Header image alt text

தேர்தல் முறைப்பாடுகளை தெரிவிக்க தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்- மாகாண சபைத் தேர்தல் தொடர்பான முறைபாடுகளை தெரிவிப்பதற்காக விசேட தொலைபேசி இலக்கங்கள் மற்றும் தொலைநகல் இலக்கங்களை தேர்தல்கள் செயலகம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் பிரகாரம் மத்திய மாகாணத்தின் கண்டி மாவட்ட தேர்தல் தொடர்பான முறைபாடுகளுக்காக 0112 877073 என்ற தொலைபேசி இலக்கத்தையும், மாத்தளை மாவட்டத்திற்கு என 0112 877074       என்ற இலக்கத்தையும், நுவரெலியா மாவட்டத்திற்கு என 0112 877075 என்ற இலக்கத்தையும் தேர்தல்கள் செயலகம் அறிமுகப்படுத்தியுள்ளது. கண்டி மாவட்டத்திற்காக 0112 877047 என்ற தொலைநகல் இலக்கமும், மாத்தளை மாவட்டத்திற்காக 0112 877050 என்ற இலக்கமும், நுவரெலியா மாவட்டத்திற்காக 0112 877051 என்ற இலக்கமும் அறிவிக்கப்பட்டுள்ளன. வட மாகாணத்திற்கான முறைப்பாடுகளை தெரிவிப்பதற்காகவும் தேர்தல்கள் செயலகம் தொலைபேசி மற்றும் தொலைநகல் இலக்கங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கமைய யாழ் மாவட்டத்திற்கு 0112 877076 என்ற இலக்கமும், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு   0112 877078  என்ற இலக்கமும், மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களுக்கு  0112 877081 என்ற இலக்கமும் ஒதுக்கப்பட்டுள்ளன. அத்துடன் வட மாகாணத்திலிருந்து முறைப்பாடுகளை தெரிவிப்பதற்காக  0112 877053, 0112 877054, 0112 877056 மற்றும் 0112 877061 ஆகிய தொலைநகல் இலக்கங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. வடமேல் மாகாணத்தின் குருநாகல் மாவட்ட தேர்தல் தொடர்பான முறைபாடுகளை தெரிவிப்பதற்காக  0112 877065  என்ற இலக்கமும், புத்தளம் மாவட்ட முறைபாடுகளை தெரிவிப்பதற்காக 0112 877069  என்ற இலக்கமும் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த மாவட்டங்களிலிருந்து தொலைநகல் மூலம் முறைபாடுகளை தெரிவிப்பதற்காக  0112 877041  மற்றும்  0112 877042  தொலைநகல் இலக்கங்கள் தேர்தல்கள் செயலகத்தினால் ஒதுக்கப்பட்டுள்ளன.

பெண்களுக்கு எதிரான வன்முறைகளை கட்டுப்படுத்த தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்- மாகாணசபைத் தேர்தலில் பெண்களின் ஜனநாயக உரிமையைப் பாதுகாப்பதற்காக வட மாகாண கண்காணிப்புக்குழு புதிய தொலைபேசி இலக்கங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. தேர்தல் வன்முறைகள், தேர்தல் சட்டமீறல்கள் மற்றும் துன்புறுத்தல்களுக்கு எதிராக கிளர்ந்தெழுவோம் என்ற தொனிப்பொருளில் விசேட அமைப்பு ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது. குறித்த அமைப்புடன் தொடர்புகொண்டு பெண் வேட்பாளர்கள் மற்றும் பெண் வாக்காளர்கள் தமது முறைப்பாடுகளை தெரிவிக்க முடியும். முறைப்பாடுகளை மேற்கொள்ள 077 7298387, 077 3442895, 077 3153323 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொள்ள முடியும். தொலைநகல் ஊடாக 021 2224398 இலக்கத்திற்கு அறிவிக்க முடியும் என வட மாகாண கண்காணிப்புக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

534 தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் பதிவு– மூன்று மாகாண சபைகளுக்குமான தேர்தல் பிரச்சாரத்தின்போது தேர்தல் விதிமீறல்கள் தொடர்பில் 534 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக கபே அமைப்பு தெரிவித்துள்ளது. அதன்படி இந்த முறைப்பாடுகளில் அரச சொத்துக்களை பயன்படுத்தல், சட்டவிரோத நியமனங்கள், இராணுவ பொலிஸ் தலையீடுகள் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் விதி மீறல்கள் தொடர்பில் 483 முறைப்பாடுகளும், வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் 51 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன. இவற்றில் மத்திய மாகாணத்திலேயே 251 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன என கபே அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

வாக்காளர் அட்டை இன்றியும் வாக்களிக்க முடியும்-தேர்தல் ஆணையாளர்- உரிய வாக்காளர் அட்டை இன்றியும் வாக்காளர்கள் தமது வாக்கினை அளிக்க முடியும் என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். வாக்களிப்பு மத்திய நிலையத்திற்குச் சென்று தங்களது ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தி வாக்களிக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதற்கு வாக்காளர் இடாப்பில் பெயர் இடம்பெற்றிருக்க வேண்டியது அவசியம். இதுவரை வாக்காளர் அட்டை கிடைக்காதவர்கள் அருகிலுள்ள தபால் அலுவலகங்களில் சென்று அதனைப் பெற்றுக்கொள்ள வேண்டும். நாளை வாக்காளர் அட்டை விநியோகிக்கப்பட மாட்டாது எனவும் தேர்தல் ஆணையாளர் கூறியுள்hர்.

திருகோணமலை மாவட்ட செயலருக்கு அழைப்பாணை– திருகோணமலை மாவட்ட செயலாளரை மன்றில் ஆஜராகுமாறு குச்சவெளி நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. புல்மோட்டை பிரதேசத்தில் மேற்கொள்ளப்படும் நில அளவைக்கு எதிரான மனு இன்று திருமலை நீதவானுமான எஸ்.சசிதரன் முன்னிலையில் குச்சவெளி நீதவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போதே பூஜாபூமி மற்றும் தொல்பொருள் என்ற போர்வையில் காணிகளை அளவையிடும் கட்டளையை பொலிஸார் நீதிமன்றத்திடம் கோரினர். எனினும் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதுடன் போதிய ஆதாரங்கள் சமர்ப்பிக்காமையால் திருமலை மாவட்ட செயலாளர் மேஜர்ஜெனரல் டி.ஆர்.டி.சில்வா மற்றும் குச்சவெளி பிரதேச செயலர் உமாமகேஸ்வரன் ஆகியோரை எதிர்வரும் ஒக்டோபர் 2ஆம் திகதி குச்சவெளி நீதவான் நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிட்டுள்ளார். குறித்த காலப் பகுதியில் எந்தவொரு நிலத்தினையும் ஆதாரங்கள் சமர்ப்பிக்காமல் அளவைக்கான அனுமதியை வழங்க முடியாது எனவும் நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

யாழ் மாணவன் கைகள் கட்டப்பட்டிருந்த நிலையில் மீட்பு- கைகள் கட்டப்பட்டு அடைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மாணவனை மீட்டுள்ள கொழும்பு மிரிஹான பொலீசார் சந்தேகத்தின் பேரில் இருவரை கைது செய்துள்ளனர். கனடாவிற்கு விஸா பெறவென யாழ். நெல்லியடியிலிருந்து கொழும்புக்கு வருகைதந்திருந்த மாணவனே பொலீசாரினால் மீட்கப்பட்டுள்ளார். கொழும்புக்கு வந்த அந்த மாணவனை கல்கிசைக்கு கடத்திச்சென்று மதுபானத்துடன் போதைபொருளை கலந்துகொடுத்துள்ளனர். மயக்கமடைந்த அவரை கஹதுடுவ, வெனிவெல்கொலவில் வீடொன்றுக்கு கொண்டுசென்று அங்கு கைகளை கட்டி தடுத்துவைத்துள்ளனர். அதன்பின்னர் மாணவனின் வீட்டுக்கு தொலைபேசி மூலமாக அழைப்பை ஏற்படுத்திய சந்தேகநபர்கள் அவரை விடுவிக்க வேண்டுமாயின் 25 இலட்சம் ரூபாவை கப்பமாக கோரியுள்ளனார். அதில் 50 ஆயிரம் ரூபாவை அவ்விருவரும் பெற்றுகொண்டதாக தெரியவருகிறது. சம்பவம் தொடர்பில் மாணவனின் உறவினர் பொலீசில் செய்த முறைப்பாட்டையடுத்து விசாரணைகளை மேற்கொண்ட மிரிஹான பொலீசார், அந்த மாணவனை மீட்டதுடன் சந்தேகத்தின் பேரில் இருவரையும் கைது செய்துள்ளனர்.

வட மாகாணசபை தேர்தல், கூட்டமைப்பின் இறுதி பிரசாரக் கூட்டங்கள்-

வட மாகாணசபைத் தேர்தலின் இறுதிப் பிரசார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்ற தினம் இன்றாகும். இந்நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இறுதிப் பிரசார கூட்டங்கள் யாழ் குடாநாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இன்று இடம்பெற்றன. குறிப்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆறு பிரதான பரப்புரைக் கூட்டங்கள் இன்று நடைபெற்றன. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முதலாவது தேர்தல் பரப்புரைக் கூட்டம் பருத்தித்துறை கடற்கரைப் பகுதியில் இன்றுபிற்பகல் இடம்பெற்றது. ஏனைய கூட்டங்கள்; உடுப்பிட்டி, வதிரி உள்ளியன் எல்லை அம்மன் ஆலய வளாகம், சுன்னாகம் மயிலங்காடு, யாழ். சட்டநாதர் கோவிலடி, யாழ். குருநகர் ஆகிய இடங்களில் இன்றுமாலையில் இடம்பெற்றுள்ளன. இன்றைய இறுதி தேர்தல் பிரசார கூட்டங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிரேமச்சந்திரன், எம்.ஏ. சுமந்திரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், எம்.கே.சிவாஜிலிங்கம், வட மாகாண முதலமைச்சர் வேட்பாளர் சி.வி விக்னேஸ்வரன் ஆகியோரும் யாழ் மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்களும் உரையாற்றினார்கள். இங்கு உரையாற்றியவர்கள், இத்தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மிகப் பெரிய வெற்றியைப் பெறுவதை தமிழ் மக்கள் உறுதிசெய்ய வேண்டும். இதன்மூலமே Read more

உரும்பிராய், அரசடி மற்றும் இணுவில் பகுதிகளில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரம்-

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரைக் கூட்டங்கள் இன்று யாழ். உரும்பிராய் கிழக்கு, அரசடி மற்றும் இணுவில் பகுதிகளில் இடம்பெற்றுள்ளன. உரும்பிராய் கிழக்கில் இடம்பெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் கருத்தரங்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கலந்துகொண்டு இன்றைய நிலையில் இந்த வட மாகாணசபைத் தேர்தலின் முக்கியத்துவம் பற்றியும் தமிழ் மக்கள் அனைவரும் தவறாது தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்களிக்க வேண்டியதன் அவசியம் தொடர்பிலும் விளக்கமளித்ததுடன், தமிழ் தேசியக் கூட்டமைப்பை பெரும்பான்மை வெற்றிபெறச் செய்ய வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார். இதனைத் தொடர்ந்து யாழ். அரசடியில் கூட்டமைப்பின் தேர்தல் கருத்தரங்கொன்று இடம்பெற்றது. இக்கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் உரையாற்றினார். இதனையடுத்து இன்றுமாலை இணுவில் பகுதியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரைக் கூட்டமொன்று இடம்பெற்றது. தமிழரசுக் கட்சியின் மூத்த உறுப்பினர் உலகநாதன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சரவணபவன், வலி தெற்கு பிரதேசசபைத் தலைவர் பிரகாஸ், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை முதலமைச்சர் வேட்பாளர் சி.வி விக்னேஸ்வரன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், பா.கஜதீபன், அனந்தி, சீ.வீ.கே. சிவஞானம், இ.ஆனோல்ட் ஆகியோர் உரையாற்றினார்கள். இத் தேர்தல் கருத்தரங்குகள் மற்றும் பரப்புரைக் கூட்டத்தில் பெருந்திரளான பொதுமக்கள் கலந்துகொண்டிருந்தனர்.

