Header image alt text

யாழ். கோண்டாவில் கிழக்கு, பண்டத்தரிப்பு பகுதிகளில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் கருத்தரங்குகள்-

2013-09-10 18.20.22 2013-09-10 18.20.22_1 2013-09-10 19.27.58 2013-09-10 19.40.38யாழ்ப்பாணம், கோண்டாவில் கிழக்கு பழனியாண்டவர் கோவிலடியில் இன்றுமாலை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் கருத்தரங்கொன்று இடம்பெற்றது. கோயில் நிர்வாக சபையைச் சேர்ந்த திரு. இராசதுரை அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளர் திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன், வலி தெற்கு பிரதேச சபைத் தலைவர் பிரகாஸ், வலி தென்மேற்கு பிரதேச சபை உறுப்பினர் கௌரிகாந்தன், வலி வடக்கு பிரதேச சபை உறுப்பினர் ஹரிகரன் ஆகியோர் உரையாற்றினார்கள். Read more

முள்ளியவளைப் பகுதியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரை-

zzzzமுல்லைத்தீவு மாவட்டம் முள்ளியவளை, மாமூலைப் பிரதேசத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரை நிகழ்வுகள் நேற்று இடம்பெற்றன. மாமூலை கிராம அபிவிருத்திச் சங்கக் கட்டிடத்தில் கிராம அபிவிருத்தி சங்கத் தலைவர் சிவமோகன் (ராசன்) அவர்களின் தலைமையில் இடம்பெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முல்லைத்தீவு மாவட்ட புளொட் வேட்பாளர் கந்தையா சிவநேசன் (பவன்), முல்லைத்தீவு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்களான ரி.ரவிகரன், ஜி.கனகசுந்தரசுவாமி ஆகியோரும், தவராஜா மாஸ்டர், தமிழரசுக் கட்சி பிரமுகர் ஜோர்ஜ் மற்றும் ஊர்ப் பிரமுகர்களும் உரையாற்றினார்கள். இங்கு உரைநிகழ்த்திய அனைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்து கூட்டமைப்பை பெரும்பான்மையுடன் வெற்றிபெறச் செய்ய வேண்டியது அனைத்துத் தமிழ் மக்களின் கடமையாகும். தமிழ் மக்களின் வாக்குகளைச் சிதறடித்து, மூன்றில் இரண்டிற்கும் அதிகமான பெரும்பான்மை வெற்றியை தமிழ் தேசியக் கூட்டமைப்பு பெறுவதை தடுப்பதற்கு அரச கட்சிகள் செய்துவரும் திட்டமிட்ட நடவடிக்கைகளுக்குள் தமிழ் மக்கள்; எந்தவகையிலும் சிக்கிவிடக் கூடாது. ஒவ்வொரு தமிழ் மக்களும் சிரமங்களைப் பாராது, தங்களது வாக்குகளை தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கே அளிக்க வேண்டும். இந்தவகையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மிகப்பாரிய வெற்றிபெறுவதை தமிழ் மக்கள் உறுதிப்படுத்த வேண்டும் இதுவே தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளை முன்னெடுத்துச்செல்வதற்கு உறுதுணையாக அமையும் என்று தெரிவித்துள்ளனர். இதேவேளை முல்லைத்தீவு கெருடமடு மற்றும் கற்சிலைமடு சிலையடி ஆகிய பகுதிகளிலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரை நிகழ்வுகள் நேற்றுமாலை இடம்பெற்றன. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முல்லைத்தீவு மாவட்ட புளொட் வேட்பாளர் திரு.கந்தையா சிவநேசன் (பவன்), ஊர்ப் பிரமுகர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மேற்படி தேர்தல் கருத்தரங்குகளில் பங்கேற்று உரையாற்றியிருந்தனர். இத்தேர்தல் கருத்தரங்கு மற்றும் கலந்துரையாடல்களில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

