புதிய அரசின் நல்லெண்ண சமிக்கைகளை நாம் மதிக்கவேண்டும் – அருட்தந்தை இமானுவேல்

father_sjemmanuelஇலங்கையில் போர் முடிந்து 6 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கத்துடன் தொடர்புகளை பேணத் தயாராக இருப்பதாகவும்
முன்னைய மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலம் தமிழ் மக்களுக்கு கொடூரமானதாக இருந்ததாகவும் தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சி தமிழ் மக்களுக்கு நம்பிக்கை அளிப்பதாக இருப்பதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமிழர்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பது தொடர்பில் நல்லெண்ண சமிக்ஞைகளை வெளிப்படுத்தி வருவதாகவும்.
புதிய அரசாங்கம் வெளிப்படுத்துகின்ற நல்லெண்ண சமிக்ஞைகளுக்கு புலம்பெயர் தமிழர் தரப்பு மதிப்பளிக்க வேண்டும்.
மற்றவர்களின் நல்லெண்ண நடவடிக்கைகளை மதிக்காமல் தொடர்ந்தும் நாங்கள் குற்றம் சாட்டிக்கொண்டிருக்க முடியாது.
இலங்கையில் நடந்துள்ளதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பில் நம்பகமான உள்ளக விசாரணை நடத்துவதாக அளித்துள்ள உறுதிமொழிக்காக இலங்கை அரசாங்கத்துக்கு கால அவகாசம் வழங்க வேண்டும்.
இலங்கை தொடர்பான ஜெனீவா விசாரணை அறிக்கை வரும் செப்டெம்பரில் வெளியாக இருக்கின்ற சூழ்நிலையில், அந்த அறிக்கையை முக்கிய வரலாற்று ஆவணமாகக் கருதி அடுத்தக் கட்டப் போராட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும். அருட்தந்தை எஸ். ஜே.இமானுவேல் பிபிசி தமிழோசையில் கூறியுள்ளார்.
மகிந்த தலமையிலான அரசாங்கக் காலத்தில் பல்வேறு புலம்பெயர் தமிழர் அமைப்புகளைச் சேர்ந்த பிரமுகர்களை தடைசெய்வதாக அறிவித்து இலங்கை பட்டியல் ஒன்றை வெளியிட்டிருந்தது. அந்தப் பட்டியலில் அருட்தந்தை இமானுவேல் உள்ளிட்ட உலகத் தமிழர் பேரவையைச் சேர்ந்தவர்களின் பெயர்களும் உள்ளடக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
 
மாணவி வித்யாவின் மரணம் தொடர்பில் மேலும் ஐந்து பேர் கைது

punkuduthivu_3புங்குடுதீவு மாணவி வித்யாவின் மரணம் தொடர்பில் மேலும் ஐந்து பேரை புலனாய்வு காவல்துறையினர் நேற்று மாலை கைது செய்துள்ளனர். இதையடுத்து, அவர்களுக்குத் தாங்களே தண்டனை வழங்கவேண்டும். அந்த ஐவரையும் தம்மிடம் கையளிக்க வேண்டும் என்று புங்குடுதீவு ஊரவர் நூற்றுக்கணக்கில் திரண்டு காவல்துறையினரிடம் கோரி வருவதால் பதற்ற நிலை ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஐந்து பேரும் புங்குடுதீவைச் சேர்ந்தவர்கள் என்றும் இவர்களில் ஒருவர் வெளிநாட்டில் இருந்து இங்கு வந்துள்ளதாகவும், காவல்துறையினருக்குக் கிடைத்த இரகசிய தகவலையடுத்தே இவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
ஊர் மக்கள், அவர்களை காவல்துறையினரிடமிருந்து கைப்பற்றுவதற்காக காவல்துறையினருடைய வாகனத்தைச் செல்லவிடாமல் வீதிகளை மறித்து போராட்டம் நடத்தியுள்ளதாகவும். செய்யப்பட்டவர்களைப் பாதுகாப்பாக குறிகட்டுவான் காவல் நிலையத்திற்குக் கொண்டு சென்றதையடுத்து, அந்த காவல் நிலையத்தையும் ஊர் மக்கள் சூழ்ந்து கொண்டதாகவும், இதனால் மேலதிக காவல்துறையினர் அனுப்பி வைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பதற்ற நிலைமையை அறிந்து அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனும், தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும், வடமாகாண சபை உறுப்பினர்கள் சிலரும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அகதிகள் 100 பேர் வரை பலி படகில் நடந்த மோதலில்

