Header image alt text

சிவனொளிபாதமலைக்கு ஹெலிகொப்டரில் பறந்தவாறு மலர் தூவினார்- ஜனாதிபதி

300(539)சிவனொளிபாதமலையில் பொருத்தப்பட்டுள்ள காண்டாமணி மற்றும் தூண்டாவிளக்கு ஆகியன பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவினால் இன்று காலை 10 மணியளவில் திறந்து வைக்கப்பட்டன. இவற்றைத் திறந்துவைக்கும் நிகழ்வில் ஜனாதிபதி கலந்துகொள்வார் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. இருப்பினும், ஜனாதிபதி இந்த இந்நிகழ்வில் கலந்துகொள்ளாத நிலையில், சிவனொளிபாதமலைக்கு மேலாக ஹெலிகொப்டரில் பறந்தவாறு அதிலிருந்தவாரே மலர்களைத் தூவி வணக்கம் செலுத்தினார். சிவனொளிபாதமலையில் 8,613 கிலோ நிறையுள்ள துண்டாவிளக்கும் 9,000 கிலோ நிறையுள்ள காண்டாமணியும் பொருத்தப்பட்டுள்ளன. சிவனொளிபாதமலை விகாரையின் பொறுப்பாளர் தேரர் தலகஸ்கந்தே வஜிரவின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இராணுவ தளபதி தயா ரத்னாயக்க உள்ளிட்ட பலர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

இரணைமடு நீர்த்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 4 பொம்மைகள்

Untitledகிளிநொச்சி இரணைமடுக் குளத்திலிருந்து யாழ்ப்பாணத்திற்கு குடிநீர் கொண்டுசெல்லும் திட்டத்திற்;கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக இவ் விநியோகத்திட்டத்திற்கு கையொப்பமிட்ட சுப்பையா மனோகரன், ஆசிய அபிவிருத்தி வங்கியின் திட்டப்பணிப்பாளர் எ.குருஸ், இத்திட்டத்திற்கான நீர்ப்பாசன பொறியிலாளர் எஸ்.பாரதிதாசன், நீர்வழங்கல் வாடிகாலமைப்புச் சபையின் அதிகாரி எஸ்.சிவபாதம் ஆகியோரின நான்கு உருவப்பொம்மைகள் அமைக்கப்பட்டு அதில் எதிர்ப்பு வாசகங்கள் எழுதப்பட்டு கிளிநொச்சி பரந்தன் பிரதான பேரூந்து நிலையத்தில் நேற்று முன்தினம் புதன்கிழமை இரவு 4 பேரின் உருவப்  பொம்மைகள் வைக்கப்பட்டிருந்தாகவும் அதனை வியாழக்கிழமை காலை அகற்றியதாகவம் கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.

ஐக்கிய தேசிய கட்சி கொழும்பு மேயர் ஏ.ஜே.எம்.முஸம்மில் இராஜினாமா

unpமேல் மாகாண சபை தேர்தலில் தனது பாரியர் பெரோஸா முஸம்மில் போட்டியிடுவதற்கு ஐக்கிய தேசிய கட்சி சந்தர்ப்பம் வழங்காததை அடுத்தே ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழுவிலிருந்து கொழும்பு மேயர் ஏ.ஜே.எம்.முஸம்மில் இராஜினாமா செய்யவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.  இதேவேளை, ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய நிறைவேற்றுக் குழுவிலிருந்து பெரோஸா முஸம்மில் நேற்று இராஜினாமா செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் சிபாரிசின் அடிப்படையில் கொழும்பு மேயரின் இணைப்புச் செயலாளராக செயற்பட்ட எஸ்.எம்.எம்.இஸ்மத் நேற்று முதல் மேயர் முஸம்மிலினால் இடைநிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மிரட்டல்கள் மத்தியில் ஒலிம்பிக் குளிர்கால போட்டிகள் -ரஷ்யாவில்

imagesரஷ்யாவில் வட கௌக்கசஸ் முஸ்லீம்களின் மிரட்டல்கள் மத்தியிலான பீதியில், பல ஆயிரம் பொலிஸ் படையினர், விளையாட்டு அரங்குகளைச் சுற்றிக் காவலில் ஈடுபடுத்தப்பட்டுள்ன நிலையில். ஒலிம்பிக் குளிர்கால போட்டியின் ஆரம்ப நிகழ்வுகள் ரஷ்ய நாட்டின் சொற்சி நகரில் இன்று ஆரம்பமாகிறது. விளயாட்டு வீரர்களை அச்சுறுத்தும் வகையில் கௌக்கசஸ் புரட்சியாளர்களால் மிரட்டல்கள் விடப்பட்டுள்ளது. ரஷ்யாவின் பல பெரும் நகரங்கள் அதியுச்சப் பாதுகாப்பு வலையங்களாகப் பிரகடணம் செய்யப்பட்டுள்ளது. விமான நிலையங்களில் கடும் சோதனைகள் இடம் பெறுகின்றன. ஜேர்மன்  தங்கள் விளையாட்டு வீர்ர்களையும், வீராங்கனைகளையும் பாதுகாக்கும் வகையில், தம் நாட்டுக் காவற்படையினரை அனுப்பி வைத்துள்ளனர்.  சொற்சி நகரில் வாழும் மூன்று லட்சத்து ஜம்பதாயிரம் மக்களைப் பாதுகாக்கும் முகமாக பல கண்காணிப்பு உபகரணங்களும், தரையிலிருந்து ஏவக் கூடிய ஏவுகணைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டு நகரம் போர்க் கோலம் பூண்டுள்ளது. பற்பசைக் குழாய்களுக்குள் பயங்கர விளைவைத் தரவல்ல குண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டுக் கடத்தப்படலாமென அமெரிக்கா எச்சரித்துள்ளது. அமெரிக்காவின் வெளிவிவகாரச் செயலரான ஜோன் கெரியையும், அந்நாட்டின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகரான சுசான் றைசையும், ரஷ்ய உளவுத்துறையுடன் நெருங்கிய தொடர்பிலிருக்குமாறு ஜனாதிபதி பராக் ஒபாமா கேட்டுக்கொண்டுள்ளார். அமெரிக்கா தன் இரு போர்கப்பல்களை தேவையேற்படின் ரஷ்யக் காவற்படைக்கு உதவவென ரஷ்யாவை அண்மித்த கடற்பரப்பில் நிறுத்தி வைத்துள்ளது.

imagesCA3R4GJZimagesCAB2YB05

வடமாகாணத்தில் பொலித்தீன் பாவனைக்குத் தடை-

plasticவடமாகாணத்தில் 20 மைக்ரோனுக்கு குறைந்த பொலித்தீன் பாவனைக்குத் தடைவிதிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. உலக சுற்றுச் சூழல் தினமான எதிர்வரும் ஜூன் மாதம் 5 ஆம் திகதி முதல் இந்த திட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். 20 மைக்ரோனுக்கு குறைந்த பொலித்தீன் பாவனையை தடைசெய்வது தொடர்பாக வட மாகாண விவசாய அமைச்சில் இன்று காலை 9.30 அளவில் கலந்துரையாடலொன்று நடைபெற்றது. யாழ்.வணிகர் சங்கத்தினர் மத்திய சுற்றாடல் மற்றும் வடமாகணத்திற்கு பொறுப்பான சுகாதார அதிகாரிகளுடன் மாகாண விவசாய அமைச்சர் இது தொடர்பான கலந்துரையாடலை மேற்கொண்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

தேர்தல் சட்டங்களை மீறுவோரை கைதுசெய்ய நடவடிக்கை-

LK policeமேல் மற்றும் தென் மாகாண சபைத் தேர்தலுக்கான வேட்புமனு ஏற்றுக்கொள்ளும் இறுதித் தினமான இன்று பேரணிகளை முன்னெடுக்க வேண்டாமென பொலிஸார் அறிவித்துள்ளனர். பேரணிகளில் ஈடுபடுகின்றவர்கள் கைதுசெய்யப்படுவார்கள் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார். அத்துடன் பேரணிகளுக்காக பயன்படுத்தப்படும் வாகனங்கள் கைப்பற்றப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். வேட்புமனு தாக்கல்செய்த தினம் முதல், தேர்தல் முடிவடைந்து ஒருவாரம் வரை பேரணிகள், ஊர்வலங்கள் நடத்துவது தேர்தல் சட்டத்திற்கு அமைய தடை செய்யப்பட்டுள்ளது. களுத்துறை மாவட்டத்தில் நேற்று 13 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 06 வாகனங்கள் கைப்பற்றப்பட்டன. இரண்டு மாகாணங்களிலும் ஊர்வலங்கள் மற்றும் பேரணிகளை தடுப்பதற்கு பொலிஸார் மட்டுமன்றி, சம்பந்தப்பட்ட சகல தரப்பினரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் மேலும் கூறியுள்ளார்.

