Header image alt text

தமிழக முதல்வருக்கு அமைச்சர் கெஹெலிய கண்டனம்

kehaliya rambukwellaModi_JayaPTI_231-3002தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் இலங்கையின் இனப்படுகொலை என்ற வார்த்தையை பிரயோகித்தமைக்கு, இலங்கையரசு கண்டனம் தெரிவித்துள்ளது. அண்மையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்திருந்த ஜெயலலிதா ஜெயராம், அதன் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போது, இனப்படுகொலை புரிந்த இலங்கைக்கு எதிராக ஐ.நா சபையில் பிரேரணை ஒன்றை இந்தியா கொண்டுவர வேண்டும் என்று தெரிவித்திருந்தார். எனினும் ஜனநாயக நாடுகளுக்கு இடையில் இவ்வாறு இனப்படுகொலை என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகின்றமை முற்றிலும் தவறானது. அத்துடன் இந்தியாவில் தனிப் பெரும்பான்மையை மத்திய அரசாங்கம் அடைந்துள்ளமை இலங்கைக்கு நன்மையை தரும் என அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல கூறியுள்ளார். நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார். —மேலும் செய்திகள்———- Read more

தியாகி பொன். சிவகுமாரனின் 40ம் ஆண்டு நினைவுதினம்-

siva[1]தியாகி உரும்பிராய் பொன்.சிவகுமாரனின் 40ம் ஆண்டு நினைவுதினம் இன்றாகும். பொன்.சிவகுமாரன் தமிழ் மக்களின் விடிவிற்கான ஆயுதப் போராட்டத்தின் ஆரம்ப ஹர்த்தாக்களில் ஒருவராவார். பொன்.சிவகுமாரான் தமிழ் மக்கள் மத்தியில் அன்பையும், மதிப்பினையும் பெருமளவில் பெற்றிருந்தார். இலங்கை போராட்ட வரலாற்றில் தமிழ் மக்களின் விடிவிற்காக முதன்முறையாக தம் இன்னுயிரைத் தியாகம் செய்து ஒரு வரலாறினை இவர் படைத்தார். 1950ம் ஆண்டு ஜூன் மாதம் 26ம் திகதி பிறந்த இவர் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரின் முன்னாள் மாணவராவார். அவர் 1974ம் ஆண்டு ஜூன்மாதம் 5ம்திகதி பொலீசாரின் சுற்றிவளைப்பின்போது அவர்களிடம் அகப்படாமல் அவர் தன்னுயிரை தியாகம் செய்தாரென்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின் அனுசரணையில் வவுனியா பாடசாலை மாணவர்களுக்கு உதவி

swiss pungudutive ontriyam  anusaranai (31)swiss pungudutive ontriyam  anusaranai (18)swiss pungudutive ontriyam  anusaranai (28)swiss pungudutive ontriyam  anusaranai (30)swiss pungudutive ontriyam  anusaranai (26)swiss pungudutive ontriyam  anusaranai (23)

swiss pungudutive ontriyam  anusaranai (24)DSC06639DSC06637DSC06636DSC06635DSC06634DSC06633DSC06617புங்குடுதீவை பிறப்பிடமாகவும், வட்டகச்சியை வசிப்பிடமாகவும் சுவிஸ்சை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட அமரர் செல்வி. பரஞ்சோதி செல்வநிதி அவர்களின் ஓராண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது சகோதரி திருமதி சிவநிதி பன்னீர்செல்வம் அவர்களின் குடும்பத்தினரால் சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் அனுசரணையில் வவுனியா, விளக்குவைத்தகுளம் பகுதி மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. புதியவேலர் சின்னக்குளம் ஆனந்தகுமாரசாமி வித்தியாலயம், றம்பைக்குளம் நடராஜா வித்தியாலயம், விளாத்திக்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை ஆகிய மூன்று பாடசாலைகளின் ஐம்பதுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்குத் தேவையான கற்றல் உபகரணங்களே 01.06.2014 அன்று விளக்குவைத்தகுளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் வைத்து வழங்கப்பட்டுள்ளது. யுத்தத்தினால் இடம்பெயாந்து தற்போது மீள்குடியேறி 5 வருடங்கள் கடந்த நிலையிலும், தமது பிள்ளைகளின் கற்றல் செயற்பாட்டை தொடர்ச்சியாக முன்னெடுப்பதில் பல பிரச்சினைகளை பொருளாதார ரீதியில் எதிர்கொண்ட 52 குடும்பங்களின் 52 மாணவர்களுக்கு இவ்வுதவி வழங்கப்பட்டுள்ளது. இந் நிகழ்வில் புளொட் முக்கியஸ்தரும், கோயில்குளம் இளைஞர் கழக ஸ்தாபகரும், வவுனியாவின் முன்னாள் உப நகரபிதாவுமான க.சந்திரகுலசிங்கம் (மோகன்), ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி வவுனியா கிளையைச் சேர்ந்த திரு.மு.கண்ணதாசன், வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை உறுப்பினருமான ஜோர்ஜ் வொசிங்டன், வவுனியா நகர வரியிறுப்பாளர் சங்கத் தலைவர் செ.சந்திரகுமார் (கண்ணன்), கோயில்குளம் இளைஞர் கழகத்தைச் சேர்ந்த ஜனார்த்தனன், காண்டீபன், சதீஸ், மகிழங்குளம் கிராம அபிவிருத்திச் சங்க தலைவர் சி.கோபாலசிங்கள், மகிழங்குளம் பெண்கள் கிராம அபிவிருத்திச்சங்க தலைவர் கோ.சரஸ்வதி, மகிழங்குளம் சனசமூக நிலைய பொருளாளர் தி.சோதிநாதன், சமூக சேவையாளர் கேதீஸ் மற்றும் மாணவர்கள், பெற்றோர், பொதுமக்கள் என பலரும் இதில் பங்கேற்றிருந்தனர்.

மாகாணங்களுக்கு பொலிஸ் அதிகாரம் வழங்கப்பட மாட்டாது-அமைச்சர் பீரிஸ்-

police athikaramஇலங்கையில் மாகாணங்களுக்கு பொலிஸ் அதிகாரங்கள் அளிக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார். இந்த விடயம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவால் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் தெரிவிக்கப்பட்டது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார், எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விகரமசிங்க நேற்று பாராளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இதனைக் கூறியுள்ளார். நரேந்திர மோடி இந்தியப் பிரதமராக பதவியேற்கும் விழாவுக்கு சென்ற இலங்கை ஜனாதிபதி தலைமையிலான குழுவினர், அவர் பதவியேற்ற அடுத்தநாள் நிகழ்த்திய பேச்சுவார்த்தைகளின் போது இது தெரிவிக்கப்பட்டது. மாகாணங்களுக்கு பொலிஸ் அதிகாரங்கள் வழங்குவதில்லை என்பதில் இலங்கை அரசு உறுதியான கொள்கையைக் கொண்டிருக்கிறது என்று இந்தியத் தரப்பிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு இனத்துவ காரணங்களோ அல்லது வடகிழக்குப் பகுதி தொடர்பாக அரசு கொண்டுள்ள கொள்கைகளோ காரணங்கள் இல்லை என்பதையும் எமது தரப்பு இந்தியாவிற்கு கூறியுள்ளது அரசியல் பிரச்சினைக்கான தீர்வு பாராளுமன்றத் தேர்வுக் குழுவின் மூலமே ஏற்பட முடியும் என்பதையும் இலங்கைத் தரப்பு மீண்டும் இந்தியாவிடம் வலியுறுத்தியுள்ளது. என்றார் அவர்.

