இலங்கை ஜனாதிபதி பொலிவியாவுக்கு விஜயம்
பொலிவியா, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு சமாதானத்திற்கான விசேட விருது ஒன்றை வழங்க உள்ளது. சமாதானம் மற்றும் ஜனநாயகத்திற்கான விசேட விருது ஒன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு வழங்கப்படவுள்ளது. பொலிவியாவின் இல் முன்டோ என்னும் பத்திரிகை இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது. ஜீ77 மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தற்போது பொலியாவிற்கு விஜயம் செய்துள்ளார்.
ஜனநாயகத்திற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டவர்களுக்காக இந்த விருது வழங்கப்பட உள்ளது. ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் பான் கீ மூன் உள்ளிட்ட பல தலைவர்கள் ஜீ77 மாநாட்டில் பங்கேற்க உள்ளனர். பொலியாவிற்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி பல நாட்டுத் தலைவர்களுடன் இரு தரப்பு உறவுகள் பற்றி பேசப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது