இரத்ததானம் வழங்கல் மற்றும் கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு- (Photos)

appabday05எமது கட்சியின் ஆதரவாளரான திரு. இ.தயாபரன் அவர்களின் 50ஆவது பிறந்தநதினத்தை முன்னிட்டு இரத்ததானம் வழங்கும் நிகழ்வும், கருவி என்றழைக்கப்படும் மாற்றுத்திறனாளிகளின் சமூகவள நிலயைத்திற்கு கற்றல் உபகரணங்களை வழங்கிவைக்கும் நிகழ்வும் நேற்று முன்தினம் (10.01.2015) சனிக்கிழமை யாழ். கோண்டாவிலில் இடம்பெற்றது. இதன்போது 53பேர் இரத்ததானம் வழங்கியிருந்தனர். அத்துடன் கருவி என்னும் மாற்றுத்திறனாளிகளின் சமூகவள நிலையத்தினருக்கு ஒரு தொகுதி கற்றல் உபகரணங்கள் புளொட் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், வட மாகாணசபை உறுப்பினருமாகிய திரு. தர்மலிங்கம் சித்தார்தத்தன் அவர்களால் வழங்கிவைக்கப்பட்டது. மேலும் கோண்டாவில் இந்துக்கல்லூரியில் பயிலும் வறுமைக் கோட்டின்கீழ் உள்ள குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும், இணுவில் லயன்ஸ் கழகத்தினருக்கு 10,000 ரூபாய் பணமும் வழங்கிவைக்கப்பட்டது.

appabday01 appabday02 appabday03 appabday04 appabday05 appabday06 appabday07 appabday08 appabday09 appabday10