காணாமல் போனோரின் உறவினர்கள் முல்லைத்தீவில் போராட்டம்-

kaanaamal ponor uravinarkal (1)kaanaamal ponor uravinarkal (2)காணாமல் போனோரைக் கண்டுபிடித்து தருமாறு கோரி அவர்களது உறவினர்களால் முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக இன்று கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது. தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆகியவற்றின் ஏற்பாட்டில் இப்போராட்டம் நடைபெற்றது. இந்த கவனயீர்ப்பு போராட்டம் இன்று முற்பகல் 9 மணிமுதல் 11 மணிவரை இடம்பெற்றது. காணாமல் போனோரின் உறவினர்கள் பலரும் இந்தக் கவனயீர்ப்புப் ரோட்டத்தில் பங்கேற்றிருந்தனர். ‘காணாமல்போனோர் வழக்கின் தீர்ப்பு விரைவுபடுத்தப்பட வேண்டும்’, ‘இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்ட எமது பிள்ளைகள் எங்கே’ போன்ற வாசகங்கள் அடங்கிய சுலோகங்களையும் அவர்கள் ஏந்தியிருந்தனர். பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன், எம்.கே. சிவாஜிலிங்கம், அனந்தி சசிதரன் உள்ளிட்ட வட மாகாணசபை உறுப்பினர்களும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராஜா கஜேந்நிரன் உட்பட பலரும் இதில் கலந்துகொண்டிருந்தனர்.

132 பேர் மாத்திரமே புனர்வாழ்வளிக்கப்பட வேண்டியுள்ளனர்-ஆணையாளர்-

132 per mattume132 முன்னாள் புலி உறுப்பினர்களே தற்போது புனர்வாழ்வளிக்கப்பட வேண்டியுள்ளனர் என புனர்வாழ்வு ஆணையாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. 2009ம் ஆண்டு யுத்தம் முடிவுற்ற போது, 12000 முன்னாள் புலி உறுப்பினர்கள் சரணடைந்தும், கைதுசெய்யப்பட்டும் இருந்ததாகவும்,  அவர்களில் தற்போது 132பேர் தற்போது வவுனியா முகாம்களில் புனர்வாழ்வளிக்கப்பட வேண்டியுள்ளதாகவும் புனவர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர்ஜெனரல் ஜெகத் விஜேதிலக்க குறிப்பிட்டுள்ளார். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை புனர்வாழ்வளிக்கப்பட்ட குழுவினர் சமூகத்தில் இணைக்கப்பட்டனர். அடுத்த குழு ஜீன் மாதம் விடுவிக்கப்படலாம். மேலும் புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்துடன் இணைக்கப்பட்ட, 230பேர் உயர் கல்வியைத் தொடர தகுதி பெற்றுள்ளனர். பல்கலைக்கழகங்களில் 35பேர் உயர்கல்வியை தொடர்கின்றனர் என்றார் அவர்.

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம்-

seeratra kaalanilaiyaalநாட்டில் காணப்படுகின்ற அசாதாரண காலநிலை காரணமாக ஒருலட்த்து 73 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண பணிகள், அந்தந்த மாவட்ட செயலகங்களின் ஊடாக இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் அசாதாரண காலநிலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், சேதமடைந்த வீடுகளுக்காகவும் நட்ட ஈடு வழங்கும் நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. எனினும் நட்ட ஈட்டை பெறும் மக்கள் உண்மையான தகவல்களை வழங்காமையினால், அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையமும், மாவட்ட செயலகங்களும் சிக்கலை எதிர்நோக்கி இருப்பதாகவும், எனவே அதிகாரிகளுக்கு உண்மையான தகவல்களை வழங்குமாறும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கோரிக்கை விடுத்துள்ளது. இதேவேளை இன்றையதினமும் நாட்டின் பல மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

தமிழில் கடிதம் அனுப்பும் உரிமை உண்டு – வடமாகாண சபை

CVK sivagnanam16ஆம் திருத்தச் சட்டத்தின் கீழ் வடக்கு மாகாண சபையின் நிர்வாக மொழியான தமிழ் மொழியிலேயே கடிதம் அனுப்பும் உரிமை தமக்கு இருப்பதாக வடமாகாண சபையின் தவிசாளர் சீ.வி.கே. சிவஞானம் தெரிவித்துள்ளார். வடமாகாண சபையால் தமிழ் மொழிமூலம் தமக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டதன் மூலம், அரசாங்கத்தின் மும்மொழி கொள்கை மீறப்பட்டிருப்பதாக ஜாதிக் ஹெல உறுமய கண்டனம் தெரிவித்திருந்தது. அந்த கட்சியின் தேசிய இணைப்பாளர் நிசாந்த சிறி வர்ணசிங்க இதனைத் கூறியிருந்தார். இலங்கை மும்மொழிக் கொள்கை அமுலாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தங்களுக்கு தமிழ் மொழியில் கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளமையானது, இந்த கொள்கையை மீறும் செயல் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பில் ஊடகத்திற்குத் கருத்துத் தெரிவிக்கும்போதே வட மாகாண சபையின் தவிசாளர் சீ.வி.கே.சிவஞானம் மேற்கண்டவாறு பதிலளித்துள்ளார்.

நாடுகடத்தப்பட்டமைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்-

அண்மையில் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற ரீதியில் மலேசியாவில் இருந்த மூன்று பேர் நாடுகடத்தப்பட்டமைக்கு எதிராக மலேசியாவில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. மலேசிய காவற்துறை தலைமையகத்துக்கு முன்னால் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இவ்வாறு நாடுகடத்தப்பட்டவர்களில் இரண்டு பேர் ஐக்கிய நாடுகளின் அகதி அந்தஸ்த்து பெற்றவர்கள் என்றும், ஏனைய ஒருவர் அகதி அந்தஸ்த்துக்கு விண்ணப்பத்திருப்பதாகவும் ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் தெரிவித்துள்ளனர். எவ்வாறாயினும் குறித்த மூன்று பேரும் புலிகள் இயக்கத்துடன் நெருங்கிய தொடர்பினை கொண்டவர்கள் என்று மலேசிய காவற்துறையினரும், இலங்கை இராணுவமும் தெரிவித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சியில் தொல்பொருள் சின்னங்கள் கண்டுபிடிப்பு-

கிளிநொச்சி மாவட்டத்தில் அனுராதபுர யுகத்திற்கு சொந்தமான தொல்பொருள் சின்னங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தொல்பொருள் ஆய்வாளர் கல்ப அசங்கவின் தலைமையில் கிளிநொச்சியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்போது இந்த தொல்பொருள் சின்னங்கள் கண்டெடுக்கப்பட்டதாக தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் கலாநிதி செனரத் திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார். கிளிநொச்சி, கரைச்சி, சிவநகர், உருத்திரபுரம் ஆகிய பகுதிகளில் இந்த சின்னங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அனுராதபுர யுகத்தைச் சேர்ந்த கட்டட சிதைவுகளும் இப் பகுதியிலிருந்து கண்டெடுக்கப்பட்டன. இது தவிர, கிளிநொச்சியின் மேலும் சில பகுதிகளிலும் அனுராதபுர யுகத்தின் கட்டட சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டன. கடந்த வருட நடுப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் தொல்பொருள் சின்னங்கள் சில கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, அப்பகுதி தொல்பொருள் பெறுமதி வாய்ந்தது என வர்த்தமானி ஊடாக அறிவிக்கப்பட்டது என கலாநிதி செனரத் திஸாநாயக்க கூறியுள்ளார்.