தேர்தல் முறைப்பாடுகள் 52ஆக பதிவு-

elections_secretariat_68மேல் மற்றும் தென் மாகாண சபைத் தேர்தலுடன் தொடர்புடைய 52 முறைப்பாடுகள் இதுவரை பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவிக்கின்றது. அரச வாகனங்களை தேர்தல் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்திய 6 சம்பவங்களும், அரச உத்தியோகத்தர்களை பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடுத்திய 3 சம்பவங்களும், இவற்றுள் அடங்குவதாக தேர்தல் முறைப்பாடுகளை ஏற்றுக்கொள்ளும் விசேட பிரிவு கூறுகின்றது. அத்துடன், அரச உத்தியோகத்தர்களுக்கு இடமாற்றம், பதவி உயர்வு மற்றும் நியமனங்கள் வழங்கப்பட்டமை தொடர்பான 20  முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் செயலகம் குறிப்பிடுகின்றது. கொழும்பு மாவட்டத்தில் அதிகபட்சமாக 13 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாகவும் செயலகம் தெரிவிக்கின்றது. களுத்துறை மாவட்டத்தில் 7 முறைப்பாடுகளும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் தலா மூன்று முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளதாக தேர்தல் முறைப்பாடுகளை ஏற்றுக்கொள்ளும் விசேட பிரிவு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

80 நாடுகளுக்கு உடனடி இந்திய விசா, இலங்கைக்கு இல்லை-

indiaஇந்தியாவிற்கு சுற்றுலா வரும் வெளிநாட்டு பயணிகளை ஊக்குவிக்கும் நடவடிக்கையாக விசா வழங்கும் முறையில் எளிமையான நடைமுறைகளை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இதன்படி சீனா, பாகிஸ்தான், ஈரான், இலங்கை உள்பட 8 நாடுகளை தவிர மற்ற 180 நாடுகளைச் சேர்ந்தவர்கள் முன்கூட்டியே விசா வாங்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.  அந்தந்த நாட்டின் விமான நிலையங்களிலேயே விசாவை பெற்றுக் கொள்ளலாம என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தியா வரும் பின்லாந்து, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் உள்ளிட்ட 11 நாடுகளை சேர்ந்தவர்களுக்கு விமான நிலையங்களிலேயே விசா வழங்கும் வசதிகள் ஏற்கனவே செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தேர்தல் திகதி அறிவிக்கப்பட்ட பின் தேர்தல் சட்ட மீறல்-கபே-

cafeதென் மற்றும் மேல் மாகாண சபைகளுக்கான தேர்தல் திகதி அறிவிக்கப்பட்ட பின்னர் தேர்தல் சட்டங்களை மீறி வாகன பேரணிகள், ஊர்வலங்கள் நடத்தப்பட்டதாக கபே இயக்கம் குற்றம் சுமத்தியுள்ளது. களுத்துறை, மாத்தறை, காலி, கம்பஹா மாவட்டங்களில் அரசியல் கட்சி ஆதரவாளர்கள் இவ்வாறு வாகன பேரணிகள், ஊர்வலங்கள் சென்றதாக கபே இயக்கம் தனதறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. பேருவளை, தெனியாய, அளுத்கம, அக்மீமன, வத்தளை, கடவத்த, அல்தெனிய ஆகிய பகுதிகளில் இவ்வாறு தேர்தல் சட்டங்கள் மீறப்பட்டுள்ளன. இது குறித்து கபே இயக்கம் தேர்தல்கள் ஆணையாளர் நாயகத்திற்கு ஐந்து முறைப்பாடுகளை பதிவு செய்துள்ளதாக கபே இயக்க நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன் கூறியுள்ளார்.

கந்தசாமி கமலேந்திரன் உட்பட மூன்று பேருக்கும் விளக்கமறியல் நீடிப்பு-

kamalendranவட மாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் (EPDP) கந்தசாமி கமலேந்திரன் உட்பட மூன்று பேரை எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதவான் எஸ்.லெனின்குமார் இன்று உத்தரவிட்டுள்ளார். அத்துடன் அடுத்த வட மாகாண சபை அமர்வில் கந்தசாமி கமலேந்திரன் கலந்துகொள்வதற்கான அனுமதியையும் வழங்கினார். நெடுந்தீவு பிரதேச சபை தலைவர் டானியல் றெக்ஷசின் கடந்த 2013ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26ஆம் திகதி அவரது வீட்டில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டு சடலமாக மீட்கப்பட்டார். இக் கொலை தொடர்பில் வட மாகாண சபை எதிர்கட்சி தலைவர் கமலேந்திரனை 2013ஆம் ஆண்டு டிசெம்பர் 3ஆம் திகதி கொழும்பில் வைத்து பயங்கரவாத குற்றத் தடுப்புப் பிரிவினர் கைது செய்ததுடன், றெக்ஷசினின் மனைவியும் மற்றுமொரு நபரும் ஊர்காவற்றுறைப் பொலிஸாரினாலும் கைது செய்யப்பட்டனர். பின்னர் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த வழக்கு விசாரணைகள் மீண்டும் இன்று எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போதே வட மாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் கமலேந்திரனை உட்பட மூன்று பேரையும் எதிர்வரும் பெப்ரவரி 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்திரவிட்டுள்ளார்.

ஆதாரங்கள் அழிப்பு குறித்த ஆஸியின் குற்றச்சாட்டு நிராகரிப்பு-

fig-17யுத்தத்தின் இறுதி கட்டத்தின்போது ஒரு தடவையில் பெருமளவு மக்கள் கொல்லப்பட்டதாக கூறப்படுவதற்கு இருந்த ஆதாரங்களை இலங்கை ஆயுத படையினர் திட்டமிட்டு அழித்துவிட்டதாக கூறும் அண்மையில் வெளிவந்த அவுஸ்திரேலிய அறிக்கையை இலங்கை இராணுவம் நிராகரித்துள்ளது. இந்த அறிக்கை ஆதாரமற்றது என இராணுவ பேச்சாளர் ருவான் வணிகசூரிய ரொய்ட்டருக்கு தெரிவித்துள்ளார். நேரில் கண்ட சாட்சியத்தின் ஆவணங்களின் உண்மைத் தன்மை பற்றியும் இவ்வாறான கூட்டுப் புதைகுழி போன்ற யுத்தக் குற்ற ஆதாரங்களை இராணுவம் அகற்றியதாக கூறப்படுவது பற்றியும் அவர் தனது சந்தேகங்களை வெளியிட்டுள்ளார். மக்கள் குடியேறியுள்ள கிராமங்களிலுள்ள எலும்புக் கூட்டு எச்சங்களை தோண்டியெடுத்து அகற்ற எம்மால் முடிந்திருக்குமா என இராணுவப் பேச்சாளர் கேள்வி எழுப்பினார். வேண்டுமென்றே வைத்தியசாலைகள் மீது பீரங்கி தாக்குதல்கள், வல்லுறவு, சித்திரவதை, பாலியல் வன்முறை, சரணடைந்த தமிழ் புலி போராளிகளை கொலை செய்தமை போன்ற சாத்தியமான யுத்த குற்றங்கள் தொடர்பாக சாட்;சியங்கள் கூறியதை அவுஸ்திரேலியாவின் பொதுநல பரப்புரை மையம் என்ற தொண்டு நிறுனம் வெளியிட்ட அறிக்கையில் விபரித்திருந்தது. யுத்தக் குற்றம் நடந்ததாக கூறப்படுவதை விசாரிக்குமாறு கொழும்புக்கு புதிய அழுத்தம் கொடுக்கும் வகையில் அமெரிக்கா இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் பிரேரணை கொண்டுவர திட்டமிட்டுள்ள நிலையில் இந்த அறிக்கை வெளிவந்துள்ளது. இலங்கை இராணுவத்தின் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு நிறுவன ஒழுங்கமைப்பு தெளிவாக வரையறுக்கப்பட்டிருப்பதனால் குற்றச்சாட்டுக்கள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டால் சிரேஷ்ட இராணுவ தளபதிகளும் இலங்கை அரசாங்க அதிகாரிகளும் குற்றவாளிகளாக காணப்படலாம் என இந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைதான நபர் விடுதலை-

law helpபயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 2009ஆம் ஆண்டு மே மாதம் கைதுசெய்யப்பட்ட யாழ். கைதடி தெற்கைச் சேர்ந்த கதிரவன் லோகேஸ்வரன் (37) என்பவர் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கரினால் நேற்று விடுதலை செய்யப்பட்டுள்ளார். இவர் இராணுவத்தினருக்கு எதிராகக் தாக்குதல் மேற்கொண்டார் என்ற குற்றச்சாட்டில் மேற்படி நபர் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் திகதி ஒமந்தைப்பகுதியில் வைத்து இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு, பயங்கரவாத தடைச்சட்டப்பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டு பூஸா முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.  பூஸா முகாமில் வைத்து, அங்கிருந்த உதவிப் பொலிஸ் அத்தியட்சகரிடம் ஜனகனால் அளிக்கப்பட்ட குற்றஒப்புதல் வாக்குமூலம் கடந்த 2013 ஆம் ஆண்டு நவம்பர் 18ஆம் திகதி யாழ்.மேல் நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டது. வேறு சான்றுகள் இருக்கின்றனவா எனப் பார்ப்பதற்காக மேற்படி வழக்கு 2014 பெப்ரவரி 5ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.  தொடர்ந்து மேற்படி வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, குறித்த நபருக்கு எதிராக வேறு சான்றுகள் நிரூபிக்கப்படாத காரணத்தினால் குறித்த நபரை விடுதலை செய்து யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்தார். குறித்த நபர் சார்பாக சட்டத்தரணி முடியப்பு றெமிடியஸ், அரச சட்டத்தரணி நளினி கந்தசாமி ஆகியோர் மன்றில் ஆஜராகியிருந்தனர்;.

இந்திய வீட்டுத் திட்டத்தில் முறைக்கேடு: வவுனியாவில் ஆர்ப்பாட்டம்-

aarpattam673968312vஇந்திய வீட்டுத்திட்டத்தில் முறைக்கேடுகள் இடம்பெறுவதாக தெரிவித்து இன்று மீண்டும் வவுனியாவில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. வவுனியா நெடுங்கேணி மகா வித்தியாலயத்திற்கு முன்பாக ஒன்று கூடிய ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கிருந்து வவுனியா வடக்கு பிரதேச செயலகம் வரை சென்று தமது மகஜரினை வவுனியா வடக்கு பிரதேச உதவி பிரதேச செயலாளர் வி. ஆயகுலனிடம் கையளித்திருந்தனர். 50 இற்கும் உட்பட்டவர்களே கலந்து கொண்ட இவ் ஆர்ப்பாட்டத்தில் ´வவுனியாவில் வசிப்பிடம் நெடுங்கேணியில் கழிவறையா, அதிகாரிகளே வீட்டுத்திட்டத்தை சீராக வழங்குங்கள், வீட்டுத்திட்டத்தில் நெடுங்கேணி வடக்கு மற்றும் தெற்கு மக்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்´ என தெரிவித்து கோசங்களை எழுப்பியதுடன் பதாகைகளையும் தாங்கியிருந்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பிரதேச செயலகத்திற்கு முன்பாக ஒன்றுகூடி கோசங்களை எழுப்பிய நிலையில் சம்பவ இடத்திற்கு சென்ற உதவி பிரதேச செயலாளர் அவர்களுடைய கோரிக்கைகளை செவிமெடுத்ததுடன் இவ் விடயம் தொடர்பாக பிரதேச செயலாளருக்கு அறியப்படுத்துவதாகவும் தெரிவித்தார். இதனையடுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் அகன்று சென்றனர். சிறிது நேரத்தின் பின்னர் வவுனியா வடக்கு பிரதேச செயலகத்திற்கு வருகை தந்த வன்னி பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், செல்வம் அடைக்கலநாதன், வினோ நோகதாரலிங்கம் மாகாணசபை உறுப்பினர்களான ஜி. ரி. லிங்கநாதன் மற்றும் ம.தியாகராசா ஆகியோர் பிரதேச செயலாளர் க. பரந்தாமனுடன் இந்திய வீட்டுத்திட்டம் தொடர்பில் கலந்துரையாடியிருந்தனர். இதன் பின்னர் பிரதேச செயலாளர் இந்திய வீட்டுத்திட்டம் வழங்கப்பட்ட முறைகள் அதனை வழங்குவதற்குள்ள நடைமுறைகள் தொடர்பில் அவர்களுக்கு எடுத்துக்கூறியிருந்தார்.

மனிதவுரிமைகள் மாநாட்டில் இலங்கைக்கு ஆதரவு-

ggggஅமெரிக்காவினால் ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படும் மனிதவுரிமை மீறல் பிரேரணைக்கு ஆதரவளிக்கப் போவதில்லை என அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது. சிட்னி மோர்னிங் ஹெரல்ட் நாளிதழுக்கு அளித்த செவ்வியிலேயே, அவுஸ்திரேலியாவின் வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜுலி பிஷோப், இந்த தகவலை வெளியிட்டுள்ளார். இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான யுத்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் சர்வதேச விசாரணையொன்று அவசியம் இல்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார். யுத்த சூழ்நிலையின் போது பொதுமக்கள் கொல்லப்பட்டமை மற்றும் யுத்த சூனிய வலயத்தில் குண்டுத் தாக்குதல்களை மேற்கொண்டமை போன்ற விடயங்களை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளமை இதற்கு காரணம் என்றும் ஜுலி பிஷப் தெரிவித்துள்ளார். எனினும், புலிகள் இயக்கத்திற்கும், இலங்கை ராணுவத்தினருக்கும் எதிராக குற்றச்சாட்டுகள் தொடர்பில் உள்நாட்டு விசாரணையொன்று மேற்கொள்ளப்படவேண்டும் என அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார். இதேவேளை, சர்வதேச ரீதியாக விடுக்கப்படும் சவால்களுக்கு ரஷ்யாவின் ஆதரவு இலங்கைக்கு தொடர்ச்சியாக இருக்கும் என்று ரஷ்ய பிரதி சபாநாயகர் சர்ஜி செலெசன்ஜென் தெரிவித்துள்ளார். இன்று நாடாளுமன்ற கட்டிடத்தில் வைத்து பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடியை சந்தித்து பேசிய போதே சர்ஜி இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். சில நாடுகள் இலங்கை தொடர்பில் கொண்டுள்ள நிலைப்பாடு எந்த தருணத்திலும் சரியானதாக இருப்பதில்லை என்றும், யுத்தத்தின் பின்னர் புனரமைப்பு நடவடிக்கைகள் இலங்கைக்கே உரிய முறையில் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். இதனால், பிரச்சினைகள் தொடர்பிலான தீர்மானங்களை எடுக்கும் உரிமை இலங்கைக்கு கிடைக்க வேண்டும் என்று ரஷ்ய பிரதி சபாநாயகர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அடிப்படை அற்ற கருத்துக்கள் – இலங்கை மனித உரிமை ஆணைக்குழு-

4தெற்கு மற்றும் மத்திய ஆசிய நாடுகளுக்கான அமெரிக்காவின் உதவி ராஜாங்க செயலாளர் நீசா பீஸ்வால் தமது இலங்கை விஜயத்தின் போது வெளியிட்டிருந்த கருத்துக்கள் போதிய ஆய்வுகள் இன்றி வெளியிடப்பட்டிருப்பதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன் ஆணையாளர் பிரதீபா மஹாநாமஹேவா இதனைத் தெரிவித்துள்ளார். கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையில் மாத்திரம் ஆறு பாடங்களை சித்திப் பெற்றவர்கள் போலியான ஆவனங்களுடன் மருத்துவப்  பட்டத்தை பெற்றுள்ளனர். அவர்களுக்கு மருத்துவ பதிவினை வழங்க கூடாது என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இலங்கையில் ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவதற்க, இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுள்ள செயற்பாடுகள் குறித்து, நீசா பீஸ்வால் போதிய விளக்கத்தை கொண்டிருக்கவில்லை என்று அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.இந்த நிலையில் இலங்கை மீது ஆதாரங்கள் அற்ற குற்றச்சாட்டுகளை அவர் முன்வைத்திருப்பதாகவும், இலங்கை மனித உரிமைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.  

கல்வித் தகமை அற்ற வைத்தியர்கள்? –

kalvi thபோதிய கல்வித் தகமை இல்லாதவர்களுக்கு வைத்திய பதிவினை வழங்க முற்பட்டால், வைத்திய சபையின் அங்கத்துவம் தொடர்பில் மறுபரிசீலனை செய்யப்படும் என்று அரச வைத்தியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் நவீன் டி சொய்சா இதனைத் தெரிவித்துள்ளார். இதற்கிடையில் தாதியர்களுக்கு மகப்பேற்று பயிற்சிகளை வழங்குவது தொடர்பில் ஆய்வு செய்வதற்காக சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்டிருந்த குழுவுக்கு, இலங்கை தாதியர்கள் சங்கம் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. இந்த குழு தாதியர்களுக்கான மகப்பேற்று பயிற்சிகளை முற்றாக நிறுத்த முற்படுமாக இருந்தால், அதற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாகவும் அந்த சங்கம் எச்சரித்துள்ளது.

பரீட்சை பெறுபேறுகளை பெறுவதற்கான பிரிவு –

untitled4கல்வி பொதுத்தராதர சாதாரண தர மற்றும் உயர்தர உள்ளிட்ட பரீட்சை பெறுபேறுகளை இரண்டு மணித்தியாலயங்களில் பெற்றுக் கொள்வதற்கான சேவைகள் இன்று ஆரம்பமாகியுள்ளன. இந்த சேவைகள் பரீட்சைகள் திணைக்களத்திலே வழங்கப்படுகின்றது. இந்த வேலைத்திட்டத்தின் கீழ், 1992 ஆம் ஆண்டிற்கு பின்னர் இடம்பெற்ற பரீட்சைகளின் பெறுபேறுகளை பெற்றுக் கொள்ள முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யூ.எம்.என்.ஜே புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் போக்கு வரவேற்கதக்கது-

fffffeeeஇலங்கையின் மனித உரிமைகள் விடயத்தில் இந்தியாவின் கடுமையான நிலைபாடு வரவேற்கத்தக்கது. எனினும் இந்த விடயத்தில் இந்தியா இன்னும் முன்னெடுக்க வேண்டிய விடயங்கள் இருப்பதாக சர்வதேச மன்னிப்பு சபை சுட்டிக்காட்டியுள்ளது. சர்வதேச மன்னிப்பு சபையின் செயலாளர் சாலில் செட்டி இதனைத் தெரிவித்துள்ளார். சாலில் செட்டி அண்மையில் பொதுநலவாய நாடுகளின் பொது செயலாளர் கமலேஷ் சர்மாவை கடந்த 3ம் திகதி சந்தித்து, இலங்கையின் மனித உரிமைகள் நிலவரங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தி இருந்தார்.இது தொடர்பில் த டைம்ஸ் ஒப் இந்தியாவிடம் நேற்றைய தினம் செவ்வி ஒன்றை வழங்கி இருந்தார். இந்த செவ்வியில், இலங்கையின் மனித உரிமை நிலவரங்கள்  தொடர்பிலும், பொதுநலவாய நாடுளின் மாநாடு இடம்பெற்ற காலப்பகுதியிலேயே ஆர்ப்பாட்டங்களுக்கு தடைவிதிக்கப்பட்டமை போன்ற விடயங்கள் தொடர்பிலும் பொதுநலவாய நாடுகள் ஏன் மௌனம் காத்து வருகிறது என்று கமலேஸ் சர்மாவிடம் கேள்வி எழுப்பியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் இலங்கை சம்பந்தமாக இந்தியா தற்போது கடுமையான நிலைப்பாட்டை கொண்டுள்ளது. அமெரிக்காவின் பிரேரணைகளுக்கு ஆதரவளித்தமை, பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை இந்திய பிரதமர் மன்மோகன் சிங் புறக்கணித்தமை போன்ற விடயங்கள் வரவேற்கத்தக்கன. ஆனால் இந்தியாவால் இன்னும் மேற்கொள்ளப்பட வேண்டிய விடயம் அநேகம் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேர்தல் முறைப்பாடுகள் 49-

unnamed3மேல் மற்றும் தென் மாகாண சபை தேர்தல் தொடர்பில் இதுவரை 49 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் செயலகம் குறிப்பிட்டுள்ளது. அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டமை மற்றும் பதவி உயர்வு வழங்கப்பட்டமை தொடர்பில் அதிகமான முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக செயலகத்தின் முறைப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. இந்த விடயங்கள் தொடர்பில் 20 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.கொழும்பு மாவட்டத்தில் 13 முறைப்பாடுகளும், களுத்துறை மாவட்டத்தில் 07 முறைப்பாடுகளும், மாத்தறையில் 03 முறைப்பாடுகளும், ஹம்பாந்தோட்டையில் 07 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளன. இதேவேளை மேல் மாகாணத்தில் 13 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளன.

