Header image alt text

வட மாகாணசபை உறுப்பினராக கந்தையா சிவனேசன்(பவன்) சத்தியப்பிரமாணம்-

k.sivanesanவட மாகாணசபையின் முல்லைத்தீவு மாவட்ட உறுப்பினராக நியமிக்கப்பட்ட புளொட் அமைப்பைச் சேர்ந்த கந்தையா சிவனேசன்(பவன்) அவர்களின் சத்தியப் பிரமாண நிகழ்வு இன்றுமுற்பகல் 10.35மணியளவில் வட மாகாணசபை பேரவையில் நடைபெற்றது. இதன்படி வட மாகாணசபை பேரவைத் தலைவர் சீ.வீ.கே. சிவஞானம் அவர்களின் முன்னிலையில் கந்தையா சிவனேசன் (பவன்) அவர்கள் வட மாகாணசபை உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். இந்நிகழ்வில் புளொட் தலைவரும், வட மாகாணசபை உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வை.பாலச்சந்திரன், ராகவன், தவராஜா மாஸ்டர் மற்றும் ஆதரவாளர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர். இதன்போது பேரவைச் செயலாளர் திரு. ஜெகு அவர்களும் உடனிருந்தார். வட மாகாணசபையின் முல்லைத்தீவு மாவட்ட உறுப்பினர் வீரவாகு கனகசுந்தரசுவாமி அவர்களின் மரணத்தினால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு புளொட் அமைப்பைச் சேர்ந்த கந்தையா சிவனேசன் (பவன்) தேர்தல்கள் ஆணையாளரினால் நியமிக்கப்பட்டிருந்த நிலையில் அவரது சத்தியப் பிரமாண நிகழ்வு இன்று நடைபெற்றுள்ளது.

K.Sivanesan Bawan (3)K.Sivanesan Bawan (2)

சிறுவர் இல்லத்தில் தங்கியிருக்க விபூசிகாவுக்கு அனுமதி-

vipooshikaபுலி உறுப்பினரை வீட்டுக்குள் மறைத்து வைத்திருந்தாரென்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட பாலேந்திரன் ஜெயக்குமாரியின் மகள் விபூசிகாவை மீண்டும் சிறுவர் இல்லத்தில் தங்கியிருப்பதற்கு கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.ஐ.வகாப்தீன் இன்று அனுமதியளித்தார். பொலிஸார்மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்ததாக கூறப்படும் கோபி என அழைக்கப்படும் புலிகளின் புலனாய்வுப் பிரிவை சேர்ந்தவருக்கு புகலிடம் கொடுத்திருந்தார் என்ற சந்தேகத்தின் பேரில் பயங்கரவாத புலனாய்வு பிரிவினால் கைதுசெய்யப்பட்டிருந்த ஜெயக்குமாரி ஒரு வருடத்துக்கு பின்னர் கடந்த மார்ச் 10ஆம்திகதி பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார். சிறுவர் இல்லத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த அவரது மகள் விபூசிகா நீதிமன்ற அனுமதியுடன் மீண்டும் தாயுடன் சேர்ந்தார். அவர்கள் முன்னர் தங்கியிருந்த தர்மபுரம் வீட்டிலிருந்த உடமைகள் அனைத்தும் திருடப்பட்டிருந்தன. அத்துடன், தனது மகளை தன்னுடன் தொடர்ந்து வைத்திருப்பது மகளுக்கு பாதுகாப்பு இல்லையென்றும், இதனால் அவரை மீண்டும் சிறுவர் இல்லத்திலேயே விடும்படியும் கண்டாவளை சிறுவர் நன்னடத்தை அதிகாரி திருமதி வி.சுரேஸிடம் ஜெயக்குமாரி கோரியதைத் தொடர்ந்து அங்கு தங்கி கல்விகற்க நீதவான் அனுமதியளித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால மஹிந்த ராஜபக்ச சந்திப்பு-

mahinda maithriஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினர் இன்றுபகல் பாராளுமன்ற கட்டிடத்தில் சந்தித்துப் பேசியுள்ளனர். இந்நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இடையே இடம்பெற்ற சந்திப்பு வெற்றியளித்துள்ளதாக சந்திப்பில் கலந்துகொண்ட அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் எதிர்கால திட்டங்கள் குறித்து இதன்போது பேசப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். இவ்வாறான சந்திப்பொன்று எதிர்வரும் நாட்களிலும் நடத்தப்படவுள்ளதாக அமைச்சர் ஊடகங்களிடம் குறிப்பிட்டுள்ளார். பாராளுமன்ற கட்டிடத்தில் இன்று இடம்பெற்ற சந்திப்பில் அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, எம்.கே.டி.எஸ். குணவர்த்தன, துமிந்த திஸாநாயக்க ஆகியோரும் பாராளுமன்ற உறுப்பினர்களான நிமல் சிறிபாலடி சில்வா, அநுர பிரியதர்ஷன யாப்பா, மஹிந்தானந்த அலுத்கமகே, டளஸ் அழகப்பெரும, குமார வெல்கம, ஜீ.எல்.பீரிஸ், பந்துல குணவர்த்தன, பைசர் முஸ்தபா ஆகியோரும் இச்சந்திப்பில் கலந்து கொண்டிருந்துள்ளனர்.

இலங்கையர் கொலை தொடர்பாக சந்தேகநபர் கைது-

arrestஅமெரிக்காவில் இலங்கையர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவரை டெக்ஸாஸ் பியூமாண்ட் பொலிஸார் கைது செய்துள்ளனர். 19 வயதான சன்ட்லர் கெய்ல் வென்டீஸ் என்பவரே கைதுசெய்யப்பட்டுள்ளார். வீட்டு உபயோகப்பொருள் கடை உரிமையாளராக இருந்த மேதானந்த குருப்பு (52 வயது) என்ற இலங்கையர் கடந்த ஏப்ரல் மாதம் 28ஆம் திகதி சுட்டுக் கொல்லப்பட்டார். முகமூடி அணிந்த நபர்கள், கடைக்குள் சென்று அவரைத் தாக்கியதுடன் துப்பாக்கிச் சூடும் நடத்தியுள்ளனர். சந்தேக நபர்கள் இருவரின் முகங்களும் சீ.சீ.ரீ.வி. கமராவில் பதிவாகியுள்ளன. அதில் ஒரு சந்தேக நபரே இலங்கையர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதாக பியூமொன்ட் பொலிஸார் தெரிவிக்கின்றனர். மேதானந்த குருப்பின் மார்பில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பிரேத பரிசோதனை அறிக்கைககளில் காணப்படுவதாக தெரிவித்த பொலிஸார், கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபரான சன்ட்லர் கெய்ல் வென்டீஸ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவித்துள்ளனர்.

அவுஸ்திரேலிய அமைச்சர் இலங்கையில் சந்திப்பு-

meetingஅவுஸ்திரேலியாவின் குடிவரவுத்துறை அமைச்சர் பீட்டர் டட்டன் மற்றும் அவரது குழுவினரும், மீள்குடியேற்ற மற்றும் புனர்நிர்மாண அமைச்சர் டி.எம். சுவாமிநாதனை நேற்று சந்தித்துள்ளனர். கொழும்பில் நேற்று இடம்பெற்ற இந்த சந்திப்பின்போது ஆட்கடத்தல்கள், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களின் மீளமைப்பு உள்ளிட்ட சில விடயங்கள் பற்றி ஆராயப்பட்டுள்ளது. குறித்த சந்திப்பில் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் ரொபின் மூடியும் கலந்துகொண்டிருந்தார். முக்கியமாக இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு ஆட்களை கடத்திச் செல்வது குறித்து இரு நாடுகளும் கலந்துரையாடி முக்கிய தீர்மானங்களை எட்டியுள்ளதாக அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவுஸ்திரேலிய அமைச்சர், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடனும், கலந்துரையாடியுள்ளதாகவும், ஜனாதிபதியின் கவனத்திற்கும் கொண்டு வரவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதுதவிர, இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக மற்றும் பொருளாதார ரீதியான உறவுகள் பற்றியும், அதற்காக ஒத்துழைப்புகள் பற்றியும் ஆராயப்பட்டதாகவும் கூறினார்.

