Header image alt text

வட மாகாண சபைக்கு தெரிவான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளர்கள் மற்றும் விருப்பு வாக்கு எண்ணிக்கை.  

 01.  சி.வி விக்னேஸ்வரன்   – 132,255

02.  அனந்தி சசிதரன்   – 87,870

03.  தர்மலிங்கம் சித்தார்த்தன் – 39,715

04.  ஆனோல்ட்    – 26,888

05.  சி.வி.கே. சிவஞானம்  – 26,747

06.  கஜதீபன்    – 23,669

07.  எம்.கே. சிவாஜிலிங்கம்  – 22,660

08.  ஜங்கரநேசன்    – 22,268

09.  சுகிர்தன்     – 20,541

10.  சயந்தன்    – 20,179

11.  விந்தன்     – 16,463

12.  பரஞ்சோதி    – 16,359

13.  சர்வேஸ்வரன்    – 14,761

14.  சிவயோகன்    – 13,479

வவுனியா மாவட்ட கூட்டமைப்பு வேட்பாளர்களின் விருப்பு வாக்கு    

 1. பத்மநாதன் சத்தியலிங்கம் – 19656  

 2. ஜி.ரி.லிங்கநாதன் – 11901  

 3. எம். தியாகராஜா – 11681  

  4. ஆர். இந்திரராஜா – 11535

முல்லைத்தீவு மாவட்ட கூட்டமைப்பு வேட்பாளர்களின் விருப்பு வாக்கு

  1. அன்ரன் ஜெகநாதன் – 9309

  2. சிவபிரகாசம் சிவமோகன் – 9296

  3. துரைராசா ரவிகரன் – 8868

  4. கனகசுந்தரசுவாமி வீரவாகு – 8702

கிளிநொச்சி மாவட்ட கூட்டமைப்பு வேட்பாளர்களின் விருப்பு வாக்கு

 1. ப.அரியரட்ணம் – 27264  

 2. ரி.குருகுலராஜா – 26427  

 3. எஸ்.பசுபதிப்பிள்ளை – 26132

மன்னார் மாவட்ட கூட்டமைப்பு வேட்பாளர்களின் விருப்பு வாக்கு-

1. ஏ.எஸ்.பீரிஸ் சிராய்வா – 12927

2. பாலசுப்பிரமணியம் .டெனீஸ்வரன் – 12827

3. ஞானசீலன் குணசீலன் – 12260

அத்துடன் மன்னார் மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சார்பாக போட்டியிட்ட அப்துல் ரிப்கான் பதியுதீன் 11130 விருப்பு வாக்குகளையும், சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்ட மொஹமட் ரயீஸ் 3165 விருப்பு வாக்குகளையும் பெற்று வட மாகாணசபைக்கு தெரிவாகியுள்ளனர்.

யாழ் மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சார்பாக போட்டியிட்ட கமலேந்திரன் 13632 விருப்பு வாக்குகளையும், ரா.அங்கஜன் 10034 விருப்பு வாக்குகளையும் பெற்று வட மாகாணசபைக்கு தெரிவாகியுள்ளனர்.

வவுனியா மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சார்பாக போட்டியிட்ட தர்மபால செனிவிரத்ன 5148 விருப்பு வாக்குகளையும், ஜெயதிலக்க 4806 விருப்பு வாக்குகளையும் பெற்று வட மாகாணசபைக்கு தெரிவாகியுள்ளனர். 

கிளிநொச்சி மாவட்டத்தில் ஜக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பாக போட்டியிட்ட தவநாதன் 3,753 விருப்பு வாக்குகளைப் பெற்று வட மாகாணசபைக்கு தெரிவாகியுள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் ஜக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சார்பாக போட்டியிட்ட அகமட் லெப்பை காசீம் 1,726 விருப்பு வாக்குகளைப் பெற்று வட மாகாணசபைக்கு தெரிவாகியுள்ளார்.

