வவுனியா பரமேஸ்வரா வித்தியாலயத்தில் சரஸ்வதி சிலை திறந்துவைப்பு-
 வவுனியா, அண்ணாநகர் பரமேஸ்வரா வித்தியாலயத்தில் கல்வித் தெய்வம் சரஸ்வதிக்கு சிலை அமைக்கப்பட்டு நேற்று 23.06.2014 திங்கட்கிழமை திறந்து வைக்கப்பட்டது. வவுனியா தெற்கு வலயத்தில் உள்ள அண்ணாநகர் பரமேஸ்வரா விதிதியாலயம் சிறப்பாக வளர்ந்து வரும் பாடசாலைகளில் ஒன்று. இப் பாடசாலையின்
வவுனியா, அண்ணாநகர் பரமேஸ்வரா வித்தியாலயத்தில் கல்வித் தெய்வம் சரஸ்வதிக்கு சிலை அமைக்கப்பட்டு நேற்று 23.06.2014 திங்கட்கிழமை திறந்து வைக்கப்பட்டது. வவுனியா தெற்கு வலயத்தில் உள்ள அண்ணாநகர் பரமேஸ்வரா விதிதியாலயம் சிறப்பாக வளர்ந்து வரும் பாடசாலைகளில் ஒன்று. இப் பாடசாலையின்  வளாகத்தில் இந்து சமய மாணவர்களினது வழிபாட்டுக்காகவும் தமிழ் பராம்பரிய கலாசாரத்தை பேணும் நோக்குடனும் சரஸ்வதி சிலை நிறுவப்பட்டுள்ளது. வவுனியா, திருநாவற்குளத்தைச் சேர்ந்தவரும் தற்போது லண்டனில் வசிப்பவருமான புளொட் அமைப்பைச் சேர்ந்த தர்மலிங்கம் நாகராஜா அவர்களின் நிதி உதவியில் அமைக்கப்பட்ட இச் சிலையினை புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ்
வளாகத்தில் இந்து சமய மாணவர்களினது வழிபாட்டுக்காகவும் தமிழ் பராம்பரிய கலாசாரத்தை பேணும் நோக்குடனும் சரஸ்வதி சிலை நிறுவப்பட்டுள்ளது. வவுனியா, திருநாவற்குளத்தைச் சேர்ந்தவரும் தற்போது லண்டனில் வசிப்பவருமான புளொட் அமைப்பைச் சேர்ந்த தர்மலிங்கம் நாகராஜா அவர்களின் நிதி உதவியில் அமைக்கப்பட்ட இச் சிலையினை புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ்  தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் திரைநீக்கம் செய்து வைத்தார். இதன்போது கடந்த வருடம் இப் பாடசாலையில் கல்விபயின்று நூறுவீத சித்திபெற்று உயர்தரத்திற்கு தகுதியாகி பாடசாலைக்கு பெருமை தேடிக் கொடுத்த எட்டு மாணவர்களுக்கும்
தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் திரைநீக்கம் செய்து வைத்தார். இதன்போது கடந்த வருடம் இப் பாடசாலையில் கல்விபயின்று நூறுவீத சித்திபெற்று உயர்தரத்திற்கு தகுதியாகி பாடசாலைக்கு பெருமை தேடிக் கொடுத்த எட்டு மாணவர்களுக்கும் 

 பதக்கம் அணிவித்து கௌரவிக்கப்பட்டது. வறுமைக் கோட்டின்கீழ் இருந்த மாணவன் ஒருவருக்கான கல்விச் செலவும் தொடர்ச்சியாக வழங்குவதாக உறுதியளிக்கப்பட்டு அதற்கான வங்கிக் கணக்கும் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இவற்றுக்கான நிதிகள் யாவும் தர்மலிங்கம் நாகராஜா அவர்களினால் வழங்கப்பட்டது. இது தவிர, வறுமைக் கோட்டின்கீழ் தமது கல்வியைத் தொடரும் இம் மாணவர்களுக்கு பாதணிகளும் புளொட் அமைப்பினால் வழங்கி வைக்கப்பட்டது. பாடசாலை அதிபர் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில், புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் வடமாகாணசபை உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், புளொட்டின் மத்தியகுழு உறுப்பினரும், வன்னிப் பிராந்திய அமைப்பாளருமான சிவநேசன் (பவன்), வவுனியாவின் முன்னாள் உப நகரபிதாவும் புளொட் முக்கியஸ்தருமான சந்திரகுலசிங்கம் (மோகன்), அன்பர் தர்மலிங்கம் நாகராஜா, பாடசாலையின் முன்னாள் அதிபர் பூலோகசிங்கம், வலயக் கல்விப் பணிமனையின் செயற்திட்ட உத்தியோகத்தர் உள்ளிட்ட பெருமளவிலானோர் கலந்து கொண்டிருந்தனர்.