தேர்தல் விஞ்ஞாபனங்களின் பிரதிகளை ஒப்படைக்குமாறு வேண்டுகோள்-

தேர்தல் விஞ்ஞாபனங்களின் பிரதிகளை ஆவண பாதுகாப்பு திணைக்களத்திடம் ஒப்படைக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுகின்ற அனைத்து கட்சிகளும், அதன் வேட்பாளர்களும் வெளியிடும் தேர்தல் விஞ்ஞாபனம் மற்றும் விளம்பரங்களின் பிரதியை தேசிய ஆவண பாதுகாப்பு திணைக்களத்திடம் ஒப்படைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் நடைபெறும் எந்தவொரு தேர்தலின்போதும் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழு வேட்பாளர்களால் வெளியிடப்படும் தேர்தல் விஞ்ஞாபனம், விளம்பரங்கள், தேர்தலுடன் தொடர்புடைய ஆவணங்கள் வெளியிடப்படும் தினத்திலிருந்து 30 நாட்களுக்குள் தேசிய ஆவண பாதுகாப்பு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட வேண்டுமென ஆவண பாதுகாப்பு திணைக்களம் அறிவித்துள்ளது. 1930ஆம் ஆண்டிலிருந்து இந்நடைமுறை பேணப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சீன தூதுக்குழுவின் இலங்கை விஜயம் இந்தியாவுக்கு அழுத்தம்-

எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய வர்த்தக மாநாட்டுக்கு சீனாவிலிருந்து 120 பேர் கொண்ட பிரதிநிதிகள் குழு அனுப்பப்படவுள்ளதாக த நிவ் இந்தியன் எக்ஸ்பிரஸ் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ளக் கூடாதென தமிழக அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. எனினும்; இந்தியா இம்மாநாட்டில் கலந்துகொள்வதா? இல்லையா? என்பது தொடர்பில் தமது தீர்மானத்தை இன்னமும் அறிவிக்கவில்லை. இந்நிலையில் சீனா இவ்வாறு 120 பிரதிநிதிகளை அனுப்புவது, இந்தியாவை அழுத்தத்துக்கு உட்படுத்தும் என அந்த இணையத்தளம் சுட்டிக்காட்டியுள்ளது.

ஜனாதிபதிக்கு இரா. சம்பந்தன் அவசர கடிதம்-

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத் தலைவர் இரா.சம்பந்தன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு நேற்று அவசர கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார். அரசாங்கத்திற்கு சார்பான கட்சியின் வேட்பாளர்களுக்காக இராணுவம் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளதாகவும், தேர்தலில் மக்கள் வாக்களிப்பதை தடுக்கும் வகையிலான செயற்பாடுகளில் ஈடுபடுவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ள இரா.சம்பந்தன், இராணுவத்தை முகாம்களினுள் முடக்கி வைக்குமாறு தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். வட மாகாணத்தில் தேவைக்கு அதிகமாக குவிக்கப்பட்டுள்ள இராணுவம் மக்களின் அன்றாட நடவடிக்கையில் ஈடுபடுவதையிட்டு நாம் உங்களின் கவனத்திற்கு முன்னரே கொண்டுவந்துள்ளோம். தற்போது இராணுவத்தின் நடவடிக்கைகள் தேர்தல் நடவடிக்கைகளிலும் பரவியுள்ளன. இராணுவத்தினர் சில வேட்பாளர்களின் சுவரொட்டிகளை ஒட்டுவதுடன் அவற்றை யாரும் அகற்றாதபடியும் காவல் செய்கின்றனர். இது இராணுவம் சில வேட்பாளர்களை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் நிறுத்தியுள்ளது எனும் எண்ணத்தை பரப்புவதாக உள்ளது. வேட்புமனுக்களை சமர்ப்பித்த அன்றே எமது வேட்பாளர்களில் மூவர் இராணுவத்தால் மிரட்டப்பட்டதை தங்கள் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகின்றோம். யாழ். நாவந்துறையில் சில ஆளும் கட்சி வேட்பாளர்களின் படங்களின் முன்னால் இராணுவம் கட்டிட பொருட்கள் வழங்குகின்ற காட்சியின் படம் ஒரு பத்திரிகையில் வெளியாகியுள்ளது. தேர்தல் நெருங்க நெருங்க இராணுவ தலையீடு இன்னும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே, இராணுவத்தை முகாமில் முடக்கி செப்டெம்பர் 21ஆம் திகதி ஓரு சுயாதீன தேர்தலுக்கு தடையாக உள்ள காராணியை அகற்றுமாறு தங்களிடம் கேட்டுக்கொள்கிறேன் என்று இரா. சம்பந்தன் ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வடக்கில் வீடு, காணி கையளிப்பு இடைநிறுத்தம்-

தேர்தல் காலத்தில் வடக்கில் பொதுமக்களுக்கு வீடுகள், காணிகள் கையளிப்பதை தவிர்க்குமாறு அரசாங்கத்துக்கு தேர்தல் ஆணையாளர் பணித்துள்ளார். நேற்று இந்த அறிவிப்பு தொடர்பில் தேர்தல் ஆணையாளரால் தனக்கு அறிவிக்கப்பட்டதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பை ஏற்றுக்கொண்ட அரசாங்கம், எதிர்வரும் 21ஆம் திகதிவரை வடக்கில் பொதுமக்களுக்கு வீடுகளையோ காணிகளையோ வழங்குவதை இடைநிறுத்தியுள்ளதாகவும் அமைச்சர் பசில் குறிப்பிட்டுள்ளார்.

மட்டக்களப்பில் ஆட்பதிவு திணைக்கள கிழக்கு காரியாலயம் திறந்துவைப்பு-

அரச பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின்கீழ் செயற்படும் ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்கள நடவடிக்கைகளை மாகாணங்கள் ரீதியாக விஸ்தரிக்கும் பொருட்டு கிழக்கு மாகாணத்திற்கான மாகாண அலுவலகமொன்று இன்று மட்டக்களப்பு பிரதேச செயலகத்தில் தேசிய மொழிகள் மற்றும் சமூக நல்லிணக்க ஒருமைப்பாட்டு அமைச்சின் செயலர் மல்காந்தி விக்கிரமசிங்கவினால் உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டுள்ளது. மகிந்த சிந்தனை திட்டத்திற்கு அமைவாக அரச பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் அங்கீகாரத்தில் தேசிய மொழிகள் மற்றும் சமூக நல்லிணக்க ஒருமைப்பாட்டு அமைச்சு மற்றும் ஐ.நா. அபிவிருத்தி உதவித் திட்டத்தில் இம்மாகாண அலுவலகம் மட்டக்களப்பு நகரின் மண்முனை வடக்கு பிரதேச செயலக மேல்மாடியில் திறந்துவைக்கப்பட்டுள்ளது.

நேரியகுளம் பகுதிகளில் கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரை-

IMG_7043 IMG_7058 IMG_7064 IMG_7093தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் நேற்றுமாலை வவுனியா, செட்டிகுளம் பகுதியிலுள்ள நேரியகுளத்தில் இடம்பெற்றன. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வவுனியா மாவட்ட புளொட் வேட்பாளர்களான வவுனியா நகரசபையின் முன்னைநாள் தலைவர் ஜி.ரி.லிங்கநாதன், வவுனியா நகரசபையின் முன்னைநாள் உபதலைவர் திரு.க.சந்திரகுலசிங்கம் (மோகன்) ஆகியோருடன், ஊர்ப் பிரமுகர்களும், ஆதரவாளர்களும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்காக வாக்குக் கேட்டு தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டிருந்தனர். இத் தேர்தல் பிரச்சாரங்களின் போதான கலந்துரையாடல்கள் மற்றும் கருத்தரங்குகளில் உரையாற்றிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வவுனியா மாவட்ட புளொட் வேட்பாளர்கள் ஜி.ரி.லிங்கநாதன் (விசு), திரு.க.சந்திரகுலசிங்கம் (மோகன்) மற்றும் ஊர்ப் பிரமுகர்கள், இம்முறை வட மாகாணசபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்று வெற்றி பெறவேண்டுமெனவும், இதற்கு ஒட்டுமொத்த தமிழ் மக்களும் சிரமம் பாராது காலையிலேயே சென்று கூட்டமைப்புக்கே வாக்களிக்க வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டனர்.

நெடுங்கேணி சேனைப்பிலவு பிரதேசத்தில் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரம்-

IMG_7225தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சார நடவடிக்கை இன்றுமாலை வவுனியா நெடுங்கேணி பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வவுனியா மாவட்ட புளொட் வேட்பாளரும், வவுனியா நகரசபையின் முன்னைநாள் தலைவருமான ஜி.ரி.லிங்கநாதன் மற்றும் ஊர்ப் பிரமுகர்களும், ஆதரவாளர்களும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்காக வாக்குக் கேட்டு இப்பிரதேசங்களில் இன்றுமாலையில் தீவிர பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர்.

