Header image alt text

ஊர்காவற்றுறையில் தேசிய சுகாதார வாரம் – 2014

தேசிய சுகாதார வாரத்தின் இரண்டாம் நாளான இன்று ஜே-49 (ஊர்காவற்றுறை) கிராம அலுவலர் பிரிவில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், ஜே-49 கிராம அலுவலர், பொது சுகாதார உத்தியோகத்தர், ஊர்காவற்றுறை பொலிஸ் உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் ஆகியோர் பங்கு பற்றினார்கள். இதன்போது பிரதேச சுற்றுப்புறச் சூழல் பற்றி உத்தியோகத்தர்களால் விழிப்புணர்வு நடவடிக்கை பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

ஊர்காவற்துறை ஆயர்வேத பாதுகாப்பு சபையினரின் நிகழ்வு-

orrkaavatturai (4)யாழ். ஊர்காவற்றுறை ஆயுர்வேத பாதுகாப்பு சபையினரால் ஊர்காவற்றுறை ஜே-49 கிராம அலுவலர் பிரிவிலுள்ள புனித மரியாள் பெண்கள் பாடசாலையில் 250 மாணவிகளுக்கு நேற்று (11.03.2014) இலைக்கஞ்சி உணவு வழங்கப்பட்டது. இந் நிகழ்வு ஆயுர்வேத பாதுகாப்பு சபையின் தலைவரும் கிராம உத்தியோகத்தருமான தே.பாலச்சந்திரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வின்போது மாணவிகளுக்கு இலைக்கஞ்சி வழங்கப்பட்டது. இந் நிகழ்வில் பாடசலை அதிபரும் கலந்துகொண்டு மாணவர்களுக்கு இலைக்கஞசியை வழங்கி வைத்தார்.

ஜனநாயக நெறிமுறைகளை பின்பற்றியிருந்தால் ஜெனிவாவில் தப்பித்திருக்கலாம்-சந்திரிகா-

chandrikaநாட்டில் இருக்கின்ற மதஸ்தலங்களை பாதுகாக்கவேண்டும் என்பதுடன் ஜனநாயகத்திற்கான நெறிமுறைகளை பின்பற்றியிருந்தால் ஜெனீவாவில் இலங்கை தானாகவே பாதுகாக்கப்பட்டிருக்கும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவருமான ரணில் விக்ரமசிங்க தலைமையிலான குழுவினருக்கும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையிலான குழுவினருக்கும் இடையில் எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்றையதினம் நடைபெற்ற சந்திப்பின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இந்த சந்திப்பின்போது அங்கு குழுமியிருந்த ஊடகவியலாளர்கள் ஜெனீவாவில், இலங்கையை காப்பாற்றுவதற்கு ஏதாவது நடவடிக்கை எடுப்பீர்களா என வினவினர். அதற்கு பதிலளித்த சந்திரிக்கா குமாரதுங்க, நாட்டு மக்களும், அரசாங்கமும் இலங்கையும் ஜனநாயக நெறிமுறைகளை பின்பற்றியிருந்தால் இலங்கை தானாகவே ஜெனீவாவில் பாதுகாக்கப்பட்டிருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

சொந்த இடத்தில் மீளக்குடியமர்த்துமாறு கோரிக்கை-

meelkudiyetramபோரினால் இடம்பெயர்ந்து அல்லற்படும் பெண்களை அவர்களது சொந்த இடங்களில் குடியமர்த்துவதுடன் அவர்களுக்கான வாழ்வாதார உதவிகளையும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் நடைபெற்ற மகளிர் தின நிகழ்வின்போது கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. யாழ்.மாவட்ட மகளிர் அபிவிருத்தி நிலையத்தின் ஏற்பாட்டில், முல்லைத்தீவு மாவட்டத்தில் சர்வதேச மகளிர் தினம் கடந்த 8ஆம் திகதி புதுக்குடியிருப்பு பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்றது. மகளிர் அபிவிருத்தி நிலையப் பணிப்பாளர் திருமதி சரோஜா சிவச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்விலேயே மேற்படி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புதுக்குடியிருப்பு பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தரிடம் இது தொடர்பான மனு ஒன்றும் கையளிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் சட்ட மீறல் குறித்து 665 முறைப்பாடுகள் பதிவு-

elections_secretariat_68மேல் மற்றும் தென் மாகாணசபை தேர்தல் நடவடிக்கையின்போது தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 665 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. சட்டவிரோதமான முறையில் கூட்டம் கூடல், பேரணி மற்றம் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டமை குறித்து அதிகளவான முறைப்பாடுகளாக 183 கிடைக்கப்பெற்றுள்ளதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. சட்டவிரோதமான முறையில் பாதாதைகளை காட்சிப்படுத்தல் குறித்து 148 முறைப்பாடுகள் பதியப்பட்டுள்ளன. தேர்தல் இடம்பெறவுள்ள மாவட்டங்களில் கொழும்பு மாவட்டத்தில் அதிகளவான முறைப்பாடுகளாக 189 பதிவு செய்யப்பட்டுள்ளன. களுத்துறை மாவட்டத்தில் 91 முறைப்பாடுகளும் கம்பஹாவில் 78 முறைப்பாடுகளும் மாத்தறை மாவட்டத்தில் 113 முறைப்பாடுகளும் காலியில் 72 முறைப்பாடுகளும் ஹம்பாந்தோட்டையில் 71 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளதாக தேர்தல் செயலகம் சுட்டிக்காட்டியுள்ளது.