ஐ.நா உதவி செயலாளர் நாயகம் இலங்கை விஜயம்-

un athikariஐக்கிய நாடுகள் சபையின் உதவிச் செயலாளர் நாயகமும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்திக் குழுவின் ஆசிய பசுபிக் தலைவருமான ஹாவோ சூ, எதிர்வரும் 9ஆம் திகதி இலங்கை வருகிறார். இவர் எதிர்வரும் 12ஆம் திகதி வரை இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். இந்த சுற்றுப்பயணத்தின் போது அவர், அரசாங்கத்தின் உயர்மட்ட அலுவலர்களையும் அபிவிருத்தி பங்காளர்களையும் சிவில் சமூகத்தினரையும் சந்திப்பாரென எதிர்ப்பார்க்கப்படுகிறது. இலங்கையில் மனிதாபிமானத் திட்டம் என்ற நிலையிலிருந்து அபிவிருத்தியை நோக்கிய திட்டமென்ற நிலைக்கு மாறும் நிலையில் ஐ.நா அபிவிருத்தித் திட்ட உதவிகள் பயன்படுத்தப்பட்டு எவ்வாறு ஐ.நா முறைமை முன்னேறக் கண்டது என்பதைப் பற்றி அவர் விளங்கிக்கொள்வார். இவர் புகழ்பெற்ற பொருளியலாளர்களுடனும் இலங்கை அபிவிருத்தி தொடர்பான விற்பன்னர்களின் பிரதிநிதிகளையும் பெண்கள் தலைவர்களையும் சந்தித்து உரையாடவுள்ளார். வடக்குக்கும் விஜயம் செய்யவுள்ள இவர், அங்கு அரசாங்க அதிகாரிகளையும் சமுதாய தள நிறுவள பிரதிநிதிகளையும் அவற்றின் பயனாளிகளையும் சந்தித்துப் பேசவுள்ளார். இதன்மூலம் அவர் மாவட்டங்களின் அபிவிருத்தி முன்னுரிமைகளையும் உதவி தேவைகளையும் விளங்கிக்கொள்வார். மேலும், அங்கு நடைபெறும் ஐ.நா மற்றும் ஐ.நா அபிவிருத்தி திட்டத்தின் கீழ் செயற்படுத்தப்படும் வாழ்வாதார அபிவிருத்தி திட்டங்களையும் பார்வையிடுவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்திய வீட்டுத்திட்டம் தொடர்பில் வவுனியாவில் ஆர்ப்பட்ட ஊர்வலங்கள்.

_vavuniyaஇந்திய வீட்டுத் திட்டத்திற்கான பயனாளிகள் தெரிவில் வவுனியா மாவட்டத்தில் அதிகமாக வாழும் தமிழ் மக்களுக்கு அமைச்சர் ரிசாட் பதியுதீன் பாரபட்சம் காட்டுவதாகக் கூறி கடந்த வாரம் வவுனியா மாவட்ட மீள்குடியேறியோர் நலன்பேணும் அமைப்பினால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்திற்கு எதிராகவே முஸ்லிம் மக்களினால் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.

தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் மத்தியில் இனவாதத்தை ஏற்படுத்தி, மீண்டுமொரு யுத்த மோதலை ஏற்படுத்துவதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முனைந்துள்ளதாகக் குற்றம் சுமத்தி வவனியாவில் முஸ்லிம் மக்கள் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டம் ஒன்று திங்களன்று நடத்தப்பட்டிருக்கின்றது. இந்திய வீட்டுத் திட்டத்திற்கான பயனாளிகள் தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் என மூவினங்களிலுமிருந்தும் தெரிவு செய்யப்பட்டிருந்தபோதிலும், அமைச்சரினால் தமிழ் மக்கள் புறக்கணிக்கப்படவில்லை என இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்தவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

இனவாதத்தைத் தூண்டுவதாகக் குறிப்பிட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைக் குறிக்கும் உருவம் ஒன்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களினால் ஏந்திச் செல்லப்பட்டு தீயிடப்பட்டது. இந்திய வீட்டுத் திட்டத்தைத் தடுத்து நிறுத்தும் வகையில் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும், அத்தகைய முயற்சிக்கு இடம்கொடுக்கக் கூடாதென்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அந்தக் கோரிக்கை அடங்கிய மகஜரை, ஜனாதிபதி மற்றும் இந்திய வெளியுறவு அமைச்சர் உள்ளிட்ட முக்கியஸ்தர்களுக்கு அனுப்பி வைப்பதற்காக, வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சரஸ்வதி மோகநாதனிடம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த முக்கியஸ்தர்கள் கையளித்தனர்.

vavniyaபாதிக்கப்பட்ட குடும்பங்கள் கடந்த 29-ம் திகதி வவுனியாவில் நடத்திய ஆர்ப்பாட்டம் இதேவேளை, வவுனியா மாவட்டத்தில் போரினால் பாதிக்கப்பட்டுள்ள 10,209 தமிழ் குடும்பங்ளுக்கு வீடுகள் தேவையென மதிப்பிடப்பட்டுள்ளபோதிலும், 1,938 குடும்பங்கள் மட்டுமே இந்திய வீட்டுத் திட்டத்தின் மூன்று கட்டங்களிலும் பயனாளிகளாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர் என்று வவுனியா மாவட்ட மீள்குடியேறியோர் நலன்பேணும் அமைப்பு அறிக்கையொன்றில் தெரிவித்திருக்கின்றது. அதேநேரம், இந்த மாவட்டத்தில் 773 சிங்கள குடும்பங்களுக்கு வீடுகள் தேவையென மதிப்பிடப்பட்டு 545 குடும்பங்கள் பயனாளிகளாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால் முஸ்லிம் குடும்பங்களைப் பொறுத்தமட்டில் 1,483 குடும்பங்களுக்கு வீடுகள் தேவையென மதிப்பிடப்பட்டு, 1634 குடும்பங்கள் பயனாளிகளாகத் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார்கள். இதன் மூலம் இந்த மாவட்டத்தில் பெரும்பான்மையாக வாழும் தமிழ் மக்கள் அரசியல் பழிவாங்கல் நோக்கிலும் அரசியல் இலாபம் கருதியும் இந்திய வீட்டுத் திட்டத்தில் பாகுபாடாக நடத்தப்பட்டிருக்கின்றார்கள் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரா.சம்பந்தனுக்கு பிறந்தநாள் வாழ்த்து-

imagesCAEVMZZHஜனாதிபதி இன்று (05.02.2014) தனது 81ஆவது பிறந்த தினத்தைக் கொண்டாடும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத் தலைவர் இரா. சம்பந்தன் அவர்கட்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். மருத்துவ சிகிச்சைக்காக இந்தியா சென்றுள்ள சம்பந்தன் அவர்களை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டுள்ள ஜனாதிபதி, வாழ்த்துக்களைத் தெரிவித்ததோடு, மருத்து சிகிச்சைகளை முடித்துக்கொண்டு நாடு திரும்பியதும் இருவரும் சந்தித்து கலந்துரையாட வேண்டும் என்று தெரிவித்ததாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன. சுதந்திர தினத்தில் கொடியேற்றியவர் மீது தாக்குதல்-யாழில் 66ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் முகமாக தனது சுயதொழில் நிலையத்தில் தேசியக் கொடியினை ஏற்றிய நிலையத்தின் உரிமையாளரான அராலி தெற்கை சேர்ந்த 56 வயதான  தம்பிப்பிள்ளை மகேந்திரராசா மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாகவும் இதனால் படுகாயமடைந்த உரிமையாளர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும். இவர் வீட்டில் இருந்தபோது அங்கு வந்த இனந்தெரியாத நபர்கள் ‘ஏன் தேசியக் கொடியை ஏற்றினாய்’, ‘நீ ஆமி, பொலிஸுடன் சேர்ந்தால் பெரிய கொம்பனா?’ என கேட்டு தன்னை அடித்ததாக குறித்தநபர் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.பி.சத்துருசிங்க தெரிவித்தார்.

ரவி கருணாநாயக்க இராஜினாமா

raviஐக்கிய தேசிய கட்சியின் மாகாண சபை தேர்தலுக்கான வேட்புமனு குழுவிலிருந்து அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க இராஜினாமா செய்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன. மாகாண சபை தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வில் ஏற்பட்ட சர்ச்சையினை அடுத்தே ரவி கருணாநாயக்க இராஜினாமா செய்துள்ளதகாவும். கொழும்புக்கு வெளியிலுள்ள நபரொருவரை மாகாண சபை தேர்தலில் போட்டியிடவதற்கு அனுமதிக்கப்பட்டமையே இதற்கான காரணம் என தெரியவருகின்றது.