மனித உரிமை ஆர்வலர்கள் தாக்கப்படுவது குறித்து நவிபிள்ளை எச்சரிக்கை-

இலங்கையில் மனித உரிமை ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் தன்னை சந்தித்த சமூக ஆர்வலர்கள் தாக்கப்படுகின்றமை குறித்து நவநீதம்பிள்ளை இலங்கைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். ஐ.நா மனித உரிமை பேரவையின் 24 ஆவது பருவகால அமர்வு இன்று ஆரம்பமானபோது இலங்கை குறித்து உரையாற்றிய நவநீதம்பிள்ளை இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் இலங்கையில் மனித உரிமை ஆர்வலர்களை பாதுகாக்கும்படியும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். மனித உரிமைகள் விடயம் குறித்து தான் ஐநா சபையுடன் இணைந்து பணியாற்றவுள்ளதாகவும் நவநீதம்பிள்ளை மேலும் கூறியுள்ளார். 

இன்றும் நாளைய தினமும் அஞ்சல் மூல வாக்களிப்பு-

வடக்கு, மத்திய, மற்றும் வடமேல் மாகாண சபைத் தேர்தல்கள் தொடர்பிலான அஞ்சல் மூல வாக்களிப்புகள் இன்றைய தினமும், நாளையும் இடம்பெறுகின்றன. 11 லட்சத்து 383 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாக தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அஞ்சல் மூல வாக்குப் பதிவுகள் இடம்பெறவுள்ள மத்திய நிலையங்களில் அரச பணிகளுக்காக அதிகாரிகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, இன்று அல்லது நாளை அஞ்சல் வாக்குகளை பதிவளிக்க முடியாதவர்கள் எதிர்வரும் 13, 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் வாக்குப்பதிவுகளை மேற்கொள்ள முடியும் என பிரதி தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் அறிவித்துள்ளார்.

சீன கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் இலங்கைக்கு விஜயம்

சீன  கம்யூனிஸ்ட் கட்சி மத்திய செயற்குழுவின் அரசியல் நிலையியற்குழு மற்றும் செயலக உறுப்பினர் லிவ் யுன்ஷான் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்றிரவு இலங்கைக்கு வருகைதந்துள்ளார். அவர் மூன்று நாட்கள் இலங்கையில் தங்கியிருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, பிரதமர் டி.எம்.ஜயரத்ன, பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக்ஸ, சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன ஆகியோரை லிவ் யுன்ஷான், சந்தித்து கலந்துரையாடவுள்ளார். மேலும் இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான உடன்படிக்கைகள் சிலவும் கைச்சாத்திடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

107 முன்னாள் புலி உறுப்பினர்கள் விடுவிப்பு-

புலிகள் இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு தடுப்புக் காவலிலிருந்து, நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைய புனர்வாழ்வு பெற்ற 107 பேர் சமூகத்துடன் இணைக்கப்பட்டுள்ளனர். வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் நடைபெற்ற இதற்கான நிகழ்வில் 101ஆண்களும் 06 பெண்களும் அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைய வெலிகந்தை மற்றும் பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையங்களில் புனர்வாழ்வு பெற்று வந்தவர்கள் ஆவர். வெலிகந்தை புனர்வாழ்வு நிலையத்தைச் சேர்ந்த 75 பேரும் பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தைச் சேர்ந்த 32 பேரும் புனர்வாழ்வு பெற்ற நிலையில் சமூகத்துடன் இன்றையதினம் இணைக்கப்பட்டுள்ளனர்.