துரிதகதியில் தொழில்நுட்ப பல்கலைக்கழக நிர்மாணம்-

tholilnudpa kallooriயாழ்ப்பாண உயர் தொழில்நுட்ப பல்கலைக்கழக கல்லூரியின் நிர்மாணப்பணி தற்போது துரித கதியில் நடைபெற்றுவருகின்றது. நீர்ப்பாசனத்துறை பொறியியல் சேவைகள் வீடமைப்பு மற்றும் பொதுவசதிகள் அமைச்சு,இளைஞர் அலுவல்கள் மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சு மற்றும் இலங்கை அரச பொறியியற் கூட்டுத்தாபனம் ஆகியவற்றின் அனுசரணையுடன் இந்த பல்கலைக்கழகம் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது. இலங்கையின் கல்விமுறையை தொழில்நுட்பவியல் புரட்சிக்கு இட்டுச் செல்லும் தொலைநோக்கிலே குறித்த தொழில்நுட்ப பல்கலைக்கழகம் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

மத நல்லிணக்கத்தை ஏற்படுத்த ஜனாதிபதியுடன் சந்திரிகா சந்திப்பு-

untitledநாட்டில் மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முயற்சிக்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை விரைவில் சந்திக்கவுள்ளேன் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். தெற்காசிய கொள்கை மற்றும் ஆய்வு நிறுவகத்தின் பொறுப்பாளராக சந்திரிகா கடமையாற்றி வருகின்றார். மத நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது தொடர்பிலான நிறுவனத்தின் கொள்கைகளை வெளிப்படுத்தும் நோக்கில் இச் சந்திப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பிரதான கட்சிகளின் தலைவர்களைச் சந்தித்தும் பேச்சு நடத்தப்படும் என சந்திரிகா தெரிவித்துள்ளார். மூன்று மஹாநாயக்க தேரர்களின் பிரதிநிதிகளையும் சந்திக்கத் திட்டமிட்டுள்ளேன். இந்து, கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய மதத் தலைவர்களின் பிரதிநிதிகளுடனும் சந்திப்பு நடத்தவுள்ளேன் என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய மீனவர்களின் அத்துமீறல் குறித்து கவனம்-அமைச்சர் ராஜித-

unnamed2சென்னையில் இடம்பெற்ற இலங்கை இந்திய மீனவர்கள் பேச்சில் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட இணக்கப்பாடு, இந்திய மீனவர்களால் தொடர்ச்சியாக மீறப்பட்டு வருகிறது என கடற்றொழில் அமைச்சு குற்றஞ்சாட்டியுள்ளது. இதுவரை இவ்வாறான 8 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இணக்கப்பாட்டை மீறும் வகையில், மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 172 இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்பில் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என கடற்றொழில் அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை, இலங்கை இந்திய மீனவர்களின் அடுத்த கட்டப் பேச்சு நாளை கொழும்பில் ஆரம்பமாகவுள்ளது. இந்தப் பேச்சில் இரண்டு நாடுகளினதும் மீன்பிடி சங்கங்களின் பிரதிநிதிகள் 17 பேரும், 8 அதிகாரிகளும் கலந்துகொள்ளவுள்ளனர். இந்தக் கலந்துரையாடலில் இந்திய மீனவர்கள் தொடர்ச்சியாக இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுகின்றமை தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்படவுள்ளது என்று கடற்றொழில் அமைச்சர் ராஜித சேனாரத்ன மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மனித புதைகுழி; எச்சங்களை இரசாயன பகுப்பாய்விற்கு அனுப்ப உத்தரவு-

fமன்னார் மனித புதைகுழியில் மீட்கப்பட்ட மனித எச்சங்கள் உள்ளிட்ட தடயப் பொருட்களை இரசாயன பகுப்பாய்விற்கு அனுப்புமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் மனித புதைகுழி தொடர்பான விசாரணைகள் நேற்று இடம்பெற்றதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். நீதிமன்ற உத்தரவிற்கமைய, வெகு விரைவில் மனித எச்சங்களை இரசாயன பகுப்பாய்விற்கு அனுப்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார். மேற்படி புதைகுழியில் கட்டம் கட்டமாக 32 நாட்கள் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணிகளில் 80 மனித மண்டை ஓடுகள் உள்ளிட்ட மனித எச்சங்கள் மீட்கப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகளின் இந்திய விஜயம்-

tnaதமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகள் இந்த வாரம் இந்தியாவுக்கான விஜயத்தை மேற்கொள்வார்கள் என்று அதன் பொது செயலாளர் மாவை சேனாதிராஜா ஊடகத்திற்கு தெரிவித்துள்ளார். இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரும் பிரேரணை தொடர்பில் இந்திய அரச தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஏற்கனவே தீர்மானித்திருந்தது. இதனடிப்படையில் இந்த வாரம் தமது உறுப்பினர்கள் இந்தியாவுக்கு விஜயம் செய்வார்கள் என்று தாம் எதிர்பார்ப்பதாக கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா ஊடகத்திற்கு கூறியுள்ளார்.

எல்எல்ஆர்சி நடைமுறைப்படுத்த வேண்டும் – ரணில்

ranil01தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையினை நடைமுறைப்படுத்த வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன் சர்வதேசத்திற்கு முகங்கொடுக்க எல்எல்ஆர்சி அறிக்கையினை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பு வெள்ளவத்தை பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு கூறியுள்ளார்.

35 நாட்களில் 682 முறைப்பாடுகள் பதிவு-கபே-

cafeமேல் மற்றும் தென் மாகாண சபைகளுக்கான தேர்தல் தினம் அறிவிக்கப்பட்ட திகதியிலிருந்து நேற்று வரையிலும் தமக்கு மொத்தமாக 682 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன என சுதந்திரமானதும் நீதியானதும் தேர்தலுக்கான மக்கள் இயக்கமான கபே அறிவித்துள்ளது இவற்றில் அரச சொத்துக்களை துஷ்பிரயோகம் தொடர்பில் 273 முறைப்பாடுகளும் சட்டவிரோதமான தேர்தல் பிரசார நடவடிக்கை தொடர்பில் 354 முறைப்பாடுகளும் மேலும் வன்செயல்கள் தொடர்பிலும் 29 முறைப்பாடுகளும் இதர சம்பவங்கள் தொடர்பில் 26 முறைப்பாடுகளும் இதுவரையும் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் கபே குறிப்பிட்டுள்ளது. இந்த முறைப்பாடுகளில் 400 முறைப்பாடுகள் மேல் மாகாணத்திலிருந்தும் 266 முறைப்பாடுகள் தென்மாகாணத்திலிருந்தும் கிடைத்துள்ளன. இதேவேளை இரண்டு மாகாணங்களுக்கும் பொதுவாக 16 முறைப்பாடுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும் அவ்வமைப்பு கூறியுள்ளது.