வட மாகாணசபையை தமிழ் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியது-

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் 25 வருடங்களின் பின் இடம்பெற்ற வட மாகாணசபைத் தேர்தலின் யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார் முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய ஐந்து மாவட்டங்களிலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அமோக வெற்றி பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்தில் 213,907 மொத்த வாக்குகளைப் பெற்று 14 ஆசனங்களையும், முல்லைத்தீவில் 28,226 மொத்த வாக்குகளைப் பெற்று 4 ஆசனங்களையும், கிளிநொச்சியில் 37,079 மொத்த வாக்குகளைப் பெற்று 3 ஆசனங்களையும் கூட்டமைப்பு பெற்றுள்ளது. இதேவேளை வவுனியாவில் 41,225 மொத்த வாக்குகளைப் பெற்று 4 ஆசனங்களையும், மன்னாரில் 33,118 மொத்த வாக்குகளைப் பெற்று 3 ஆசனங்களையும் கூட்டமைப்பு) கைப்பற்றியுள்ளது. இதன்படி கூட்டமைப்பு மொத்தம் 28 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் வடமாகாணத்திற்கான இரண்டு போனஸ் ஆசனங்களும் கூட்டமைப்புக்கே கிடைக்கும் வாய்ப்புள்ளது. ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 7 ஆசனங்களையும், சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஓர் ஆசனத்தையும் பெற்றுள்ளன.

யாழ். மாவட்டம் 

தமிழ் தேசியக் கூட்டமைப்பு    – 213907 84.37வீதம் 14ஆசனம்

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு  –  35995 14.2வீதம் 02 ஆசனம்

ஐக்கிய தேசியக் கட்சி    –   855 0.37வீதம்

ஜனநாயக ஐக்கிய முன்னணி   –   515  

செல்லுபடியான வாக்குகள்    – 253542

நிராகரிக்கப்பட்ட வாக்குகள்    –  20279

அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள்  – 273821

பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள்  – 426813

வவுனியா மாவட்டம்

தமிழ் தேசியக் கூட்டமைப்பு    -41225  66.10வீதம் 04 ஆசனம்

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு  -16635  26.67வீதம்; 02 ஆசனம் 

ஐக்கிய தேசியக் கட்சி    – 1769

சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்   – 1991 

மக்கள் விடுதலை முன்னணி   –  173    

செல்லுபடியான வாக்குகள்   – 62365

நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   –  4416

அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் – 66781

பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் – 94644

மன்னார் மாவட்டம்

தமிழ் தேசியக் கூட்டமைப்பு   -33118  62.22வீதம்  03 ஆசனம்

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு -15104 28.38வீதம்  01 ஆசனம்

சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்  -4571       –    01 ஆசனம் 