மோடி நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளார்-புளொட் தலைவர் த.சித்தார்த்தன்

Sithar-ploteஇலங்கை ஜனாதிபதியுடனான முதலாவது சந்திப்பிலேயே இலங்கைத் தமிழரின் விவகாரம் தொடர்பில் மோடி பேசியிருப்பது இலங்கைத் தமிழ் மக்களுக்கு கிடைத்த நல்லதொரு சமிக்ஞையாக தோன்றும் அதேவேளை, தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு ஒன்று கிடைக்கக்கூடிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது என தெரிவித்துள்ள தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன்,

தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஜெயலலிதா, தான் தமிழ்நாட்டின் மிகப்பெரிய சக்தி என்பதை கடந்த தேர்தல் மூலம் நிரூபித்துள்ளதுடன், அண்மைக்காலமாக இலங்கைத் தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பில் கூடுதல் அக்கறை காட்டிவரும் சூழ்நிலையில், மோடியுடன் ஜெயலலிதா சந்திக்கும் வேளையில் இலங்கைத் தமிழரின் பிரச்சினை முக்கிய விடயமாக பேசப்படும் எனவும் இதுவே இன்று தமிழ்நாட்டினதும் புதிய மோடி அரசாங்கத்தினதும் நிலைப்பாடாக இருக்கிறது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவிற்கு சிறிதுகாலம் விஜயம் செய்து அங்குள்ள அரசியல் பிரமுகர்களுடன் சந்திப்புக்களை நடத்தி, சமகால அரசியல் நிலைமை பற்றி அறிந்து நாடு திரும்பிய சித்தார்த்தன் அவர்கள் ஞாயிறு தினக்குரலுக்கு (01.06.20014) வழங்கிய பேட்டியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். Read more

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் ஜெயலலிதா சந்திப்பு

Tamil_Daily_News_13875544072பிரதமர் நரேந்திர மோடியை, தமிழக முதல்வர் ஜெயலலிதா நேற்று டெல்லியில் சந்தித்து 50 நிமிடங்கள் பேசினார். அப்போது, தமிழகத்தின் நீண்ட கால வளர்ச்சி திட்டங்கள், மீனவர் பிரச்னை, சிறப்பு நிதி, கல்வி திட்டங்களுக்கான நிதி, மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் பிரச்னை உட்பட பல்வேறு விஷயங்களை விவாதித்துள்ளார். பின்னர், மனு ஒன்றையும் பிரதமரிடம் அளித்தார். Read more

தேசிய பிரச்சினை தொடர்பில் ஆராய குழு-

1719856666tna3தமிழ் மக்களின் தேசிய பிரச்சினைக்கான தீர்வுத் திட்டம் ஒன்றை வரைவதற்கு அல்லது அதனை தயாரிப்பதற்கான குழுவொன்றை அமைக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. யாழ். பருத்தித்துறை நீர்வேலியில் அமைந்துள்ள கூட்டமைப்பின் பணிமனையில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் இதனைக் கூறியுள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் இனப்பிரச்சினைக்கான தீர்வுக்காக ஒரு தீர்வுத் திட்டத்தை தயாரிக்க வேண்டும் எனவும் அந்த தீர்வுத்திட்டத்தை அமைக்க ஒரு குழு அமைக்கப்பட வேண்டும் என தீர்மானித்திருந்தோம். அந்த தீர்மானத்தின் பிரகாரம் நாங்கள் பல்வேறுபட்டவர்களின் மத்தியில் இருந்து அவர்களுடைய கோரிக்கைகள் சிந்தனைகள் தீர்வுத்திட்டம் எவ்வாறு அமையவேண்டும் போன்ற கருத்துக்களை கேட்பதற்கு ஆலோசித்துள்ளோம். இதற்காக புதிய மின்னஞ்சல் முகவரி ஒன்றினை ஆரம்பித்துள்ளோம். நாங்கள் பொதுமக்களிடம் இருந்தும் பொது ஸ்தாபனங்களிடம் இருந்தும் அரசியல் அமைப்புக்களிடம் இருந்தும் தமிழ் மக்களின் இனப்பிரச்சனைக்கு தீர்வில் அக்கறையுள்ள சகலரிடம் இருந்தும் அவர்களின் கருத்துக்களை தீர்வுத்திட்டம் தயாரிப்பதற்காக நாங்கள் எதிர்பார்க்கின்றோம். அதனை வnயிசழிழளயடளூபஅயடை.உழஅ என்னும் மின்னஞ்சல் முகவரியின் ஊடாகவோ அல்லது பருத்தித்துறை வீதி, நீர்வேலி தெற்கு, நீர்வேலி. எனும் முகவரியில் அமைந்துள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் அலுவலகத்திற்கோ அல்லது மார்ட்டின் வீதியில் அமைந்துள்ள தமிழரசு கட்சி அலுவலத்திற்கோ அதனை அனுப்பி வைக்கலாம். இவற்றினை இந்த மாத இறுதிக்குள் அனுப்பி வைத்தால் அதனை அடுத்து ஓரிரு மாதங்களில் தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட ஒரு முழுமையான தீர்வுத்திட்டம் தயாரிக்கப்படும். தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வரும் கருத்துக்கள் ஆலோசனைகளை உள்ளடக்கிய தீர்வுத்திட்டத்தை உருவாக்க பல்கலைகழக ஆசிரியர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் உள்ளடங்கிய குழுவொன்று அமைக்கப்படவுள்ளது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அவுஸ்திரேலிய அகதிக் கொள்கையில் மாற்றம் வேண்டும் – பசுமை கட்சி