போர்க்குற்ற விசாரணைக்கு நியூசிலாந்து கிறீன் கட்சி ஆதரவு-

இலங்கைமீது சர்வதேச போர்க்குற்ற விசாரணை நடத்த நியூசிலாந்து பூரண ஆதரவளிக்க வேண்டும் என அந்நாட்டு கிறீன் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. நியூசிலாந்து கிறீன் கட்சியின் பேச்சாளர் ஜேன் லோகீ இக் கோரிக்கையை விடுத்துள்ளார். அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இலங்கைக்கு எதிராக ஜெனீவாவில் முன்வைத்துள்ள பிரேரணைக்கு நியூசிலாந்து ஒத்துழைப்பு வழங்க வேண்டியது அவசியம் எனவும், இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை மோசமாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கைமீது போர்க்குற்ற விசாரணை நடத்த ஜெனீவாவில் வலியுறுத்தப்படும் எனவும் கிறீன் கட்சி தெரிவித்துள்ளது. இலங்கையின் உள்ளக விசாரணையில் நம்பிக்கை வைக்க முடியாது என ஜேன் லோகீ கூறியுள்ளார். யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி பெற்றுக் கொடுக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

யுத்தம் தொடர்பில் வவுனியாவில் கண்காட்சி-

யுத்தத்தின் தாக்கமும் அதன் பின்னரான காலமும் என்னும் தொனிப்பொருளில் சி.ஆர்.சி. நிறுவனத்தின் ஏற்பாட்டில் புகைப்பட கண்காட்சி இன்று வவுனியாவில் இடம்பெற்றது. வவுனியா நகரசபை மண்டபத்தில் ஆரம்பமான இக் கண்காட்சி இன்றும் நாளையும் இடம்பெறுகின்றது. வடபகுதியில் யுத்த காலங்களில் இடம்பெற்ற மனித படுகொலைகள், வெடிப்பு சம்பவங்கள், புலிகள் பயன்படுத்திய ஆயுதங்கள், மக்களின் அவலநிலை தொடர்பாக எடுக்கப்பட்ட புகைப்படங்களின் தொகுப்பும் அதன் பின்னர் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி பணிகள் தொடர்பாகவும் எடுக்கப்பட்ட புகைப்படங்களின் தொகுப்பாக இக் கண்காட்சி வவுனியா நகரசபை மண்டபத்தில் இடம்பெற்று வருகின்றது. வடமாகாண ஆளுனர் சந்திரசிறியினால் அரம்பித்து வைக்கப்பட்ட இக் கண்காட்சியை வவுனியா பாடசாலை மாணவர்கள் பார்வையிடுகின்றனர்.

இலங்கை நிலை குறித்து கனடா கவலை-

பொதுநலவாய நாடுகளின் தவிசாளராக உள்ள இலங்கையின் நிலை கண்டு கவலை கொள்வதாக கனேடிய பிரதமர் ஸ்டிபன் ஹாப்பர் தெரிவித்துள்ளார். நேற்று கொண்டாடப்பட்ட பொதுநலவாய தினத்தை முன்னிட்டு விடுத்துள்ள செய்தியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 21ஆம் நூற்றாண்டில் பொதுநலவாய அமைப்பின் தவிசாளர் பதவி இலங்கைக்கு வழங்கப்பட்டமை பொதுநலவாய நாடுகளின் நம்பகத்தன்மையின் பெறுமதிக்கு பாதிப்பு ஏற்படலாம் எனவும், இலங்கை மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் எனவும் கனேடிய பிரதமர் ஸ்டிபன் ஹாப்பர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மீனவர் பேச்சுவார்த்தை தீர்மானம் எட்டப்படவில்லை.

இந்திய இலங்கை மீனவர்கள் பிரச்சினை தொடர்பில் எதிர்வரும் 13ஆம் திகதி கொழும்பில் இடம்பெறவுள்ள பேச்சுவார்த்தையில் பங்குபற்றவுள்ளவர்கள் மற்றும் அதன்போது பேசப்படவுள்ள விடயங்கள் தொடர்பில் இதுவரை அரசாங்கம் எந்த தீர்மானமும் எடுக்கவில்லையென குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அந்த இயக்கத்தின் வடக்கு, கிழக்கு மீனவ இணைப்பாளர் அந்தோனி ஜேசுதாஸ் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் கடந்த ஜனவரி 12ஆம் திகதி சென்னையில் இடம்பெற்ற பேச்சு வார்த்தையில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி கலந்து கொண்டவர்கள் மீன்பிடி அமைச்சரின் சார்பானவர்களே என அன்தோனி ஜேசுதாஸ் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மதங்களுக்கிடையிலான நல்லிக்கத்தை ஏற்படுத்தும் அமைப்பு-

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரணதுங்க மற்றும் எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று முற்பகல் இடம்பெற்றுள்ளது. முன்னாள் ஜனாதிபதியின் தலைமையில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள தெற்காசிய கொள்கை மற்றும் ஆய்வு நிறுவனத்தினால் கண்காணிப்பு செயற்றிட்டம் ஆரம்பிக்கப்பட்டது. அதனையடுத்தே இந்த கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளது. இலங்கையில் பிரதான மதங்ககிடையே நல்லிணக்கத்தை ஏற்டுத்தும் முகமாக இந்த செயற்றி;ட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. எதிர்காலத்தில் அரச தரப்பினருடனும் இது தொடர்பில் கலந்துரையாடவுள்ளதாக சந்திப்பின் போது முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா கூறியுள்ளார்.

போலிக்கடவுச் சீட்டுகளுடன் பயணித்த இருவர் கைது-

போலி இந்திய கடவுச் சீட்டுகளை பயன்படுத்தி பூனேயிலிருந்து டுபாய் நோக்கி பயணிக்க முயன்ற இலங்கை பிரஜைகள் இருவர் நேற்று இந்திய பொலீசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை. கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் இரண்டு வியட்னாம் பிரஜைகள் பூனே காவல்துறையினரை ஏமாற்றிய சார்ஜா நோக்கி பயணித்துள்ளனர். அவர்கள் தரையிறங்கிய பின்னர் கைதுசெய்யப்பட்டு மீண்டும் பூனேக்கு திருப்பியனுப்பப்பட்டுள்ளனர். நேற்று கைது செய்யப்பட்ட இரண்டு இலங்கையர்களும் கடந்த பல வருடங்களாக சென்னையில் வசித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாற்றுப் பெயர்களில் பயணித்த அவர்களின் கடவுச் சீட்டுகள் 2016ஆம் ஆண்டு தொடக்கம் 2022ஆம் ஆண்டுவரை செல்லுபடியானவை என கூறப்படுகிறது.