கூட்டமைப்பின் புளொட் வேட்பாளர்களை ஆதரித்து வெளியிடப்பட்ட குறும்படம்

https://www.youtube.com/watch?v=Yw06Fup2_iI&feature=youtube_gdata_player

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் புளொட் வேட்பாளன வவுனியா நகரசபையின் முன்னைநாள் உபதலைவர் க.சந்திரகுலசிங்கம் (மோகன்) அப்பகுதி  ஆதரவாளர்கள் மற்றும் நண்பர்களுடன் இணைந்து இன்று வவுனியா நகரெங்கும் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில்

https://www.youtube.com/watch?v=ANiNV3aEQvw&feature=youtube_gdata_player

 

 

யாழில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக் கூட்டங்கள்-

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரைக் கூட்டங்கள் இன்று யாழ். சாவகச்சேரி பஸ் நிலையம், குப்பிளான், காரைநகர் மற்றும் மானிப்பாய் ஆகிய பிரதேசங்களில் இடம்பெற்றது. சாவகச்சேரி பஸ் நிலையத்தில் இடம்பெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்திற்கு சாவகச்சேரி நகரசபைத் தலைவர் தேவசகாயம்பிள்ளை அவர்கள் தலைமை வகித்ததுடன், குப்பிளானின் இடம்பெற்ற கூட்டத்திற்கு வலி தெற்கு பிரதேச சபைத் தலைவர் பிரகாஸ் அவர்கள் தலைமை வகித்தார். அத்துடன் காரைநகரில் இடம்பெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக் கூட்டத்திற்கு பிரதேச சபைத் தலைவர் ஆனைமுகன் அவர்கள் தலைமை வகித்ததுடன், மானிப்பாயில் இடம்பெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் சரவணபவன் அவர்கள் தலைமை வகித்தார். இக்கூட்டங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன், வட மாகாணசபை முதலமைச்சர் வேட்பாளர் சி.வி விக்னேஸ்வரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோரும், பா.கஜதீபன், சட்டத்தரணி சயந்தன், சர்வேஸ்வரன், அனந்தி, ஆனோல்ட் உள்ளிட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளர்களும் உரையாற்றினார்கள். மேற்படி நான்கு கூட்டங்களிலும் பெருந்தொகையான பொதுமக்கள் கலந்து கொண்டிருந்தனர்.   

தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர் உள்ளிட்ட 50ற்கும் மேற்பட்டோர் கைது-