ஐக்கிய தேசியக் கட்சி   – 187

செல்லுபடியான வாக்குகள்   -53226

நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   – 2989

அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் -56215

பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் -75737

முல்லைத்தீவு மாவட்டம்

தமிழ் தேசியக் கூட்டமைப்பு   -28266   04 ஆசனம்

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு -7209   01 ஆசனம்

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ்   – 199

ஐக்கிய தேசியக் கட்சி    – 197

செல்லுபடியான வாக்குகள்   -35982

நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   – 2820

அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் -38802

பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் -53683

கிளிநொச்சி மாவட்டம்

தமிழ் தேசியக் கூட்டமைப்பு   -37079   03 ஆசனம்

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு -7897   01 ஆசனம்

ஐக்கிய தேசியக் கட்சி    – 54

மக்கள் விடுதலை முன்னணி    – 300

செல்லுபடியான வாக்குகள்   -45459

நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   – 4735

அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் -50194

பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் -68600

தபால் மூல வாக்களிப்பு

Posted by plotenewseditor on 21 September 2013
Posted in செய்திகள் 

வவுனியா மாவட்டம் தபால் மூல வாக்களிப்பு-

தமிழ் தேசியக் கூட்டமைப்பு – 901

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு – 323

ஐக்கிய தேசியக் கட்சி – 65

சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 24

மக்கள் விடுதலை முன்னணி  – 15

ஜனநாயக கட்சி – 12

சுயேட்சைக்குழு இல-06 – 05

சுயேட்சைக்குழு இல-07 – 01

செல்லுபடியான வாக்குகள் – 1321

நிராகரிக்கப்பட்ட வாக்குகள் – 25

அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் – 1346

பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் – 1402

யாழ். மாவட்டம் தபால் மூல வாக்களிப்பு-

தமிழ் தேசியக் கூட்டமைப்பு – 7625

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு – 1099

ஐக்கிய தேசியக் கட்சி – 35

செல்லுபடியான வாக்குகள் – 8835

நிராகரிக்கப்பட்ட வாக்குகள் – 114

அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் – 8949

மன்னார் மாவட்டம் தபால் மூல வாக்களிப்பு
தமிழ் தேசியக் கூட்டமைப்பு    –  1300

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு  –  408

ஐக்கிய தேசியக் கட்சி    –  07

சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்   –  135

ஜனநாயகக் கட்சி     –  01
செல்லுப்படியான வாக்குகள்   1852

நிராகரிக்கப்பட்ட வாக்குகள்   17

அளிக்கப்பட்ட வாக்குகள்    1869

பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 1917

தபால் மூல வாக்களிப்பு

Posted by plotenewseditor on 21 September 2013
Posted in செய்திகள் 

முல்லைத்தீவு மாவட்டம் தபால் மூல வாக்களிப்பு

தமிழ் தேசியக் கூட்டமைப்பு    – 646

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு  – 146

ஐக்கிய தேசியக் கட்சி    –  02

ஜனநாயகக் கட்சி          –  01

செல்லுபடியான வாக்குகள்    – 795

நிராகரிக்கப்பட்ட வாக்குகள்    –  05

அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள்  – 800

பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள்  – 831

 

கிளிநொச்சி மாவட்டம் தபால் மூல வாக்களிப்பு

தமிழ் தேசியக் கூட்டமைப்பு    – 756

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு  – 160

ஐக்கிய தேசியக் கட்சி    –  01

செல்லுபடியான வாக்குகள்    – 919

நிராகரிக்கப்பட்ட வாக்குகள்    –  10

அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள்  – 929

பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள்  – 970

 

 

மாகாணசபைத் தேர்தல் வாக்களிப்புகள் நிறைவு-

வடக்கு, வடமேல், மத்திய மாகாண சபைகளுக்கான தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் இன்றுகாலை 7மணிக்கு தொடங்கி மாலை 4மணியுடன் நிறைவடைந்துள்ளன. மூன்று மாகாண சபைகளிலிருந்தும் 142 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 3,785வேட்பாளர்கள் இத்தேர்தலில் போட்டியிட்டிருந்தனர். 43லட்சத்து 58ஆயிரத்து 263பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். வட மாகாணத்தில் யாழ் மாவட்டம் 60வீதம், கிளிநொச்சி மாவட்டம் 68வீதம், வவுனியா மாவட்டம் 65வீதம், முல்லைத்தீவு மாவட்டம் 71வீதம், மன்னார் மாவட்டம் 70வீதம் என வாக்குப் பதிவுகள் இடம்பெற்றுள்ளன. மத்திய மாகாணத்தில் கண்டி மாவட்டம் 58வீதம், மாத்தளை மாவட்டம் 54வீதம், நுவரெலியா மாவட்டம் 54.5வீதம் என வாக்குப்பதிவுகள் இடம்பெற்றுள்ளன. அத்துடன் வடமேல் மாகாணத்தில் புத்தளம் மாவட்டம் 55.60வீதம், குருநாகல் மாவட்டம் 55வீதம் என வாக்குப்பதிவுகள் இடம்பெற்றுள்ளன. வாக்குச் சாவடிகளிலிருந்து வாக்குகளை எண்ணுவதற்காக பெட்டிகள் எடுத்துச் செல்லும் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மன்னாரில் இரு கட்சி ஆதரவாளர்கள் மோதல்-

மன்னாரில் இரு கட்சிகளின் ஆதரவாளர்களுக்கிடையே ஏற்பட்ட மோதல்களைத் தொடர்ந்து அங்கு இடம்பெற்ற கல்வீச்சுத் தாக்குதலில் வயோதிப பெண் காயமடைந்துள்ளார். மன்னார், தாழ்வுபாடு புனித வளனார் பாடசாலையில் உள்ள 11ஆவது வாக்குச்சாவடி பகுதியில் இரு கட்சிகளின் ஆதரவாளர்களுக்கிடையில் முறுகல் ஏற்பட்டுள்ளது. அதனையடுத்து அப்பகுதியில் சிலர் கூட்டமாக இருந்ததை அவதானித்த மாற்றுக் கட்சியை சார்ந்தவர்கள் பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். அதனைத் தொடர்ந்து பொலிசார் அவர்களை துரத்திச் சென்ற சமயம் அவர்கள் வீடுகளுக்குள் புகுந்துள்ளனர். பொலிசாரும் பின்தொடர்ந்து தடியால் தாக்குதல் நடத்தியதாக தெரியவருகிறது. இதனையடுத்தே இரு கட்சி ஆதரவாளர்களிடையே மோதல் ஏற்பட்டதாகவும், இதன்போதே வீட்டினுள் இருந்த 65வயதான அந்தோனிக்கம் பெரேரா காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து கலகம் அடக்கும் பொலீசார் வந்து நிலைமையை கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவந்துள்ளனர்.