தூக்கிலிடும் பணிக்கு துரித விண்ணப்பம்-

மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளை தூக்கிட்டு கொல்பவர் பதவிக்கான வி;ண்ணப்பங்களை மீளவும் துரிதமாக கோரவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் சந்திரரத்ன பல்லேகம இந்த தகவலை வெளியிட்டுள்ளார். அண்மையில் அளுகோசு பதவிக்காக நியமிக்கப்பட்டவர் தமது பணியை நிறைவேற்ற முடியாது என தெரிவித்து எழுத்து மூலம் அறிவித்து விட்டு விலகியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அவர் அனுராதபுரம் நொச்சியாக பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.

இலங்கை இனப்படுகொலைக்கு இந்திய கடற்படையும் ஒரு காரணம் – யஷ்வந்த் சின்

இலங்கையில் நடைபெற்ற இனப் படுகொலைக்கு உறுதுணையாக இருந்த காங்கிரஸ் கட்சியினை பாராளுமன்றத் தேர்தலில் வாக்காளர்கள் புறக்கணிக்க வேண்டும் என யஷ்வந்த் சின்கா கூறியுள்ளார். சென்னை எழும்பூரில், மனித உரிமைகள் குறித்த கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது. அதில், முன்னாள் மத்திய அமைச்சரும், பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவருமான யஷ்வந்த சின்கா, அக்கட்சியின் மாநிலத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன், மூத்த தலைவர் இல.கணேசன், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, காந்திய மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் தமிழருவி மணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் யஷ்வந்த் சின்கா பேசும்போது, இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலை, மனித உரிமை மீறல்களுக்கு துணை நின்றது Read more

கல்முனை தமிழ் மக்கள் ஆதரவு பேரணி

kalmumani (2)ஐ. நா. மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக பிரேரணையொன்று முன்வைக்கப்பட்டுள்ள இவ்வேளையில், கிழக்கு மாகாணத்திலுள்ள கல்முனை நகரில் நேற்று ஞாயிறன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷவிற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தமிழ் மக்கள் கலந்துகொண்ட பேரணியொன்று நடைபெற்றுள்ளது. கல்முனை வடக்கு (தமிழ் பிரிவு) பிரதேச செயலகத்தை தரம் உயர்த்துதல் உட்பட அந்த பிரதேச தமிழ் மக்களின் கோரிக்கைகளை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுசெல்லும் வகையில் கல்முனை தமிழ் சிவில் சமூகத்தினால் இந்த பேரணிக்கான அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஐ. நா. மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக பிரேரணையொன்று முன்வைக்கப்பட்டுள்ள தற்போதைய சூழ்நிலையில் இந்த பேரணியில் தமிழ் மக்கள் கலந்துகொள்வதை தவிர்த்துக் கொள்ளுமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பினால் வேண்டுகோள் விடுக்கப்பட்டடிருந்தபோதிலும். Read more

மன்னார் முசலியில் ஆர்ப்பாட்டம்

mannar_musaliமன்னார் மாவட்டம் முசலி பிரதேசத்தில் கடற்படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள மறிச்சுக்கட்டி, மரைக்கார்தீவு கிராம மக்களுக்குச் சொந்தமான விவசாய காணிகளைத் திருப்பித் தரவேண்டும் எனவும், மீள்குடியேறியுள்ள காணியற்ற குடும்பங்களுக்குக் காணிகள் வழங்க வேண்டும் எனவும் கோரி சாலை மறிப்புப் போராட்டம் நேற்று ஞாயிறன்று நடத்தப்பட்டிருக்கிறது.
கடந்த 1990 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகளினால் வெளியேற்றப்பட்டதையடுத்து. Read more

தேசிய சுகாதார வாரம் 2014-

Posted by plotenewseditor on 10 March 2014
Posted in செய்திகள் 

தேசிய சுகாதார வாரம் 2014-

oorkavatthurai dengu olippu (1) oorkavatthurai dengu olippu (4)oorkavatthurai dengu olippu (8) oorkavatthurai dengu olippu (9)பொது அலுவலர் தொடர்பு மற்றும் துப்பரவு செய்யும் தினம் என்ற கருப்பொருளின் கீழ் ஊர்காவற்றுறை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் வழிகாட்டலின் கீழ் யாழ். ஊர்காவற்றுறை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் 10.03.2014 இன்று ஊர்காவற்றுறை பிரதேச செயலக சுற்றாடலை சுத்திகரித்து முன்மாதிரியான செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்தனர்.

11.03.2014 நாளை ஊர்காவற்றுறை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் வழிகாட்டலின் கீழ் ஊர்காவற்றுறை பிரதேச செயலக உத்தியோகத்தர்களும், ஊர்காவற்றுறை பிரதேச சபை உத்தியோகத்தர்களும், ஊர்காவற்றுறை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை உத்தியோகத்தர்களும்; ஊர்காவற்றுறை பொலிசாரும் இணைந்து ஊர்காவற்றுறை நகர்புற பிரதேசங்களில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட உள்ளனர். 13.03.2014 அன்று அன்றைய தொனிப்பொருளான சிறுநீரக, புற்று நோய் போன்ற தொற்றா நோய்களை தடுக்கும் கருப்பொருளின் கீழ் ஊர்காவற்றுறை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் ஊர்காவற்றுறை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை உத்தியோகத்தர்களால் விழிப்புணர்வு கருத்தரங்கு காலை 9.00 மணியளவில் நடைபெற உள்ளது. 14.03.2014 அன்று ஊர்காவற்றுறை பிரதேசத்தில் உள்ள உணவு கையாளுபவர்களுக்கான போதைப்பொருள் விற்பனை தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு ஊர்காவற்றுறை பிரதேச சபை மண்டபத்தில் பிற்பகல் 2.00மணியளவில் ஊர்காவற்றுறை பிரதேச சபையினருடன் இணைந்து ஊர்காவற்றுறை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை உத்தியோகத்தர்களால் மேற்கொள்ளப்பட உள்ளது.