வடக்கில் ஒரு வாரத்தில் 13 தேர்தல் முறைப்பாடுகள்-

தேர்தல் விதிமுறை மீறல் மற்றும் வன்முறைகள் தொடர்பாக வட மாகாணத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 13 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. மூன்று மாகாணங்களிலும் கடந்த ஒரு வாரத்தில் மாத்திரம் 141 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன என கபே அமைப்பு தெரிவித்துள்ளது. தேர்தல் விதிமுறை மீறல் மற்றும் வன்முறைகள் தொடர்பில் கடந்தவார ஆரம்பம்வரை 251 முறைப்பாடுகளே பதிவாகின. எனினும் கடந்தவாரம் மட்டும் மூன்று மாகாணங்களிலும் 154 முறைப்பாடுகள் பதிவாகின. இதன்படி கடந்தவாரம் இறுதிவரையான காலப்பகுதிகள் மொத்தம் 405 முறைப்பாடுகள் பதிவாகின. வடமாகாணத்தில் கடந்தவார ஆரம்பம்வரை 43 ஆகவிருந்த நிலையில் கடந்தவார இறுதிவரையான காலப்பகுதியில் 56ஆக அதிகரித்தன. மூன்று மாகாணங்களிலும் விதிமுறை மீறல்கள் தொடர்பில் 376 முறைப்பாடுகளும் வன்செயல்கள் தொடர்பில் 29 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளன எனவும் கபே கூறியுள்ளது. 

வடக்கின் வசந்தத்திலிருந்து அமைச்சர் பசில் விலகல்-

வடக்கின் வசந்தம் அபிவிருத்தி திட்ட நடவடிக்கைகளிலிருந்து விலகி, புதிய மாகாணசபையிடம் அதனை ஒப்படைக்கவுள்ளதாக பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ச அறிவித்துள்ளார். யாழ். வட்டுக்கோட்டை பகுதியில் அண்மையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும்போதே அமைச்சர் இத்தகவலை வெளியிட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடமாகாண சபைத் தேர்தலின் பின்னர் வடக்கின் வசந்தம் அபிவிருத்தித் திட்டத்தினைக் கையாள்வதை தாம் புதிய நிர்வாகத்திடம் கையளிக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போது பொருளாதார அமைச்சின்கீழ் வடக்கின் வசந்தம் அபிவிருத்தித் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

மனிதவுரிமைகள் ஆணையகத்தின் 24ஆவது மாநாடு-

ஐக்கிய நாடுகள் மனிதவுரிமைகள் ஆணையகத்தின் 24ஆவது பேரவை மாநாடு இன்று சுவிட்சர்லாந்து ஜெனீவாவில் ஆரம்பமாகியுள்ளது. ஐ.நா காரியாலயத்தில் இடம்பெறும் இந்த மாநாடு எதிர்வரும் 27ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது. மாநாட்டின் நிகழ்ச்சி நிரலுக்கு அமைய எதிர்வரும் 25ஆம் திகதி மனிதவுரிமைகள் தொடர்பில் ஆணையாளர் நவனீதம்பிள்ளையினால் இலங்கை தொடர்பாக ஒழுங்குபடுத்தப்பட்ட வாய்மூல அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளது. இதன்படி, நவனீதம் பிள்ளையினால், ஏற்கனவே இடம்பெற்ற மனிதவுரிமைகள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான பிரேரணைகளுக்கு அமைய, பொறுப்பு கூறல் மற்றும் மீளமைப்பு செயற்பாடுகளின் முன்னேற்றங்கள் தொடர்பில் கருத்து வெளியிடப்படவுள்ளது. கடந்த வருட மாநாடு உட்பட ஒவ்வொரு மாநாட்டிலும் இலங்கைக்கான பிரதிநிதியாக செயற்பட்ட அமைச்சர் மஹிந்த சமரசிங்க இந்த முறையும் மாநாட்டு அமர்வுகளில் பங்கேற்பது குறித்து உத்தியோகபூர்வமாக இதுவரை அறிவிக்கப்படவில்லை. இருந்தபோதும், ஐ.நாவின் 24வது மனித உரிமைகள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இலங்கை சட்டமா அதிபர் திணைக்களப் பிரதிநிதிகள் சிலர் ஜெனீவா சென்றுள்ளதாக கூறப்படுகின்றது.

 

செட்டிகுளம், நேரியகுளம் பகுதிகளில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சாரம்-

IMG_5378தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் நேற்றுமாலை வவுனியா, செட்டிகுளம் மற்றும் நேரியகுளம் ஆகிய பிரதேசங்களில் இடம்பெற்றுள்ளன. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வவுனியா மாவட்ட புளொட் வேட்பாளர்களான வவுனியா நகரசபையின் முன்னைநாள் தலைவர் ஜி.ரி.லிங்கநாதன், வவுனியா நகரசபையின் முன்னைநாள் உபதலைவர் திரு.க.சந்திரகுலசிங்கம் (மோகன்) ஆகியோருடன், முக்கிய பிரமுகர்களும், ஊர்ப் பிரமுகர்களும், ஆதரவாளர்களும் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர். தேர்தல் பிரச்சாரத்தின் போதான கலந்துரையாடல்கள் மற்றும் கருத்தரங்குகளில் உரையாற்றிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வவுனியா மாவட்ட புளொட் வேட்பாளர்கள் ஜி.ரி.லிங்கநாதன் (விசு), திரு.க.சந்திரகுலசிங்கம் (மோகன்) மற்றும் ஊர்ப் பிரமுகர்கள், வட மாகாணசபைத் தேர்தலில் மக்கள் மிகவும் அக்கறையெடுத்து தமிழ்; தேசியக் கூட்டமைப்பிற்கே வாக்களித்து கூட்டமைப்பின் பெரும்பான்மை வெற்றியை உறுதி செய்ய வேண்டுமென்று கேட்டுக்கொண்டனர். இந்த கருத்தரங்குகள் மற்றும் கலந்துரையாடல்களில் பெருமளவிலான பொதுமக்கள் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது9899_451850941595502_991904225_n1234601_451807484933181_1967033307_nIMG_5367IMG_5379IMG_5394

வாக்காளர் அட்டை விநியோகம்-

வடக்கு மத்திய மற்றும் வடமேல் மாகாண சபைத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகத்திற்கான விசேடதினமாக இன்றைய தினம் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இதற்கமைய இன்றுகாலை 6 மணிமுதல் மாலை 6 மணிவரை தேர்தல் நடைபெறவுள்ள பகுதிகளில் வாக்காளர் அட்டை விநியோகிக்கப்படவுள்ளதாக பிரதி தபால் மாஅதிபர் டபிள்யூ.கே.ஜீ.விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை வீடுகளுக்கு சென்று விநியோகிக்கும் நடவடிக்கையை எதிர்வரும் 13 ஆம் திகதியுடன் நிறைவுசெய்ய தபால் திணைக்களம் திட்டமிட்டுள்ளது. 13ஆம் திகதிவரை வாக்காளர் அட்டை கிடைக்கப்பெறாதவர்கள் தமது பிரதேசத்திற்குரிய தபாலகத்தில் அதனை பெற்றுக்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. ‘

வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் இலங்கை வருகை-

வடக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாண சபைகளுக்கான தேர்தல் கண்காணிப்பு பணிகளுக்கான வெளிநாட்டு கண்காணிப்பு குழு, இந்த மாதம் 13ம் திகதி இலங்கை வரவுள்ளதாக தேர்தல்கள் திணைக்கள பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இக்குழு எதிர்வரும் 14ம்திகதி தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரியவை சந்திக்கவுள்ளது. தெற்காசிய தேர்தல் அதிகாரிகள் சங்கத்தை சேர்ந்த 20க்கும் மேட்பட்ட கண்காணிப்பாளர்கள் இலங்கைக்கு வரவிருப்பதாக பேச்சாளர் கூறியுள்ளார். இந்தியாவின் முன்னாள் தேர்தல்கள் ஆணையாளர் எம்.கோபாலசாமி, மாலைதீவின் முன்னாள் தேர்தல்கள் ஆணையாளர் மொஹமட் பாருக் உள்ளிட்ட 20 பேரும், தேர்தல் நடைபெறவுள்ள மாகாணங்களுக்கு சென்று நேரில் பார்வையிடவுள்ளனர்.

வவுனியாவில் தூக்கில் தொங்கிய நிலையில் சிறுமி சடலமாக மீட்பு-

வவுனியா வேப்பங்குளத்தில் உள்ள சிறுவர் காப்பகம் ஒன்றில் வாழ்ந்த சிறுமி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வவுனியா பாரதிபுரத்தை சேர்ந்த பெருமாள் நிசாந்தினி என்ற 12 வயதுடைய சிறுமியே இவ்வாறு நேற்றுஇரவு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச் சிறுமி இதே காப்பத்தில் தங்கியுள்ள தனது சகோதரியுடன் நேற்று வாய்த்தர்க்கப்பட்டிருந்த நிலையில் காப்பக வளாகத்தில் தூக்கில் தொங்கியுள்ளதாக காப்பகத்தின் நிர்வாகத்தினர் கூறுகின்றனர். இச் சிறுமியின் தந்தை நோய் வாய்ப்பட்ட நிலையில் வாழ்வதாகவும் தாயாரால் பிள்ளைகளை பராமரிக்க முடியாத நிலையில் தமது காப்பகத்தில் இவர்களை சேர்த்திருந்ததாகவும் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

 வலி.மேற்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சூறாவளிப் பிரசாரம்-

2013-09-08 12.37.07 (2)யாழ்ப்பாணம் வலி மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் இன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை முதலமைச்சர் வேட்பாளர் சி.வி விக்னேஸ்வரன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட வேட்டாளர் தர்மலிங்கம் சித்தார்த்தன், பாராளுமன்ற உறுப்பினர் சரவணபவன், வலி.மேற்கு பிரதேச சபைத் தலைவர் நாகபூசணி ஐங்கரன், வலி.மேற்கு பிரதேச சபை உப தவிசாளர் சிவரஞ்சன் ஆகியோர் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்காக வாக்குக் கேட்டு இப்பிரதேசங்கள் எல்லாவற்றிலும் சூறாவளிப் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சங்கானை மாவடி சனசமூக நிலையம், வட்டுக்கோட்டை மாவடி கிராம அபிவிருத்தி சங்கம், பொன்னாலைக் கோவிலடி, பொன்னாலை காட்டுப்புலம் உள்ளிட்ட பல பிரதேசங்களில் தொடர்ந்து தேர்தல் கருத்தரங்குளையும், கலந்துரையாடல்களையும் இவர்கள் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இவர்களுடன் பிரதேச சபை தலைவர்கள், உறுப்பினர்கள் ஆதரவாளர்களும், பெருமளவு பொதுமக்களும் கூட்டமைப்புக்கு வாக்குக் கேட்கும் பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

2013-09-08 11.19.25~12013-09-08 11.24.122013-09-08 11.51.002013-09-08 11.24.352013-09-08 10.34.22

வடமராட்சி திக்கம் பகுதியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரம்-

DSC00011[1]யாழ்ப்பாணம் வடமராட்சி திக்கம் பகுதியில் இன்றுமாலை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக் கூட்டமொன்று நடைபெற்றது. திரு. செந்தில்வேல் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களுமான மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், சரவணபவன், அரியநேந்திரன் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை முதலமைச்சர் வேட்பாளர் திரு.சி.வி விக்னேஸ்வரன் அவர்களும் கலந்துகொண்டு உரையாற்றினார்கள். இக்கூட்டத்தில் உள்ளுராட்சி தலைவர்கள், அங்கத்தவர்கள், கட்சிப் பிரமுகர்கள், ஆதரவாளர்கள் என பெருந்திரளானோர் பங்கேற்றிருந்தனர்.

 DSC00014 DSC00048 DSC00050 DSC00008 DSC00031DSC00018

கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரையின்போது பொலீசார் அடாவடி-

வவுனியா தோணிக்கல் பிரதேசத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரைகள் நேற்று இடம்பெற்றிருந்தது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வவுனியா மாவட்ட புளொட் வேட்பாளர் திரு.க.சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்களும், ஆதரவாளர்களும், நண்பர்களும் அப்பகுதிகளில் தேர்தல் பிரசாரப் பணிகளில் நேற்றுமாலை ஈடுபட்டிருந்தனர். நேற்றுமாலை 4மணியளவில் தோணிக்கல் மாடசாமி கோவிலடிப் பகுதியில் தேர்தல் பிரசாரம் முன்னெடுக்கப்பட்டிருந்தபோது திடீரென அங்கு வந்த வவுனியா பொலீசார் இப்பகுதிகளில் நீங்கள் பிரசார நடவடிக்கையில் ஈடுபட இயலாது என தெரிவித்து வேட்பாளர் க.சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்களின் ஆதரவாளர்களையும், நண்பர்களையும் மிரட்டி, அவர்களிடமிருந்த பிரசுரங்களை பறித்துவிட்டு தொடர்ந்தும் இங்கு பிரச்சாரத்தில் ஈடுபட்டால் உங்கள் வாக்குரிமையையும் இழக்கவேண்டி வருமென எச்சரித்துச்; சென்றுள்ளனர்.