IMG_6100 IMG_6101 IMG_6102 IMG_6105தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சாரம் வவுனியா நகர்ப்பகுதியில் இன்றுமுற்பகல் தொடங்கி மாலைவரை இடம்பெற்றது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வவுனியா மாவட்ட புளொட் வேட்பாளரும், வவுனியா நகரசபையின் முன்னைநாள் உபதலைவருமான க.சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்கள், பிரதேச இளைஞர்கள், ஆதரவாளர்கள் மற்றும் நண்பர்களுடன் இணைந்து மேற்படி தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் மும்முரமாக ஈடுபட்டிருந்தார். இந்நிலையில் இன்றுமாலை தேர்தல் பிரசார நடவடிக்கைகள் இடம்பெற்றுக் கொண்டிருந்தவேளையில் அங்கு வந்த வவுனியா பொலீசார் வேட்பாளர் க.சந்திரகுலசிங்கம் (மோகன்) உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்டவர்களை கைதுசெய்து வவுனியா பொலீஸ் நிலையத்தில் தடுத்து வைத்திருந்தனர். சுமார் ஒன்றரை மணி நேரத்தின் பின்னர் வேட்பாளர் க.சந்திரகுலசிங்கம்(மோகன்) உள்ளிட்ட அனைவரையும் அவர்களின் கையெழுத்தைப் பெற்று விடுதலை செய்துள்ளனர். எனினும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வீட்டுச் சின்னம் தாங்கிய வாகனமும், அதன் சாரதியான தனராஜ் என்பவரும் இதுவரையில் விடுவிக்கப்படவில்லை. சாரதியையும் வாகனத்தையும் நாளை வவுனியா நீதிமன்றில் ஒப்படைக்க பொலீசார் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரியவருகின்றது. இதேவேளை கண்காணிப்பு குழுவினரும் அங்கு வருகைதந்து நிலைமைகள் தொடர்பில் கவனமெடுத்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

கோயில் புதுக்குளத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் கருத்தரங்கு-

IMG_0157 IMG_0159 IMG_0160 IMG_0161 IMG_0172 IMG_0174தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் கருத்தரங்கொன்று வவுனியா கோயில் புதுக்குளம் கிராம முன்னேற்றச் சங்கக் கட்டிடத்தில் நேற்றுக்காலை 9.00 மணியளவில் இடம்பெற்றது. இக்கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வவுனியா மாவட்ட புளொட் வேட்பாளரும் வவுனியா நகரசபையின் முன்னைநாள் தலைவருமான ஜி.ரி.லிங்கநாதன் (விசு) மற்றும் ஊர்ப் பிரமுகர்களும் கலந்து கொண்டு உரையாற்றினார்கள். இதேவேளை நேற்றுமாலை 4.00 மணியளவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வவுனியா மாவட்ட புளொட் வேட்பாளர் ஜி.ரி.லிங்கநாதன் அவர்கள் வவுனியா மகாறம்பைக்குளம் சிறீ முத்துமாரி அம்மன் ஆலய பரிபாலன சபையினருடன் கலந்துரையாடல் ஒன்றினை நடத்தியிருந்தார். இதன்போது குறித்த ஆலயத்திற்கு குழாய்க்கிணறு அமைத்துக் கொடுத்தமைக்காக ஜி.ரி. லிங்கநாதன் அவர்கள் ஆலய பரிபாலன சபையினரால் கௌரவப்படுத்தப்பட்டார்.

கரணவாய், ஏழாலை பகுதிகளில் கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரைக் கூட்டங்கள் மற்றும் நாட்டுக்கூத்து-

யாழ். கரணவாய் குஞ்சர்கடைப் பகுதியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக் கூட்டமொன்று இன்றுபிற்பகல் இடம்பெற்றது. வடமராட்சி பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத் தலைவர் நாகலிங்கம் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிரேமச்சந்திரன், சரவணபவன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் சிவி.விக்னேஸ்வரன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், சர்வேஸ்வரன் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பல வேட்பாளர்களும் கலந்துகொண்டு உரையாற்றினார்கள். இக்கூட்டத்தில் பெருந்திரளான பொதுமக்களும் கலந்து சிறப்பித்திருந்தனர். இதேவேளை இன்றுமாலை யாழ் ஏழாலை மத்தியில் வலி தெற்கு பிரதேச சபைத் தலைவர் பிரகாஸ் அவர்களின் தலைமையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் தொடர்பான பொதுக்கூட்டமொன்று இடம்பெற்றது. இக்கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிரேமச்சந்திரன், சரவணபவன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் சிவி.விக்னேஸ்வரன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளர்கள் தர்மலிங்கம் சித்தார்த்தன், சர்வேஸ்வரன், பா.கஜதீபன், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் துரைராஜசிங்கம் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பல வேட்பாளர்களும், கலந்துகொண்டு உரையாற்றினார்கள். இதனைத் தொடர்ந்து வட மாகாணசபைத் தேர்தல் தொடர்பானதும், தமிழ் மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களிக்க வேண்டியதன் அவசியம் பற்றியதுமான நாட்டுக்கூத்தும் இடம்பெற்றது. வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்து தொடர்ச்சியாக யாழ். குடாநாடு முழுவதும் இந்த நாட்டுக்கூத்து நடாத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