கரைச்சி பிரதேச சபையில் அனைத்துலக மகளிர் நாள் அனுஷ்டிப்பு-

அனைத்துலக மகளிர் நாள் கரைச்சி பிரதேச சபையில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் வலிகாமம் மேற்கு பிரதேச சபை தவிசாளர் திருமதி நாகறஞ்சினி ஐங்கரன் அவர்கள் மங்கள விளக்கேற்றி நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார். இன் நிகழ்வில் திருமதி நாகறஞ்சினி ஐங்கரன் அவர்கள் உரையாற்றும்போது பெண்கள் தமிழர்கள் தம் வரலாற்றில் தனித்துவமான இடத்தைக் கொண்டவர்கள். தமிழ்ப் பெண்கள் கடந்த கால எமது வரலாற்றிலே பல களங்களை கண்டு களமாடியவர்கள் இவ்வாறான சிறப்புமி பெண்கள் கௌரவிக்கப்படவேண்டும் போற்றப்பட வேண்டும் இந்த நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்முறை என்பது திட்டமிட்டே ஏற்படுத்தப்படுவது போன்ற பல சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றது இவை பெண்களுக்கான பாதுகாப்பை இல்லாதொழித்துள்ளது. இன் நிலையில் பெண்களுக்கான பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் பெண்கள் என்ற நிலையில் இரண்டாம்தர பிரயைகளாக நோக்கப்படுவது மிக வேதனைக்குரிய விடயம் இவ்வாறான நிலைகளில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படவேண்டும் என்றார்.

 

வலிமேற்கு பிரதேச சபையில் சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள்-

makalir thinam (4)சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள் யாழ். வலிகாமம் மேற்கு பிரதேச சபையில் சபைத்தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் தலைமையில் 08.03.2014 அன்று வெகு விமர்சையாக நடாத்தப்பட்டது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக முன்னாள் யாழ்ப்பாணம், கிளிநெச்சி, முல்லைத்தீவு அரசாங்க அதிபரும் தற்போதய சழூக சேவைகள் அமைச்சின் செயலாளருமான திருமதி இமெல்டா சுகுமார் அவர்கள்கள் கலந்து சிறப்பித்திருந்தார் இந் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக வடமாகாண சபையின் பொதுச்சேவை ஆணைக்குழுவின் உதவிச் செயலாளர் சட்டத்தரணி உமா தங்கவேல் அவர்களும் கௌரவ விருந்தினராக மனித உரிமைகள் ஆணைக்குழு சட்டத்தரனி செல்வி காயத்திரி அவர்களும் கலந்து சிறப்பித்தனர். இந் நிகழ்வு வலக்கம்பரை முத்துமாரி அம்பாள் ஆலய முன்றலில் இடம்பெற்ற விசேட வழிபாட்டினை தொடர்ந்து ஆரம்பமாகியது. பிரதேச சபையின் முன்னாள் உள்ள தழிழ் அன்னைக்கு வலி மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் மலர் மாலை அணிவித்து நிகழ்வுகள் ஆரம்பமாகியது. இந் நிகழ்வின் வரவேற்புரையை சட்டத்தரணி செல்வி சாருஜா நிகழ்த்தினார் இதன் பின்னர் ஆசியுரைகளை சர்வதேச இந்து குருமார் ஒன்றிய தலைவர் சபா வாசுதேவக் குருக்கள் மற்றும் தென்இந்திய திருச்சபை வன பிதா அன்டனி அடிகளார் அவர்களும் வழங்கினர். தொடர்நது. Read more

மொரீஷியஸ் தொடர்பில் இலங்கை அதிருப்தி-

ministஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானத்தை அமெரிக்காவுடன் சேர்ந்து கொண்டுவரும் இணை-அனுசரணை நாடுகளில் ஒன்றான மொரீஷியஸ் தொடர்பில் இலங்கை அதிருப்தி கொண்டுள்ளது.. இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனனை மேற்கோள்காட்டி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்கா, பிரிட்டன், மொன்டநேக்ரோ, மசெடோனியா ஆகிய நாடுகளுடன் மொரீஷியஸும் இணைந்து முன்மொழிந்து கொண்டுவருகின்ற தீர்மானம் இலங்கையின் அரசியலமைப்பை மீறும் செயல் என ஐ.நாவுக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதி ரவிநாத ஆரியசிங்கவும் தெரிவித்துள்ளார். இது உள்நாட்டு விவகாரத்தில் அத்துமீறி நுழையும் நடவடிக்கை என்றும் அவர் விமர்சித்துள்ளார. இந்நிலையில் மொரீஷியஸ் வெளியுறவமைச்சர் அர்வின் பூலெல் கூறுகையில், மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்காக குரல்கொடுக்கும் தங்கள் அரசின் நிலைப்பாடு காரணமாகவே இலங்கை மீதான பிரேரணையை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுடன் சேர்ந்து கொண்டுவருகிறோம்.’ஐநா மனித உரிமைகள் உயர் ஆணையர் நவிநீதம் பிள்ளையின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையிலும், கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் முடிவுகளின் படியும் காமன்வெல்த் மாநாட்டின் இறுதி முடிவுகளின் அடிப்படையிலுமே நாங்கள் இந்த பிரேரணைக்கு அனுசரணை வழங்குகிறோம். காமன்வெல்த் சாசனம் மற்றும் ஐநா மனித உரிமைகள் சாசனம் ஆகிய ஏற்பாடுகளுடன் முற்று முழுதாக இசைந்து நடக்க வேண்டும் என்ற தங்களின் நிலைப்பாட்டில் எந்தவித மாற்றமும் ஏற்படாது.
தற்போது விவாத மட்டத்தில் இருக்கும் இலங்கை மீதான தீர்மானத்தின் முன்வரைவில் மாற்றங்கள் ஏற்படக்கூடும் என்றாலும் மனித உரிமை விழுமியங்களைப் பாதுகாத்தல் என்ற முக்கிய கடப்பாட்டில் கருத்தொற்றுமை ஏற்படும்.
இலங்கையில் சில விடயங்களில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அரசாங்கம் கூறுவதை ஏற்றுக்கொண்டாலும் சில முக்கிய மனித உரிமை விவகாரங்கள் மற்றும் நல்லிணக்க நடவடிக்கைகளில் முன்னேற்றம் ஏற்படாத காரணத்தினாலேயே இலங்கை மீதான தீர்மானத்தை முன்னின்று கொண்டுவருவதாகவும்.
இலங்கை மீதான தீர்மானம் ஒட்டுமொத்த இலங்கைப் பிரஜைகளுக்கும் பொதுவான, உலக மக்களுக்கே பொதுவான மனித உரிமை விழுமியங்களுக்காக கொண்டுவரப்பட்டுள்ளதால் அந்தத் தீர்மானத்தை நிறைவேற்றுவதில் சிக்கல் இருக்காது என்றும் அவர் தெரிவித்தார்.

