக்கும் மாலைதீவுக்குமான பிரான்ஸ் தூதுவர் ஜீன் மரின் சூ இந்த விருதை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவிடம் கையளித்தார். Read more

கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாக பெண் விரிவுரையாளர் ஒருவர் திருகோணமலை நகர கடலிலிருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

நேற்று மதியம் கடமைகளை முடித்து விட்டு பல்கலைக்கழகத்தில் இருந்து வீடு சென்ற 29வயதான நடராசா போதநாயகி என்ற இவர் பிற்பகல் 2.30 மணியளவிலிருந்து காணாமல் போயுள்ளார். இவர் காணாமல் போயுள்ளதாக நிலாவெளி மற்றும் துறைமுக பொலிஸ் நிலையங்களில் இன்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். Read more

தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் சாவகச்சேரி அலுவலகம் தாக்கப்பட்டமைக்கு வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

கருத்துக்களை கருத்துக்களால் மோதவேண்டுமே தவிர தாக்குதல் நடத்தியமை மிகவும் தவறானதாகும். தங்கள் கருத்துக்களையும், கட்சிரீதியான செயற்பாட்டுகளையும் முன்னெடுக்கும் உரிமை ஒவ்வொரு குடிமகனுக்கும், தமிழ் மகனுக்கும் உண்டு.

கருத்துக்களை கருத்துக்களால்தான் எதிர்கொள்ள வேண்டும். அதனை விடுத்து கட்சி அலுவலகங்கள் மீதும் ஆதரவாளர்கள் மீதும் வன்முறையினை பிரயோகிப்பது கட்சிகளிடையே தேவையற்ற பகைமை முரண்பாட்டை உருவாக்கும்.

இத்தகைய செயல்கள் அநாகரிகமானதும் மிகவும் கண்டிக்கத்தக்கதுமாகும்.

க.சிவநேசன்,
அமைச்சர் – வட மாகாணசபை,
பொருளாளர் – ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)
20.09.2018.

ஜெர்மனி லுட்விகஸ்பேர்க் நகரில் 15.09.2018 சனிக்கிழமை இடம்பெற்ற சர்வதேச கலாச்சார நிகழ்வில் இலங்கையர் ஜனநாயக முன்னணியும் கடந்த காலங்களைப்போல் இம்முறையும் கலந்து சிறப்பித்துள்ளது. இதன்போது தமிழர் பாரம்பாரிய உணவு வகைகளை அறிமுகம் செய்ததோடு மட்டும்மல்லாது, தாயகத்தது உறவுகளுக்கான வாழ்வாதார உதவிகளையும் செய்துவருகின்றது. இந்நிகழ்வில் பெருந்தொகையிலான புலம்பெயர் தமிழ்மக்கள் கலந்து சிறப்பித்திருந்தார்கள்.

அங்கு இடம்பெற்றுவரும் கொண்டாட்டங்களின்போது உணவுச் சாலைகளை அமைத்து, தமிழர்களின் பாரம்பரிய உணவுகளை பரிமாறி அதன் மூலம் கிடைக்கும் பணத்தினைக் கொண்டு தாயகத்தில் வாடும் உறவுகளுக்கு அளப்பரிய உதவிகளை இலங்கையர் ஐனநாயக முன்னணி தொடர்ந்து செய்து வருகின்றது. Read more

கொழும்பு மகசின் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளில் சிலர், உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதமிருக்கும், கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்தே, இந்தக் கைதிகளும் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ளனரென, சிறைச்சாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று நண்பகலுக்குப் பின்னரே, அவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ளனரென்றும் அந்தத் தகவல்கள் தெரிவித்தன. Read more

அனுராதபுரம் சிறைச்சாலையில் தொடர்ந்து ஆறாவது நாளாகவும் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை புளொட் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் இன்றுபிற்பகல் சந்தித்து பேசியுள்ளார்.

இது பற்றி பாராளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் அவர்கள் கூறுகையில்,

சிறையில் உணவுதவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை இன்றுபிற்பகல் சந்தித்தோம். அவர்களில் நால்வரின் உடல்நிலை மிக மோசமாக இருக்கின்றது. ஏனையவர்களும் பலவீனமடைந்தே காணப்படுகின்றார்கள். அவர்களைப் பொறுத்தமட்டில் தங்களில் அநேகமானவர்கள் மிக நீண்டகாலமாக அதாவது ஒன்பது பத்து வருடங்களாக சிறையில் இருந்துள்ளதாகவும், தம்மை குறுகியகாலம் புனர்வாழ்வளித்து விடுதலை செய்ய வேண்டும் அல்லது தமது வழக்குகளை துரிதப்படுத்த வேண்டுமென்று எதிர்பார்க்கின்றார்கள். இது சம்பந்தமாக அரசுடன் கதைக்கும்படி கேட்கின்றார்கள். Read more

வடமாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் அவர்களின் 2018ம் ஆண்டுக்குரிய வருடாந்த பிரமாண அடிப்படையிலான மூலதன நன்கொடை நிதியிலிருந்து வறுமைக் கோட்டின்கீழுள்ள மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.

16.09.2018 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.00 மணியளவில் மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் அவர்களின் அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)இன் செயற்குழு உறுப்பினரும், வடமாகாணசபை உறுப்பினருமான ஜி.ரி.லிங்கநாதன், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்) இன் உபதலைவர்களுள் ஒருவரும், வவுனியா நகரசபை உறுப்பினருமான க.சந்திரகுலசிங்கம், Read more

தமிழக அரசாங்கத்தின் கல்வி பள்ளித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அவர்களின் பங்குபற்றுதலுடன் யாழ் பொது நூலகத்திற்கு 50,000 புத்தகங்களை கையளித்தலும்,

வட மாகாணத்தில் தெரிவுசெய்யப்பட்ட பாடசாலைகளுக்கும், வாசிகசாலைகளுக்குமான புத்தகங்களை பெற்றுக் கொள்வதற்காக கல்வி அமைச்சின் ஊடாக வழங்கப்படும் நிதியை கையளிக்கும் மாபெரும் நிகழ்வும் கல்வி இராஜாங்க அமைச்சர் கலாநிதி வே.இராதாகிருஸ்ணன் அவர்களின் தலைமையில் யாழ். பொதுநூலக கேட்போர் கூடத்தில் இன்றுகாலை 10மணியளவில் இடம்பெற்றது. Read more

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் வலிகாமம் தெற்கு பிரதேசசபை உறுப்பினரும், கட்சியின் ஈவினை-புன்னாலைக்கட்டுவன் பிரதேச இணைப்பாளரும், சமூக ஆர்வலருமான இரத்தினசிங்கம் கெங்காதரன் (J.P)இன் ஏற்பாட்டில்

“ஐயை” உலகத் தமிழ் மகளிர் குழுமத்தின் அனுசரணையில் யாழ். புன்னாலைக்கட்டுவன் தெற்கு மத்தாளோடை கிராமத்தில் கல்வி மேம்பாட்டிற்காக ஆரம்பக் கல்விப்பிரிவினருக்கான மாலை நேரக்கல்வி நிகழ்வுகள் 14.09.2018 வெள்ளிக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டன. இக் கல்விச் சேவையானது தொடர்ச்சியாக நடைபெறுவதற்கான முழுச் செலவினையும் “ஐயை” குழுமம் மேற்கொள்ளும் என்று இ.கெங்காதரன் அவர்கள் இந்த நிகழ்வின்போது தெரிவித்தார். Read more