Header image alt text

அன்னையர் தினம்

mother

உடையார்கட்டில் வாழ்வாதார உதவி, கணேசபுரம் பாடசாலை வகுப்பறை கட்டுமான உதவி-

Ganesapuram school bavan (1) udaiyarkattu bavanபுலம்பெயர்ந்து வாழும் லண்டனைச் சேர்ந்த நண்பர் ஒருவரினால் உதவியாக வழங்கப்பட்ட இருபதினாயிரம் (20000) ரூபா நிதியினை போரினால் பாதிக்கப்பட்ட வன்னியின் உடையார்கட்டுப் பிரதேசத்தைச் சேர்ந்த மிகவும் வறுமைக்கோட்டின்கீழ் வாழும் தேவிகா என்பவருக்கு புளொட்டின் வன்னிப் பிராந்திய அமைப்பாளரும், மத்தியகுழு உறுப்பினருமான திரு. சிவநேசன் பவன் அவர்கள் வழங்கி வைத்துள்ளார். மேற்படி தேவிகா தனது குடும்பத்தின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்துவதற்காக இந்த நிதியுதவி வழங்கிவைக்கப்பட்டுள்ளது. இதேவேளை வவுனியா கணேசபுரம் சண்முகானந்தா வித்தியாலயத்தில் கல்விகற்கும்; உயர்தர வகுப்பு மாணவர்களின் வகுப்பறைக் கட்டுமானப் பணிகளுக்காக சிறுதொகை நிதியுதவியினை திரு. சிவநேசன் பவன் அவர்கள் வழங்கிவைத்துள்ளார். லண்டனைச் சேர்ந்த புலம்பெயர் உறவுகளால் வழங்கப்பட்ட இந்த நிதியுதவியினை பாடசாலையின் அதிபரிடம் அவர் வழங்கிவைத்துள்ளார். மேற்படி வகுப்பறையின் கட்டுமானப் பணிகள் தற்போது இடம்பெற்றுவரும்; நிலையில் அதனைக் கட்டி முடிப்பதற்காக இந்த நிதியுதவி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சுஜித்ரா துரை சுவாமிநாதன் கிளிநொச்சிக்கு விஜயம்-

sucetra_durai_001இந்திய வெளிவிவகார அமைச்சின் இலங்கை விடயங்களை கையாளும் இணைச் செயலாளர் சுஜித்ரா துரை சுவாமிநாதன் நேற்று கிளிநொச்சி பகுதிக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். கிளிநொச்சி வட்டக்கச்சி பகுதியில் இந்திய நிதி உதவியினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற வீட்டுத் திட்டங்களின் நிர்மாணப் பணிகளை இதன்போது அவர் பார்வையிட்டுள்ளார். சுஜித்ரா துரை சுவாமிநாதன் நேற்று முன்தினம் யாழ் வலிகாமம் பகுதிக்கு விஜயம் செய்திருந்ததுடன், அங்கு இந்திய நிதியுதவியினால் நிர்மாணிக்கப்பட்ட ஏழு வீடுகளை பயனாளிகளிடம் கையளித்துள்ளார். இந்திய நிதி உதவியில் நிர்மாணிக்கப்படும் வீடொன்றிற்காக சுமார் 5 இலட்சத்து 25 ஆயிரம் ரூபா வீதம் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வலிமேற்கில் உலக புவி தினத்தை முன்னிட்டு ஓவிய போட்டி-

Puvi thina Oviya potti (3)Puvi thina Oviya potti (2)யாழ்ப்பாணம் வலிகாமம் மேற்கு பிரதேச சபையில் உலக புவி தினத்தினை முன்னிட்டு இன்று (11.05.2014) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஓவிய போட்டியின் போது பல பாடசாலையை சேர்ந்த மாணவர்கள் ஆவலுடன் பங்குபற்றியிருந்தனர் இப் போட்டிகள் வலிமேற்கு பிரதேச சபை தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் தலைமையில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

தீர்வு கிடைக்கும் வரை தலையீடுகள் தொடரும்-தமிழ் தேசியக் கூட்டமைப்பு-

sureshதமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு ஒன்று முன்வைக்கப்படும் வரையில், வெளிநாடுகளில் பல்வேறு அமைப்புக்களின் தலையீடுகள் அதிகரித்துக் கொண்டே செல்லும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் இன்றுகாலை ஊடகத்திற்கு இதனைக் கூறியுள்ளார். புலம்பெயர்ந்த அமைப்புக்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்த வேண்டுமாக இருந்தால், இலங்கை அரசாங்கம் தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளக்கூடிய அரசியல் தீர்வு ஒன்றை முன்வைக்க வேண்டும் என்றார் அவர்.

அதிபர் நியமனங்களை வழங்குவதில் முறைகேடு-

கிழக்கு மாகாணத்தில் முறையற்ற விதத்தில் அதிபர் நியமனங்கள் வழங்கப்படுவதாக இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது. மாகாணத்தில் அதிபர் நியமனங்கள் வழங்கப்படும் சந்தர்பங்களில் உரிய கல்வி தரத்தை கொண்டுள்ளவர்கள் புறக்கணிக்கப்படுவதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதேவேளை, உரிய கல்வித் தரத்தை கொண்டுள்ளவர்கள் புறக்கணிக்கப்படுவதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாடு தொடர்பில் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் கருத்து வெளியிட்டுள்ளார்.

புதிய அரசுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பேச்சு-

mavai senathirajahபுதிதாக தெரிவாகின்ற இந்திய அரசுடன், தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான விருப்பத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பு இந்திய பிரதிநிதிகளிடம் தெரிவித்துள்ளது. வடக்கிற்கு விஜயம் செய்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சின் பிரதிநிதிகள் தமிழ் தேசியக் கூட்டமைப்பை சந்தித்தபோது, இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூட்டமைப்பின் செயலாளர் மாவை சேனாதிராஜா எம்.பி கூறியுள்ளார்.

சந்தேகநபர்களை கைதுசெய்வது தொடர்பில் பரிசீலனை-

santhekanaparkalai kaithu seiyaதமிழகத்தில் உள்ள அகதி முகாம்களில் வசிக்கும் புலிகள் இயக்கத்துடன் தொடர்புடையவர்களை கைதுசெய்வது தொடர்பில் இந்திய அரசாங்கம் அவதானம் செலுத்தி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இந்திய அரசாங்க தகவல்களை மேற்கோள்காட்டி இணையத்தளம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. அண்மையில் இலங்கை அரசாங்கம் 424 புலம்பெயர்ந்த தனி நபர்களுக்கு எதிராக தடை விதித்திருந்தது. அவர்களில் 32 பேர் தமிழகத்தில் உள்ள அகதி முகாம்களில் வசிப்பதாக கூறப்படுகிறது. அவர்களை கைதுசெய்து, இலங்கையிடம் ஒப்படைப்பது பற்றி இந்தியா அவதானம் செலுத்துவதாக தெரியவருகிறது. .

மட்டு. டச் கோட்டையை சுற்றுலா தளமாக்கும் ஒப்பந்தம்-

batticalao dutch koattai (2)மட்டக்களப்பு டச் கோட்டையை சுற்றுலா தளமாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்க தூதுவராயலத்தின் நிதி உதவியுடன் இதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் பீ.எஸ்.எம்.சார்ல்ஸ் தெரிவித்துள்ளார். தொல்பொருள் அகழ்வு ஆராச்சி நிலையமும், அமெரிக்க தூதுவராலயமும் இணைந்து இதற்கான ஒப்பந்தத்தில் நேற்று கைச்சாத்திட்டுள்ளன.. இதன் நிமித்தம் அமெரிக்க தூதுவராலயத்தின் கலாசாரம் அலுவலகத்தின் அதிகாரியொருவர் நேற்று வருகைதந்து அபிவிருத்தி பணிகள் தொடர்பிலும் பார்வையிட்டதாகவும் மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபர் கூறியுள்ளார்

சாவகச்சேரி வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு-

யாழ். சாவகச்சேரியில் நேற்றிரவு 9.30அளவல் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கைதடியிலிருந்து கோப்பாய் நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்தபோது, வேக கட்டுப்பாட்டை இழந்து விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் பலத்த காயமடைந்தவர் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் சடலம் சாவகச்சேரி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனைகள் இன்று இடம்பெறவுள்ளன. வெள்ளவத்தையைச் சேர்ந்த 25வயதான இவ் விபத்தில் உயிரிழந்துள்ளார். விபத்து தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

அதிவேக நெடுஞ்சாலை தொடர்பாக ஒப்பந்தம்-

untitledகொழும்பில் இருந்து வடக்குப் பகுதிக்கான அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணப் பணிகளுக்கான ஒப்பந்தம் எதிர்வரும் ஜூலை மாதம் கைச்சாத்திடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய திறைசேரியின் செயலாளர் பீ.பி. ஜயசுந்தர இதனை தெரிவித்துள்ளார். இந்த ஒப்பந்தம் பி.ஓ.ரி. எனப்படும் நிர்மாணம்-நடைமுறை-மாற்றல் என்ற அடிப்படையின் கீழ் கைச்சாத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பு வட பகுதி அதிவேக நெடுஞ்சாலையுடன், மலைநாட்டுடனான நெடுஞ்சாலையினையும் இணைப்பது குறித்தும் இந்த ஒப்பந்தத்தினுள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக கூறுப்படுகிறது. தற்போது இலங்கையின் வறுமை 6 சதவீதத்தால் குறைக்கப்பட்டுள்ளதாகவும் செயலர் கூறியுள்ளார்.

இலங்கை பெண்ணை நாடு கடத்த தீர்மானம்-

இலங்கை கடவுச்சீட்டை காணாமல் செய்தமைக்காக, கனடாவில் கடந்த 14 வருடங்களாக வசித்து வந்த பெண் ஒருவர் நாடுகடத்தப்படவுள்ளார். தமது 15வது வயதில் கனடாவுக்கு அகதிகயாக சென்ற குறித்த பெண், அங்கு கனேடியர் ஒருவரை திருமணம் செய்து, இரண்டு பிள்ளைகளையும் பெற்றுள்ளார். எனினும் அவருக்கு கனேடிய குடியுரிமையை பெறுவதற்கு இலங்கையில் அவருக்கு வழங்கப்பட்ட கடவுச் சீட்டு தேவைப்பட்டது. ஆனால் அவர் அதனை கனேடிய குடிவரத்திணைக்களம் அல்லது கனடாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகரகத்தில் தவறவிட்டுள்ளார். இந்நிலையில் குறித்த பெண் இலங்கைக்கு நாடுகடத்தப்படவுள்ளார். கனடாவில் தமது குடும்பம் வசிக்கின்ற நிலையில் அவர் மாத்திரம் இலங்கைக்கு நாடுகடத்தப்படுகின்றமை, கனேடிய அரசின் கொடூரமான செயல் என்று ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

தேர்தல்கள் திணைக்கள செயற்பாடுகள் குறித்து கலந்துரையாடல்-

தேர்தல்கள் திணைக்களத்தின் எதிர்கால செயற்பாடுகள் குறித்து கலந்துரையாடுவதற்கு தேர்தல்கள் அணையாளர் நாயகம் மஹிந்த தேசப்பிரிய தீர்மானித்துள்ளார். மாவட்ட பிரதி தேர்தல் ஆணையாளர்கள் மற்றும் உதவி தேர்தல் ஆணையாளர்களுடன் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இதன்படி இந்த மாதம் 23ஆம் திகதி மேற்படி பேச்சுவார்த்தை நடைபெற ஏற்பாடாகியுள்ளது. இதேவேளை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் இடம்பெறவுள்ள ஊவா மாகாணசபைத் தேர்தல் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்படவுள்ளது.

வலி மேற்கில் சிறுவர் மகிழ்வகம் ஆரம்பித்து வைப்பு-

valimetku siruvar makilvagam (1)unnamed2unnamed1unnamedயாழ். வலி மேற்கு பிரதேச சபை தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் கடந்த 08.05.2014 வியாழக்கிழமை அன்று சிறுவர் மகிழ்வகம் என்ற நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார். இந் நிகழ்வானது சுழிபுரம் பாண்டுவட்டை பகுதியிலுள்ள முரளிகிருஸ்னா சனசமூக நிலையத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வு சனசமூக நிலையத்தலைவர் கிருஸ்ணா அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் உரையாற்றும்போது, இன்று பல்வேறு வகையிலும் சிறுவர் துஸ்பிரயோக நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன இவற்றில் சில மட்டும் வெளியில் தெரிகின்றன பல விடயங்கள் வெளிப்படுவதில்லை. கூடுதலாக இவ்வாறான சம்பவங்களில் பாதிப்புக்கு உள்ளாகும் சிறுவர்கள் பலர் உளத்தாக்கத்திற்கு உட்படும் நிலையையும் இங்கு குறிப்பிட முடியும். வருமுன் காக்கும் வகையில் இவ்வாறான சம்பவங்கள் தொடர்;பில் அக்கறை கொண்டவர்களாக சமூகத்தில் இருக்கும் அனைவரும் தொழிற்பட வேண்டும். Read more

ஜெனீவா பிரேரணையால் எவ்வித பலனும் இல்லை-ஜப்பான்-

japanஇலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையால் எவ்வித பலனும் இல்லை என்று ஜப்பான் தெரிவித்துள்ளது. ஜப்பானின் பிரதி வெளிவிவகார அமைச்சர் சேஜி கிஹரா நேற்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்தித்தபோது இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். ஜெனீவா மனித உரிமைகள் மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்ட இந்த பிரேரணை குறித்து ஜப்பான் முன்னதாக ஆராய்ந்திருந்தது. இது எந்தவகையில் இலங்கைக்கு உதவும் என்று மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில், இது பலனற்றது என்பதை ஜப்பான் பின்னர் புரிந்துகொண்டது என அவர் கூறியுள்ளார் இந்நிலையிலேயே குறித்த பிரேரணை மீதான வாக்கெடுப்பில் ஜப்பான் சமூகமளிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஆணைக்குழு மட்டக்களப்பிற்கு மீண்டும் விஜயம்-

janathipathi anaikuluகாணாமல்போனோர் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு மீண்டும் மட்டக்களப்பிற்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளது. இக்குழு மட்டக்களப்பு, காத்தான்குடி, மண்முனை ஆகிய பிரதேசங்களுக்கு விஜயம் செய்யவுள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர் எப்.டபிள்யூ. குணதாச தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜூன் 6,7,8 மற்றும் 9ஆம் திகதிகளில் இவ் விஜயம் இடம்பெறுமென்றும் அவர் கூறியுள்ளார். 1990 – 2009ஆம் ஆண்டுகளுக்கிடையில் காணாமல் போனோர் தொடர்பில் ஆராயவென நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு இதற்கு முன்னதாகவும் மட்டக்களப்பிற்கு பல தடவைகள் விஜயம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை சீனா இடையே புதிய விமான சேவை-

vimana sevai oppanthamஇலங்கைக்கும் சீனாவுக்கும் இடையே புதிய விமான சேவை ஒப்பந்தம் ஒன்று நேற்றையதினம் கொழும்பில் கைச்சாத்திடப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜூலை 1ஆம் திகதியிலிருந்து ஆரம்பிக்கப்படவுள்ள இச்சேவையானது கொழும்பிலிருந்து சிச்சுஜான் மாநிலத்துக்கு சென்று பின்னர் பாங்கொக் வழியாக இலங்கை வந்தடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இவ்விமான சேவையானது இலங்கை நேரப்படி கொழும்பிலிருந்து அதிகாலை 01.30 மணிக்கு ஆரம்பித்து சீனாவினை காலை 09.15 மணிக்கு சென்றடையும். பின்னர் சீனாவிலிருந்து காலை 10.30மணிக்கு ஆரம்பித்து பாங்கொக் வழியாக கொழும்பினை மாலை 16.05 மணிக்கு வந்தடையும். தற்போது இலங்கை சீனா இடையே 15 விமான சேவைகள் இடம்பெறுகின்றன.