அவுஸ்திரேலியாவில் உள்ள இலங்கை அகதிகள் தற்கொலை செய்துகொள்வதன் மூலம், அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் அகதிக் கொள்கை தோல்வி கண்டுள்ளது என்பதையே எடுத்துக் காட்டுவதாக, அவுஸ்திரேலிய பசுமைக் கட்சி தெரிவித்துள்ளது. அந்த கட்சியின் செனட் சபை உறுப்பினர் சாரா ஹன்சன் இதனைக் கூறியுள்ளார். கடந்த சனிக்கிழமை தனக்கு தானே தீ வைத்துக்கொண்ட 29வயதான இலங்கை அகதியான லியோ சீமான்பிள்ளை என்பவர், மெல்போர்ன் வைத்தியசாலையில் வைத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார். இந்தநிலையிலேயே சாராஹ் ஹன்சன் இக்கருத்தை வெளியிட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் உள்ள அகதிகளின் உயிர்கள் பாதுகாக்கப்படும் வகையில் அவுஸ்திரேலிய அரசு தமது அகதிக் கொள்கையை மாற்றியமைக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். இதேவேளை, அவுஸ்திரேலியாவில் உள்ள இலங்கை அகதிகள், தாம் மீண்டும் நாடுகடத்தப்படுவதை விட, அங்கேயே மரணித்துவிடலாம் என்ற நிலையில் இருப்பதாக த கார்டியன் பத்திரிகை தெரிவித்துள்ளது. நாடுகடத்தப்படுவோம் என்ற அச்சத்திலேயே பெரும்பாலான இலங்கை அகதிகள் தற்கொலை முயற்சியில் ஈடுபடுவதாகவும் அந்த பத்திரிகை சுட்டிக்காட்டியுள்ளது. இதற்கிடையில் கடந்த மாதம் மற்றுமொரு இலங்கை அகதி இலங்கைக்கு நாடுகடத்தப்படவிருந்த நிலையில், தமக்கு தாமே தீமூட்டி தற்கொலைக்கு முயற்சித்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

சீரற்ற காலநிலையால் 40ஆயிரம் பேர் பாதிப்பு-

rain_in_delhiநாட்டில் நிலவும் அசாதாரண காலநிலை காரணமாக 44ஆயிரத்து 88பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் நேற்றுமாலை வரையில் அசாதாரண காலநிலை காரணமாக 23 பேர் மரணித்துள்ளனர். அத்துடன். காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 9 இருப்பதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. ஜிங் கங்கை மற்றும் களுகங்கை என்பனவற்றில் வெள்ளம் அதிகரித்துள்ளதனால் இரத்தினபுரி மற்றும் காலி மாவட்டங்களின் பல வீதிகள் தற்போது வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. நெலுவ – தெல்லவ, துலிஎல்ல – உடுகம, எல்பிட்டிய – பிட்டிகல மற்றும் அவித்தாவ ஆகிய வீதிகளில் போக்குவரத்து மேற்கொள்ள முடியாதநிலை ஏற்பட்டுள்ளது. இதுதவிர, எத்கந்துர – அம்பேகம, வெலிவிட்டிய உள்ளிட்ட வீதிகளில் போக்குவரத்து மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இரத்தினபுரி கலவான பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளமையால் அந்த பகுதிகளில் பயணிக்கும் வாகனங்கள் மாற்று பாதையை பயன்படுத்துமாறு கோரப்பட்டுள்ளது. இதனிடையே, கொழும்பு – இரத்தினபுரி பிரதான வீதியின் அஹெலியகொட மற்றும் குருவிட்ட பிரதேச பாதை வெள்ளநீரால் மூழ்கியுள்ளது.

பொலிஸ் அதிகாரம் தமிழ் மக்களுக்கான தீர்வாக அமையாது-ஜே.வி.பி

மாகாண சபைகளுக்கான பொலிஸ் அதிகாரங்களை கொடுப்பது தமிழ் மக்களுக்கான தீர்வாக அமையப் போவதில்லை. தமிழ் மக்களை பாதுகாக்க வேண்டுமாயின் சுயாதீன விசாரணையினை நடைமுறைப்படுத்த வேண்டும் என ஜே.வி.பி.யின் பொதுச்செயலர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார். தமிழர்கள் விடயத்தில் தமிழ் கட்சிகள் கூடிய கவனமெடுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழ் மக்கள் எதிர்பார்ப்பது வடக்கில் சுதந்திரமானதும் தமக்கான உரிமைகளை பெற்றுக்கொள்ளும் தீர்வு ஒன்றினை மட்டுமே. யுத்த காலகட்டத்தில் புலிகள் செய்தவையும் பின்னர் இராணுவ அடக்குமுறைகளும் தமிழ் மக்களை பெரிதும் பாதித்து விட்டதென்பதே உண்மை. அதனை நிவர்த்திசெய்து சமூகங்களை ஒன்றிணைக்கும் வேலைத்திட்டம் இன்று அவசியமாகும். அதைவிடுத்து மாகாண சபைகளுக்கான அதிகாரங்களையும் பொலிஸ் அதிகாரங்களையும் கேட்பது தற்போது அவசியமற்றதே. யுத்த குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணையொன்றை; கோருவது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சுயநல அரசியல் நோக்கிலேயே. சர்வதேச விசாரணையொன்று இடம்பெறுவதனாலோ நாட்டின் இனப்பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கப்போவதில்லை என அவர் மேலும் கூறியுள்ளார்.

இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் நிஷா பிஷ்வால் இடையே சந்திப்பு

இலங்கைப் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர், அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் நிஷா பிஷ்வாலை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். 10 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு, அமெரிக்கா சென்றுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவே இவ்வாறு நிஷாவை சந்தித்து கலந்துரையாடியுள்ளது. இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து இந்த சந்திப்பில் ஆராயப்பட்டுள்ளது. இந்த விஜயத்தில் ஆளும் மற்றும் எதிர் தரப்புக்களைச் சேர்ந்த 10 உறுப்பினர்கள் உள்ளடங்குவதுடன், குழுக்கான தலைமைத்துவத்தை அமைச்சர் சுமேதா ஜி.ஜயசேன வகிப்பதாக கூறப்படுகின்றது. இந்த சுற்றுப் பயணத்தில் பெண்கள் எதிர்நோக்குகின்ற பொதுவான பிரச்சினைகள் குறித்தும் ஆராயப்பட்டுள்ளதாக, அமெரிக்காவிற்கு சென்றுள்ள பாராளுமன்ற உறுப்பினர் சுதர்ஷனி பெணான்டோபுள்ளே சுட்டிக்காட்டியுள்ளார்.

சட்டவிரோதமாக ஆஸி செல்ல முற்பட்டவர்கள் கைது-

சட்டவிரோதமாக அவுஸ்ரேலியா செல்லும் நோக்கில் கொழும்பு புறநகர் மொறட்டுவ – லுனாவ  பிரதேசத்தில் விடுதியொன்றில் தங்கியிருந்த 13பேர் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். மொறட்டுவ காவல்துறை பிரிவினர் நேற்று இரவு ரோந்து சென்ற வேலையில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இருந்து, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவரின் மூலம் இவர்கள் அவுஸ்ரேலியாவுக்கு செல்லும் நோக்கில் ஒவ்வொறுவருக்கு தலா 10 ஆயிரம்  ரூபா வழங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது. கடல் மார்க்கமாக அவுஸ்ரேலியாவுக்கு செல்லும் நோக்கில் இவர்கள் குறித்த விடுதியில் கடந்த மாதம் 26ஆம் திகதியில் இருந்து தங்கியிருந்தனர். கைது செய்யப்பட்டவர்கள் நெடுஞ்கேணி, முள்ளியவளை, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் வவுனியா ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என கூறப்படுகின்றது.