 

வடக்கில் 36 மாகாண சபை உறுப்பினர்களை தெரிவு செய்யும் தேர்தல்- மூன்று மாகாண சபைகளுக்கான 142 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 3ஆயிரத்து 712 வாக்களிப்பு நிலையங்களில் நாளை தேர்தல் நடைபெறவுள்ளது. இத் தேர்தலில் 43 இலட்சத்து 63 ஆயிரத்து 252 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். வடமாகாண சபைக்கு யாழ் மாவட்டத்திலிருந்து 16 உறுப்பினர்களும், கிளிநொச்சியிலிருந்து 04 உறுப்பினர்களும், வவுனியாவில் இருந்து 06 உறுப்பினர்களும், முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களில் இருந்து தலா 05 உறுப்பினர்களுமாக 36பேர் தெரிவுசெய்யப்படவுள்ளனர். குருநாகல் மாவட்டத்தில் 34 உறுப்பினர்களும், புத்தளம் மாவட்டத்தில் 16 உறுப்பினர்களுமாக வடமேல் மாகாண சபைக்கு 50 உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்படவுள்ளனர். மத்திய மாகாண சபைக்கு 56 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக கண்டி, மாத்தளை, நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலும் நாளை தேர்தல் நடைபெறவுள்ளது. கண்டி மாவட்டத்தடிலிருந்து மத்திய மாகாண சபைக்கு 29 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளதுடன் மாத்தளை மாவட்டத்திலிருந்து 11 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர். நுவரெலியா மாவட்டத்தில் இருந்து மத்திய மாகாண சபைக்கு 16 உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்படவுள்ளனர். மூன்று மாகாண சபைகளுக்கும் தலா இரண்டு போனஸ் ஆசனங்கள் வழங்கப்படவுள்ளன.

தேர்தல் பாதுகாப்பு கடமையில் 24,500 பொலீசார்-  மாகாண சபைத் தேர்தல் நடைபெறவுள்ள மூன்று மாகாணங்களிலும் பாதுகாப்பை உறுதிபடுத்த பொலிசாரையும், பொலிஸ் விசேட அதிரடிப் படையினரையும் கடமையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், தேர்தல் பாதுகாப்பு கடமையில் சுமார் 24 ஆயிரத்து 500 பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக்க சிறிவர்தன தெரிவித்துள்ளார். வாக்களிப்பு நிலையங்களை சூழவுள்ள பகுதிகளின் பாதுகாப்பை பலப்படுத்த பொலிஸ் விசேட அதிரடிப் படையினரை ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

வாக்காளர் அட்டை விநியோகத்தில் முறைகேடு- வவுனியாவில் உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகத்தில் ஒரு முறைகேடு இடம்பெற்றமை தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. மாகாண சபைத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்காமல் தன்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின்பேரில், தபால் ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக தபால் மாஅதிபர் ரோஹன அபேரத்ன கூறியுள்ளார். எவ்வாறாயினும் குறித்த வாக்காளர் அட்டைகள் பின்னர் உரிய வீடுகளுக்கு விநியோகிக்கப்பட்டதாக தபால் மாஅதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.

கூட்டமைப்பு பிரதிநிதிகள் வேட்பாளர் அனந்தியின் பாதுகாப்பு குறித்து ஆராய்வு-

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளர் அனந்தி சசிதரனின் வீட்டிற்குள் இராணுவத்தினர் அத்துமீறி நுழைந்து நள்ளிரவு தாக்குதல் நடத்தியதில் 14பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழு தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சரவணபவன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் ஐ.தே.கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சுவாமிநாதன், கொழும்பு மாநகரசபை முன்னாள் பிரதி மேயர் அசாத் சாலி ஆகியோர் இன்றுகாலையில் வேட்பாளர் அனந்தி சசிதரனின் சுழிபுரம் இல்லத்திற்குச் சென்று பாதுகாப்பு நிலைமைகள் சம்பந்தமாக ஆராய்ந்துள்ளனர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர் அனந்தி சசிதரன் வீட்டில் இராணுவம் தாக்குதல்-