இலங்கை அகதிகளை அவதானமாக கையாளவும்-ஹரிஹரன்-

Harikaran (india)தமிழகம் அரிசல்முனை பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்ட இலங்கை அகதிகளில் மூன்று ஆண்களும் முன்னாள் புலி உறுப்பினர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர்களை இந்திய மத்திய அரசும், தமிழக அரசும் அவதானத்துடன் கையாள வேண்டும் என, எச்சரிக்கப்பட்டுள்ளது. முன்னாள் இந்திய புலனாய்வுப் பிரிவின் தலைவர் கேர்ணல் ஹரிஹரன் இதனைத் தெரிவித்துள்ளார். கடந்த ஐந்தாம் திகதி கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் இருந்து 10பேர் இவ்வாறு அகதிகளாக தமிழகத்தை சென்றடைந்தனர். அவர்களில் தாய்மார் இருவரும், அவர்களின் பிள்ளைகளும் மண்டபம் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஏனைய மூன்று ஆண்கள் வெளிநாட்டவர் சட்டத்தின்கீழ் புழல் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. புலிகள் இயக்கம் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் முன்னாள் புலி உறுப்பினர்களை கையாள்வதில் அவதானம் செலுத்தப்பட வேண்டும். புனர்வாழ்வளிக்கப்பட்ட புலி உறுப்பினர்கள் ஐந்து வருடங்களின் பின் ஏன் தமிழகத்திற்கு வரவேண்டும் என்ற கேள்வி எழுகிறது என்றார் ஹரிகரன்.

காணாமல் போனோர் விபரங்களை அறிய புதிய இணையத்தளம்-

kanamal ponor ariya inaiyamகாணாமல் போனோர் தொடர்பில் தகவல்களை அறிவதற்கு ஏதுவாக புதிய இணையத்தளமொன்றை அங்குரார்ப்பணம் செய்வதற்கு காணாமல் போனோர் தொடர்பிலான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது எதிர்வரும் 20ஆம் திகதி இந்த இணையத்தளம் உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்யப்படவுள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர் எப்.டப்ளியூ. குணதாச தெரிவித்துள்ளார். www.pcicmp.lk என்ற புதிய இணையத்தளத்தளத்தினுள் பிரவேசிப்பதன் மூலம் காணாமற்போனவர்கள் தொடர்பான விபரங்களை அறியமுடியும் என அவர் கூறியுள்ளார். இந்த இணையத்தளத்தில் காணாமல்போனோர் தொடர்பிலான விபரங்கள் தரவேற்றம் செய்யப்படவுள்ளதுடன் அதனை மக்கள் பார்வையிட முடியும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஊடகங்களை தண்டிக்கக் கூடாதென அமெரிக்கா வலியுறுத்தல்-

usnslஊடகங்கள் மேற்கொள்ளும் பணிக்காக, இலங்கை அரசு அவற்றைத் தண்டிக்கக் கூடாது என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பொது விவகாரங்களுக்கான உதவிச்செயலர் டோக் பிரான்ட்ஸ் தெரிவித்துள்ளார். சர்வதேச ஊடக தினத்தை முன்னிட்டு, நேற்று முன்தினம் அமெரிக்க நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில், காணொளி மூலம் உரையாற்றியபோதே அவர் இதனைக் கூறியுள்ளார். ஊடகங்கள் செய்கின்ற பணிக்காக ஊடக அமைப்புகளை அமெரிக்கா தண்டிப்பதில்லை. இலங்கை அரசும் அதுபோலவே செயற்பட வேண்டும் என்று அமெரிக்கா விரும்புகிறது. எட்வேட் ஸ்னோடன் வெளியிட்ட உயர் இரகசிய ஆவணங்களை அமெரிக்க ஊடகங்கள் பிரசுரித்தபோது. அமெரிக்கா எதையும் செய்யவில்லை. அவர்களின் பணிக்காக ஊடக நிறுவனங்களை நாம் தண்டிக்கவில்லை. ஊடக சுதந்திரம் பற்றிய சுட்டியில், 2013இல் 32ஆவது இடத்தில் இருந்த அமெரிக்கா, இந்த ஆண்டில் 46வது இடத்துக்குப் பின் தள்ளப்பட்டுள்ளது. நாம் எப்போதுமே மிகச்சரியாகச் செயற்பட முடிவதில்லை என்பதை ஏற்றுக் கொள்கிறேன். இந்த குறைபாடுகள் இருந்தாலும், ஊடக சுதந்திரத்தின் முக்கியத்துவம் குறித்து ஏனைய நாடுகளுக்கு அமெரிக்கா ஒரு உதாரணமாக இருக்கிறது என்றார் அவர்.

இலங்கை மீனவர்கள் 31பேர் கைது-

sri lankan fishermenஇலங்கை மீனவர்கள் 31 பேர் இந்திய கரையோர பாதுகாப்பு பொலிசாரால் ஆந்திர மாநிலத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஏழாம் திகதி 4 படகுகளும் 4 மெற்றிக்தொன் மீன்களும் கைப்பற்றப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக கரையோர பொலிஸ் பாதுகாப்பு அதிகாரி பிரசாத் றியோ தெரிவித்துள்ளார் ஆந்திரா மாநிலம், கிருஸ்ணா மாவட்டத்தில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோதமான முறையில் இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்த குற்றச்சாட்டுக்காக இவர்கள் கைதாகியுள்ளனர். 

தமிழக மீனவப் பிரதிநிதிகள் நாளை வருகை

India-Sri-Lanka-fishermen-issueஇலங்கை இந்திய மீனவர் பிரச்சினை தொடர்பிலான பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளும் இந்தியப் பிரதிநிதிகள் குழுவினர் இன்றிரவு தமிழகத்திலிருந்து புறப்படவுள்ளனர். இவர்கள் நாளை அதிகாலை இலங்கையை வந்தடையவுள்ளதாக கடற்றொழில் அமைச்சின் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது. இந்திய இலங்கை மீனவர் பிரச்சினை தொடர்பான இரண்டாம் சுற்றுப் பேச்சுவார்த்தையில் தமிழக மீனவர் சங்கங்களின் பிரதிநிதிகள் 18 பேரும், 10 அதிகாரிகளும் பங்கேற்கவுள்ளனர். இந்த பேச்சுவார்த்தை எதிர்வரும் 12ஆம், 13ஆம் திகதிகளில் கொழும்பு செடக்ஸ் நிலையத்தில் நடைபெறவுள்ளதாக கடற்றொழில் அமைச்சு அறிவித்துள்ளது. இரு நாட்டு மீனவர்களுக்கும் இடையே இந்தியாவில் நடைபெற்ற பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமான தீர்வுகள் எட்டப்பாடாத நிலையில் நிறைவுபெற்றிருந்தது. இரண்டாம் சுற்றுப் பேச்சுவாத்தையை கொழும்பில் நடத்துவதற்காக இரண்டு சந்தர்ப்பங்களில் திகதிகள் குறிக்கப்பட்டாலும் தமிழக அரசாங்கத்தின் பதில் கிடைக்காதமால் அந்தப் பேச்சுவார்த்தையை பிற்போட நேரிட்டது.

யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் ஆர்ப்பாட்டம்-

yaal palkalai aarpattam (1) yaal palkalai aarpattam (2)யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த அமைதிப் போராட்டம் யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் இன்று நடைபெற்றது. பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஒன்றியப் பிரதிநிதிகளை எச்சரிக்கை செய்து பல்கலைக்கழக வளாகத்தில் ஒட்டப்பட்டிருந்த துண்டுப்பிரசுரத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தே இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. ‘நினைத்தவுடன் பல்கலைக்கழகத்தை மூடுவது தான் மாணவர் மையக் கல்வியா?’, ‘யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மகத்தான ஆயுதம் பேனா முனையே தவிர துவக்கு முனையல்ல?’, ‘பல்கலைக்கழகம் என்பது கல்விக்கழகமா அல்லது கொலைக்களமா?’ போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை தாங்கியவாறு போராட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

வலிமேற்கு பிரதேசசபை தவிசாளரின் செஞ்சிலுவை தின செய்தி-

ulaga sensiluvai thinamஉலக செஞ்சிலுவை தின நிகழ்வு சர்வதேச ரீதியிலும் பலராலும் கொண்டாடபப்படும் நாளாக காணப்படுகின்றது. இத் தினமானது செஞ்சிலுவை சங்கத்தினை ஸ்தாபித்த தாபகரின் பிறந்த தினத்தினை அடிப்படையாக கொண்டு கொண்டாடப்படுகின்றது. போர் விபரீதங்களில் ஏற்பட்ட அனுபவங்களே இவ் செஞ்சிலுவை சங்கத்தின் தோற்றம் என்றால் மிகையாகாது. போரின் மாறாத வடுக்களிடையே அல்லலுற்ற ஒவ்வோர் மனித ஜீவனுக்கும் கருணையுள்ள இறை அருள் போன்றே இவ் செஞ்சிலுவை சங்கத்தின் பணி அமைந்திருந்தது. இந்த வகையில் தமிழ் மக்களாகிய நாமும் இவ் செஞ்சிலுவை சங்கத்தின் பணிகளை பல காலங்களிலும் பெற்றவர்கள் என்ற ரீதியில் அவர்களுக்கு நன்றி உடையோராக இருப்பது காலத்தின் கட்டாயமாகும். கடந்த கலங்களில் எமது இனம் அல்லல் உற்றபோது எல்லாம் எமக்கு உறவுப்பாலமாக எமது உயிர்களுக்கான உத்தரவாதிகளாக எமக்கு உணவு, உறையுள் மற்றும் பல்வேறு அடிப்படை வசதிகளை வழங்கும் உடன் பிறவாத உறவுகளாக இவ் செஞ்சிலுவை அமைப்பு பணியாற்றியுள்ளது அன்றுபோல் இன்றும் இவர்களது பணி தொடர்ந்தவண்ணம் உள்ளது இவ் இடத்திலே நினைவு கூறக்கூடிய ஒன்றாகும். இந்த வகையில் கடந்த காலத்திலும் நிகழ்காலத்திலும் தழிழ் மக்களது தீராத வலி வேதனைகளின்போது எமது உணர்வுகளை உணர்ந்தவர்களாக எமக்காக பணியாற்றிய இச் செஞ்சிலுவைச் சங்கத்தின் பணியினை போற்றுகின்றேன் இவ் நன்நாளில் தழிழ் மக்கள் ஒவ் வோர்வரும் அவர்களது பணியினை வாழ்த்தவேண்டும்  (திருமதி.நாகரஞசினி ஐங்கரன் தவிசாளர் வலிமேற்கு பிரதேச சபை).