யாழில் கண்டெடுக்கப்பட்ட சிறிய ரக விமானம் ஒப்படைப்பு-

yaalil kandedukkappattaயாழில் கண்டெடுக்கப்பட்ட சிறிய ரக விமானம் தனியார் தொலைத்தொடர்பு நிறுவன விளம்பரப்படுத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட விமானம் என யாழ். பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார். யாழ் நகரில் உள்ள தனியார் விடுதி ஒன்றின் மேற்கூரையில் இருந்து நேற்றுமாலை சிறிய ரக மர்ம விமானம் ஒன்று காணப்பட்டது. அதனை அடுத்து விடுதி நிர்வாகத்தால் வழங்கப்பட்ட தகவலையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் விமானத்தை மீட்டு பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். இது தொடர்பாக யாழ். பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏக்கநாயக்க கூறுகையில், நேற்று மீட்கப்பட்ட சிறியரக விமானம் தொலைத்தொடர்பு நிறுவனம் ஒன்றின் விளம்பரப்படுத்தளுக்காக பயன்படுத்தப்பட்ட விமானமாகும். இந்த நிறுவனம் மொனராகலை, தம்புள்ளை, குருநாகல் ஆகிய பிரதேசங்களிலும் இந்த சிறிய ரக விமானத்தை பயன்படுத்தி விளம்பர நடவடிக்கையில் ஈடுபட்டு இருக்கின்றனர். இதேபோல யாழிலும் அவர்கள் விளம்பர நடவடிக்கையை மேற்கொள்ளும்போதே அதற்குரிய பற்றரி சார்ஜ் போதியதாக இல்லாமல் விடுதியின் மேல் விழுந்துள்ளது அந்த விமானம் 100 மீற்றர் தூரத்திற்கு பறக்க கூடியது. இந்த விமானத்தை பயன்படுத்தி விளம்பர நடவடிக்கையில் ஈடுபடுவதற்கான அனுமதியினையும் அவர்கள் பெற்றிருக்கின்றனர். அதற்குரிய அனுமதிக் கடிதங்களை எமக்கு காட்டியதுடன் குறித்த விமானத்தின் அடையாளத்தையும் எமக்கு கூறியதை அடுத்து அந்த சிறிய ரக விமானத்தை உரியவர்களிடம் கையளித்தோம் என்றார். குறித்த விமானம் வேவு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டிருக்கலாம் எனவும் அது திடீரென செயலிழந்து விழுந்திருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுவதாக முன்னர் தகவல்கள் வெளியாகியிருந்தன.

யாழ். நூலகம் எரிக்கப்பட்ட 33ஆம் ஆண்டு நினைவு தினம்-

யாழ் பொது நூலகம் எரிக்கப்பட்ட 33ஆம் ஆண்டு நினைவுநாள் (01.06.2014) நேற்று முன்தினமாகும். 1981ம் ஆண்டு ஜூன் 01ம்திகதி யாழ் நூலகம் எரிக்கப்பட்ட செய்தி கேட்டு யாழ். நடமாடும் நூலகம் என போற்றப்பட்டு வந்த பன்மொழிப் புலவர் தாவிது அடிகளார் மாரடைப்பால் மரணமானார். தென்னாசியாவிலேயே மிகப் பெரியதும், தொண்ணூற்றி எட்டாயிரத்திற்கும் அதிகமான புத்தகங்களையும், தேடற்கரிய கையெழுத்துப் பிரதிகளையும் உடையதுமான யாழ். பொதுநூலகம் மனிதகுலத்திற்கே விரோதமான ஒரு குற்றச்செயலாகவும், பண்பாட்டுப் படுகொலையாகவும் தீயிட்டு கொளுத்தப்பட்டது. 1996ஆம் ஆண்டின் பிற்பகுதியில் யாழ். நூலகத்தை மறுநிர்மாணம் செய்யும்பணிகள் முன்னெடுக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப், ஈ.பி.டி.பி ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகளும், தமிழ் அரசியல் பிரமுகர்களும் இப்பணிகளில் முனைப்புடன் ஈடுபட்டு வந்தனர். தற்போது யாழ்.நூலகம் மீண்டும் புனரமைக்கப்பட்ட நிலையில் காணக் கிடைக்கின்றது. அதனை மறுநிர்மாணம் செய்வதற்கு அயராது பாடுபட்டவர்கள் அனைவரும் என்றும் நினைவுகூரப்பட வேண்டியவர்கள்.

ஆற்றுக்குள் பயணிகளுடன் பாய்ந்த பஸ்-

அம்பாறை மாவட்டம் கல்முனை நகரிலிருந்து 48 பயணிகளுடன் சவளக்கடை ஊடாக 11ம் கொளனி நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்றுகாலை தனது கட்டுப்பாட்டை இழந்து கிட்டங்கி ஆற்றுக்குள் குறித்த பஸ் வீழ்ந்துள்ளது. எனினும் பயணிகள் அதிஷ்டவசமாக காப்பாற்றப்பட்டுள்ளனர். காலை 7.15க்கு கல்முனை நகரில் இருந்து நாவிதன்வெளி பிரதேசத்தில் கடமையாற்றும் ஆசிரியர்களின் நலன்கருதியே இவ் பஸ் சேவை இடம்பெறுகிறது. இது ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்களை ஏற்றியபடி கிட்டங்கி வீதியால் பயணித்துக் கொண்டிருந்தபோது, கட்டுப்பாட்டை மீறி ஆற்றுக்குள் பாய்ந்ததுடன் சாரதியின் சாமத்தியத்தால் பஸ் குடைசாயாது பாரிய விபத்தில் இருந்து தப்பியுள்ளது. சவளக்கடைப் பொலிசார் இதுபற்றிய விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சீரற்ற காலநிலையால் 23 பேர் உயிரிழப்பு, 27ஆயிரம் பேர் பாதிப்பு-

வெள்ளம் மற்றும் மண்சரிவினால் இதுவரை 6 மாவட்டங்களில் 23 பேர் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவற்றில் களுத்துறை மாவட்டத்திலேயே அதிகளவாக 14 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் கொழும்பு மற்றும் இரத்தினபுரியில் மூவர் பலியாகியுள்ளதோடு, காலி, மாத்தளை மற்றும் குருநாகலில் தலா ஒரு மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும், சிலர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை சீரற்ற காலநிலை தாக்கத்தினால் இதுவரையில் 27 ஆயிரத்து 243 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார் இந்த எண்ணிக்கை மேலும் உயரலாம் என்றும் அவர் இன்று சுட்டிக்காட்டியுள்ளார்.