indonesiaந்தோனேஷியாவுக்கு அருகே உள்ள கடற்பரப்பில் மிதந்துகொண்டிருந்த படகில் உணவுக்காக நடந்த மோதலில் 100 அகதிகள் வரை கொல்லப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்தோனேஷிய மீனவர்களால் காப்பாற்றப்பட்டு கரைக்கு கொண்டுவரப்பட்ட பலர் இதுகுறித்து பிபிசியில் கூறியுள்ளதாவது
படகில் நடந்த சண்டையில் சிலர் கத்தியால் குத்தப்பட்டும் சிலர் தூக்கிலப்பட்டும் மற்றவர்கள் கடலில் எறியப்பட்டும் கொல்லபட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.
வங்கதேசத்தையும் மியன்மாரையும் சேர்ந்த ஆயிரக் கணக்கான அகதிகள் தாய்லாந்துக்கும் இந்தோனேஷியாவுக்கும் மலேஷியாவுக்கும் இடையே உள்ள கடற்பரப்பில் மனிதக் கடத்தல்காரர்களால் கைவிடப்பட்டுள்ள நிலையில் தத்தளித்துவருவதாக கூறப்படுகின்றது.

இலங்கை இராணுவத்தின் புதிய தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ்

jagath_diasஇலங்கை இராணுவத்தின் புதிய தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ் நியமிக்கப்பட்டுள்ளமையை ஹியுமன் ரைட்ஸ் வாட்ச் அமைப்பு விமர்சித்துள்ளது.
இறுதிக்கட்டப் போரின் போது நடந்த மோசமான மனித உரிமை துஷ்பிரயோகங்களுடன் இலங்கை இராணுவத்தின் 57-ம் படையணி தொடர்புபட்டிருந்ததாகவும்.
இதனால் ஜகத் டயஸின் பதவி உயர்வு, போர்க்குற்றங்கள் தொடர்பில் நம்பகமான விசாரணை நடத்தப்படும் என்ற அரசாங்கத்தின் உறுதிமொழி தொடர்பில் சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும்.
இறுதிக்கட்ட யுத்தத்தின் கடைசி இரண்டு ஆண்டுகளில் இராணுவத்தின் 57-ம் படையணிக்கு தளபதியாக இருந்த ஜகத் டயஸ் நியமிக்கப்பட்டமை ‘நீதிக்கு கிடைத்த அடி’ என்றும்.இலங்கையின் புதிய அரசாங்கம் போர்க்கால துஷ்பிரயோகங்களுக்கான நேர்மையான பொறுப்புக்கூறல் தொடர்பில் உறுதியளித்திருந்தது. ஆனால் துஷ்பிரயோகம் செய்த படையணியின் தளபதியை இராணுவத்தின் தலைமை அதிகாரியாக நியமித்துள்ளமை „பாதிக்கப்பட்டவர்களின் முகத்தில் அறைந்ததற்கு சமம்’ என்று ஹியுமன் ரைட்ஸ் வாட்ச் அமைப்பின் ஆசிய பிராந்திய இயக்குநர் பிராட் அடம்ஸ் கூறியுள்ளார்.
இறுதிக் கட்டப் போரின்போது 57-வது படையணி நிலைகொண்டிருந்த இடங்களில் பொது மக்கள் மீது நடத்தப்பட்ட கண்மூடித்தனமான ஷெல் தாக்குதல்கள் குறித்து தாம் ஏற்கனவே அறிக்கையிட்டிருப்பதையும்.
57-ம் படையணியின் முன்னாள் தளபதி ஜகத் டயஸ், போருக்குப் பின்னர் ஜெர்மனிக்கான இலங்கை தூதரகத்தின் தலைமையதிகாரியாக பணியாற்றினார். 2013-ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவும் அமெரிக்காவும் போர்க்குற்ற குற்றச்சாட்டுக்கள் காரணமாக அவருக்கு வீசா மறுத்திருந்ததையும். ஹியுமன் ரைட்ஸ் வாட்ச் அமைப்பு நினைவூட்டியுள்ளது.
இதனிடையே, இது தொடர்பில் பிபிசிக்கு கருத்து தெரிவித்த இலங்கை ஜனாதிபதியின் இணைப்புச் செயலாளர் ஷிரால் லக்திலக்க, குற்றம் நிரூபிக்கப்படும் வரை ஒருவரை குற்றம் இழைத்தவராக கருதமுடியாது. ‘இராணுவத்தின் தலைமை அதிகாரி பதவிக்கு தகுதியானவர்களாக இருந்த ஜெனரல்கள் 5,6 பேர் மீது இப்படியான குற்றச்சாட்டுக்கள் உள்ளன. ஒருவரை அந்தப் பதவிக்கு நியமித்தே ஆகவேண்டியுள்ளது’ என்று பதிலளித்துள்ளார்.