புலிகளை நினைவு கூர்வதற்கு அனுமதியில்லை-இராணுவம்-

imagesCASUZRLMகுழுக்களாக இணைந்து புலிகளை நினைவு கூர்வதற்கு இலங்கையில் அனுமதியில்லை என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவண் வணிகசூரிய வலியுறுத்தியுள்ளார். எனினும் வடக்கில் உயிரிழந்தவர்களின் குடும்ப உறவினர்களை நினைவு கூர்வது, அன்னதானங்கள் வழங்குவது அல்லது கோவில்களுக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபடுவது போன்ற செயற்பாடுகளால் பிரச்சினைகள் ஏற்படாது எனவும் பிரிகேடியர் குறிப்பிட்டுள்ளார். பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைக் கூறியுள்ளார் இதேவேளை அரசியலமைப்பை மீறி மீண்டும் பயங்கரவாதத்தை உருவாக்க முற்படுவோரை கைதுசெய்யுமாறு இலங்கை இளைஞர் சட்டதரணிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இலங்கை இளைஞர் சட்டத்தரணிகள் சங்கம் நேற்று ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் சங்கத்தின் செயலாளர் மனோஜ் கமகே இதனைத் தெரிவித்துள்ளார். நாட்டில் அனைத்து சட்டங்களும் பொதுவானது. யாராவது நாட்டின் அரசியல் அமைப்பை மீறி மீண்டும் பயங்கரவாதத்தை ஏற்படுத்த செயற்படுவார்களாயின் உடனடியாக கைது செய்யுங்கள். அவர்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்துங்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழில். நான்கு பிரதேச செயலர்களுக்கு இடமாற்றம்-

jaal pradesa seyalakamயாழ். பிரதேச சபைகளில் பணிபுரியும் பிரதேச சபைகளின் செயலாளர்கள் நான்கு பேருக்கு வட மாகாண ஆளுநரால் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன. யாழிலுள்ள வட மாகாண ஆளுநரின் அலுவலகத்தில் வைத்து ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியினால் இந்த நியமனக் கடிதங்கள் நேற்று வழங்கப்பட்டன. வலி கிழக்குப் பிரதேசசபை செயலராகக் கடமையாற்றி வந்த திருமதி எஸ்.ஜெயந்தா வடமாகாண ஆளுநரின் அலுவலகத்திற்கு மாற்றப்பட்டிருந்த நிலையில் மீண்டும் வலி. தென்மேற்குப் பிரதேச சபைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அதேவேளை வலி. தென்மேற்குப் பிரதேசசபைச் செயலராகக் கடமையாற்றிய திருமதி கே.கேதீஸ்வரி காரைநகர்ப் பிரதேச சபைக்கும் காரைநகர்ப் பிரதேச சபையில் இருந்த கே.கனகதுரை வடமராட்சி தென்.மேற்குப் பிரதேச சபைக்கும் வடமராட்சி தென்மேற்குப் பிரதேச சபையில் இருந்த திருமதி அன்னலிங்கம் நல்லூர்ப் பிரதேச சபைக்கும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் நல்லூர் பிரதேச சபையில் இருந்த எஸ்.சாந்தசீலன் உள்ளுராட்சி திணைக்களத்திற்கு நிர்வாக உத்தியோகத்தராகவும் மாற்றப்பட்டுள்ளார். இந்த நிகழ்வில் மாகாண பிரதம செயலாளர் திருமதி ஆர்.விஜயலட்சுமி மற்றும் பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர் எஸ்.தெய்வேந்திரா ஆகியோர் பங்கேற்றிருந்தனர்..

இலங்கை தொடர்பான விசாரணைக்காக நிதி திரட்டல்-

UNஇலங்கைக்கு எதிரான சர்வதேச விசாரணையை நடத்துவதற்கான நிதியை திரட்டுவதற்காக ஐ.நா சபையின் தலைமையகத்தில் விசேட கூட்டம் ஒன்று நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதில் கனடா, அமெரிக்கா மற்றும் பிரித்தானிய போன்ற நாடுகளின் ஐக்கிய நாடுகள் சபைக்கான பிரதிநிதிகள் பங்கேற்றதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இலங்கைக்கு எதிரான விசாரணைக்கு 15 மில்லியன் டொலர்கள் தேவை என்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழு முன்னதாக கணிப்பிட்டிருந்தது. இதில் குறித்த தொகையை நோர்வே அரசாங்கம் வழங்கியுள்ள நிலையில், அமெரிக்கா, கனடா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளும் இதற்கான நிதிப் பங்களிப்பை வழங்குவதாக அறிவித்துள்ளன. இந்நிலையில் மேலும் 200 மில்லியன் ரூபாய்களை திரட்டும் பொருட்டு இக்கூட்டம் நடத்தப்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது.

இந்திய வீட்டுத்திட்டம் தொடர்பில் ஆளுநருடன் சந்திப்பு-

india veettu thittam (3)இந்திய இலங்கை மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளின் இணைப்புச் செயலாளரும், பகுதித் தலைவருமான சுசிந்திரா துரை இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இன்றுகாலை 11.30 மணியளவில் இடம்பெற்ற சந்திப்பின்போது இந்திய வீட்டுத்திட்டங்கள் தொடர்பிலும் வடக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாரிய அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது. மேலும் இந்நிகழ்வுக்கு இந்திய துணைத்தூதுவர் மகாலிங்கம், ஆளுநரின் செயலாளர் இளங்கோவன் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

யாழில் 63பேர் தாதியர்களாக நியமனம்-

2011பி.அணிக்கான புதிய தாதியர்களாக 63பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிகழ்வு இன்று காலை 9.30அளவில் தாதியர் பயிற்சி கல்லூரியில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் தாதியர் பயிற்சி கல்லூரியில் புதிதாக பயிற்சி பெற்று இன்று தாதியராக 59 பெண்கள் உட்பட 4ஆண்களும் சேவைக்காக நியமிக்கப்பட்டனர். மேலும் இந்நிகழ்வில் தாதியராக நியமிக்கப்பட்ட 59 பெண்களுக்கு தாதியர் கல்லூரி அதிபர் ரயூலா தேவி தொப்பி அணிவித்தும் சிறப்பித்தார்.

புலிகள் ஆதரவு நிகழ்வுகள் தொடர்பில் கனடாவுக்கு வலியுறுத்தல்-

கனடாவில் நடைபெறுகின்ற புலிகளுக்கு ஆதரவான அமைப்புகளின் நிகழ்வுகள் தொடர்பில் கனேடிய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. இராணுவ பேச்சாளர் ருவான் வணிகசூரிய இதனைக் கோரியுள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனைக் கூறியுள்ளார். கனடாவில் முக்கிய அதிகாரி ஒருவர், புலிகள் தடை செய்யப்பட்ட இயக்கம் இல்லை என அறிவித்திருப்பதாக அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார். இவ்வாறான கருத்துக்களுக்கு கனேடிய அரசாங்கம் இடமளிக்க கூடாது என்றும் இராணுவப் பேச்சாளர் ருவான் வணகசூரிய மேலும் குறிப்பிட்டுள்ளார்.

பயங்கரவாத தடை குறித்து நியுசிலாந்துக்கு விளக்கம்-

புலம்பெயர்ந்த அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் விடுத்துள்ள தடை தொடர்பில், நியுசிலாந்துக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளது. நியுசிலாந்தின் வெளிவிவகார அமைச்சர் மரே மெக்கலியை, இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஷ் சந்தித்த வேளையில் இந்த விளக்கமளிப்பு இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. ஒக்லேண்டில் வைத்து இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்போது நியுசிலாந்து அரசாங்கம் இலங்கைக்கு வழங்கி வருகின்ற ஆதரவுகளுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டதாகவு வெளிவிவகார அமைச்சு கூறுகிறது.

இலங்கைக்கு ஆபிரிக்க ஒன்றியம் அங்கீகாரம்-

africa ontriyam (2)ஆபிரிக்க ஒன்றியத்தின் அங்கீகார அந்தஸ்த்து இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி ஆபிரிக்க ஒன்றியத்தின் அங்கீகார அந்தஸ்த்தை பெறும் மூன்றாவது தெற்காசிய நாடாக இலங்கை பதிவாகி இருக்கிறது. இதற்கு முன்னர் இந்தியாவும், பாகிஸ்தானும் இந்த அந்தஸ்த்தை பெற்றுள்ளன. இதன்மூலம் ஆபிரிக்க ஒன்றியத்துடனான வர்த்தக மற்றும் ராஜதந்திர தொடர்புகள் பலமடையும் என்று தெரிவிக்கப்படுகிறது. சிறந்த வெளிநாட்டு கொள்கையின் விளைவாக இந்த அந்தஸ்த்து கிடைத்திருப்பதாக வெளிவிவகார அமைச்சு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

பொலிஸ், இராணுவ பாதுகாப்பின்றி ரயிலை இயக்க முடியாது-

பொலிஸார் அல்லது இராணுவத்தினரின் பாதுகாப்பின்றி ரயில் போக்குவரத்தை மேற்கொள்ள முடியாது என ரயில் ஓட்டுனர்கள் தெரிவித்துள்ளனர். ரயில் ஓட்டுனர்கள்மீது இடம்பெறும் தாக்குதல் சம்பவத்தினையடுத்து இந்த தீர்மானத்தை மேற்கொண்டதாக, லொகோமோடிவ் ஒபரேஷன் இன்ஜினியர் சங்கத்தின் பொருளாளர் குறிப்பிட்டுள்ளார். மஹவவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலின் ஓட்டுனர் ஒருவர் பயணிகளால் இன்று தாக்கப்பட்டுள்ளார். இன்று காலை பொல்கஹவெல ரயில் நிலையத்திற்கு அருகில் வைத்து இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை அறிவித்திருக்கின்றது.

மனைவியுடன் பயணித்த சாரதிக்கு தண்டம்-

கொழும்பு, கோட்டையிலிருந்து பளை நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த தேசத்துக்கு மகுடம் ரயிலின் என்ஜின் பெட்டியில் பயணித்த ரயில் சாரதியின் மனைவிக்கு 4 ஆயிரம் ரூபா தண்டம் விதிக்கப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் ரயில்வே திணைக்களத்திடம் செய்யப்பட்ட முறைப்பாட்டை அடுத்து, மேற்படி ரயிலை சோதனையிட்ட போக்குவரத்து அதிகாரசபை அதிகாரிகள், குறித்த ரயில் சாரதியின் மனைவியை பிடித்து, தண்டம் விதித்துள்ளனர். புகையிரதத்தின் என்ஜின் பெட்டியில் ரயிலின் சாரதியும் உதவியாளரும் மாத்திரமே பயணிக்க முடியும். இருப்பினும், சம்பவதினம், ரயில் சாரதியின் மனைவியும் அதில் பயணித்துள்ளார். இதனை ரயில் சாரதி படம்பிடித்தும் உள்ளார். இந்நிலையில், குறித்த ரயிலின் என்ஜினில் பெண்ணொருவர் பயணிப்பதை அவதானித்துள்ள பயணிகள் சிலர், ரயில்வே திணைக்களத்திடம் முறையிட்டுள்ளனர். இதனையடுத்து உடன் நடவடிக்கை எடுத்துள்ள அதிகாரிகள், குறித்த புகையிரதத்தை பொத்துஹெர ரயில் நிலையத்தில் சோதனையிட்டபோது, ரயில் சாரதியின் மனைவி கைதாகி தண்டப்பணம் செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.

தொல்புரம் கலைவாணி சனசமூக நிலைய 62ஆவது ஆண்டு விழா-

யாழ். தொல்புரம் மேற்கு கலைவாணி சனசமூக நிலையத்தின் 62வது ஆண்டு விழாவும் கலைவாணி விளையாட்டு கழகத்தின் பொன்விழா விளையாட்டு நிகழ்வுகளும் கலைவாணி முன்பள்ளி சிறார்களின் வருடாந்த விளையாட்டு விழாவும் சனசழூக நிலையத்தின் உப தலைவர் கு.சோதிராஜா தலைமையில் எதிர்வரும் 11.05.2014 அன்று மாலை 2.00 மணியளவில் நிலைய மைதானத்தில் நடைபெற உள்ளது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக காவேரி கலாமன்ற இயக்குநர் வணபிதா. டி.எஸ்.யோசுவா அவர்கள் கலந்து சிறப்பிக்கவுள்ளார். இந் நிகழ்வில் கிராமசேவகர் ச.வைத்தியநாதன், ஆரம்ப பிள்ளைப்பருவ உத்தியோகஸ்தர் செல்வி ஜெயதுர்கா சிவசுப்பிரமணிய சர்மா, சனசமூக நிலைய அபிவிருத்தி உத்தியோகஸ்தர் திருமதி கே.சிவசோதி, ஆசுகவி எஸ்.சிவசுப்பிரமணியம். வடபிரதேச நல்லொழுக்க சம்மேளன உறுப்பினர் எஸ்.குமாரகுலசிங்கம், சுப்பிரா கல்வி நிலைய இயக்குனர் ச.ஐங்கரன், வட்டுக்;கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சத்துறுசிங்க, உலக தரிசன நிறுவன இனைப்பாளர் பி.வென்சன் மற்றும் முன்பள்ளி ஆசிரிய சங்க தலைவி திருமதி பரநிருபசிங்கம் கிருஸ்னவேணி ஆகியேர் கலந்துகொள்ள உள்ளனர். Read more

இன்று உலக செஞ்சிலுவை தினம்-

ulaga sensiluvai thinamஉலக செஞ்சிலுவை தினம் இன்றாகும். செஞ்சிலுவைச் சங்கத்தை ஸ்தாபித்த ஜீன் ஷென்றி டுனன்ற் என்பவரின் பிறந்த தினமான மே 8ஆம் திகதி சர்வதேச ரீதியில் செஞ்சிலுவை தினமாக அனுஷ்டிக்கப்படுகின்றது. 1859ஆம் ஆண்டு ஆஸ்திரிய படைகளுக்கும், பிரான்ஸ் படைகளுக்கும் இடையே வட இத்தாலியிலுள்ள சோல்பரினோவில் இடம்பெற்ற யுத்தத்தின் கொடூரத்தை நேரிற்கண்டு வேதனையடைந்த ஜெனீவா நகர இளைஞன் ஹென்றி டுனன்ற்றுக்கு ஏற்பட்ட எண்ணக்கருவின் பிரதிபலிப்பே செஞ்சிலுவைச் சங்கம் ஆகும். இந்தப் போரின் விபரீதங்களை உணர்த்த ‘சோல்பரினோவின் நினைவுகள்’ என்ற நூலை எழுதி வெளியிட்ட அவர், அதன்மூலம் கருணை பொங்கும் நெஞ்சங்களை வசமாக்கி செஞ்சிலுவை சங்கம் உருவாக வேண்டியதன் அவசியத்தை உணரச் செய்தார். இந்த அடிப்படையில் 1863 ஆம் ஆண்டு செஞ்சிலுவை சங்கம் ஸ்தாபிக்கப்பட்டது.. பாரபட்சம் இன்றி பாதிக்கப்படுவோருக்கு மனிதாபிமானத்தோடு உதவ வேண்டுமென்ற ஆவலினால் உந்தப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களிடம் நேரில்;சென்று பணிபுரிய, பாதிப்புகளை தடுக்க அல்லது அவற்றின் பரிமாணத்தைக் குறைக்க தேசிய, சர்வதேச ரீதிகளில் செஞ்சிலுவை இயக்கம் பாடுபட்டு வருகின்றது.