ரயில் போக்குவரத்து தாமதம்-

வடக்கு மற்றும் பிரதான ரயில் பாதைகளூடான ரயில் போக்குவரத்து தாமதமடைந்துள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டுச் சபை தெரிவித்துள்ளது. வேள்ளநிலை காரணமாக ரயில்கள் குறிப்பிட்ட ஒரு பாதையில் பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாவும் கூறப்பட்டுள்ளது. மீரிகம, கனேகொட, பலேவெல ஆகிய பகுதிகளில் தண்டவாளத்திற்கு மேலாக வெள்ள நீர் செல்வதாகவும் ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது

குவைத் பிரதி சபாநாயகர் உள்ளிட்ட குழு இலங்கைக்கு விஜயம்-

குவைத் நாட்டின் பிரதி சாபாநாயகர் முபாரக் அல் குரய்னிஸ் தலைமையிலான குழுவினர் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளனர். இலங்கையின் பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடியின் அழைப்பின் பேரில் நேற்று இவர்கள் இலங்கைக்கு வந்ததாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. நாளை வரை நாட்டில் தங்கியிருக்கும் இவர்கள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்பீரிஸ், அமைச்சர் டிரான் பெரேரா உள்ளிட்ட முக்கிய அமைச்சர்களை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது,

மோடியின் புதிய அமைச்சரவை அமைச்சர் விபத்தில் பலி-

இந்திய மத்திய அரசின் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கோபிநாத் முண்டே, வாகன வபத்தில் உயிரிழந்துள்ளார். கோபிநாத்தின் மறைவுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். ‘எனது நண்பர் கோபிநாத் முண்டேவின் மரணம் அதிர்ச்சி அளிக்கிறது. அவரது மறைவு மத்திய அரசுக்கும், நாட்டிற்கும் ஈடுசெய்ய முடியாத பெரும் இழப்பு’ என்று பிரதமர் மோடி, தனது ட்விட்டர் சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

காணி அபகரிப்புக்கு எதிராக விரைவில் வழக்கு தொடரப்படும் : சிவாஜிலிங்கம்-

பொதுமக்களுடன் கலந்துரையாடி விரைவில் காணி அபகரிப்புக்கு எதிராக நீதி மன்றில் வழக்கு தொடுக்கப்படவுள்ளதாக வட மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். இன்று திக்கம் பகுதியில் காணி அபகரிப்புக்கு எதிராக இடம்பெறவிருந்த போராட்டம் கைவிடப்பட்டதைத் தொடர்ந்து இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். பொதுமக்கள் சிலர் வழக்கு தொடர முன்வந்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு முதற் தடவையாக விஜயம்.

vigneswaran_mullaitheevumullaimullaitheevuஒட்டுசுட்டான், கொக்கிளாய், கொக்குத்தொடுவாய் ஆகிய பிரதேசங்களில் உள்ள பொதுமக்களின் பிரச்சினைகளை நேரடியாகப் பார்த்து, மக்களைச் சந்தித்து குறை நிறைகளைக் கேட்டறிந்தார். ஒட்டுசுட்டான் பகுதியில் பாவட்டிமலை பகுதியில் மூன்று இடங்களில் பாரிய அளவில் கருங்கல் தோண்டுதலும், மணல் அகழ்தலும் இடம்பெற்று வருவதனால், இங்கு கற்களை உடைப்பதற்காகப் பயன்படுத்தப்படுகின்ற வெடிகளினால் ஏற்படும் நில அதிர்வு காரணமாக அயலில் உள்ள கிராமங்களின் வீட்டுச் சுவர்கள் வெடிப்பேற்பட்டு வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் சுற்றுச்சூழல் பாதிப்பு எற்பட்டிருப்பதாகப் பொதுமக்கள் முறையிட்டிருந்தனர்.

முறையான நிர்வாக நடவடிக்கைகளுக்கு மாறாக அரசியல் செல்வாக்கின் மூலம் இங்கு காரியங்கள் நடைபெறுவதாக முதலமைச்சருக்கு அதிகாரிகளினால் சுட்டிக்காட்டப்பட்டது. ஒட்டுசுட்டான் மற்றும் கொக்குத்தொடுவாய், கொக்கிளாய் ஆகிய பகுதிகளில் கல்வி மற்றும் சுகாதாரத்துறையின் மாகாண அமைச்சர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் சகிதம் பொதுமக்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்த முதலமைச்சர், மாகாண சபையைக் கொண்டு நடத்துவதில் பல முட்டுக்கட்டைகள் எற்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டி, இருப்பினும் அவர்களின் பிரச்சினைகளுக்கு முடிந்த அளவில் விரைவாக தீர்வு காணப்படும் என உறுதியளித்தார். மீள்குடியேற்றத்திற்கான காணிகள் இல்லாதிருப்பது, பொதுமக்களின் காணிகள் இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டிருப்பது. இந்து ஆலயங்கள் அமைந்துள்ள இடங்களில் அடாவடியாக புத்தர் சிலைகள் அமைக்கப்பட்டிருப்பது, இந்திய வீட்டுத்திட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகள் கிடைக்காதிருப்பது, விவசாய நடவடிக்கைகளில் எற்பட்டுள்ள பிரச்சினைகள், குடிநீர் இல்லாமை, தமிழர்களுக்குச் சொந்தமான மீன்பிடிக்கும் இடங்களில் பெரும்பான்மை இன மக்கள் நாயாறு கொக்கிளாய் கொக்குத்தொடுவாய் ஆகிய இடங்களில் ஆக்கிரமித்திருப்பது உள்ளிட்ட பல பிரச்சினைகள் முதலமைச்சரிடம் எடுத்தக் கூறப்பட்டன. கொக்கிளாய் கொக்குத்தொடுவாய் பகுதி மக்கள் தமது வாழ்வாதாரத்துக்கான தமது கடலையும், தமது விவசாய நிலங்களையும் மீளப்பெற்றுத் தருமாறு கண்ணீருடன் கைகூப்பி முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர்.

கொபி அனான் உல்லாசப் பயண விசாவில் வரலாம் – கெஹலிய ரம்புக்வெல

ainaa visaaranaikkaanaஐ.நா. விசாரணைக்குழுவின் தலைவராக முன்னாள் ஐ.நா. செயலாளர் நாயகம் கொபி அனான் நியமிக்கப்படலாம் என உறுதிப்படுத்தப்படாத செய்திகள் வெளியாகியிருந்தன. இது குறித்து கருத்துத் தெரிவித்த அமைச்சர் ரம்புக்வெல, உல்லாசப் பயண விசாவில் கொபி அனான் இலங்கைக்கு வந்தால் அவருக்கு விசா வழங்கப்படும். விசாரணைக்குழு சார்பாக அவர் வருதாயின் வெளிவிவகார அமைச்சே அதனையிட்டுத் தீர்மானிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார் இலங்கையில் இடம்பெற்றதாகக் குற்றஞ்சாட்டப்படும் போர்க் குற்றங்கள் தொடர்பில் ஐ.நா. மேற்கொள்ளவுள்ள விசாரணைகளுக்கு இலங்கை அரசாங்கம் உதவப்போவதில்லை எனவும், இலங்கைப் போர்க் குற்றங்கள் தொடர்பில் ஐ.நா. விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற அமெரிக்காவின் தீர்மானத்தை இலங்கை ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் குறிப்பி;ட்டார். குறிப்பிட்ட தீர்மானத்தை இலங்கை அரசாங்கம் நிராகரித்திருக்கும் நிலையில், அதனைச் செயற்படுத்துவதற்காக உதவுவது என்ற கேள்விக்கே இடமில்லை எனவும் குறிப்பிட்;ட அவர், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தினால் நியமிக்கப்படும் விசாரணைக்குழு உறுப்பினர்களுக்கு விசா வழங்குவது குறித்து வெளிவிவகார அமைச்சே தீர்மானிக்கும் எனவும் தெரிவித்தார்.