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளர் அனந்தி சசிதரனின் வீட்டிற்கு நேற்று நள்ளிரவு இரண்டு இராணுவ ட்ரக் வண்டிகளில் வந்து சுற்றிவளைத்த இராணுவத்தினர் அவரது வீட்டிற்குள் அத்துமீறி பிரவேசித்து அங்கிருந்தவர்கள்மீது சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர். இத்தாக்குதல் காரணமாக 14பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களுள் பவ்ரல் அமைப்பின் யாழ் மாவட்டக் கண்காணிப்பாளரான சுகாஸ் என்பவரும் அடங்குகின்றார்.  இத்தாக்குதலின்போது வாகனங்களும் சேதமாக்கப்பட்டுள்ளன. இதன்போது காயமடைந்த அனைவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

‘தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இராஜதந்திர வழிமுறைகளை ஏற்றுக்கொண்டுதான் அதில் நாம் இணைந்தோம் – தர்மலிங்கம் சித்தார்த்தன்.

Sithar ploteஎதிர்காலம் பற்றிய எண்ணங்கள், தனது தனிப்பட்ட அரசியல் பயணம், தமது அமைப்பு கடந்து வந்த பாதை, விடுதலைப் புலிகளுடனான உறவு, 13ஆவது அரசியலமைப்புத் திருத்தம் போன்றவை தொடர்பாக உரையாடுகிறார் தர்மலிங்கம் சித்தார்த்தன்.

 தினக்குரல் நாளிதழின் வட மாகாணப் பதிப்பில், 18.09.2013 அன்று வெளியாகிய செவ்வி   (தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) அமைப்பினதும், அதன் அரசியற் கட்சியான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியினதும் தலைவரான தர்மலிங்கம் சித்தார்த்தன், நடைபெறவிருக்கின்ற வடக்கு மாகாண சபைத் தேர்தலில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளராக, ‘வீடு’ சின்னத்தின் கீழ், ’15’ குறியீட்டு இலக்கத்தில்; போட்டியிடுகின்றார்.)

தமிழ்த் தேசிய அரசியல் ஒரு முக்கிய திருப்புமுனைக்கான பயணத்தில் நிலைகொண்டிருப்பதாகவே பல அரசியல் அவதானிகளும் அபிப்பிராயப்படுகின்றனர். ஒரு புறம் இலங்கை அரசின் மீதான ஜக்கிய நாடுகள் சபையின் அழுத்தங்கள் அதிகரித்து வருகின்றன. பிறிதொரு புறம் 13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என்றவாறன பிராந்திய அழுத்தமும் அதிகரித்திருக்கின்றது. ஏதோ ஒரு வகையில், இவற்றைச் செவிமடுக்க வேண்டிய இக்கட்டு நிலையில் ஆளும் மகிந்த அரசாங்கம் சிக்குண்டிருக்கின்றது என்பதே அரசியல் நோக்கர்களின் கருத்தாக இருக்கிறது. இத்தகையதொரு முக்கியமான கட்டத்தில்தான் வடக்கு மாகாண சபைத் தேர்தல் இடம்பெறுகின்றது. அதில் நீங்கள் ஒரு வேட்பாளராகப் போட்டியிடுகின்றீர்கள். உங்களுக்கும் ஏனைய வேட்பாளர்களும் இடையில் ஒரு முக்கிய வேறுபாடு உண்டு. நீங்கள் இலங்கையில் ஒரு மாகாண சபை முறைமை தோன்றுவதற்கான அடிப்படையை வழங்கிய திம்பு பேச்சுவார்த்தையில் பங்குகொண்ட ஒருவர். திம்பு பேச்சுவார்த்தையில் பங்குகொண்டவர்களில் நீங்களும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும் தான், இன்றும் அரசியலில் (யுஉவiஎந pழடவைiஉள) இயங்கிக் கொண்டிருக்கின்றீர்கள். இவ்வாறான அனுபவத்துடன் இன்றைய வடக்குத் தேர்தலின் முக்கியத்துவத்தை நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்கள்? Read more