வேட்புமனுவை தாக்கல் செய்வதற்கு சஜித் பிரேமதாஸவிற்கு அனுமதி மறுப்பு.

untitledஅம்பாந்தேர்ட்டை ருஹூணு மாகம்புர நிர்வாகக் கட்டிடத் தொகுதியிலுள்ள அம்பாந்தோட்டை மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகத்தில் தெரிவத்தாட்சி அலுவலகர் ஆர்.சீ.த.சொய்சாவிடம் தேர்தலில் போட்டியிடும் கட்சிகளின் தலைமை வேட்பாளர்களினால் வேட்புமனுக்கள் கையளிக்கப்பட்டன. இதன்போது ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக வேட்புமனுவினை தாக்கல் செய்ய அம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸ வருகை தந்திருந்தார். எனினும் அவர் உள்ளே செல்வதற்கான அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் அவர் தெரிவத்தாட்சி அலுவலருடன் தொடர்புகொண்டபோதும் முயற்சி பலனளிக்கவில்லை. ஐக்கிய தேசிய கட்சியின் தலைமை வேட்பாளரினால் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, தென் மாகாண சபைத் தேர்தலுக்காக அம்பாந்தோட்டை மாவட்டத்தில் ஐக்கிய தேசிய  கட்சி, ஜனநாயக கட்சி, மக்கள் விடுதலை முன்னனி மற்றும் நாட்டுப்பற்றுள்ள சுதந்திர முன்னணி ஆகிய கட்சிகள்  வேட்புமனுக்களை தாக்கல் செய்தன. அத்துடன் சுயேட்சைக் குழுக்களுக்கு கட்டுப்பணம் செலுத்துவதற்கான காலம் இன்று நண்பகலுடன் முடிவடைகின்ற நிலையில் மூன்று சுயேட்சை குழுக்கள் மாத்திரமே அம்பாந்தோட்டை மாவட்டத்தில் கட்டுப்பணம் செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இந்தியர்

Bill-Gates-Satya-Nadella-newsசிறுவயதில் இருந்து கணினி மென்பொருள் துறையில் சுய விடாமுயர்ச்சியினால் முன்னேறி வெற்றி வாகை சூடி உலகக் கோடீஸ்வரர் எனப் பெயர்பெற்ற மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் அதிபர் பில்கேட்ஸ் தனது பதவியை இன்று இராஜினாமா செய்தார். இதேவேளை மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இந்தியாவைச் சேர்ந்த சத்யா நடேலா என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். Read more

1014086_10151836817106467_399802434_nஇலங்கையின் 66ஆவது சுதந்திர தினம்-

 

 

 

unp mel then makana sabai (5)unp mel then makana sabai (6)unp mel then makana sabai (7)unp mel then makana sabai (8)இலங்கையின் 66 ஆவது சுதந்திரதின கொண்டாட்ட நிகழ்வுகள் கேகாலை நகரின் சுதந்திர மாவத்தையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்றுகாலை ஆரம்பமாகி நடைபெற்றது. இதைவிட இலங்கையின் 66 ஆவது சுதந்திரதினம் நாடளாவிய ரீதியிலும் தேசியக் கொடி ஏற்றப்பட்டு கொண்டாடப்பட்டது.

ஜனாதிபதியினால் தேசியக் கொடி ஏற்றப்பட்டதன் பின்னர், சுதந்திர தின கொண்டாட்டங்கள் வைபவ ரீதியாக ஆரம்பித்துவைக்கப்பட்டன. அதன்பின்னர் தேசிய கீதம் மற்றும் ஜயமங்கள கீதம் என்பன இசைக்கப்பட்டன. பின்னர் 21 மரியாதை வேட்டுக்கள் தீர்க்கப்பட்டதுடன், முப்படையினரின் அணிவகுப்புக்கள் இடம்பெற்றன.

இதன்போது ஜனாதிபதி தமிழிலும் உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து, பாடசாலை மாணவர்களின் கலாசார, பாரம்பரிய நிகழ்வுகளும் இடம்பெற்றன.

இங்கு உரையாற்றிய ஜனாதிபதி அவர்கள், ஐ.நா மனித உரிமை பேரவையில் இலங்கை மீது சுமத்தப்படும் மனித உரிமைகள் தொடர்பான குற்றச்சாட்டுகள் பெரும் அநீதியாகும் என்று தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக கொண்டுவர முயற்சிக்கும் யுத்த குற்றச்சாட்டுகள் சமாதானத்தை விரும்பாதவர்களின் செயற்பாடுகளே. நாட்டின் பிரிவினைவாதத்திற்கான அரசியல் நிகழ்ச்சி நிரலை வைத்திருப்பவர்களினால் வழங்கப்படும் தகவல்களை வைத்தே இந்த குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன.

அன்று தமிழ் அரசியல்வாதிகளை படுகொலை செய்தமை உட்பட புலிகளால் செய்யப்பட்ட மனித உரிமை மீறல்கள் பற்றி எவரும் பேசவில்லை. வடக்கில் சுதந்திரத்தை அனுபவிக்கும் மக்களை மீண்டும் கேடயமாக்க சில மேற்கத்திய மற்றும் ஐரோப்பிய நாடுகள் முற்படுகின்றன. இதனை வடபகுதி மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். மக்களை காப்பாற்றுவதற்கும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதற்கும் என்றுதான் நாடுகள் மீது அவர்கள் கை வைப்பார்கள். தமிழ் மக்களுக்கு நாம் சுதந்திரம் பெற்றுக் கொடுத்தது வேறு நாட்டிற்கு அடிமையாகவோ அல்லது கேடயங்களாக வாழ்வதற்கோ அல்ல என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.

1233 கைதிகள் வெலிக்கடையில் வைத்து விடுதலை-

unp mel then makana sabai (1)66 சுதந்திர தினமான இன்று செவ்வாய்க்கிழமை பொரளை, வெலிக்கடை சிறைச்சாலையில் வைத்து 1233 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் 1194 ஆண்களும் 39 பெண்களும் அடங்குகின்றனர். நாடாளாவிய ரீதியிலுள்ள சிறைச்சாலைகளில் 36 சிறைச்சாலைகளிலிருந்தே இந்த கைதிகள் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்கள ஊடகப்பேச்சாளர் கே.பீ.குலதுங்க தெரிவித்துள்ளார்.

நிஷா- பிரித்தானிய அமைச்சர் சந்திப்பு-

unp mel then makana sabai (4)தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் நிஷா தேசாய் பிஸ்வால், பிரித்தானியாவின் வெளிநாட்டு மற்றும் பொதுநலவாய விடயங்களுக்கான இராஜங்க அமைச்சர் ஹியூகோ சுவையரை  லண்டனில் நேற்று சந்தித்து இலங்கை மனித உரிமை நிலைவரம் பற்றி பேசியுள்ளார்.

இலங்கையில் பல முக்கியஸ்தர்களுடன் பேசிய அவர் இலங்கையிலிருந்து புறப்படமுன்னர் ஊடகங்களை சந்தித்தபோது, இலங்கையில் நிலைமை திருப்தியில்லாத போதும் பொருளாதார தடைபற்றி அமெரிக்கா சிந்திக்கவில்லையெனவும் ஆயினும் இலங்கைக்கு எதிராக 3 ஆவது பிரேரணை கொண்டுவரப்படும் என்றும் கூறினார்.ஆயினும் சர்வதேச சமூகம் அதன் பொறுமையை இழந்துவருகின்றது என அவர் கூறியுள்ளார்.

யாழில் 9 கைதிகள் விடுதலை-

யாழ் சிறையில் இருக்கின்ற கைதிகளில் பெண் கைதியொருவர் உட்பட 9 கைதிகள் ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய 66 ஆவது சுதந்திர தினமான இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என்று யாழ்.சிறைச்சாலை அத்தியட்சகர் எச்.எம்.பெரேரா தெரிவித்துள்ளர். சிறு குற்றங்கள் புரிந்து தண்டப்பணம் செலுத்த முடியாமல் சிறையிலிருந்த கைதிகளே இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஊடகவியலாளர் மெல் கொலை தொடர்பில் பெயின்டருக்கு விளக்கமறியல்-

mel gunasekaraபத்தரமுல்லையில் வைத்து பெண் ஊடகவியலாளர் மெல் குணசேகர படுகொலைசெய்யப்பட்டமை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள தொம்பேயைச் சேர்ந்த சந்தேகநபரான ஜோசப் அன்டனி(வயது 29) என்னும் பெயின்டரை எதிர்வரும் 18 ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு கடுவலை பதில் நீதவான் கந்துருவானகே ஞானஸ்ரீ இன்று உத்தரவிட்டுள்ளார். வீட்டை உடைத்தல், களவெடுத்தல் மற்றும் படுகொலை ஆகிய குற்றங்களுக்கு கீழ் வழக்குத்தாக்கல் செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்திய மீனவர்கள் 30 பேர் கைது-

sri india mapயாழ். தீவுப்பகுதிக்கு அண்மித்த கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இந்திய மீனவர்கள் 30 பேரை காங்கேசன்துறை கடற்படையினர் திங்கட்கிழமை இரவு கைதுசெய்ததாக யாழ். மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறையின் கடற்றொழில் பரிசோதகர் பாலசுப்பிரமணியம் ரமேஸ்கண்ணா தெரிவித்தார்.

இராமேஸ்வரம், இராமநாதபுரம், தஞ்சை ஆகிய பகுதிகளிலிருந்து 08 படகுகளில் வந்ததாகக் கூறப்படும் மேற்படி இந்திய மீனவர்கள் 30 பேரையும் தற்போது யாழ். மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளதாகவும் அவர் கூறினார். இவர்களை இன்று செவ்வாய்க்கிழமை ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதவானின் வாசஸ்தலத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் அவர் கூறினார்.

இவ்வாறிருக்க, காங்கேசன்துறை கடற்பரப்பில் ஞாயிற்றுக்கிழமை கைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 19 பேரையும் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 13ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் ள்நீதிமன்ற நீதவான் எஸ்.லெனின்குமார் உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது. இவர்கள் ஜகதாப்பட்டிணப் பகுதியிலிருந்து 05 ரோலர் படகுகளில் வந்து காங்கேசன்துறை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டபோதே கைதுசெய்யப்பட்டனர்.