ஐ.நா பொதுச்சபைத் தலைவர் ஜனாதிபதி சந்திப்பு-

UN pothusabai thalaivar santhippu15ஆவது சர்வதேச இளைஞர் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இலங்கைக்கு வருகைதந்துள்ள ஐக்கிய நாடுகளின் பொதுச்சபைத் தலைவர் கலாநிதி ஜோன் டபிள்யூ ஆஷ் நேற்று முற்பகல் ஜனாதிபதியை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பு அலரி மாளிகையில் இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. இலங்கை அடைந்துள்ள முன்னேற்றம் தொடர்பில் இதன்போது, ஆஷ் தனது பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார். நாட்டில் முன்னெடுக்கப்பட்டுள்ள அபிவிருத்தியை நேரில் காண முடிந்துள்ளதாகக் குறிப்பிட்ட ஐ.நா பொதுச் சபையின் தலைவர், சர்வதேச இளைஞர் மாநாட்டை ஆரம்பித்துவைத்து ஜனாதிபதி ஆற்றிய உரையினைப் பாராட்டியுள்ளார். 30 வருடகால பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர், இலங்கை தெளிவானதொரு முன்னேற்றத்தினை அடைந்துள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார். சீனாவிற்குப் பிறகு, துரித அபிவிருத்தியடைந்த நாடுகளின் பட்டியலில் இலங்கை இடம்பிடித்துள்ளதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

பொலீஸ் அதிகாரிகளை கௌரவிக்க ஏற்பாடு-

nk ilankakoon police maa athiparவடக்கில் 70 பேர் கைது செய்யப்படவும், கோபி, அப்பன் மற்றும் தேவியன் ஆகியோர் சுட்டுக் கொல்லப்படவும் காரணமாக அமைந்த ஐந்து பொலீஸ் உறுப்பினர்கள் பொலீஸ் மா அதிபர் என்.கே. இளங்ககோனினால் கௌரவிக்கப்படவுள்ளனர். கிளிநொச்சி பளை பகுதியில் வைத்து கடந்த மார்ச் மாதம் 6ஆம் திகதி சுவரொட்டிகளை ஒட்டிக் கொண்டிருந்த இருவரை குறித்த அதிகாரிகள் கைதுசெய்தனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையிலேயே புலிகள் இயக்கம் மீண்டும் உருவாக்கப்படுவதாக பொலீசார் தீர்மானித்தனர். இதனைத் தொடர்ந்து வடக்கில் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு தேடுதல்களில் புலிகள் இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் 70பேர் வரையில் கைது செய்யப்பட்டனர். அத்;துடன் கோபி அப்பன் மற்றும் தேவியன் ஆகிய மூன்று பேரும் வவுனியாவில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டதாக இராணுவம் அறிவித்தது. இந்த நடவடிக்கைகளுக்கு ஆரம்பமாக அமைந்த கிளிநொச்சியில் சுவரொட்டிகளை வைத்திருந்தவர்களை கைதுசெய்தமைக்காக, பளை பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரியும், அதன் நான்கு கான்ஸ்டபில்களும் கௌரவிக்கப்படவுள்ளனர்.

யாழ், கிளிநொச்சி மக்களுக்கு கூட்டமைப்பு அவசர வேண்டுகோள்-

1719856666tna3வடக்கிற்கு வெளியே வாழும் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் அடுத்த மாதம் இடம்பெறவுள்ள வாக்காளர் இடாப்புப் பதிவில் தம்மைப் பதிவு செய்துகொள்ளுமாறு, தமிழ் தேசியக் கூட்டமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது. இதன்படி அடுத்த மாதம் தேர்தல் இடாப்புக்கள் வருகின்ற போது தயவுசெய்து நீங்கள் யாழிலும் கிளிநொச்சியிலும் உங்கள் வீடுகள் இருக்குமாக இருந்தால், அங்கு சென்று உங்களை வாக்காளர்களாக பதிவு செய்து கொள்ளுங்கள். ஒவ்வொரு வாக்காளர் பதிவின் மூலமாக ஒரு ஆசனத்தையே கூட்டக்கூடிய சந்தர்ப்பம் இருக்கின்ற காரணத்தினால், இதனை மிக முக்கிய பொறுப்பாக ஏற்று, உங்களுடைய வீடுகளின் முகவரிகளை கொடுத்து, வாக்காளர்களாக பதிவுசெய்து கொள்ளுங்கள் என கூட்டமைப்பு கேட்டுள்ளது.

இலங்கையுடன் இந்தியா வர்த்தகம்-

sri &indiaஉள்நாட்டு நாணய அலகுடன் இலங்கை உள்ளிட்ட நாடுகளுடன் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பில் இந்தியா ஆராய்ந்து வருகிறது. இந்திய வர்த்தக இணையத்தளம் ஒன்று இதனைத் தெரிவித்துள்ளது. தற்போது இந்தியா சர்வதேச வர்த்தக நடவடிக்கைகளை அமெரிக்க டொலர் அலகில் மேற்கொண்டு வருகிறது. இதனால் உள்நாட்டு ரூபாவின் பெறுமதி இழப்பு ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் இலங்கை உள்ளிட்ட ஆசிய நாடுகளுடன் உள்நாட்டு ரூபா அலகில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து இந்தியா ஆலோசித்து வருகிறது.

சுதந்திர கட்சியின் அமைச்சர்களுக்கு அழைப்பு-

suthanthira katshiசிறிலங்கா சுதந்திர கட்சியின் அனைத்து அமைச்சர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி தலைமையில் நாளை நடைபெறவுள்ள விசேட சந்திப்பு ஒன்றின் நிமித்தம் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்போது உத்தேச தேர்தல்கள் தொடர்பில் கலந்துரையாடப்படவிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

மருத்துவ துறைசார் பட்டதாரிகளுக்கு நியமனம்-

kilakku pattathariவரையறுக்கப்பட்ட பயிற்சிகளுக்காக மேலும் 354 மருத்துவ துறைசார் பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. எதிர்வரும் 13ம் திகதி அவர்களுக்கான நியமனக்கடிதங்கள் வழங்கப்படவுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை நாளைகாலை 9 மணிமுதல் பொரளை மருத்துவ ஆய்வு கூடத்தில் இடம்பெறவுள்ளது. அடையாள அட்டை, பிறப்புச் சான்றிதழ், பட்டப்படிப்பு சான்றிதழ் மற்றும் அவற்றின் பிரதிகளுடன் நாளை வருகைதர வேண்டும் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. வெளிநாட்டில் பட்டப்படிப்பினை பூர்த்தி செய்தவர்கள் மருத்துவ பீடத்தினால் அங்கீகரிக்கப்பட்டு வழங்கப்பட்ட மருத்துவ சபையின் சான்றிதழுடன் சமூகமளிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. இதனைத் தவிர, பயிற்சிகளுக்காக இரண்டாயிரத்து 500 தாதியர்களுக்கு எதிர்வரும் 13 ஆம் திகதி நியமனம் வழங்கவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கிளிநொச்சியில் 3,504 வீடுகள் கையளிப்பு-

3இந்திய வீட்டுத்திட்டத்தின் ஊடாக கிளிநொச்சி மாவட்டத்தில் 8,350 வீடுகள் அமைக்கும் நடவடிக்கையில் 3,504 வீடுகள் பூர்த்தியாக்கப்பட்டு பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். இந்திய அரசினால் செயற்படுத்தப்பட்டுவரும் வீட்டுத்திட்டத்தின் ஊடாக கிளிநொச்சி மாவட்டத்தில் 8,350 வீடுகள் அமைக்கப்படவுள்ளன. அதன்படி தற்போது 3,504 வீடுகள் அமைக்கப்பட்டு வீடுகளை இழந்தவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் 2,636 வீடுகளின் கட்டுமானப் பணிகள் தற்போது நடைபெற்று வருவதுடன் 2,210 வீடுகளுக்கான பயனாளிகளை தெரிவு செய்வதற்கான நடவடிக்கைகளும் தற்போது இடம்பெற்று வருகின்றது. இந்த வீட்டுத்திட்டத்தில் கண்டாவளை பிரதேச செயலக பிரிவில் 540 வீடுகளும், கரைச்சி பிரதேச செயலக பிரிவில் 1,914 வீடுகளும், பூநகரிப் பிரதேச செயலக பிரிவில் 768 வீடுகளும், பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவில் 282 வீடுகளுமாக 3,504 வீடுகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

உயர் நீதிமன்ற நீதியரசர்களாக மூவர் நியமனம்-

uyar neethimantra neethiyarasarkalஉயர் நீதிமன்ற நீதியரசர்களாக மூவர் நேற்றையதினம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளனர். மேன் முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நீதவான் சிசிர த அப்றூ மேன் முறையீட்டு நீதவான் சரத் த அப்றூ ஜனாதிபதி சட்டத்தரணி பிரயந்த சமரகோன் ஆகியோரே இவ்வாறு சத்தியப் பிரமாணம் செய்துள்ளனர். நேற்று பிற்பகல் அலரி மாளிகையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஜனாதிபதியின் சட்டத்தரணிகளான டீ.எஸ். விஜேசிங்க, ஆதர் சமரசேகர இக்ராம் மொஹமட்சேனக வல்கம்பாய ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

சமூக வலைத்தளங்களுக்கு தடை இல்லை-ஜனாதிபதி-

janathipathi twitter pathilஇலங்கையில் சமூக வலைத்தளங்கள் தடை செய்யப்பட மாட்டாதென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். டுவிட்டர் சமூக இணையத்தளத்தில், இலங்கையில் சமூக வலைத்தளங்கள் தடை செய்யப்படுமா என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த ஜனாதிபதி, பேஸ்புக்கில் தனக்கு 3 லட்சம் பேரின் விருப்பங்கள் இருப்பதாகவும் டுவிட்டரில் 25ஆயிரம் பேரின் விருப்பங்கள் இருப்பதாகவும் தெரிவித்துள்ள ஜனாதிபதி அப்படி இருக்கையில் ஏன் சமூக வலைத்தளங்களை தடைசெய்ய வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

யாழ். பல்கலைக்கழக நிர்வாகத்தில் இராணுவத் தலையீடு-மாவை சேனாதிராஜா-

mavai senathirajahயாழ் பல்கலைக்கழகம் தற்காலிகமாக மூடப்படுகின்றமை மற்றும் பேராசிரியர் மாணவர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்து சுவரொட்டி ஒட்டப்பட்ட சம்பவம் ஆகியவற்றுக்குப் பின்னால் இராணுவத்தினருக்கு சம்பந்தம் இருக்கலாம் என எண்ணத் தோன்றுகிறது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பத்திரிகைக் குறிப்பில், யாழ் பல்கலைக்கழகப் பேராசிரியர் மற்றும் மாணவர்களை அச்சுறுத்தியும், கொலைமிரட்டல் விடுத்தும் மர்மமான முறையில் பல்கலைக்கழக வளாகத்தில் சுவரொட்டிகள் ஓட்டப்பட்டுள்ளதாகவும், துண்டு பிரசுரங்கள் வெளியிடப்பட்டுள்ளதாகவும் செய்திகள் நாளேடுகளில் வெளிவந்துள்ளன. நேரடியாகவும் தகவல்கள் கிடைத்திருக்கின்றன. அதற்கு மேலாக 16ஆம் திகதிமுதல் பல்கலைக்கழகம் மூடப்பட்டிருக்கும், விடுதிகளிலிருந்து மாணவர் வெளியேற வேண்டும் எனவும் பதிவாளர் அறிவித்தல் கொடுத்துள்ளார். ஆனால் பதிவாளர் விடுமுறையில் இருப்பதாகவும் அவர் அந்த அறிவித்தலைத் தான் விடுக்கவில்லை எனத் தெரிவித்துள்ளார் என்றும் எமக்கு தகவல் கிடைத்துள்ளது. இத்துடன் யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர், பீடாதிபதிகள், மாணவர் தலைவர்களை யாழ். மாவட்ட இராணுவத் தளபதி நேற்றையதினம் சந்தித்து கலந்துரையாடியும் உள்ளார். இவ்வாறான செயற்பாடுகளை நோக்கும்போது யாழ். பல்கலைக்கழகத்துக்குள் இராணுவத்தினரின் பிரசன்னம் அதிகரித்திருப்பது தெரியவருகிறது. பல்கலைக்கழகம் மூடப்படுவதையும் பேராசிரியர் மற்றும் மாணவர்களுக்கு விடுக்கபட்டுள்ள கொலைமிரட்டல் சம்பவத்தையும் நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம். Read more

வெளிநாடுகளுக்கான இல்ங்கைத் தூதுவர்கள் யாழ் விஜயம்-

velinaadukalukkana thoothuvarkal (2) velinaadukalukkana thoothuvarkal (3) velinaadukalukkana thoothuvarkal (4) velinaadukalukkana thoothuvarkal (5)வெளிநாடுகளுக்குப் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இலங்கைத் தூதுவர்கள் 12பேர் இன்று யாழ்ப்பாணம் சென்றிருந்தனர். அவர்கள் இன்றுகாலை 8.30 மணியளவில் நல்லூர் கந்தசாமி கோயிலுக்கச் சென்று வழிபாடுகளையும் மேற்கொண்டனர். அதன்பின்னர் யாழ். பொது நூலகத்திற்குச் சென்று அங்குள்ள ஏடுகளையும் பார்வையிட்டு அந்த ஏடு தொடர்பில் கேட்டறிந்தும் கொண்டனர். இவர்கள் இன்று காலை 10 மணியளவில் யாழ். மாவட்ட செயலகத்தில் அரச அதிபரை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். அவர்கள் யுத்தத்தின் பின்னர் யாழ். மாவட்டத்தில் இடம்பெற்ற அபிவிருத்திகள் தொடர்பாக அரச அதிபரிடம்; கேட்டறிந்தனர். இதேவேளை இன்றுகாலை யாழ்.போதனா வைத்தியசாலைக்குச் சென்ற இவர்கள் யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் பவானி பசுபதிராஜாவை சந்தித்து கலந்துரையாடியதுடன புதிய கட்டடத்தையும் பார்வையிட்டுச் சென்றுள்ளனர்.