இலங்கைப்; பயணிகளை எதிர்பார்ப்பதாக மலேசியா தெரிவிப்பு-

malaysiaமலேசியா இந்த வருடத்தில் 70 ஆயிரம் இலங்கை சுற்றுலாப் பயணிகளை எதிர்பார்த்திருப்பதாக மலேசிய பொதுத்திட்டமிடல் பிரதிப்பணிப்பாளர் டடுக் அசிசான் நூர்டின் தெரிவித்துள்ளார். இதன்பொருட்டு இந்த வருடத்தில் சுமார் 200 நிகழ்ச்சித் திட்டங்களை ஏற்பாடு செய்துள்ளதாகவும், மலேசியாவுக்கு இலங்கை, எந்த தருணத்திலும் முக்கியமான சந்தையாக திகழ்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த வருடத்தில் 64 ஆயிரத்து 51 பேரும், 2012ஆம் ஆண்டில் 62 ஆயிரத்த 821 பேருமாக இலங்கை சுற்றுலாப்பயணிகள் மலேசியாவுக்கு சென்றுள்ளனர். இந்த வருடத்தில் சுற்றுலாப்பயணிகள் தொகையை 10 தொடக்கம் 12 சதவீதம் வரை அதிகரிக்கும் நோக்கில் புதிய உற்பத்திகளையும், சுற்றுலாத் தளங்களையும் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மலேசிய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பேஸ்புக் முறைப்பாடுகளைப் பதிவு செய்ய புதிய தொலைபேசி இலக்கம்-

images feஇந்த வருடம் சுமார் 170 பேஸ்புக் கணக்குகளை இரத்துச் செய்வதற்கு நடவடிக்கை எடுத்திருப்பதாக இலங்கை கணணி அவசர பிரதிபலிப்புக்கள் ஒன்றியம் தெரிவித்துள்ளது. பேஸ்புக் முறைக்கேடுகள் தொடர்பில் இதுவரை 250 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக ஒன்றியத்தின் சிரேஷ்ட தகவல் தொழில்நுட்ப பொறியியலாளர் ரொஷான் சந்திரகுப்த கூறியுள்ளார். இதில் 80 வீதமான முறைப்பாடுகள் போலி பேஸ்புக் கணக்குகள் தொடர்பிலேயே பதிவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார் பேஸ்புக் கணக்குகள் தொடர்பில் 0112 691 692 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு முறைப்பாடுகளை செய்ய முடியும் என இலங்கை கணணி அவசர பிரதிபளிப்புக்கள் ஒன்றியம் சுட்டிக்காட்டியுள்ளது.

அடையாள அட்டை வழங்கும் ஒரு நாள் சேவை மட்டுப்படுத்தப்பட்டது-

NIC New (1)ஆட்பதிவு திணைக்களத்தினால் தேசிய அடையாள அட்டை வழங்கும் ஒரு நாள் சேவையை தற்காலிகமாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் ஜீ.ஏ.ஆர். தேவசிறி தெரிவித்துள்ளார். கடந்த தினத்தில் ஆரம்பிக்கப்பட்ட சிங்கள மற்றும் தமிழ் மொழியில் தேசிய அடையாள அட்டையில் தகவல்கள் சேர்க்கப்படும் செயற்பாடு காரணமாக ஏற்பட்ட தாமதமே இதற்காக காரணம் என்றும் ஜீ.ஏ.ஆர் தேவசிறி சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதி ஆணைக்குழுவின் மூன்றாம் கட்ட விசாரணை-

imagesCAW19V4Kகாணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் மூன்றாம் கட்ட விசாரணைகள் எதிர்வரும் 20ஆம் திகதி கிழக்கு மாகாணத்தில் ஆரம்பமானவுள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர் எச் டபிள்யூ குணதாச தெரிவித்துள்ளார். இந்நிலையில் இதுவரையிலும் 800 முறைப்பாடுகள் கிழக்கு மாகாணத்தில் தமது ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் எச். டபிள்யூ குணதாச மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஜெனீவா பிரேரணைக்கு பிரான்ஸூம் ஆதரவு-

unoபிரான்ஸ் நாட்டு தூதுவர் ஜீன் போல் மோன்சு இன்று யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்துள்ளார். இதன்போது அவர் வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் சந்திரசிறீயை சந்தித்துள்ளார். அத்துடன் வட மாகாணசபையின் தவிசாளர் சிவிகே சிவஞானத்தையும் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பின்போது கருத்துரைத்த பிரான்ஸ் தூதுவர், ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள அமரிக்க பிரேரணைக்கு பிரான்ஸ் ஆதரவை வழங்கும் என தெரிவித்ததாக வட மாகாணசபை தவிசாளர் சிவஞானம் குறிப்பிட்டுள்ளார்.

தேராவில் பிரதேச மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு-

theravil kattral upakaranankal valankal (6)theravil kattral upakaranankal valankal (2)theravil kattral upakaranankal valankal (4)theravil kattral upakaranankal valankal (3)theravil kattral upakaranankal valankal (7)theravil kattral upakaranankal valankal (5)முல்லைத்தீவு தேராவில் பிரதேசத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டோர்க்கு உதவி வழங்கும் நிகழ்வில் கடந்த 22.02.2014 அன்று பங்கேற்றிருந்த புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினருமான திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள், மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், அவர்களின் தேவைகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடியிருந்தார். இதன்போது பிரதேச மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவுமாறு ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதற்கமைவாக தேராவில் பிரதேச மாணவர்களுக்கு சுவிஸில் வசிக்கும் வரதன் பாமா குடும்பத்தினரால் வழங்கப்பட்ட நிதியுதவியின் மூலம் கற்றல் உபகரணங்கள் கடந்த 05.03.2014 அன்று அதிரடி இணையத்தளத்தின் ஏற்பாட்டில் வழங்கிவைக்கப்பட்டன. இந்நிகழ்வில் புளொட் அமைப்பின் வன்னிப் பிராந்திய அமைப்பாளரும், மத்திய குழு உறுப்பினருமான க.சிவநேசன் (பவன்), புளொட் முக்கியஸ்தரும், முன்னாள் வவுனியா உப நகரபிதாவும், கோயில்குளம் இளைஞர் கழக ஸ்தாபகருமான க.சந்திரகுலசிங்கம்(மோகன்), கோவில்குளம் இளைஞர் கழகத்தின் காண்டீபன், சதீஸ் மற்றும் நிகேதன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