பருத்தித்துறை, சிறுப்பிட்டி பகுதிகளில் கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரை கூட்டங்கள்-

யாழ் பருத்தித்துறை நாலாம் குறுக்குத்தெரு பகுதியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் கருத்தரங்கொன்று இன்றுமுற்பகல் இடம்பெற்றது. பருத்தித்துறை நகரசபையின் முன்னைநாள் தலைவர் வின்சென்ற் கெனடி தலைமையில் இடம்பெற்ற இக்கருத்தரங்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளரும், முன்னைநாள் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் ஊர்ப் பிரமுகர்களும் உரையாற்றினார்கள். இக்கூட்டத்தில் பெருமளவிலான மக்கள் கலந்து கொண்டிருந்தனர். இதேவேளை யாழ். சிறுப்பிட்டியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாபெரும் பொதுக்கூட்டமொன்று இன்றுபிற்பகல் இடம்பெற்றது. இக்கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிரேமச்சந்திரன், சரவணபவன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் சிவி.விக்னேஸ்வரன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், சர்வேஸ்வரன், பா.கஜதீபன், ஐங்கரநேசன் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பல வேட்பாளர்களும் கலந்துகொண்டு உரையாற்றினார்கள். இக்கூட்டத்தில் பெருந்திரளான பொதுமக்களும் பங்கேற்றிருந்தனர்.

கொல்லங்கலட்டியில் கூட்டத்திற்கு சென்ற மக்கள் இராணுவத்தினரால் விரட்டியடிப்பு-

annar and kajatheepanயாழ். தெல்லிப்பளை, கொல்லங்கலட்டி பிள்ளையார் கோவிலுக்கு அருகாமையில் அமைந்துள்ள கிராம அபிவிருத்திச் சங்க மண்டபத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் கருத்தரங்கு ஒன்று இன்றுமாலை 5மணியளவில் நடாத்துவதற்கு ஏற்பாடாகியிருந்தது. இதற்காக பெருமளவிலான மக்கள் அங்கு கூடியிருந்தார்கள். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், பா.கஜதீபன், சர்வேஸ்வரன் ஆகியோர் இக்கூட்டத்திற்கு சென்று கொண்டிருந்தபோது அங்கு கூடியிருந்த மக்கள் கூட்டத்தை இராணுவத்தினர் பொல்லு தடிகளுடன் வந்து விரட்டியடித்து கிராம அபிவிருத்திச் சங்கத்தின் கதவினையும் பூட்டிவிட்டு சென்றுள்ளனர். இது சம்பந்தமாக உடன் யாழ் மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளருக்கு முறைப்பாடு செய்யப்பட்டது. உடனடியாக அவர் சம்பவ இடத்திற்கு அதிகாரிகளை அனுப்பி நிலைமைகளை அவதானித்திருந்தார். இந்நிலையில் இந்த அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் மேற்படி கூட்டத்திற்காக மக்கள் மீளவும் அங்கு கூடியபோது அங்கு வந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்களான தர்மலிங்கம் சித்தார்த்தனும், பா.கஜதீபனும், சர்வேஸ்வரனும் அங்கிருக்கும் மக்களின் பாதுகாப்பு கருதி கூட்டத்தை பிற்போட்டுச் சென்றனர். இதேவேளை சம்பவத்தையடுத்து பவ்ரல் அமைப்பின் பிரதிநிதிகளும் அவ்விடத்திற்கு வருகைதந்து நிலைமையினை கண்காணித்துச் சென்றனர்.