அரச சேவையில் இணைக்குமாறு பட்டதாரிகள் கோரிக்கை-

2pattatharikal013ஆம் ஆண்டு பட்டப்படிப்பினை பூர்த்தி செய்தவர்களையும் அரச சேவையில் இணைத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு 2013ஆம் ஆண்டு பட்டப்படிப்பினை பூர்த்திசெய்த மாணவர்கள் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்துக்கு சென்ற 2013ஆம் ஆண்டு பட்டப்படிப்பினை பூர்த்திசெய்த மாணவர்கள் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரினை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்சிடம் கையளித்துள்ளனர். சுமார் நூறுக்கும் மேற்பட்ட மாணவர்கள் சென்று கோரிக்கை மகஜரை கையளித்துள்ளனர்.

மீண்டும் ரயில்கள் மோதி விபத்து-

Vadapakuthi trainஅளுத்கம ரயில் நிலையத்தில் இன்று அதிகாலை 12.50அளவில் இரு ரயில்கள் மோதியுள்ளன. காலியில் இருந்து பயணித்த எண்ணெய் ஏற்றிச் செல்லும் ரயிலும், அளுத்கம ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் பெட்டிகளுடன் மோதியதாக ரயில்வே கட்டுப்பாட்டுப் பிரிவு கூறுகின்றது..இந்த விபத்தினால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் சேதமடைந்துள்ளதாகவும் ரயில்வே கட்டுப்பாட்டுக் பிரிவு கூறியுள்ளது. விபத்து இடம்பெற்றபோது ரயிலில் பயணிகள் எவரும் இருக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த ரயில் விபத்து தொடர்பில் எரிபொருள் ஏற்றிச் செல்லும் ரயிலின் சாரதி, உதவி சாரதி மற்றும் மற்றும் ரயில் நிலையத்தின் பொறுப்பதிகாரி ஆகியோர் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.

ஐந்து சிறுவர்களும் மண்டபம் முகாமில் தங்கவைப்பு-

Refugee_Indiaஇலங்கையில் இருந்து சட்டவிரோதமாக படகுமூலம் அகதிகளாக இந்தியாவிற்குச் சென்றவர்களில் சிறுவர்கள் 5 பேரையும் சென்னை புழல் சிறையில் சேர்ப்பதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் குறித்த சிறுவர்கள் 5 பேரும் மீண்டும் இராமேஸ்வரம் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இதேவேளை இந்த சிறுவர்களின் பெற்றோர் புழல் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் நிலையில் அவர்களுள் தாய்மார் இருவரையும் புழல் சிறையிலிருந்து பொலிஸ் பிணையில் எடுத்து சிறுவர்களுடன் மண்டபம் அகதிகள் முகாமில் சேரப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக மேலும் கூறப்படுகிறது.

பளை சென்ற கடுகதி ரயிலில் மோதி யானை உயிரிழப்பு-

imagesCAB593TZமுல்லைத்தீவு மாங்குளம் ரயில் நிலையத்திற்கு அருகில் பளை நோக்கிப் பயணித்துக் கெர்ணடிருந்த கடுகதி ரயிலில் மோதுண்டு யானை ஒன்று உயிரிழந்துள்ளது. இந்த விபத்து நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. இதன் காரணமாக வடக்கு மார்க்கத்தினூடான இரு ரயில் சேவைகள் ஒன்றரை மணித்தியாலங்கள் தாமதமடைந்ததாக மாங்குளம் ரயில் நிலைய பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். பளையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த இரவுநேர ரயிலும், கொழும்பிலிருந்து பளை நோக்கி பயணித்த ரயிலுமே தாமதமாகியுள்ளன. எவ்வாறாயினும் இன்றுகாலை முதல் ரயில் சேவைகள் வழமைக்கு வந்தன.

இலங்கை அகதிகளை உடன் விடுவிக்க வேண்டும்-ராமதாஸ்-

ramathasதமிழகத்தில் தஞ்சம் தேடி வந்த ஈழத் தமிழர்களை விடுவிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த அறிக்கையில், இலங்கையில் இராணுவத்தினரின் கொடுமைகளை தாங்கிக் கொள்ள முடியாமல் அகதிகளாக தப்பி வந்த 10 ஈழத் தமிழர்களை தமிழக காவல்துறையினர் கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளனர். தஞ்சம் தேடி வந்தவர்களை காவல்துறை இரக்கமின்றி கைதுசெய்து சிறை வைத்திருப்பது வேதனை தருகிறது. அதேபோல் தஞ்சம் தேடி வந்த ஈழத் தமிழர்களை கைது செய்து சிறையில் அடைக்கும் தவறான அணுகுமுறையை தமிழக அரசு மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதுடன், இவர்கள் 10 பேரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என அவர் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

மத விவகார பொலிஸ் வேண்டாமென முறைப்பாடு-

ravana palayaமத விவகாரங்கள் தொடர்பிலான முரண்பாடுகளை ஆராய்வதற்காக புதிதாக நியமிக்கப்பட்ட பொலிஸ் பிரிவு வேண்டாம் என்று இராவண பலய அமைப்பு பௌத்த விவகாரங்களுக்கான அமைச்சில் இன்று முறையிட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை-

untitledகடும் காற்று மற்றும் மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை விடுத்துள்ள வளிமண்டலவியல் திணைக்களம், தங்களை பாதுகாத்துக் கொள்ளுமாறும் பொதுமக்களிடம்; கேட்டுக்கொண்டுள்ளது. இலங்கையின் பல பகுதிகளிலும் நண்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வலிமேற்கில் கிறிக்கெட் போட்டியும், விளையாட்டு உபகரணங்கள் வழங்கிவைப்பும்-

cricket potti vilaiyattu upakaranam valankal (1)cricket potti vilaiyattu upakaranm valankal (1)cricket potti vilaiyattu upakaranm valankal (2)

04.05.2014 அன்று யாழ். சங்கானை பிரதேச செயலகத்தின் கிறிக்கட் அணிக்கும் வலிமேற்கு பிரதேச சபை கிறிக்கட் அணிக்கும் தவிசாளர் வெற்றிக் கிண்ணத்திற்கான 20 பந்துப் பரிமாற்றங்களை கொண்ட சிநேகபூர்வ மென்பந்து கிறிக்கட் ஆட்டம் இடம்பெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக வலிமேற்கு பிரதேச சபை தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் கலந்து சிறப்பித்துக் கொண்டார். கௌரவ விருந்தினராக பிரதேச சபை உறுப்பினர்களான சி.ஐயலிங்கம் மற்றும் ப.சபாநாயகம் ஆகியோர் கலந்து சிறப்பித்துக் கொண்டனர் இவ் விளையாட்டில் பிரதேச செயலக அணியினர் வெற்றிக் கிண்ணத்தினை தமதாக்கிக் கொண்டனர். நிகழ்வின் இறுதியில் கடந்த 2013ம் ஆண்டில் நடைபெற்ற அரச அதிபர் வெற்றிக்கிண்ணத்திற்கான கிறிக்கட் போட்டியில் சங்கானை பிரதேச செயலகம் வெற்றி பெற்றமை தொடர்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டவேளை தவிசாளர் தனது மாதாந்த கொடுப்பனவின் வாயிலாக பிரதேச செயலக அணியினருக்கு ஒரு தொகுதி விளையாட்டு உபகரணங்களையும் வழங்கினார் மேற்படி விளையாட்டு உபகரணங்களை கிராமசேவையாளர் திரு சதாசிவம் வைத்தியநாதன் அவர்கள் தவிசாளரிடமிருந்து பெற்றுக்கொண்டார்.

வலி மேற்கில் திருமதி ஆறுமுகம் நினைவு நாள், சுயதொழில் உதவி-

ninaivu thinam'ninaivuthinam  (3)ninaivu thinam..கடந்த 04.05.2014 அன்று மறைந்த திருமதி ஆறுமுகம் அவர்களது நினைவுநாள் நிகழ்வு யாழ். வலிமேற்கு பிரதேச சபை கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது இந் நிகழ்வில் விருந்தினராக கலந்துகொண்ட வலிமேற்கு பிரதேச சபை தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன அவர்கள் உரையாற்றும்போது, ஓரு சிறந்த தாய் ஆற்றவேண்டிய கருமத்தினை ஆற்றி ஓர் முன்னுதாரணமாக வாழ்ந்த தாய் திருமதி ஆறுமுகம் அவர்கள் அவரது ஓயாத முயற்சியினால் ஒரு சிறந்த கணித ஆசானை உருவாக்கி அவர்மூலம் பல ஆயிரம் மாணவர்களை கணிதத்துறையிலே உயரச்செய்யும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார். இந்தப்பணி இத்தாயின் புனிதத்தனமையை எடுத்துக்காட்டும் செயலாகும் வறுமை நிலையையும் பொருட்படுத்தாது தனது மகனின் உயர்வுக்காக உழைத்த இத்தாயின் உயரிய பணியினை ஏனையவர்களும் பின்பற்றுவது மிகச்சிறந்ததாகும் என குறிப்பிட்டார். இந்நிகழ்வில் சங்கானைப் பகுதியினை சேர்ந்த இரு சிறுவர்களின் தாயாகிய இளம் விதவைப் பெண் ஒருவருக்கு கோழிவளர்ப்பு சுய தொழிலை மேற்கொள்ளும் பொருட்டு தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் தமது மாதாந்த கொடுப்பனவை சபையோர் முன்னிலையில் வழங்கினார். திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் தவிசாளர் பதவிக்கு வந்த 2011ம் ஆண்டிலிருந்து தேர்தல் காலத்தில் மக்களுக்கு வழங்கிய உறுதியின் பிரகாரம் தனது மாதாந்த கொடுப்பனவை மக்களின் பணிக்காக வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

இலங்கைக் குழந்தைகளை தத்தெடுக்க அவுஸ்திரேலியா நடவடிக்கை-

australiaஅவுஸ்திரேலிய பெற்றோர் இலங்கை உள்ளிட்ட பிற நாடுகளில் இருந்து குழந்தைகளை தத்தெடுக்க எண்ணியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்ட பின் தத்தெடுப்பதற்குத் தகுதியான குழந்தைகள் பற்றிய விபரங்கள் வழங்கப்படும் என அவுஸ்திரேலிய வானொலி தெரிவித்துள்ளது. இலங்கை, வியட்நாம், கம்போடிய, கென்யா, பல்கேரியா, லட்வியா உள்ளிட்ட வளர்ந்துவரும் நாடுகளிலிருந்து இவ்வாறான தெரிவு செய்யப்பட்ட குழந்தைகள் தத்தெடுக்கப்படவுள்ளனர். இதுதவிர, தென்னாபிரிக்காவில் இருந்தும் குழந்தைகளை தத்தெடுப்பது குறித்து பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய பிரதமர் டொனி அபட் கூறியுள்ளார்.

வலிமேற்கு பிரதேசசபை தவிசாளரின் 100 பஜனைப் பாடசாலைத் திடடம்-
vali metku pajanai padasalai (3)யாழ்ப்பாணம் வலிமேற்கு பிரதேச சபை தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் 100 பஜனைப் பாடசாலைத்திட்டம் சித்தன்கேணி கலைவாணி வீதியில் அமைந்துள்ள ஞானவைரவர் ஆலயத்தில் கடந்த 02.05.2014 வெள்ளிக்கிழமை அன்று ஆரம்பித்து வைககப்பட்டது. இந் நிகழ்வில் கலைவாணி சனசமூக நிலையத் தலைவர் அவர்கள் கரிகணண் அச்சகத்தினால் வழங்கப்பட்ட சமய நூல்களை வழங்;கிவைத்தார்.

வெருகல் பிரதேசத்தில் விசேட தேடுதல் நடவடிக்கை-

thedithal nadavadikkaiதிருகோணமலை இராணுவ முகாமிற்கு அருகிலுள்ள கடற்கரையோரத்தில் கடற்படை வீரர் ஒருவர் உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும்போது சந்தேகத்தின் பேரில் இரண்டு நபர்கள் உரப்பையுடன் அப்பிரதேசத்தில் நிற்பதை கண்டு கடற்படை வீரர் அவர்களை நோக்கி சென்றபோது அவர்கள் உரப்பையை விட்டு விட்டு தப்பியோடியுள்ளனர். இந்த சம்பவம் நேற்று மாலை 6.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. குறித்த பையை சோதனையிட்ட கடற்படை வீரர் அந்த பையிலிருந்து ரி.56 ரக துப்பாக்கியையும், தோட்டாக்கள் சிலவற்றையும் மீட்டுள்ளார். இதன் காரணமாக இன்றுகாலை வெருகல் பிரதேச பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் பொலிஸாரும் ,இராணுவத்தினரும் விசேட தேடுதல் நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகின்றனர். இந்த தேடுதல் நடவடிக்கைக்கு பல மோப்ப நாய்கள் ஈடுப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ பேச்சாளர் ருவான் வணிகசூரிய கூறியுள்ளார்.

ஜூன்முதல் நுரைச்சோலை அனல்மின் நிலையம் செயற்பட ஏற்பாடு-

Nuraicholai analmin nilaiyamபுத்தளம், கற்பிட்டி, நுரைச்சோலை, லக்விஜய மின்னுற்பத்தி நிலையம் எதிர்வரும் ஜுன் மாதமளவில் மீண்டும் செயற்படும் பட்சத்தில் 300 மெகாவோட் மின்சாரத்தை தேசிய மின் கட்டமைப்புக்கு சேர்க்க முடியும் என இலங்கை மின்சார சபையின் தலைவர் டப்ளியு.பி.கனேகல தெரிவித்துள்ளார். முதல்கட்ட மின்னுற்பத்தி தொகுதியில் பல்திறன் மிக்க மின்பிறப்பாக்கிகள் பொருத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இரண்டாம் கட்ட மின்பிறப்பாக்கி தொகுதியில் தற்போது 600 மெகாவாட் மின்சார உற்பத்தி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதனிடையே, எதிர்காலத்தில் மூன்றாம் கட்ட மின்பிறப்பாக்கி தொகுதியும் இணைக்கப்படும் பட்சத்தில் மொத்தமாக 900 மெகாவாட் மின்சாரம் தேசிய மின் கட்டமைப்புக்கு வழங்கப்படும். நாடு முழுவதுக்குமாக 2ஆயிரம் மெகாவாட் மின்சார தேவை நிலவுகின்ற தருணத்தில் நுரைச்சோலை அனல் மின்னுற்பத்தி நிலையம் அதற்கு பாரிய பங்கினை வகிப்பதாக மின்சார சபையின் தலைவர் கூறியுள்ளார்.