தலைமன்னார் கடற்பரப்பில் 29 இந்தியா மீனவர்கள் கைது.

indian_fishermenஇந்தியா ராமநாதபுரத்தைச் சேர்ந்த 29 மீனவர்களும் 6 படகுகளில் கடந்த சனிக்கிழமை இரவு இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது சனிக்கிழமை இரவு 11 மணியளவில் தலைமன்னாh கடற்பரப்பில் வைத்து கடற்படையினர் கைது செய்து தலைமன்னார் கடற்படை முகாமிற்கு கொண்டு சென்றதோடு குறித்த படகுகளையும் தலைமன்னார் கடற்படை முகாமிற்கு கொண்டு சென்றனர். கைதுசெய்யப்பட்ட 29 மீனவர்களும் நேற்று சனிக்கிழமை மாலை மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். மீனவர்களின் படகுகளில் உள்ள வலைத்தொகுதியினை கடற்படையினர் இன்று திங்கட்கிழமை கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் இன்று திங்கட்கிழமை நீதிமன்றத்தில் மீனவர்களை ஆஜர் படுத்தியதோடு குறித்த வலைத்தொகுதிகளையும் மன்றில் ஒப்படைத்தனர். விசாரனைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம் குறித்த மீனவர்களை எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டதோடு,குறித்த மீனவர்களின் படகுகள் மற்றும் வலைத்தொகுதிகளை கடற்படையூடாக பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இந்தியாவின் புதிய பிரதமர் மோடி இலங்கை அரசியல் ஸ்திரத் தன்மைக்கு ஒரு அச்சுறுத்தல் விமல் வீரவன்ச.

modi mahinda meet (1)மோடியும் அவரது புதிய அரசாங்கமும் 13 ஆவது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என இலங்கைக்கு அழுத்தம் கொடுத்துள்ளதுடன். 13 ஆவது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்திற்கு அப்பால் சென்று தீர்வை வழங்குமாறு இந்தியப் பிரதமர் மோடி கூறியுள்ளார் . இதனால் அதனை அரசாங்கம் வழங்க வேண்டும். இல்லாவிட்டால் ஆட்சியை விட்டு செல்ல வேண்டிய நிலைமை ஏற்படும். இவற்றினால் மக்கள் மத்தியில் கிளர்ச்சிகள் ஏற்பட்டு அரசாங்கத்திற்கு பாதிப்புகள் ஏற்படும் என எதிர்க்கட்சிகள் எண்ணிக் கொண்டிருக்கின்றன. பிரதமர் மோடி இலங்கை தொடர்பில் சாதகமாக செயற்படுவார் எனசிலர் எண்ணுகின்றனர். போர் நடைபெற்ற காலத்தில் இந்தியாவில் பாரதீய ஜனதா ஆட்சியில் இருந்திருந்தால் போருக்கு எதிராக அழுத்தங்கள் அதிகரித்திருக்கும். காங்கிரஸ் ஆட்சியில் இருந்ததால் அழுத்தங்களை சமாளிக்க முடிந்தது. எவ்வாறாயினும் இலங்கை மக்களே நாட்டுக்கு எது நல்லது என்பதையும் 13 ஆவது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவதா? இல்லையா? என்பதை தீர்மானிப்பார்கள். இந்தியா உட்பட ஏனைய நாடுகள் இலங்கையில் ஆட்சி மாற்றத்தை எதிர்பார்த்துள்ளன. அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் இந்த ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த அந்த நாடுகள் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. தென் ஆபிரிக்கா ஏற்கனவே இலங்கைக்கான சிறப்பு தூதுவர் ஒருவரை நியமித்துள்ளது. இந்தியாவும் இலங்கைக்கான சிறப்பு தூதுவர் ஒருவரை நியமிக்கவுள்ளது. இந்தியா, தென்னாபிரிக்கா உட்பட ஏனைய நாடுகளை கையாளும் போது உரிய முனைப்புகளுடன் அரசாங்கம் செயற்பட வேண்டும் என வீரவன்ஸ கூறியுள்ளார்.

திருகோணமலை மயானமொன்றில் தமிழர்களின் சில கல்லறைகள் சேதமாக்கப்பட்டுள்ளன.

trinco_gravesதிருகோணமலை நகர சபையின் பராமரிப்பிலுள்ள அன்புவழிபுரம் மயானத்திலுள்ள கல்லறைகளில் அடையாளம் காணப்பட்ட தமிழர்களின் ஒரு சில கல்லறைகள் இனந்தெரியாத நபர்களினால் சேதமாக்கப்பட்டுள்ளதாகவும். சேதமாக்கப்பட்டுள்ள கல்லறைகளில் ஏசிஃவமப் சம்பவத்தில் படுகொலை செய்யப்பட்ட பனியாளரொருவருடைய கல்லறையும் அடங்குவதாகவும். யுத்த நிறுத்த காலத்தில், விடுதலைப் புலிகளின் பொங்குதமிழ் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களில் ஒருவராக செயல்பட்டு, பின்னர் அடையாளம் தெரியாத ஆட்களினால் சுட்டுக் கொல்லப்பட்ட என். விக்கினேஸ்வரனுடைய கல்லறையும் சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும். இச்செயலில் ஈடுபட்ட நபர்கள் கல்லறைகளில் பொறிக்கப்பட்டிருந்த புகைப்படங்கள் மற்றும் பெயர் விபரங்களை அடையாளம் காண முடியாதவாறு அகற்றி சேதப்படுத்தியுள்ளதாகவும். இந்தச் சம்பவத்தின் பின்னனி, தொடர்புடைய நபர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.

இலங்கையின் பல பகுதிகளில் கடும் மழை வெள்ளப்பெருக்கு

rain_in_delhiகொழும்பு மற்றும் அதை அண்மித்த தெற்கு மாவட்டங்களில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் காரணமாக பல பேர் உயிரிழந்துள்ளனர் பாதிப்புகள் கூடுதலாக உள்ளன
தலைநகர் கொழும்பில் பல வீதிகள் மற்றும் அருகாமையிலுள்ள சிறு நகரங்களின் பெரும் பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. களுத்துறை மாவட்டமே திடீரென ஏற்பட்ட வெள்ளம் காரணமாக மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பல பகுதிகளில் 10 செ மீ க்கும் கூடுதலாக மழை பெய்துள்ளதாகவும் வானிலை முன்னறிவிப்புத் துறை கூறுகிறது. உயிரிழந்தவர்களைத் தவிர இருவரைக் காணவில்லை என்றும் அதிகாரிகள் கூறுகிறார்கள். இலங்கையின் தென்பகுதிக் கடற்பரப்பு மிகவும் கொந்தளிப்பாக உள்ளது என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

வலி மேற்கு பிரதேச சபை தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களது விசேட அறிவித்தல்.valimetku thavisalar