மீனவர் விவகாரம், பிரதமருக்கு தமிழக முதல்வர் மீண்டும் கடிதம்-

bஇலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளன 57 தமிழக மீனவர்களையும், அவர்களது 11 படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதம் எழுதியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தமிழக முதல்வர் ஜெயலலிதா செவ்வாய்க்கிழமை பிரதமருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், கடந்த ஜனவரி 1ஆம் திகதி தமிழகத்தைச் சேர்ந்த 19 மீனவர்களும், ஜனவரி 29 ஆம் திகதி 38 மீனவர்களும் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தமிழக – இலங்கை பிரதிநிதிகளுக்கு இடையே கைது விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில், இலங்கைகடற்படையினர், பேச்சுவார்த்தைக்கு இடையூறு செய்யும் வகையில் இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். எனவே, பிரதமர் மன்மோகன் சிங், விரைந்து நடவடிக்கை எடுத்து, இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக மீனவர்களின் வாழ்வாதாரமான மீன்பிடித் தொழிலை அவர்கள் அமைதியாக நடத்த வழி காண வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார் என்றும் அந்த செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஷிரால், மைத்திரிக்கு ஐதேகவில் இடமில்லை: நதீஷாவுக்கு இடமுண்டு-

unp mel then makana sabai (1)ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் மேல் மற்றும் தென் மாகாண சபை உறுப்பினர்களான ஷிரால் லக்திலக மற்றும் மைத்திரி குணரத்ன ஆகியோருக்கு இம்முறை வேட்பு மனு வழங்காதிருக்க ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க இதனை தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவ சபைத் தலைவர் கரு ஜயசூரிய தலைமையில் கூடிய வேட்புமனு குழு இத்தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் நடிகை நதீஷா ஹேமமாலிக்கு வேட்பு மனு வழங்க ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது.

வெளிநாட்டு தயாரிப்பு துப்பாக்கியுடன் ஒருவர் கைது-

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியை தன்வசம் வைத்திருந்த நபரொருவர் புத்தளம் வனாத்தவில்லு காட்டுப்புளியங்குளம் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார். வனாத்தவில்லு பொலிஸார் குறித்த சந்தேகநபரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து 17 ரவைகளும் மீட்கப்பட்டுள்ளன. சந்தேகநபரிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ராஜீவ் கொலையாளிகளுக்கு தூக்கு தண்டனையை குறைக்க கூடாது:மத்திய அரசு-

imagesCAOEKIGXமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குதண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேரின் சார்பில் உயர் நீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், கருணை மனு மீதான முடிவை உடனே எடுக்காமல் 11 ஆண்டு காலம் நிலுவையில் வைத்திருந்ததால் முருகன், சாந்தன், பேரறிவாளனின் மரண தண்டனையை இரத்து செய்ய வேண்டும் என்று கூறப்பட்டது. இதேவேளை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் இந்த மறுசீராய்வு மனு மீதான விசாரணையை நடத்தி வருகிறது. கடந்த 29-ஆம் திகதி முதல் கட்ட விசாரணை நடந்தது. முதலில் முருகன், சாந்தன், பேரறிவாளன் சார்பில் பிரபல வக்கீல் ராம்ஜெத்மலானி ஆஜராகி வாதாடினார். பிறகு 4-ஆம் திகதி மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவிடப்பட்டது. அதன்படி இன்று மத்திய அரசு வக்கீல் வாகனவாதி ஆஜராகி வாதாடினார். அபோது அவர் கூறியதாவது:-ராஜீவ் கொலையாளிகள் தாக்கல் செய்த கருணை மனு மீது முடிவு எடுப்பதில் கால தாமதம் ஏற்பட்டதை ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் அந்த தாமதத்துக்கு காரணம் உள்ளது. அதை விளக்க முடியாது. ராஜீவ் கொலையாளிகளின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்கக் கூடாது. கொலை குற்றவாளிகளின் கருணை மனு நிலுவையில் உள்ள காலத்தில் செய்யப்படும் சித்திரவதை, அனுதாபத்தை வைத்து எந்த முடிவுக்கும் வரக்கூடாது. வீரப்பன் கூட்டாளிகளுக்கு வழங்கப்பட்ட சலுகைக்கும், ராஜீவ் கொலையாளிகள் கேட்கும் சலுகைக்கும் வித்தியாசம் உள்ளது. தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்ற கோரும் ராஜீவ் கொலையாளிகளின் மறு சீராய்வு மனு தகுதியானது அல்ல. எனவே அந்த மறு சீராய்வு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும். ராஜீவ் கொலையாளிகளுக்கு கருணை காட்டுவதை மத்திய அரசு விரும்பவில்லை என்று வாதிட்டார். இதையடுத்து முருகன், பேரறிவாளன், சாந்தன் ஆகிய 3 பேர் சார்பில் வக்கீல் நிகில் சவுத்திரி ஆஜராகி வாதாடினார். அவர் 3 பேரின் கருணை மனு 11 ஆண்டுகள் தாமதம் செய்யப்பட்டுள்ளது. இந்த கால கட்டத்தில் 3 பேரும் நன்னடத்தையுடன் நடந்து கொண்டனர். எனவே 3 பேர் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இரண்டாம் கட்ட மீனவ பேச்சுவார்தை-

sri &indiaஇலங்கை இந்திய மீனவர்களுக்கு இடையிலான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை இலங்கையில் நடைபெறவுள்ளதாக தமிழக முதல்வர் கூறியுள்ளார். தமிழக சட்டசபையில் வைத்து அவர் இதனை தெரிவித்துள்ளார் ஏற்கனவே தமிழகத்தில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின்போது இரண்டு தரப்பினருக்கும் இடையில் இணக்கங்கள் ஏற்பட்டுள்ளன தமிழக மீனவர்கள், தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளை பயன்படுத்தாமல் இருத்தல் மற்றும் இழுவைப்படகுகளை பயன்படுத்தாமல் இருத்தல் போன்ற கட்டுப்பாடுகள் எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் 30 நாட்களுக்கு நடைமுறைக்கு வரவுள்ளன இந்த நிபந்தனைகளை மீறுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார் இந்நிலையில், இலங்கையில் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையில் தீர்க்கமான முடிவுகள் எடுக்கப்படும் என்று ஜெயலலிதா நம்பிக்கை வெளியிட்டுள்ளார் இதேவேளை, இலங்கையின் கடற்பரப்புக்குள் அத்துமீறி பிரவேசித்த குற்றச்சாட்டின் பேரில் 30 இந்திய மீனவர்கள் நேற்று நெடுந்தீவு கடற்பரப்பில் கைதுசெய்யப்பட்டதாக இலங்கை கடற்படையினர் அறிவித்துள்ளனர்.

மெல் குணசேகரவின் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது-

mel gunasekaraசுதந்திர ஊடகவியலாளர் மெல் குணசேகரவின் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். தொம்பே பகுதியைச் சேர்ந்த 39வயதான பெயின்டரே சந்தேகத்தின் பேரில் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் ஊடகவியலாளர் மெல் குணசேகரவின் வீட்டில் குறித்த சந்தேகநபர் புனரமைப்பு பணிகளில் ஈடுபட்டதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் வீட்டில் நேற்று கொள்ளையிட வந்தபோது, சந்தேகநபரை மெல் குணசேகர அடையாளம் கண்டுகொண்டதால், அவரை கூரிய ஆயுதத்தால் குத்திக்கொலை செய்துள்ளமை, முதற்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். கைதான சந்தேகநபரிடமிருந்து, மெல் குணசேகரவின் செல்போன் மீட்கப்பட்டுள்ளது. மிரிஹான பொலிஸ் விசேட குற்றப்புலனாய்வு பிரிவினரின் விசாரணைகளை அடுத்து, சந்தேகநபரை கைதுசெய்ய முடிந்தது என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மாகாண சபைத் தேர்தல்; 42 முறைப்பாடுகள் பதிவு-

unnamed3மேல் மற்றும் தென் மாகாண சபைத் தேர்தலுடன் தொடர்புடைய சட்ட மீறல்கள் தொடர்பில் 42 முறைப்பாடுகள் தேர்தல்கள் செயலகத்திற்கு கிடைத்துள்ளன. தேர்தல் நடவடிக்கைகளுக்காக அரசாங்கத்தின் வாகனங்கள் பயன்படுத்தப்பட்டமை தொடர்பில், 6 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக செயலகத்தின் தேர்தல் முறைப்பாடுகளை பொறுப்பேற்கும் பிரிவு தெரிவித்துள்ளது. அரச உத்தியோகத்தர்களை அரசியல் நடவடிக்கைகளுக்காக ஈடுபடுத்திய 3 சம்பவங்கள் மற்றும் சட்டவிரோத சுவரொட்டிகள் மற்றும் பதாதைகளை காட்சிப்படுத்திய 8 சம்பவங்கள் தொடர்பிலும் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும், மேல் மாகாணத்தில் அதிகளவிலான முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாகவும் தேர்தல்கள் செயலகம் கூறியுள்ளது.

விமானத்தில் குண்டு அச்சுறுத்தல் விடுத்த இலங்கையர் கைது-

untitledதன்னிடம் வெடிகுண்டு இருப்பதாக கூறியவாறு சுவீடன் சென்று கொண்டிருந்த விமானத்தின் விமானிகள் அறைக்குள் நுழைய முயன்ற இலங்கையர் என சந்தேகிக்கப்படும் ஒருவரை ஸ்ரொக்கோமிலுள்ள ‘ஆலண்ட’ விமான நிலையத்திலுள்ள பொலிஸார் கைது செய்துள்ளனர் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஞாயிறு பகல் டுபாயிலிருந்து ஆலண்ட விமான நிலையம் நோக்கி பயணித்த எமிரேட்ஸ் விமானத்தில் பயணித்த இந்தப் பயணி தன்னிடம் குண்டு இருப்பதாக சத்தமிட்டபடி விமானிகள் அறைக்குள் பாய முயற்சித்துள்ளார். விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்த சமயமே பயணிகள் பகுதியில் இருந்து விமானிகள் அறைக்குள் பாய முயற்சித்துள்ளார். இவரை விமானப்பணியாளர்கள் மடக்கிப்பிடித்துள்ளனர். வயர்களால் கைகள் கட்டப்பட்டு இவர் விமானத்தின் தரையில் கிடத்தப்பட்ட நிலையில் விமானம் மீகுதிப் பயணத்தை தொடர்ந்து முற்பகல் 11.00 மணிக்கு ஆலண்ட விமானநிலையத்தை சென்றடைந்தது. இவர் விமான நாசவேலை செய்ய முயன்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டார்.