தேர்தலுக்கு தயாராகுமாறு, ஜனாதிபதி பணிப்பு-

President mahindaஊவா மாகாண சபை தேர்தலுக்கான ஏற்பாடுகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் மாகாண சபை அமைச்சர்கள் மற்றும் மாகாண சபை பிரதிநிதிகளுக்கு அறிவித்துள்ளார். நேற்று மாலை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த சந்திப்பில் ஊவா மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் அமைச்சர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், தொகுதி அமைப்பாளர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர். குறித்த கலந்துரையாடலை அடுத்து ஜனாதிபதியினால் அறிவுறுத்தல் கோவையொன்று வழங்கிவைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

பொலிஸ் உத்தியோகத்தர் கடத்தப்பட்டு சுட்டுக்கொலை

குருநாகல் தம்புள்ள வீதியில் முத்தெட்டுகல பகுதியில் போக்குவரத்து கடமையில் ஈடுப்பட்டிருந்த பொலிசார் இருவர் கடத்தப்பட்ட நிலையில், இன்று அதிகாலை அவர்கள்மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில்; ஒருவர் பலியானதுடன், மற்றுமொருவர் காயமடைந்த நிலையில் குருநாகல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலீஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். வேனில் வந்த சிலரால் நேற்று இரவு குறித்த இரண்டு பொலிசாரும் கடத்தப்பட்டு, படகமுவ வனப்பகுதியக்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளனர். பின்னர் அவர்களது உத்தியோகபூர்வ உடைகள் களையப்பட்ட நிலையில் இவ்வாறு சுடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதன் பொருட்டு 6 விசேட பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சர்வதேச இளைஞர் மாநாடு ஆரம்பம்-

sarvadesa piramukarசர்வதேச இளைஞர் மாநாடு ஹம்பாந்தோட்டை மாகம், ருகுணுபுர சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஜனாதிபதி தலைமையில் இன்று முற்பகல் ஆரம்பமாகியுள்ளது. 28 நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் இளைஞர் விவகார அமைச்சர்கள், 62 நாடுகளின் இளையோர் விவகார சிரேஷ்ட அதிகாரிகள் உட்பட பல பிரதிநிதிகள் மாநாட்டில் கலந்துகொண்டுள்ளனர். சர்வதேச இளைஞர் மாநாடு எதிர்வரும் 10 ஆம் திகதிவரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பட்டதாரிகளின் மேன்முறையீட்டு ஆவண பரிசீலனை இரத்து-

pattatharikalமன்னாரில் இன்று நடைபெறவிருந்த பட்டதாரிகளின் மேன்முறையீட்டு ஆவண பரிசீலனை இரத்துச் செய்யப்பட்டுள்ளது. அரச சேவையில் பட்டதாரிகளை உள்வாங்கும் பொருட்டு, 2012ஆம் ஆண்டு மார்ச் 30ஆம் திகதிக்கு முன்னர் பட்டம் பெற்றவர்களின் ஆவண பரிசீலனை இன்றையதினம் இடம்பெறுமென முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆயினும், உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளரின் அறிவுறுத்தல்களுக்கு அமைய, குறித்த ஆவண பரிசீலனை இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் குறிப்பிட்டுள்ளார். ஆவண பரிசீலனை நடைபெறும் தினம் பின்னர் அறிவிக்கப்படும் என மாவட்ட அரசாங்க அதிபர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தகவல் வழங்குவோருக்கு சன்மானம்-

imagesCA9RZFIRகுருநாகல் தம்புள்ள வீதியில் முத்தெட்டுகல பகுதியில் போக்குவரத்து கடமையில் ஈடுப்பட்டிருந்த பொலீசார் இருவர் கடத்தப்பட்ட நிலையில், சுடப்பட்டனர். இதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக தகவல் வழங்குவதுடன், சந்தேகத்திற்குரியவர்களை அடையாளம் காட்டுவோருக்க சன்மானம் வழங்கப்படும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் றோஹ அறிவித்துள்ளார்.. இதுவரை சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுப்பதற்கான கோவைகள் குற்ற விசாரணை திணைக்களத்திடம் பொலிஸ் மா அதிபரினால் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒரு காவல்துறை உத்தியோகத்தர் பலியானதுடன், பிறிதொருவர் காயமடைந்திருந்தார்.

கச்சத்தீவு வழக்கு ஒத்திவைப்பு-

untitledச்சத்தீவை இலங்கை அதிகாரத்தில் இருந்து மீட்டு இந்தியாவுடன் இணைக்க வேண்டும் என்று கோரி தொடரப்பட்ட வழக்கு இந்திய உச்ச நீதிமன்றத்தினால் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.கருணாநிதி இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தார். எனினும் கடந்த விசாரணையின் போது, இது தொடர்பில் விளக்கமளிக்க கால அவகாசம் தேவை என்று, மத்திய மற்றும் மாநில அரசாங்கங்கள் மனுத்தாக்கல் செய்திருந்தன. இதனைத் தொடர்ந்து இந்த வழக்கினை இரண்டு வாரங்களின் பின்னர் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக இந்திய உச்ச நீதிமன்றம் நேற்றையதினம் அறிவித்துள்ளது.

தாவடி பகுதியில் ஆயுதங்கள் மீட்பு-

873b388dc2ca126b9858944542215afaயாழ்.தாவடி தெற்கு பகுதியிலுள்ள வெற்றுக்காணி ஒன்றிலிருந்து பழைய தோட்டக்கள் மற்றும் வெடிமருந்துகள் மீட்கப்பட்டுள்ளதாக பலாலி இராணுவத் தலைமையகம் இன்று தெரிவித்துள்ளது. ஜே-192 கிராம அலுவலர் பிரிவிற்குள் அமைந்துள்ள இப் பிரதேசத்திலிருந்து யூரியா பையினுள் கட்டப்பட்டிருந்த 5 ஆயிரம் ரி.56 துப்பாக்கி ரவைகள், இதர தோட்டாக்கள் மற்றும் வெடிமருந்துகள் என்பன மீட்கப்பட்டதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். குறித்த காணியயை உரிமையாளர்; துப்புரவு செய்தபோது, ஆயுதங்கள் இருப்பதைக் கண்ணுற்று 511 ஆவது படைப்பிரிவு இராணுவத்தினருக்குத் தெரியப்படுத்தினைத் தொடர்ந்து இராணுவத்தினர் அவ்விடத்திற்குச் சென்று குறித்த ஆயுதங்களை மீட்டுள்ளனர்.

யாழ். பல்கலைக்கழகம் 16இல் மூடப்படுமென அறிவிப்பு-

jaffna universityயாழ் பல்கலைக்கழகம் எதிர்வரும் 16ஆம் திகதியிலிருந்து எதிர்வரும் 21ஆம் திகதிவரை மூடப்பட்டிருக்கும் என மாணவர்களுக்கு அப்பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. இப்பல்கலைக்கழகத்தின் அனைத்துப் பீடங்களிலும் மற்றும் மாணவர்கள் விடுதிகளிலும் இது தொடர்பான அறிவித்தல் துண்டுப்பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளன. அத்துடன், விடுதிகளில் தங்கியிருக்கும் மாணவர்கள் விடுதிகளை விட்டு வெளியேற வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுவதாக துண்டுப்பிரசுரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. முள்ளிவாய்க்கால் தினம் மே 18ம் திகதி தமிழர்கள் மத்தியில் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றமையால் யாழ்.பல்கலையிலும் அது நினைவுகூரலாம் என்ற காரணத்தினால் இவ்வாறான விடுமுறை அறிவிக்கபபட்டிருக்கலாம் என மாணவர்கள் குறிப்பிடுகின்றனர்.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதில்லை என தீர்மானிக்கவில்லை-ரணில்-

ranil01நாட்டின் எதிர்காலம் குறித்த ஐக்கிய தேசியக் கட்சியின் நோக்கு மற்றும் இலக்கு பற்றி நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கை மற்றும் பாரிய மோசடிகள் குறித்து கீழ் மட்டத்தில் இருந்து தெளிவுபடுத்தல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்காவிற்கு விஜயம் செய்துள்ள ரணில் விக்ரமசிங்க ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடாது இருக்க எந்தத் தீர்மானமும் எடுக்கவில்லை. ஜனாதிபதித் தேர்தல் ஒன்று அறிவிக்கப்பட்ட பின் அது குறித்து தீர்மானிக்கப்படும். ஐ.தே.கட்சி ஆட்சியில் 17வது திருத்தம் முழுமையாக அமுல்படுத்தப்பட்டு 18வது திருத்தத்தில் வழங்கப்பட்டுள்ள நிறைவேற்று அதிகாரங்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். அமைச்சரவை, பாராளுமன்றம், ஜனாதிபதிக்கு மேல் அதிக அதிகாரம் கொண்ட முறை ஒன்றை ஏற்படுத்துவோம். கல்வி, சுகாதாரம், நிதித் துறையில் பாரிய மாற்றங்கள் செய்ய வேண்டியுள்ளது என அவர் மேலும் கூறியுள்ளார்.

சர்வதேச பிரமுகர்கள் இலங்கைக்கு விஜயம்-

sarvadesa piramukarஇலங்கையில் இடம்பெறவுள்ள உலக இளைஞர் மாநாட்டில் கலந்து கொள்ளும் பொருட்டு சர்வதேச பிரமுகர்கள் வருகை தந்துள்ளனர். நேற்று இரவும் அதனை தொடர்ந்து இன்று அதிகாலையும் அவர்கள் இலங்கை வந்தடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. மியன்மார் குடியரசின் சமூக நவன்புரி அமைச்சர் மியேடி ஒங் கிங் மற்றும் நேபாள குடியரசின் சுகாதார துறை மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் புருசோத்தம் பாவுமோல் ஆகியோர் இலங்கை வந்தடைந்துள்ளனர. உலக இளைஞர் மாநாடு நாளை முதல் 10ஆம் திகதிவரை இடம்பெறவுள்ளது.

ஆளுநர் அலுவலகம் முன்பாக ஆசிரியர்கள் போராட்டம்-

aarpattamவட மாகாண ஆளுனர் அலுவலகத்துக்கு முன்பாக ஆசிரியர்கள் சிலர் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்த கவனயீர்ப்பு போராட்டம் இன்று காலை 9.00 மணியளவில் ஆரம்பித்து ஒரு மணித்தியாலம் வரை நீடித்திருந்தது. கடந்த 5 வருடங்களுக்கு மேலாக கஷ்டப் பிரதேசங்களில் பணியாற்றிவரும் தமக்கு சொந்த இடங்களுக்கான இடம்மாற்றத்தை வழங்குமாறு கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

உள்ளுராட்சி மன்றங்கள் பற்றி பவ்ரல் அமைப்பு ஆய்வு-

paffrelஉள்ளுராட்சி மன்றங்களில் மேற்கொள்ளப்பட்ட புதிய எல்லை வரையறைகள் தொடர்பில் அந்த துறைக்கு பொறுப்பான அமைச்சருடன் கலந்துரையாடல் மேற்கொள்வதற்கு பவ்ரல் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. எல்லை வரையறைகளை பக்கசார்பின்றி மற்றும் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் முகமாக செயற்படுத்தியுள்ளார்களா என ஆராயும் நோக்கில் இந்த கலந்துரையாடல் அமையும் என்று பவ்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் றோஹன ஹெட்டி ஆராய்ச்சி தெரிவித்துள்ளார். உள்ளுராட்சி மன்ற சட்டமூலத்திற்கு அமைய வரையறைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளமை பற்றி தமக்கு அறியக் கிடைத்துள்ளதாகவும், எனவே, பொதுமக்கள் ஜனநாயக உரிமைகளை நிறைவேற்றும் வண்ணம் அவை அமைந்துள்ளதா என்று அமைச்சருடன் கலந்துரையாடவுள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

3ஆயிரம் ஆசிரியர்களை இணைத்துக்கொள்ள தீர்மானம்-

kalvi amaichchuஇந்த வருடத்தில் மேலும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரிய பயிலுனர்களை சேவையில் சேர்த்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. இவர்கள் தேசிய கல்வியற் கல்லுரிகளில் இருந்து நாடளாவிய ரீதியாக தெரிவு செய்யப்படுவார்கள் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதனை உறுதிப்படுத்திய கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவாகும் ஆசிரிய பயிலுனர்கள், கிராம புறங்களில் உள்ள பின்தங்கிய பாடசாலைகளில் பணிக்கமர்த்தப்படுவார்கள் என தெரிவித்துள்ளார். கிராமபுற பாடசாலைகளில் நிலவி வரும் பாரிய ஆசிரியர் பற்றாக்குறையை தீர்ப்பதற்கு இது உதவும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பொதுபல சேனா, ஜாதிக பல சேனாவுக்கு நீதிமன்றம் எச்சரிக்கை-

law helpபொதுபல சேனா, ஜாதிக பல சேனா ஆகிய இரு அமைப்புக்களும் சமயங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை பாதிக்கும் வகையில் செயற்படக் கூடாது என கொழும்பு கோட்டை பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. கொழும்பு நிப்பொன் ஹோட்டல் விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது பிரதான நீதிவான் திலின கமகே இவ்வுத்தரவினை பிறப்பித்துள்ளார். இவ்வழக்கு விசாரணையின்போது பொதுபல சேனாவின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட நால்வரை தலா 1 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் செல்வதற்கு நீதிமன்றம் அனுமதித்ததுடன் எதிர்வரும் ஜுன் 9ஆம் திகதி மீண்டும் மன்றில் ஆஜராகுமாறு பணித்துள்ளது.

பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு பயற்சி;, இலங்கை மறுப்பு-

ranuwa pechchaalarபாகிஸ்தானின் ஆதரவுபெற்ற தீவிரவாத அமைப்பினருக்கு இலங்கையில் ஆயுத பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படும் செய்திக்கு இலங்கை இராணுவம் மறுப்பு தெரிவித்துள்ளது. இந்த கூற்று ஆதாரமற்றது என தெரிவித்த இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய, பயங்கரவாத அமைப்பொன்றுக்கு உதவ வேண்டிய எந்தவொரு தேவையும் இலங்கைக்கு இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். இலங்கை இராணுவத்தினருக்கு பயிற்சியளிக்கவே உகந்த இடம் இலங்கையில் இல்லாத நிலையில், பயங்கரவாத அமைப்பொன்றுக்கு எவ்வாறு பயிற்சியளிப்பது என்றும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார். இலங்கையின் வட, கிழக்கு உட்பட அனைத்து காட்டுப் பகுதிகளிலும் அடிக்கடி தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அப்படியிருக்கையில், எந்தவொரு குழுவும் சுயமாகவோ அல்லது படை முகாம்களுக்குள் நுழைந்தோ பயிற்சிகளைப் பெற முடியாது என்றும் இராணுவ பேச்சாளர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

யாழில் வீடுவீடாக இராணுவத்தினர் பதிவு-

iranuvam pathivuயாழ். மானிப்பாய், உடுவில் வீதியிலுள்ள வீடுகளில் நேற்றுக்காலை, இராணுவத்தினரால் பதிவு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. யாழிலுள்ள இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்புக்களைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில், இந்த பதிவுகள் இடம்பெற்றதாக யாழ். படைத் தலைமையகம் தெரிவித்துள்ளது. பாதுகாப்பு அமைச்சின் ஏற்பாட்டில் நல்லிணக்க மையத்தினால் 1,350 இளைஞர், யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புக்களைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கிலான செயற்றிட்டத்திற்காகவே இந்தப் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் படைத் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது. மேற்படி செயற்றிட்டத்திற்காக நெல்லியடி மத்திய கல்லூரி மற்றும் கொக்குவில் இந்துக் கல்லூரி ஆகியவற்றில் முறையே ஏப்ரல் 17 மற்றும் 27ஆம் திகதிகளில் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன,

இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு மீண்டும் அகதிகள்-

Refugee_Indiaஇலங்கையைச் சேர்ந்த 10 பேர் சட்டவிரோதமாக படகு மூலம் இராமேஸ்வரத்தை சென்றடைந்துள்ளனர். இவர்கள் முல்லைத்தீவு மற்றும் வவுனியா ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர். மேற்படி இலங்கையர்களிடம் தமிழக கியூபிரிவு மற்றும் பொலீஸ் அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகம் சென்றவர்களுள் 5 குழந்தைகள் அடங்குகின்றனர். புலிகளைத் தேடுகிறோம் என்ற பெயரில் தமிழர்கள் துன்புறுத்தப்படுவதாக அவர்கள் இந்திய பாதுகாப்பு அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளதாகவும், குறித்த 10 பேரிடமும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரியவருகின்றது.

குறிப்பிடத்தக்களவு தாதியர் கடமைக்கு சமூகம்-

Thaathiyar purakanippuபணிப் பகிஷ்கரிப்பு முடிவுக்கு கொண்டுவரப்பட்டதை அடுத்து இன்று குறிப்பிடத்தக்களவு தாதியர்கள் பணிக்கு சமூகமளித்ததாக அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கம் தெரிவித்துள்ளது. எனினும், பல்வேறு அழுத்தங்களால் ஒரு சில தாதியர்கள் இன்றும் கடமைக்கு திரும்பவில்லை என சங்கத்தின் தலைவர் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் கூறியுள்ளார். மகப்பேற்று பயிற்சி தொடர்பான பிரச்சினையை அடிப்படையாக கொண்டு மேற்கொள்ளப்பட்டிருந்த பணி பகிஷ்கரிப்பை முடிவுக்கு கொண்டுவந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளனர். இப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக நிதி அமைச்சின் செயலர் கலாநிதி பீ.பி.ஜயசுந்தர தலைமையில் குழுவை நியமிக்க இணக்கம் தெரிவித்துள்ளதாக அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கம் அறிவித்துள்ளது. எவ்வாறாயினும், பிரச்சினைக்கு உரிய தீர்வு கிடைக்கும்வரை பணிப் பகிஷ்கரிப்பை முடிவுக்கு கொண்டுவரப்போவதில்லை என அரச தாதி உத்தியோகத்தர்கள் சங்கமும், அகில இலங்கை தாதியர் சங்கமும் தெரிவித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

அச்சுவேலி முக்கொலை சந்தேகநபருக்கு விளக்கமறியல்-

achchuveli policeachchuveli kolai (2)யாழ். அச்சுவேலியில் இடம்பெற்ற முக்கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபரை எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் ஜோய் மகாதேவா இன்று உத்தரவிட்டுள்ளார். சந்தேகநபரினை பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் இன்று நீதிமன்றில் ஆஜர்ப்படுத்திய வேளையிலேயே நீதவான் மேற்படி உத்தரவினைப் பிறப்பித்துள்ளார். அச்சுவேலி காதரிப்பாய் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், மகன் மற்றும் மகள் மூவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டதுடன், மேலும் இருவர் படுகாயமடைந்தனர். கொலைகளுடன் தொடர்புடையவரென, படுகாயமடைந்துள்ள தர்மிகாவின் கணவர் பொ.தனஞ்செயன் ஊரெழுவில் வைத்து கோப்பாய் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு அச்சுவேலிப் பொலிஸில் ஒப்படைக்கப்பட்டார். கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆட்டோவை கைப்பற்றிய பொலீஸார், ஆட்டோ உரிமையாளரையும் நேற்று கைது செய்தனர். Read more

கொழும்பில் தமிழர்கள் மீண்டும் குறி வைப்பு-

colombo 'கொழும்பு நகரில் அண்மைக்காலமாக தமிழ் மக்களைக் குறிவைத்து மேற்கொள்ளப்படும் வழிப்பறி நடவடிக்கைகள் மீண்டும் அதிகரித்துள்ளன. குறித்த சில இனந்தெரியாத நபர்களால் தாம் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் எனக் கூறியும் அடையாள அட்டையைக் காட்டுமாறு மிரட்டியும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுகின்றன. கடந்த சில தினங்களுக்கு முன்னர் கல்கிஸை பகுதியில் இரு தமிழ் ஆசிரியைகள் அணிந்திருந்த ஆபரணங்களை அபகரிக்க முயற்சித்த போதிலும் அது பயனளிக்கவில்லை. இச்சம்பவம் குறித்து ஆசிரியர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில், நான் கல்கிஸைப் பகுதி தமிழ்ப் பாடசாலையொன்றில் பணியாற்றுகின்றேன். காலை வேளையில் பிரதான பாதையைக் கடக்க முற்பட்ட சமயத்தில் நெடிய தோற்றத்துடன் பின்னால் ஒருவர் அழைத்தார். தான் குற்றப்புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்தவர் என்றும், விசாரணையின் பொருட்டு எனது அடையாள அட்டையை காண்பிக்குமாறும் அதிகாரத் தொனியில் கேட்டார். உடனே நானும் அடையாள அட்டையைக் காட்டினேன். இணைக்கும் நொடியில் அவருடன் இணைந்து கொண்ட இன்னொருவர் எனது கையிலிருந்த மோதிரத்தை கழற்றுமாறும் மிரட்டினார். அதிர்ஷ்டவசமாக பின்னால் வந்த பொலிஸ் வண்டியைக் கண்டதும் இருவரும் விரைந்து சென்று விட்டார்கள். இவ்வாறானதொரு சம்பவம் என்னுடன் பணியாற்றும் சக ஆசிரியை ஒருவருக்கும் இடம்பெற்றுள்ளது எனக் கூறினார்.

இலங்கை வர்த்தகக் குழு ஓமானுக்கு விஜயம்-

omanஇலங்கையின் வர்த்தகக் குழு ஒன்று ஓமானுக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளது. நான்கு நாட்கள் அங்கு தங்கியிருந்து பல்வேறு வர்த்தக வாய்ப்புகள் தொடர்பில் இக்குழு ஆய்வு செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் வர்த்தக சம்மேளனத்தினரின் அனுசரணையில் குழுவின் விஜயம் அமைகிறது. இதற்கான ஏற்பாடுகளை ஓமானில் உள்ள இலங்கை தூதரகம் மேற்கொண்டுள்ளது. சுற்றுலாத்துறை, மருந்துப் பொருள் வர்த்தகம், பழங்கள் மற்றும் மரக்கறிவைக ஏற்றுமதி மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த வர்த்தகத்துறை சார்ந்த பிரதிநிதிகள் இந்த குழுவில் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

கனேடிய பாடசாலையில் புலிகளின் கொடிக்கு தடை-

imagesCA47OAWZபுலிகளின் கொடியை கனேடிய உயர்கல்வி பாடசாலை ஒன்று தடை செய்துள்ளது. தென்மேற்கு ஒன்டோரியோவில் உள்ள பாடசாலை ஒன்று இந்த தடையை ஏற்படுத்தியுள்ளது. குமார் மார்கண்டு என்று மாணவர் ஒருவர் கடந்த இரண்டு வருடங்களாக புலிகளின் கொடியை தமிழர்களின் கொடி என கூறி, அந்த பாடசாலையில் இடம்பெறும் வருடாந்த பேரணியில் காட்சிப்படுத்தி வந்துள்ளார். எனினும் கடந்த வெள்ளிக்கிழமை இந்த கொடியை அங்கு காட்சிப்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சபாநாயகர் கமலேஷ் சர்மார் சந்திப்பு-

kamalesh sharmaபொதுநலவாய நாடுகளின் பொது செயலாளர் கமலேஷ் சர்மாவுக்கும், நாடாளுமன்ற சபாநாயகர் சமல் ராஜபக்ஷவுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. லண்டனில் உள்ள பொதுநலவாய நாடுளின் தலைமையகத்தில் வைத்து இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்போது சட்டத்துறை சீர்த்திருத்தங்கள் மற்றும் நியமனங்கள் பற்றி பேச்ப்பட்டதாக தெரியவருகிறது.

அலுகோஸ் என்ற பெயரை மாற்றம் செய்ய நடவடிக்கை-

alugusuதூக்குத் தண்டனை பெற்ற கைதிகளை தூக்கிலிடும் அலுகோஸ் என்ற பெயரினை மாற்றுவதற்கு தீர்மானித்துளளது. தூக்கு மேடையினை தயார் நிலையில் வைத்திருப்பவர் மற்றும் தூக்குத் தண்டனையினை நிறைவேற்றுபவர் அலுகோஸ் என அழைக்கப்பட்டு வந்தவர். எனினும் அலுகோஸ் என்ற பெயரை கௌரவமளிக்கும் வகையிலான பெயருக்கு மாற்ற திட்டமிட்டுள்ளதாக சிறைச்சாலையின் பேச்சாளர் துஷார உப்புல்தெனிய கூறியுள்ளார். உரிய பெயர் மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக மொழி நிபுணர்களின் சேவை பெறப்படும் என கூறப்பட்டுள்ளது. அண்மையில் இந்த பணிக்காக தெரிவான நால்வர், சில வாரங்களின் பின், தமது பதவியிலிருந்து முன் அறிவித்தல் இன்றி விலகிச் சென்றுள்ளனர். அலுகோஸ் என்ற சொற்பதத்திற்கு ஈவிரக்கமற்ற பாவச்செயல் போன்ற கருத்தை கொண்டுள்ளதனால் இந்த பதத்தினை மாற்ற திட்டமிட்டுள்ளதாக சிறைச்சாலையின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

தாதியர்களின் சேவைப் புறக்கணிப்பு தொடர்கிறது-

Thaathiyar purakanippuநாடெங்கிலும் உள்ள அரச வைத்தியசாலைகளின் தாதியர்கள் தொடர்ந்தும் தங்களின் சேவைப் புறக்கணிப்பை முன்னெடுக்கின்றனர். மகப்பெற்று வைத்தியம் தொடர்பான பயிற்சி வழங்கல் குறித்து ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் காரணமாக இந்த போராட்டம் நேற்றையதினம் முதல் முன்னெடுக்கப்படுகிறது. இதனால் வடக்கு கிழக்கு உள்ளிட்ட 650க்கும் அதிகமான வைத்தியசாலைகள் பாதிப்படைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்களின் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் வரையில் இந்த போராட்டத்தை கைவிடப் போவதில்லை என்று தாதியர்களின் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது. எனினும் அவசர சிகிச்சைப் பிரிவுகளின் செயற்பாடுகள் தொடரும் என்று மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலேசிய விமானம் தொடர்பில் 11 அல் கெய்டாவினர் கைது-

airகாணாமல் போன மலேசிய விமானம் தொடர்பில் சந்தேகத்தின்பேரில் அல் கெய்டா அமைப்பைச் சேர்ந்த 11பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இவர்கள் நேற்றிரவு கைதுசெய்யப்பட்டதாக கூறப்படுகிறது. கைதான தீவிரவாதிகள் அனைவரும் 22 முதல் 55 வயதுடையவர்கள். இவர்களுள் விதவையொருவரும் அடங்குவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்து சமுத்திரத்தின் தென் பகுதியில் குறித்த விமானம் விழுந்திருக்காலாம் என தெரிவிக்கப்படுகின்ற போதிலும் அதற்கான ஆதாரம் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை. தற்போது காணாமல் போன மலேசிய விமானத்தை இந்த 11 தீவிரவாதிகள் கடத்தியிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்திய துணைத்தூதுவருக்கு பிரிவுபசாரம்-

INTHIYA THOOTHUVAR PIRIYAVIDAI (2)INTHIYA THOOTHUVAR PIRIYAVIDAI (1)கயானா நாட்டுக்கு மாற்றம் பெற்றுச் செல்லும் இந்திய துணைத்தூதுவர் வி.மகாலிங்கத்திற்கு அகில இலங்கை இந்து மாமன்றத்தின் ஏற்பாட்டில் பிரிவுபசார நிகழ்வு நடாத்தப்பட்டது. நல்லூர் நடராஜா பரமேஸ்வரி மண்டபத்தில் நேற்று இரவு 6.30 மணியளவில் நடைபெற்ற இந்நிகழ்வில் இந்து மாமன்றத்தினரால் இந்திய துணைத்தூதுவர் வி மகாலிங்கத்திற்கு பென்னாடை போர்த்தியும் நினைவுச் சின்னமும் வழங்கியும் கௌரவிக்கப்பட்டது. இந் நிகழ்வில் வடமாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா, மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன், யாழ்.மாநகர சபை முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா, யாழ்.பல்கலைகழக துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம் யாழ்.பல்கலைகழக பேராசிரியர்கள் இந்துமா மன்றத்தினர் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

கோபியின் மனைவி விடுதலை-

gopiபயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் அண்மையில் கைதுசெய்யப்பட்டு பூஸா தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களில் மூன்று பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் வெள்ளியன்று விடுதலை செய்யப்பட்டுள்ளதுடன், மற்றுமொருவர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நால்வரில் இருவர் பெண்கள். இருவர் ஆண்களாவர். நெடுங்கேணியில் சுட்டுக்கொல்லப்பட்ட மூன்று பேரில் ஒருவரான கோபி என்கிற கஜீபனின் மனைவி சர்மிளா, கஜீபனின் தாயாருக்கு உதவியாக இருந்ததாக தெரிவிக்கப்படும் புவனேஸ்வரி ஆகிய இரு பெண்களே விடுதலை செய்யப்பட்டுள்ளனர். நாட்டில் பயங்கரவாதத்தை மீண்டும் உருவாக்குவதற்கும் புலிகளை மீளிணையச் செய்வதற்கும் முயற்சிகளை மேற்கொண்டிருந்தார்கள் என்றே கோபி என்ற கஜீபன் உள்ளிட்ட மூவரின் மீதும் அரசு குற்றம் சாட்டியிருந்தது. இச்சம்பவத்தில் பேக்கரி உரிமையாளர் எனக் கூறப்படும் ஒருவரும் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். அந்த பேக்கரியில் பணியாற்றியதாகத் தெரிவிக்கப்படும் மற்றுமொருவரும் விடுதலையாகியுள்ளதாக கூறப்படுகிறது.