முன்னாள் போராளியின் இசை வளர்ச்சிக்கு கோவில்குளம் இளைஞர் கழகம் உதவி-

munnal poralikku uthavi (2)முல்லைத்தீவு தேராவில் பிரதேசத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டோர்க்கான உதவி வழங்கும் நிகழ்வில் கடந்த 22.02.2014 அன்று பங்கேற்றிருந்த புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினருமான திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள், மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், அவர்களின் தேவைகள் தொடர்பில் அங்கு விரிவாக கலந்துரையாடியிருந்தார். இதன்போது நகுலேந்திரன் நிமால் என்கிற யுத்தத்தினால் இரு கால்களையும் இழந்த முன்னாள் போராளி, தனது இசை ஆர்வம் மற்றும் இசைக் கலையகம் ஒன்றை அமைப்பதற்கு புலம்பெயர் உறவுகளின் ஊடாக உதவி வழங்குமாறு புளொட் தலைவர் உள்ளிட்ட பிரதிநிதிகளிடம் கேட்டிருந்தார்.’

இதன்படி கோயில்குளம் இளைஞர் கழகத்தின் அமெரிக்கக் கிளையினரால் அவருக்கான நிதியுதவி கடந்த 05.03.2014 அன்று அதிரடி இணையத்தளத்தின் ஏற்பாட்டில் வழங்கிவைக்கப்பட்டது. புளொட்டின் வன்னிப் பிராந்திய அமைப்பாளரும், மத்திய குழு உறுப்பினருமான திரு.கந்தையா சிவநேசன் (பவன்), புளொட் முக்கியஸ்தரும், முன்னாள் வவுனியா உப நகரபிதாவும், கோயில்குளம் இளைஞர் கழக ஸ்தாபகருமான க.சந்திரகுலசிங்கம்(மோகன்), கோவில்குளம் இளைஞர் கழகத்தைச் சேர்ந்த காண்டீபன், சதீஸ் மற்றும் நிகேதன் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.

பிரதான கட்சிகள் தெரிவுக்குழுவிற்கு அவசியம்-தேசிய சமாதான சபை-

தேசிய பிரச்சினைக்கு தீர்வு பெற்நுக் கொள்வதற்கான நாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய தேசிய கட்சி என்பன இணைத்துக் கொள்ளப்பட வேண்டும் என தேசிய சமாதான சபை வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக முறைமை ஒன்றை தயாரிக்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் அந்த சபை கோரியுள்ளது. மனித உரிமை மாநாட்டில் அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணையானது, கடந்த இரண்டு வருடங்களை விட சிறந்த ஒன்று அந்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. இறுதிக் கட்ட யுத்தத்தின் போது வட கிழக்கில் இடம்பெற்ற சம்பவங்கள் மாத்திரமின்றி ஏனைய விடயங்களும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளது என்று தேசிய சமாதான சபை மேலும் தெரிவித்துள்ளது.

பிரேரணை தொடர்பில் விசேட அறிக்கையினை வெளியிட நடவடிக்கை-

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் மாநாட்டில் அமெரிக்கா முன்வைக்கவுள்ள பிரேரணை தொடர்பான விசேட அறிக்கை ஒன்றை இந்திய மத்திய அரசாங்கம் வெளியிடவுள்ளது. இந்திய வெளிவிவகார அமைச்சின் தகவல்களை மேற்கோள்காட்டி இந்தி ஊடகம் ஒன்றினால் இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி அமெரிக்காவின் பிரேரணையை தற்போது இந்தியா ஆராய்ந்து வருகிறது. இந்த பிரேரணையில் வலியுறுத்தப்பட்டுள்ள விடயங்களையும், இலங்கையில் தற்போதையை அரசியல் மற்றும் மறுசீரமைப்பு நிலைமைகளையும் ஒப்பு நோக்கியதாக இந்த அறிக்கை அமையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இவ் அறிக்கையில் அமெரிக்காவின் பிரேரணைக்கு இந்தியா ஆதரவளிக்குமா? இல்லையா என்றும், தாம் மேற்கொள்கின்ற தீர்மானத்துக்கான காரணம் தொடர்பிலும் விளக்கப்பட்டிருக்கும் என்று கூறப்படுகிறது.

மட்டக்களப்பில் காணாமல் போனோர் பற்றிய அடுத்தகட்ட அமர்வுகள்-

காணாமல் போனோர் தொடர்பில் விசாரணைகள் செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அடுத்த கட்ட அமர்வுகள் மட்டக்களப்பில் இடம்பெறவுள்ளன. மூன்று பிரதேச செயலகங்களின் கீழ், ஆணைக்குழுவின் விசாரணை பதிவுகள் இடம்பெறவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பீ.எஸ்.எம் சார்ல்ஸ் தெரிவித்துள்ளார். செங்கலடி, வாழைச்சேனை, மற்றும் மண்முனை வடக்கு ஆகிய பிரதேச செயலகங்களில் எதிர்வரும் 20, 21 மற்றும் 22ஆம் திகதிகளில் விசாரணைப் பதிவுகள் இடம்பெறவுள்ளதாகவும் மாவட்ட அரச அதிபர் கூறியுள்ளார். மட்டக்களப்பில் இடம்பெறவுள்ள விசாரணைப் பதிவுகளுக்காக சுமார் 150பேருக்கு, ஜனாதிபதி ஆணைக்குழுவால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் அரச அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு கிழக்கு மாகாணங்களில் முதலீட்டு வலயங்கள்-