உப்புவெளி பிரதேச சபை உறுப்பினர் கைது-

திருகோணமலை, உப்புவெளி பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் இன்று காலை கைது செய்யப்பட்டதாக உப்புவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஒருவரின்மீது தாக்குதல் நடத்தி, அவருடைய பணத்தை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பிலேயே குறித்த நபர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபரை இன்று நீதிமன்றில் ஆஜர்செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. காயமடைந்தவர் திருமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை உப்புவெளி பொலீசார் மேற்கொண்டுள்ளனர்.

பிரதேச சபை உறுப்பினர் தீ மூட்டி தற்கொலை-

imagesCAJSGE78கேகாலை, எட்டியாந்தோட்டை பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் தனது உடலில் தீ மூட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஐக்கிய மக்கள் சுகந்திரக் கூட்டமைப்பு உறுப்பினர் உபுல் சிசிரகுமார என்பவரே உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் புலத்கொஹூபிடிய, இஹலபெலெம்பிடிய பகுதியைச் சேர்ந்த 39 வயதானவராவார். தீயினால் படுகாயமடைந்த பிரதேசசபை உறுப்பினர் கரவனெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

தேர்தலுடன் தொடர்புடைய முறைப்பாடுகளை ஏற்கும் நடவடிக்கைகள் ஆரம்பம்-

4நடைபெறவுள்ள மேல் மற்றும் தென் மாகாண சபைத் தேர்தல்களுடன் தொடர்புடைய முறைப்பாடுகளை ஏற்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவிக்கின்றது. இந்த முறைப்பாடுகளை ஏற்பதற்காக கொழும்பு மற்றும் மாத்தறை ஆகிய பகுதிகளில் இரண்டு விசேட பிரிவுகள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் ஆணையாளர் கலாநிதி பிரதீபா மஹனாமஹேவா தெரிவித்துள்ளார். தேர்தல்களுடன் தொடர்புடைய முறைப்பாடுகளை 24 மணித்தியாலங்களும், 1996 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புக் கொண்டு அறிவிக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். முறைப்பாடுகளை அறிவிக்கும் பட்சத்தில், அதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்கு 24 மணித்தியாலங்களும் தமது அதிகாரிகள் தயாராகயிருப்பதாகவும் கூறியுள்ளார்.

அகதி சிறார்கள் குறித்து விசாரணை-

ausஅகதி அந்தஸ்து கோரும் சிறார்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் அவுஸ்திரேலிய மனிதவுரிமைகள் ஆணையகம் விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. சிறார்களின் நலன், சுகாதாரம் மற்றும் மேம்பாடு என்பன தொடர்பில் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என ஆணையகத்தின் தலைவர் கில்லியன் ரிக்ஸ் தெரிவித்துள்ளார். சுமார் ஆயிரத்திற்கும் அதிகமான சிறார்கள் தற்போது அவுஸ்திரேலிய குடிவரவு தடுப்பு முகாம்களில் உள்ளதாக மனிதவுரிமைகள் ஆணையகத்தின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்;றன. அவர்களின் 100க்கும் அதிகமானவர்கள் நவுருதீவில் கரையொர மையங்களில் உள்ளதுடன், மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளனர். தடுப்பு முகாம்களின் உள்ள சிறார்களின் சுதந்திரம் மறுக்கப்பட்டுள்ளதுடன், பலர் தமது அன்றாட வாழ்க்கை மேம்பாடுகளை அடைய முடியாத நிலையில் உள்ளனர். மிகவும் நெருக்கடியான சுற்றாடலில் சிறார்கள் வாழ்ந்து வருகின்றனர் என அவுஸ்திரேலிய மனிதவுரிமைகள் ஆணையகம் தனதறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

சகல பரீட்சை பெறுபேறுகளும் இணையத்தில் வெளியிடப்படுமென அறிவிப்பு-

untitled4பரீட்சைகள் திணைக்களத்தினால் நடத்தப்படுகின்ற சகல பரீட்சைகளின் பெறுபேறுகளையும் 5 ஆம் திகதி முதல் இணையத்தளம் மற்றும் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுகொள்ள முடியும் என இலங்கை தகவல் மற்றும் தொலைத்தொடர்பு நிறுவனத்தின் தலைவரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான பேராசிரியர் பி.டப்ளியு ஏபாசிங்க தெரிவித்துள்ளார். பரீட்சை திணைக்களத்தினால் வருடத்திற்கு 300க்கும் மேற்பட்ட பரீட்சைகள் நடத்தப்படுகின்றன. எனினும், இணையத்தளம் மற்றும் கையடக்க தொலைபேசியின் ஊடாக கல்விப்பொதுத் தராதர சாதாரணத் தர, உயர்தர மற்றும் 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் மட்டுமே வெளியிடப்படுகின்றன என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஒலுவில் கடலில் காணாமல் போனவர் சடலமாக மீட்பு-

அம்பாறை மாவட்டத்தின் ஒலுவில் முகத்துவாரக் கடலில் நீராடுவதற்காகச் சென்றபோது, கடல் அலையால் அள்ளுண்டு காணாமல் போன மருதமுனையைச் சேர்ந்த முஸ்தபா முகம்மது றிகாஸ்; (வயது 24) என்பவர் இன்று காலை பாலமுனை கடற்கரையிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடல் அலையை தடுப்பதற்காக போடப்பட்டுள்ள பாறாங் கற்களுக்கு மேலாக நீராடுவதற்காக நடந்து சென்றுகொண்டிருந்த 03பேர் நேற்றுமுன்தினம் கடல் அலையால் அள்ளுண்டனர். இந்நிலையில், கே.ரிபாத் (வயது 19), எச்.எம்.ருஸைக் (வயது 17) ஆகிய இருவரை காப்பாற்றி மீனவர்கள் வைத்தியசாலையில் அனுமதித்தனர். இருப்பினும், மற்றையவரை மீனவர்களினால் காப்பாற்ற முடியாமல் போன நிலையில் இவரைத் தேடும் பணிகளை கடந்த 02 நாட்களாக மீனவர்களும் கடற்படையினரும் முன்னெடுத்த நிலையில் இவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

ஜே.வி.பி.யின் புதிய தலைவராக அனுரகுமார திஸாநாயக்க தெரிவு-

jvp_anurakumara_001ஜே.வி.பி.யின் புதிய தலைவராக அனுரகுமார திஸாநாயக்க தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஜே.வி.பி.யின் வருடாந்த மாநாடு இன்றையதினம் காலை 10.00 மணிக்கு கொழும்பு சுகததாச உள்ளரங்கில் ஆரம்பமாகி நடைபெற்றது. இந்த மாநாட்டில் ஜே.வி.பி.யின் கொள்கைப் பிரகடனமும் வெளியிடப்பட்டதோடு ஜே.வி.பி.யின் (மக்கள் விடுதலை முன்னணி) புதிய தலைவராக அனுரகுமார திஸாநாயக்க தெரிவு செய்யப்பட்டுள்ளார். கட்சியின் தலைமைத்துவ பதவிக்காக அநுரகுமார திஸாநாயக்க விஜித ஹேரத் கே.டி. லால்காந்த மற்றும் பிமல் ரத்நாயக்க ஆகியோரின் பெயர்கள் முன்மொழியப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

புல்மோட்டை மீனவர்களின் உண்ணாவிரதம் கைவிடப்பட்டது-

Pulmottai_CIதிருகோணமலை புல்மோட்டை மீனவர்களால் கடந்த ஐந்து நாட்களாக முன்னெடுக்கப்பட்ட உண்ணாவிரத போராட்டம் இன்றுபகல் கைவிடப்பட்டுள்ளது. உண்ணாவிரதம் முன்னெடுக்கப்பட்ட இடத்திற்கு, அமைச்சர் ரிஷாட் பதியூதீன் சென்று வழங்கிய வாக்குறுதிகளை அடுத்து, உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டதாக புல்மோட்டை மீனவர் சங்கங்களின் தலைவர் குறிப்பிட்டுள்ளார். அமைச்சரின் வாக்குறுதிகளுக்கு அமைய, தங்களின் உண்ணாவிரத கோரிக்கைகள் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார். இதேவேளை, உண்ணவிரதத்தில் ஈடுபட்டவர்களில் சுகவீனமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 07 மீனவர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சிரேஷ்ட பெண் ஊடகவியலாளர் பத்தரமுல்லையில் படுகொலை-

journalistசிரேஷ்ட வர்த்தக ஊடகவியலாளர் மெல் குணசேகரவின் (வயது 46) சடலம் பத்தரமுல்லை கெமுனு மாவத்தையிலுள்ள அவரது வீட்டிலிருந்து இன்றுமுற்பகல் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவர் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாகவும், அவரது பெற்றோர் தேவாலயத்திற்கு சென்றிருந்த வேளையிலேயே அவர் குத்திக்கொலை செய்யப்பட்டிருப்பதாகவும் பொலீசார் கூறியுள்ளனர். திருமணமாகாத இவரது சடலம் வீட்டின் சமையலறையிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. கொலை இடம்பெற்ற நேரத்தில் வீட்டிலிருந்த நாய் குரைக்காமையால் அந்த வீட்டுக்கு பழக்கமுள்ள ஒருவரே வந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர். இவர், பிச் ரேட்டிங் வர்த்தக நிறுவனத்தில் இறுதியாக கடைமாற்றியுள்ளார். ஏ.எப்.பி செய்தி சேவையின் முன்னாள் ஊடகவியலாளரான இவர் சண்டே டைம்ஸ் பத்திரிக்கையின் ஊடகவியலாளராக பணியாற்றியிருந்தார். இவரது கொலை தொடர்பிலான விசாரணைக்கு கொழும்பு பிரதி பொலிஸ் மா அதிபர் சுமித் எதிரிசிங்கவின் உத்தரவின் பேரில் ஆறு விசேட குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மன்னார் மனித புதைகுழி அகழ்வு பணிகள் இடைநிறுத்தம்-

mannar puthaikuli (1)மன்னார், திருக்கேதீஸ்வரம் கோவிலில் இடம்பெறவிருக்கின்ற சிவராத்திரியை முன்னிட்டு மன்னார் மனித புதைகுழியை தோண்டும் பணிகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு இரகசிய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். மன்னார், திருக்கேதீஸ்வரம் கிராமஅலுவலர் பிரிவுக்குட்பட்ட மாந்தைச் சந்தியிலிருந்து திருக்கேதீஸ்வரத்திற்குச் செல்லும் பிரதான வீதியிலிருந்து 75 மீற்றர் தூரத்தில் குடிநீர் விநியோக திட்டப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. அப்பணியில் ஈடுபட்டவர்கள் குடிநீர் குழாய் பொருத்துவதற்காக கடந்த டிசெம்பர் 20ஆம் திகதி மாலை குழி தோண்டியபோது மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. அன்றிலிருந்து கடந்த வெள்ளி வரையும் 55 எலும்பு கூடுகள் மீட்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