1) வாக்காளர் தினம் -யூன் -1

வாக்களர் தினமாகிய இன்று வாக்களிப்பு தொடர்பில் வாக்காளர்கள் தமது வாக்குரிமையின் முக்கியத்துவத்தினை உணர்ந்தவர்களாக செயற்படுவதற்கான ஒரு விழிப்புனர்வு நாளாகவே கருத வேண்டும். இன்று பலரும் தமது கவலையீனத்தினால் தம்மை வாக்காளராக பதிவு செய்வதிலிருந்து தவறிவிடுகின்றனர். இதனால் அவர்கள் தமது வாக்குரிமையினை இழக்கும் துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இந்த நிலை மிக வேதனைக்குரிய ஒரு விடயம் ஆகும்.
1931ம் ஆண்டு டொணமூர் யாப்பின் மூலமாக அறிமுகமானது இந்த சர்வசன வாக்குரிமை.
இன்று வரை பல தேர்தல்கள் நடை பெற்றும் மக்கள் பலர் தமது வாக்குரிமையை பதிவு செய்ய தவறியதால் தமது வாக்குரிமையை இழந்துள்ளனர், 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தமது வாக்குரிமையை தமது பிரதேச கிராம அலுவலர்கள் ஊடாக பதிவினை மேற்கொள்ள முடியும்.
தழிழர்களாகிய நாம் இன்று வாக்காளர் எண்ணிக்கை குறைவினால் எமது பாராளுமன்ற அங்கத்தவர் எண்ணிக்ழகயிலும் வீழ்ச்சி போக்கை கண்டுள்ளோம். இதனால் எதிர்காலத்தில் மேலும: பல விளைவுகளையும் எதிர்நோக்க வேண்டிய நிலையும் உருவாகலாம். இந்த நிலையை போக்க நாம் அனைவருமு; வாக்காளராக பதிவினை மேற்கொள்ள வேண்டியது மிக முக்கியமான ஒன்றாகும்.
வாக்குரிமை என்பது மிக முக்கிய ஜனநாயக ஆயுதம் எம்மை ஆழுபவர்களையும் எம்மை ஆழ நினைப்பவர்களையும் தீர்மானிக்கும் சக்தி இவ் வாக்குரிமைக்கே உண்டு. இந்த நிலையினை உணர்ந்தவர்களாக நாம் ஒவ்வோர்வரும் எமது வாக்கை பயன் படுத்துவது காலத்தின் கட்டாயம் ஆகும்.

2) மின்னியல் மற்றும் இலத்திரனியல் கழிவு சாதனங்களை அகற்றல்

எமது பிரதேசத்தை நாமே ஒன்றினைந்து தூய்மையாக வைத்திருக்கும் பொருட்டு வரும் வாரம் முதலாக இவ் மின்னியல் மற்றும் இலத்திரனியல் கழிவு சாதனங்களை எமது பிரதேசத்திலிருந்து அகற்றும் பணியினை மேற்கொள்ள உள்ளோம். இவ் விடயம் தொடர்பாக எமது தலைமைக் காரியாலயத்தில் மக்கள் நேரடியாகவே வந்து ஒப்படைக்க முடியும் அவ்வாறு ஒப்படைப்பதில் சிரமம் உள்ளவர்கள் எமது தலைமைக்காரியாலய தொலைபேசி இலக்கமாகிய 0212250144 எனும் இலக்கத்தோடு தொடர்பு கொண்டு ஒப்படைப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கௌ;ள முடியும்.

3) இன்று சர்வதேச புகைத்தல் ஓழிப்பு தினம் ஆகும்.

untitled2இத்தினத்தில் புகைத்தலுக்கு எதிரான நடவடிக்கையை மேற்கொண்டு நாம் அனைவரும் அழிந்து வரும் அழிக்கப்பட இருக்கும் பலரையும் மீட்க வேண்டும்.உடல் நலதத்திற்கும் ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிக்க்ககூடிய புகைத்தலை விலக்க வேண்டியது சமூகத்திலுள்ள பொறுப்பு வாய்ந்தவர்களின் கடமை ஆகும்.இன்று அதிகரித்து வரும் இறப்புகளுக்கான காரணங்களில் ஒன்றாக இப் புகைப்பழக்கம் காணப்படுகினறது. உலக சுகதார ஸ்தாபனத்தின் கருத்துப்படி ஒவ்வோர் ஆண்டும் 60 இலட்சம் பேர் உலகளாவிய ரீதியில் இறப்பதாகவும் 25 இலட்சம் பேர் புற்று நோய்க்கு ஆழாவதாகவும் குறிப்பிடுகின்றனர். இந்த நிலையினை தடுப்பதற்கு அனைவரும் முயற்சிக்க வேண்டும் இவ்வாறான பொருட்கள் மீது தடையை ஏற்படுத்தும் அதே வேளை இன்றைய இளம் தலை முறைக்கு இதனால் ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பில் போதுமான விழிப்புனர்வுகளை ஏற்படுத்துவதோடு பாதிக்கப்ப்டவர்களின் அவஸ்தையினையும் காண்பிப்பது மிகச்சிறந்த வழிமுறையாக இருக்கும் என நம்புகின்றேன்
திருமதி நாகரஞ்சினி ஐங்கரன்
தவிசாளர்
வலி மேற்கு பிரதேச சபை

வலிகாமம் தெற்கு பிரதேச சபை செயலாளர் கௌரவிப்பு

SAM_2058SAM_2060SAM_2104வலிகாமம் தெற்கு பிரதேச சபையில் 04.07.2009 தொடக்கம் 30.05.2014 வரை செயலாளாராக கடமையாற்றி நிர்வாகத்தை திறம்பட நடாத்தி இன்று நிர்வாக சேவைப் பரீட்சையில் சித்தியெய்தி நிர்வாக சேவையை சிறப்புற நடாத்தப் பயணிக்கும் எமதருமைச் செயலாளர் திருமதி சுலோச்சனா முருகநேசன் அவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு வலிகாமம் தெற்கு பிரதேச சபை தவிசாளர் தி. பிரகாஷ; தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. இந் நிகழ்வில் சபை உறுப்பினர்கள் உத்தியோகத்தர்கள் மற்றும் உளராட்சி மன்றங்களின் செயலாளர்களும் கலந்து சிறப்பித்தார்கள்

சுழிபுரம் மேற்கு கலைமகள் சனசமூக நிலையத்தின் முன்பள்ளி சிறார்களின் வருடாந்த விளையாட்டு

29.05.2014 வியாழன் அன்று பிப 1.30 மணியளவில் சுழிபுரம் மேற்கு கலைமகள் சனசமூக நிலையத்தின் முன்பள்ளி சிறார்களின் வருடாந்த விளையாட்டு விழா நிலைய உப தலைவ அ.சிவானந்தன் தலைமையில் நடைபெற்றது.
இவ் நிகழ்வில் பிரதம விருந்தினராக வலிமேற்கு பிரதேச சபை தவிசாளர் திருமதி.நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களும் சிறப்பு விருந்தினராக வலிகாமம் வலய முன்பள்ளி உதவிப்பணிப்பாளர் திருமதி ரூபா உதயரட்ணம்,சுழிபுரம் ஐக்கிய சங்க சைவ வித்தியாசாலை அதிபர் திருமதி மலர்விழி குணபாலன்,சுழிபுரம் மேற்கு கிராம உத்தியோகஸ்தர் திரு சி.ஜீவராஜா,சுழிபுரம் மத்தி கிராம உத்தியோகஸ்தர்திரு.ம.சிறி முருகவேள், யாழ்மாவட்ட சர்வோதய இணைப்பாளர் திரு.எஸ்.யுகேந்திரன் மற்றும் வேள்ட் விசன் முகாமையாளர் திரு.இருதயம் மைக்கல் அவர்களும் கலந்து சிறப்பித்தனர், Read more