வட மற்றும் கிழக்கு மாகாணங்களில் முதலீட்டு வலயங்கள் ஸ்தாபிக்கப்படவுள்ளதாக முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இதனடிப்படையில், தற்போது நான்கு வலயங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. துறைமுக நகர திட்டம் உட்பட பல பாரிய திட்டங்கள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக துறைமுக நகர திட்டத்திற்காக 100 கோடி அமெரிக்க டொலர் நிதி செலவிடப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, அபிவிருத்தி கொள்கை திட்ட வரைமுறைக்கு அமைய செயல்பட முன்வரும் முதலீட்டாளர்களுக்கான உட்கட்டமைப்பு நடவடிக்கைகளை அமைச்சு வழங்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது,

இலங்கை – ரஷ்ய வர்த்தக உறவில் பாதிப்பில்லை-

உக்ரேனில் ஏற்பட்டுள்ள பிரச்சனை காரணமாக இலங்கைக்கும் ரஷ்யா உட்பட கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக நடவடிக்கைகளில் உடனடி பாதிப்புக்கள் எதுவும் ஏற்படாது என ஏற்றுமதி தரப்பினர் குறிப்பிட்டுள்ளனர். இலங்கை இந்த நாடுகளுக்கு தைக்கப்பட்ட ஆடைகள், தேயிலை மற்றும் பல ஏற்றுமதிப் பொருட்களை ஏற்றுமதி செய்கின்றது. ரஷ்யா இலங்கையில் இருந்து தேயிலையினை அதிக அளவில் இறக்குமதி செய்கின்றது. இலங்கையில் இருந்து உக்ரேன் தைக்கப்பட்ட ஆடைகளை இறக்குமதி செய்கின்ற பொழுதிலும், அது சிறியளவிலேயே இடம்பெறுவதாக இலங்கை தைக்கப்பட்ட ஆடை உற்பத்தியாளர் சங்கம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், அது அதிக அளவில் இலங்கை ஏற்றுமதியினை பாதிக்கப் போவதில்லை என தைக்கப்பட்ட ஆடை உற்பத்தியாளர் சங்கம் குறிப்பிடப்பட்டுள்ளது.

மும்மொழிக் கொள்கை அமுலாக்கலுக்கு ஜப்பான் நிதியுதவி-

இலங்கையில் மும்மொழி கொள்கையை அமுலாக்கும் வேலைத்திட்டத்துக்காக ஜப்பான் அரசாங்கம் 100 மில்லியன் டொலர்களை உதவியாக வழங்கியுள்ளது. இரண்டு கட்ட வேலைத்திட்டங்களுக்காக இந்த நிதி வழங்கப்பட்டுள்ளது. இதன்படி ஆசிரியர்களுக்கு மும்மொழிகளிலும் பயிற்சியளிக்கும் பொருட்டு, 80.24 மில்லியன் ரூபாய்கள் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் இதற்கான கற்கை நூல்களை அச்சிடுதல் போன்ற பணிகளுக்காக 20 மில்லியன் ரூபாய்கள் வழங்கப்பட்டுள்ளது என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மரிச்சிக்கட்டி மக்கள் ஆர்ப்பாட்டம்-

காணி சுவீகரிப்புக்கு எதிராக மன்னார் – மரிச்சிக்கட்டி கிராமம், மரைக்கார் தீவு மக்கள் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர். இந்த பிரதேச மக்கள் நூறு வருடங்களுக்கும் மேலாக இங்கு வசித்து வரும் நிலையில், தங்களுக்கான காணி உறுதிகளை வழங்குமாறு கோரி இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும்.

வாக்குச் சீட்டுகள் அச்சிடுதல் நிறைவு-

தென் மற்றும் மேல் மாகாணசபைத் தேர்தல்களுக்கான வாக்குச் சீட்டுகளின் அச்சுப் பணிகள் நிறைவடைந்துள்ளதாக தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அச்சிடப்பட்ட வாக்குச் சீட்டுகள் தற்போது தேர்தல் நடைபெறவுள்ள மாவட்டங்களின் உதவி தேர்தல்கள் காரியாலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் குறித்த வாக்குச் சீட்டுகள் எதிர்வரும் இரண்டு தினங்களில் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் என்று தேர்தல்கள் திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். பரிசோதனை நடவடிக்கைகள் நிறைவடைந்த பின்னர், தேர்தல் தொகுதிகளுக்கு தேவையான வாக்குச் சீட்டுக்களின் எண்ணிக்கை ஆய்வு செய்யப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேர்தல் சட்டமீறல்கள் தொடர்பாக 57பேர் கைது-

தென் மற்றும் மேல் மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் 57 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது இவர்கள் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். இதேவேளை சட்டவிரோத பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்ட வாகனங்கள் 20 பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. தென் மற்றும் மேல் மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் இதுவரை பொலிஸ் திணைக்களத்திற்கு 60 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதன்படி முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகளை இடம்பெறுவதாகவும் அஜித் ரோஹண குறிப்பிட்டுள்ளார்.

க.மு தம்பிராசாவின் போராட்டம் 17ஆவது நாளாகவும் தொடர்கிறது-

வலி வடக்கு மற்றும் சம்பூர் கிராம மக்களின் மீள்குடியேற்றத்திற்காக மக்களுக்குரிய உறுதிக் காணிகளிலிருந்து உடனடியாக அரச படைகள் வெளியேற வேண்டுமென்றும், உறுதி வழங்கப்பட்ட உலருணவு நிவாரணம் உடனடியாக வழங்கப்பட வேண்டுமென்றும் கோரி அடக்கு முறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவர் தம்பி க.மு தம்பிராசா அவர்கள் மேற்கொண்டுவரும் காலவரையற்ற தொடர் சத்தியாக்கிரகப் போராட்டம் இன்றுடன் 17ஆவது நாளாக தொடர்கின்றது. 

இது தொடர்பில் க.மு தம்பிராசா அவர்கள் கூறுகையில்,  வட கிழக்கில் வாழுகின்ற எனது உயிரிலும் இனிய தமிழ் உறவுகளே!

வலி வடக்கு, சம்பூர் கிராம மக்களின் மக்களுக்குரிய உறுதிக் காணிகளில் அவர்களின் குடியேற்றத்திற்காகவும், ஏற்கனவே உறுதிமொழி வழங்கப்பட்ட உலருணவு மற்றும் கொடுப்பனவுகளை வழங்கக் கோரியும், மிக நீண்டகாலமாக சிறைகளில் எந்தவித விசாரணைகளுமின்றி தடுத்து வைக்கப்பட்டிருக்கின்ற Read more