நேபாள இராணுவத் தளபதி யாழ்ப்பாணத்திற்கு விஜயம்-

nepalஉத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள நேபாள இராணுவத் தளபதி ஜங்பஹதூர்ரணா இன்று யாழ்ப்பாணத்திற்கு சென்றுள்ளார். யாழ். சென்றுள்ள அவர் யாழ். மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி உதய பெரேராவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பினை அடுத்து நல்லூர் கந்தசுவாமி கோயிலில் இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளிலும் அவர் கலந்துகொண்டுள்ளார். அத்துடன் யாழ். கோட்டை மற்றும் யாழ். பொது நூலகம் ஆகியவற்றிற்கும் நேபாள இராணுவ தளபதி விஜயம் செய்துள்ளார். இந்த விஜயத்தில் அவரின் பாரியார் ரோகினி ரணாவும் கலந்துகொண்டிருந்தார்.

யாழ்ப்பாணத்தில் 19 இந்திய மீனவர்கள் கைது-

see3யாழ். காங்கேசன்துறை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்ததாகக் கூறப்படும் இந்திய மீனவர்கள் 19 பேரை இன்று அதிகாலை கைதுசெய்ததாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். இந்தியா ஜகதாப்பட்டிணம் பகுதியிலிருந்து 05 ரோலர் படகுகளில் வந்த இந்திய மீனவர்கள் 19பேரை கைதுசெய்த காங்கேசன்துறை கடற்படையினர், யாழ். கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை அதிகாரிகளிடம் இவர்களை ஒப்படைக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். விசாரணைகள் தொடர்கின்றன.

மாணவனின் மரணத்துக்கு அரசாங்கமே பொறுப்பு: ஆசிரியர் சங்கம்-

ceylonகண்டி, கன்னொருவ இராணுவ முகாமில் தலைமைத்துவ பயிற்சி பெறும்போது உபாதைக்குள்ளாகி உயிரிழந்த பல்கலைக்கழக மாணவரின் மரணத்திற்கு அரசாங்கமே பொறுப்பு கூற வேண்டுமென இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. யாழ் பல்கலைக்கழகத்திற்கு தெரிவான லஹிரு சந்தருவான் என்ற மாணவர் கடந்த 28ஆம் திகதி கண்டி, கன்னொருவ இராணுவ முகாமில் தலைமைத்துவ பயிற்சி பெற்றுக் கொண்டிருந்தபோது வயிற்றில் உபாதை ஏற்பட்டு கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவருக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டபோது அவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள இலங்கை ஆசிரியர் ஒன்றியத்தின் செயலாளர் மஹிந்த ஜயசிங்க, குறித்த மாணவரின் மரணத்திற்கு அரசாங்கமே காரணம் எனவும் தெரிவித்துள்ளார். உடற் பயிற்சிகளில் ஈடுபடுவதற்கு முன்னதாக பாடசாலை மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட வேண்டுமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மன்னார் புதைகுழி விடயமாக பக்க சார்பற்ற விசாரணை கோரி ஆர்ப்பாட்டம்-

மன்னார் திருகேதீஸ்வரம் புதைகுழியில் மீட்கப்பட்ட 55 எலும்புக்கூடுகள் தொடர்பாக பக்கச்சார்பற்ற விசாரணைகள் நடத்த வேண்டுமெனக்கோரி இவ்வாரம் மன்னாரில் மாபெரும் ஆர்பாட்டமொன்று நடத்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாக வன்னி மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பி. செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். மன்னார் மாவட்ட சிவில் அமைப்புக்களுடன் நாளை பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் இதற்கான திகதி அறிவிக்கப்படுமெனவும் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கூறியுள்ளார்.

சிதம்பரபுரம் மக்களுக்கு காணிகள் வழங்க ஏற்பாடு-

வவுனியா சிதம்பரபுரம் நலன்புரி நிலைய மக்களுக்கு அதேயிடத்தில் காணி வழங்குவதற்கு தொடர்புடைய அதிகாரிகளுடன் கலந்துரையாடி முடிவு எடுக்கப்படும் என வட மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். கடந்த 30ஆம் திகதி வவுனியா சிதம்பரபுரம் நலன்புரி முகாமுக்கு சென்ற அமைச்சர் மக்களின் நிலைமைகளை நேரடியாகப் பார்வையிட்டு அவர்களுடன் கலந்துரையாடியபோதே இதனைத் தெரிவித்துள்ளார். கடந்த 32 வருடங்களாகக் குறித்த நலன்புரி முகாமில் தற்காலிக வீடுகளை அமைத்து வாழ்ந்து வரும் 180 குடும்பங்களை அங்கிருந்து வேறு இடத்துக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது தொடர்பாக தகவல் அறிந்த மக்கள் வடமாகாண சுகாதார அமைச்சருக்கு இது தொடர்பாக தெரியப்படுத்தியதை அடுத்தே குறித்த மக்களுடன் அமைச்சர் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இம்மக்களை அவர்களின் விருப்பத்துக்கு மாறாக வேறு இடங்களில் குடியமர்த்த முடியாது. உள்ளக இடம் பெயர்ந்தோருக்கும் இந்தியாவில் இருந்து மீளத் திரும்பிய வர்களுக்கும் என இந்த இடைத்தங்கல் முகாம் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் தங்கியுள்ள 180 குடும்பங்கள் அடிப்படை வசதிகளின்றி வாழ்ந்து வரும் நிலையில் வேறு இடங்களில் குடியமர்த்துவது இவர்களின் வாழ்வாதார நடவடிக்கைகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே இது தொடர்பில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் துறைசார்ந்த அதிகாரிகளுடன் கலந்துரையாடி முடிவெடுக்கப்படும் என அவர் மேலும் கூறியுள்ளார்.

விபத்தில் பொலிஸ் உத்தியோகஸ்தர் உயிரிழப்பு-

யாழ். தீவகம் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்திலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்று கொண்டிருந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் விபத்தில் சிக்கியதில் உயிரிழந்துள்ளார். யாழ். அளவெட்டியைச் சேர்ந்த 24 வயதுடைய குகராஜ் பிரசன்னா என்ற தமிழ் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஊர்காவற்துறையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்று கொண்டிருந்த போது நாரந்தனை வடக்குப் பகுதியில் அவர் செலுத்திச் சென்ற மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்துடன் மோதியதால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இது தொடர்பிலான விசாரணைகளை பொலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

காணாமல் போனோரின் உறவினர்களுக்கு ஆதரவளிப்பேன்-நிஷா தேசாய் பிஸ்வால்-

Pisvalகாணாமல் போனோர் தொடர்பான விசாரணைகளை உரிய முறையில் மேற்கொள்ளுமாறு இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கவுள்ள அதேவேளை, காணாமல் போனோரின் உறவினர்களுக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக தெற்கு மற்றும் மத்திய ஆசிய பிராந்திய விவகாரங்களுக்கான அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உதவிச் செயலாளர் நிஷா தேசாய் பிஸ்வால் உறுதியளித்ததாக வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். நிஷா தேசாய் பிஸ்வாலும் அனந்தி சசிதரனும் யாழ். கிறின் கிறாஸ் விருந்தினர் விடுதியில் நேற்று சந்தித்து கலந்துரையாடியிருந்தனர். இதன்போதே நிஷா தேசாய் பிஸ்வால் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இந்தச் சந்திப்பு தொடர்பில் அனந்தி சசிதரன் மேலும் தெரிவிக்கையில், 2009ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின்போது காணாமல் போனோர்கள் மற்றும் கடத்தப்பட்டவர்கள், இராணுவத்தினரிடம் சரணடைந்தோர், Read more

வாழ்வகத் தலைவர் திரு ஆ ரவீந்திரன் அவர்கள் சமாதான நீதவான் பட்டம் பெற்றார்

IMG_6363IMG_6397IMG_6401IMG_6387IMG_6447IMG_6482IMG_6426IMG_6478யாழ்ப்பாணம் வாழ்வகத் தலைவர் திரு ஆ ரவீந்திரன் அவர்கள் சமாதான நீதவான் பட்டம் பெற்றமையை பாராட்டி கௌரவிக்கும் வகையில் சிறப்பு நிகழ்வொன்று கடந்த 26.01.2014 அன்று நடைபெற்றது. இவர் இப் பட்டத்தினைப் பெற்ற தமிழ் பேசும் விழிப்புலன் அற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

அன்புடன் ,ஆ.ரவீந்திரன்

தலைவர் , வாழ்வகம்

 

தொலைபேசி 0212240146