தேர்தல் வன்முறைகளுடன் தொடர்புடைய 97 பேர் கைது-

வடக்கு, மத்திய மற்றும் வடமேல் மாகாண சபைகளுக்கான தேர்தல் வன்முறைகளுடன் தொடர்புடைய 97 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தேர்தல் வன்முறைகள் தொடர்பில் இதுவரை 100 முறைபாடுகள் பதிவாகியுள்ளாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வடமாகாணத்தில் 37 முறைபாடுகளும், வடமேல் மாகாணத்தில் 24 முறைபாடுகளும், மத்திய மாகாணத்தில் 39 முறைபாடுகளும் பதிவாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். அத்துடன் தேர்தல் சட்டமீறல்கள் குறித்து 330 முறைபாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவிக்கின்றது. இந்நிலையில் தேர்தலுடன் தொடர்புடைய 405 முறைபாடுகள் தமது அமைப்பிற்கு பதிவாகியுள்ளதாக கெஃபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன் கூறியுள்ளார். அத்துடன் தேர்தலுடன் தொடர்புடைய 184 முறைபாடுகள் தமக்குப் பதிவாகியுள்ளதாக தேசிய தேர்தல் கண்காணிப்பு நிலைய தேசிய இணைப்பதிகாரி சட்டத்தரணி ரசாங்க ஹரிஸ்சந்திர தெரிவித்துள்ளார்.

தேர்தல் கடமைகளில் ஈடுபடவுள்ள அரச ஊழியர்களுக்கு பயிற்சி-

எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலின்போது கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ள அரச ஊழியர்களுக்கான விசேட பயிற்சிக் கருத்தரங்குகள் தேர்தல்கள் செயலகத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்தந்த தேர்தல் அலுவலகங்களில் இந்த பயிற்சிக் கருத்தரங்குகள் வழங்கப்படுவதாக பிரதித் தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம். மொஹமட் தெரிவித்துள்ளார். இதேவேளை, தேர்தலின்போது வாக்குச் சாவடிகளில் தலா இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் வீதம் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் பிரதித் தேர்தல்கள் ஆணையாளர் கூறியுள்ளார்.

அஞ்சல் வாக்குப் பதிவுகள் 09ஆம் 10ஆம் திகதிகளில் இடம்பெறுமென அறிவிப்பு-

வடக்கு, மத்திய மற்றும் வடமேல் மாகாண சபை தேர்தல்களுக்கான் அஞ்சல் வாக்கு பதிவுகள் இமு;மாதம் 9ம் மற்றும் 10 திகதிகளில் நடைபெறவுள்ளன. இந்த வாக்கு பதிவுகள் இடம்பெறுகின்ற அரச நிறுவனங்கள் உள்ள பகுதிகளில், தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பிரதி தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.முஹமட் கூறுகையில், வாக்களிப்பின் போது வாக்காளர்களின் இரகசிய தன்மை பாதுகாக்கப்படும். இதனால் வாக்காளர்கள் அச்சமின்றி தங்களின் வாக்குகளை பதிவுசெய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். 

ஆட்கடத்தல் தொடர்பில் கடற்படை அதிகாரி கைது-

சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவுக்கு படகுகள் மூலம் இலங்கையர்களை அனுப்பிவந்த குற்றச்சாட்டின்கீழ், நான்கு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களில் கடற்படையைச் சேர்ந்த லப்டினன்ற் கொமாண்டர் தர அதிகாரி ஒருவரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. மாத்தறை குற்றப் புலனாய்வு தரப்பினரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முயன்றநிலையில் கைதானவர்களிடம் நடத்திய விசாரணைகளின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலீஸார் தெரிவித்துள்ளனர். கைதான கடற்படை அதிகாரி திருமலை கடற்படை முகாமைச் சேர்ந்தவர். இவர்களை இன்று மாத்தறை நீதிமன்றத்தில் ஆஜர்செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.