ஐ.நா விசாரணைக்குழு தொடர்பில் இம்மாத இறுதியில் அறிவிப்பு-

UNஇலங்கை தொடர்பில் விசாரணை நடத்தவுள்ள விசாரணைக்குழு குறித்து இந்த மாத இறுதியில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழு அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விசாரணைக் குழுவுக்கான ஆளணித் தெரிவுகள் தற்போது இடம்பெறுவதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். அத்துடன் இந்த விசாரணைக்கான வரவு செலவுத்திட்டம் இன்னும் ஐக்கிய நாடுகள் சபையினால் அங்கீகரிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது. இந்த வரவு செலவுத் திட்டம் அங்கீரிக்கப்பட்டதன் பின்னர் விசாரணைக்கான நடவடிக்கைகள் குறித்து உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

அச்சுவேலியில் மூவர் படுகொலை, சந்தேகநபர் கைது-

ACHCHUVELI KOLAI (2)ACHCHUVELI KOLAI (1)

யாழ். அச்சுவேலியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் இன்று அதிகாலை வெட்டிக் கொலைசெய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் இன்றுகாலை கோப்பாய் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு, தம்மிடம் ஒப்படைக்கப்பட்டதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன் இந்த முக்கொலைக்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் ஆட்டோவை நவக்கிரி பகுதியிலிருந்து மீட்டதாகவும், இந்த ஆட்டோவிற்குள் பெருமளவு இரத்தக்கறைகள் இருந்ததாகவும் பொலிஸார் கூறியுள்ளனர். படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள தர்மிகாவின் கணவரான தனஞ்செயன் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர். இந்தக் கொலைகள் தொடர்பில் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் குறித்த நபரே கொலைகளுக்கு காரணம் என தெரியவந்ததை அடுத்து, ஊரெழுப் பகுதியில் குறித்த நபர் மறைந்திருந்தபோது கைதுசெய்யப்பட்டுள்ளார். அச்சுவேலி காதரிப்பாய் பகுதியில் ஒரே குடும்பத்தினைச் சேர்ந்த தாய், மகன் மற்றும் மகள் மூவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டதுடன், மேலும் இருவர் படுகாயமடைந்து யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இன்று அதிகாலை 1 மணியளவில் இடம்பெற்ற Read more

சவரிமுத்து சைமன்பிள்ளை அவர்களின் மறைவிற்கு புளொட் அனுதாபம்-

saimonpillai

திரு சவரிமுத்து சைமன்பிள்ளை

நெடுந்தீவு கிழக்கை பிறப்பிடமாகவும், வவுனியா பெரிய தம்பனையை வதிவிடமாகவும் கொண்ட திரு சவரிமுத்து சைமன்பிள்ளை அவர்கள் 30.04.2014 புதன்கிழமை மரணமெய்தினார் என்பதை புளொட் அமைப்பினராகிய நாம் மிகவும் துயருடன் அறியத் தருகின்றோம்.

சேவை மனப்பான்மையில் – மக்கள் தேவை அறிந்து செயற்பட்ட நல்லதோர் மனிதரை நாமிழ்ந்து நிற்கின்றோம் வெள்ளை உள்ளம்-சிறு பிள்ளைகுணம் கொண்ட இவர்-எம் விடுதலைப் பயணத்தின் விருட்சமாய் திகழ்ந்தவர்

எம் பயணத்தில் திசையாயும் இருந்தார் திசை காட்டியுமாய் இருந்தார் இன்று-எம்மைவிட்டு போன செய்தி இதயத்தையே நோக வைக்கிறது அவரின் சேவை எண்ணி ஆறாத்துயரோடு-நாம் அஞ்சலித்து நிற்கின்றோம்

அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர், தோழர்கள், நண்பர்கள், உறவுகளுக்கு நாம் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (DPLF) (நாளை 04.05.2014 காலை 10மணிக்கு பெரியதம்பனையில் இறுதிக்கிரியைகள் இடம்பெறும்.)

இன்று உலக பத்திரிகை சுதந்திர தினம்-

Oodaka suthanthira thinamஇன்று உலக பத்திரிகை சுதந்திர தினமாகும். உலக பத்திரிகை சுதந்திர தினமானது பத்திரிகை சுதந்திரத்தை பரப்பும் நோக்கிலும், மனித உரிமைகள் சாசனத்தின் 19ஆம் பிரிவின் பிரகாரம் கருத்து சுதந்திரத்தை உலக நாடுகளின் அரசாங்கங்களுக்கு நினைவூட்டவும்; ஐ.நா சபையினால் பிரகடனப்படுத்தப்பட்டது. 1993ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட தீர்மானத்தின்படி, ஆண்டுதோறும் மே மாதம் 3ஆம் திகதி பத்திரிகை சுதந்திர நாளாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. சிறந்த எதிர்காலத்திற்கான ஊடக சுதந்திரம் 2015ஆம் ஆண்டிற்குப் பின்னராக அபிவிருத்தி நிகழ்ச்சி நிரலை கூர்ப்படுத்தல் எனும் தொனிப்பொருளில் இம்முறை உலக ஊடக சுதந்திர தினம் அனுஷ்டிக்கப்படுகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

நீர் வேலியில் கூட்டமைப்பின் பணிமனை திறந்துவைப்பு-

TNA neerveliதமிழ் தேசியக் கூட்டமைப்பின் கோப்பாய் பிரதேச பணிமனை இன்றுகாலை 9 மணியளவில் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. யாழ்- பருத்தித்துறை வீதியில் நீர்வேலி அத்தியார் இந்துக்கல்லூரிக்கு அருகாமையில் அமைந்துள்ள இந்த அலுவலகத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா திறந்துவைத்துள்ளார். இந்நிகழ்விற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன், வட மாகாணசபை உறுப்பினர்கள், உள்ளுராட்சி மன்றத் தலைவர்கள், உறுப்பினர்கள் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவாளர்களும் பங்கேற்றிருந்தனர்.

தாதியர் பணிப்பகிஷ்கரிப்பால் வைத்திய சேவைகள் ஸ்தம்பிதம்-

Thaathiyar purakanippuஅரச தாதி உத்தியோகத்தர்கள் நாடளாவிய ரீதியில் ஆரம்பித்துள்ள பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக நாட்டின் அநேகமான வைத்தியசாலைகளின் நடவடிக்கைகள் ஸ்தம்பிதமடைந்துள்ளன. பிரசவ பயிற்சியினை வழங்குமாறு கோரியே இவர்கள் இந்த பணிப்பகிஷ்கரிப்பினை ஆரம்பித்துள்ளனர். இந்த பிரச்சினன தொடர்பாக சுகாதார அமைச்சருடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பு தோல்வியில் முடிந்ததைத் தொடர்ந்தே இன்று இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக இரத்தினபுரி, யாழ்பாணம், கராப்பிட்டி, தங்காலை, பொலநறுவை, அநுராதபுரம், மாத்தறை, கலேன் பிந்துனுவௌ, மாத்தளை, களுத்துறை, காலி உள்ளிட்ட பகுதி வைத்தியசாலைகளில் ஸ்தம்பிதநிலை ஏற்பட்டுள்ளது. குடும்பநல சுகாதார சேவை உத்தியோகத்தர்களுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக தாதி உத்தியோகத்தர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலை உள்ளிட்ட பல வைத்தியசாலைகளில் பணிப்பகிஷ்கரிப்பினை ஆரம்பித்துள்ளனர். யாழ்பாணம், இரத்தினபுரி, கராப்பிட்டி, தங்காலை, எல்பிட்டி மற்றும் கம்பளை ஆகிய பகுதி வைத்தியசாலைகளிலும் பணிப்பகிஷ்கரிப்பு தொடர்கின்றது. குருநாகல் போதனா வைத்தியசாலையின் தாதி உத்தியோகத்தர்கள் அவசர பிரிவு கடமைகளில் இருந்தும் விலகியுள்ளனர்.

ஐக்கிய தேசியக் கட்சியினர் ஆர்ப்பாட்டம்-

UNPஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் ஹம்பாந்தொட்டை பொலீஸ் நிலையத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தி வருகின்றனர். கடந்த ஏப்ரல் மாதம் 17ம் திகதி ஐக்கிய தேசிய கட்சியின் ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு எதிராகவே இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. ஐ.தே.கட்சியினர்மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலின்போது பொலீசார் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததாக அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். இந்த நிலையிலேயே அவர்கள் பொலீஸ் நிலையத்துக்கு முன்னால் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பேச்சுவார்த்தையில் பங்கேற்க 26 இந்திய மீனவப் பிரதிநிதிகள்-

indian lankan fishermenஇலங்கை மற்றும் இந்திய மீனவர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தைகளின் பொருட்டு, இந்தியாவிலிருந்து 26 பிரதிநிதிகள் கலந்து கொள்ளவுள்ளனர். இலங்கை மீன்பிடித்திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது. இந்த பேச்சுவார்த்தைகள் எதிர்வரும் 12ம் திகதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே இந்த பேச்சுவார்த்தைகளின் முதல்சுற்று கடந்த ஜனவரி மாதம் 27ம் திகதி சென்னையில் இடம்பெற்றது. இரண்டாம் சுற்று பேச்சுவார்த்தை கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து பல்வேறு திகதிகளுக்கு மாற்றப்பட்டு வந்த நிலையில், இறுதியாக இதனை எதிர்வரும் 12ம் திகதி நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதில் இலங்கை மீனவர்கள் சார்பில் 20 பேர் கலந்து கொள்ளவிருப்பதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸி செல்ல முயன்று கைதானவர்களிடம் விசாரணை-

boat to australiaசட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு பயணித்துக் கொண்டிருந்த வேளையில் கைது செய்யப்பட்ட 54பேரும் திருகோணமலை துறைமுகத்துக்கு அழைத்துவரப்பட்டு, இரகசிய பொலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்;. கடற்படையின் இணையத்தளத்தில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவில் இருந்து 20 கடல்மைல் தொலைவில் அவர்களின் படகு கடற்படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டு, 54பேரும் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 30 ஆண்களும், 11 பெண்களும், 13 சிறார்களும் அடங்குகின்றனர். இந்நிலையில் அவர்கள் இரகசிய பொலீசாரிடம் மேலதிக விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

தமிழ் எழுத்துப் பிழைகள் தொடர்பில் ஆய்வு-

minister vasudeva_lanka_mistranslation 4அரசாங்க நிறுவனங்களில் வைக்கப்பட்டுள்ள பெயர்ப் பலகைகளில் காணப்படும் தமிழ் எழுத்துப் பிழைகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருங்கிணைப்பு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார இதனைத் தெரிவித்துள்ளார். காலி – கொழும்பு தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் வைக்கப்பட்டுள்ள பெயர்ப் பலகை ஒன்றில் இவ்வாறு தமிழ் எழுத்துப் பிழைகள் காணப்படுகின்றமை தொடர்பில் தமது கவனத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக அமைச்சர்; குறிப்பிட்டுள்ளார். இவ்வாறான எழுத்துப் பிழைகள் தவிர்க்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில், அது தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தப்படும் என்று அமைச்சர் வாசுதேவ நாணயக்கார கூறியுள்ளார்.

வடபகுதிக்கான ரயில் சேவைகள் வழமைக்குத் திரும்பின-
Vadapakuthi trainகுருநாகல், பொத்துஹெர பகுதியில் கடந்த புதன்கிழமை காலை இடம்பெற்ற ரயில் விபத்தைத் தொடர்ந்து, இடைநிறுத்தப்பட்டிருந்த வடபகுதிக்கான ரயில் சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளதாக ரயில்வே திணைக்களம் இன்று தெரிவித்துள்ளது. கொழும்பிலிருந்து பளைக்கான ரயில்சேவை அட்டவணையின்படி இன்று இயங்குவதாகவும் சிறு திருத்தங்கள் இன்று காலையுடன் பூர்த்தியடைந்துள்ளதாகவும் பிற்பகல் 2 மணியுடன் ரயில் பாதை முற்று முழுதாக தயாராகுமெனவும் ரயில்வே அத்தியட்சகர் எல்.ஏ.ஆர்.ரத்நாயக்க கூறியிருந்தார்.