மஹிந்தவின் பாதுகாப்பு பிரிவு பிரதானியிடம் விசாரணை-

inquiryமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு பிரிவு பிரதானி கொல் மஹேந்திர பெனாண்டோவிடம் இராணுவ விசேட விசாரணை பிரிவு விசாரணைகளை மேற்கொண்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்குபற்றிய அங்குனுகொலபெலஸ்ஸ கூட்டத்தில் இராணுவ கொப்ரால் ஒருவர் துப்பாக்கிடம் சென்ற சம்பவம் தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கூட்டத்திற்கு துப்பாக்கியுடன் சென்ற இராணுவ கொப்ரால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு பிரிவு உறுப்பினர் என்றும் அவர் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் பாதுகாப்புக்காக அங்கு சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தெளிவுபடுத்தி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று ஊடகங்களுக்கு விளக்க அறிக்கை ஒன்றை விடுத்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

கோட்டாபயவுக்கு எதிராக ஜே.வி.பி முறைப்பாடு-

gotabaya......தேசத்துக்கு மகுடம் (தெயட்ட கிருள) கண்காட்சியின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி மோசடி தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியினால் (ஜே.வி.பி) இலஞ்ச ஊழல் மோசடி விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கோட்டாபய ராஜபக்ஷவுடன் அம்பாறை மாவட்ட முன்னாள் செயலாளர் நீல் டி அல்விஸ்(தற்போது மாத்தளை மாவட்ட செயலாளர்), அம்பாறை நகர சபையின் தலைவர் இந்திக நலின் ஜயவிக்ரம மற்றும் அம்பாறை, இலக்கம் 13, முதலாவது ஒழுங்கையில் வசிக்கும் எஸ்.ஏ.தினுஸ் பிரபாத் ரங்கஜீவ ஆகியோருக்கு எதிராகவும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

பஸ் கடலில் வீழ்ந்து விபத்து, அறுவர் கைது-

bus accidentஹம்பாந்தோட்டையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த இபோச பஸ் ஒன்று விபத்துக்கு உள்ளானதில் 6பேர் காயமடைந்துள்ளனர். உனவட்டுன – ததவெல்ல பகுதியில் வீதியை விட்டு விலகிய பஸ் கடலில் விழுந்து விபத்துக்கு உள்ளானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று அதிகாலை 5.30 அளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. பஸ்ஸில் 25பேர் பயணித்துள்ள நிலையில் அறுவர் காயமடைந்து கராபிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சாரதி நித்திரை கொண்டதால் இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக ஹபராதுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலதிக விசாரணைகள் தொடர்கின்றன.

பிரித்தானிய பொதுத்தேர்தல், தமிழ் பெண்ணும் போட்டி-

britishபிரித்தானிய பொதுத்தேர்தல் தொடர்பான இறுதிக்கட்ட தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் வேட்பாளர்கள் ஈடுபட்டுள்ளனர். நாளை பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்புகள் இடம்பெறவுள்ள நிலையில், கட்சித் தலைவர்களும், வேட்பாளர்களும் தீவிரமாக வாக்கு கோரும் பணியில் ஈடுபட்டுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்படி, பிரித்தானியாவை ஒளிமயமான எதிர்காலத்தின் வழியில் இட்டுச்செல்வதற்கு பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரோன் உறுதியளித்துள்ளார். இந்நிலையில், தொழிற்கட்சியின் வேட்பாளர் எட் மிலிபேன்ட் தமது தேர்தல் பிரசாரங்களில், தொழிற்துறையினரை முன்னிலைப்படுத்தியே தனது அரசாங்கம் செயற்படும் என உறுதியளித்து வருகிறார். இத்தேர்தலில் இலங்கையை பூர்வீகமாக கொண்ட 3பேர் போட்டியிடுகின்றனர். இதில் உமா குமரன் என்ற தமிழ் பெண் ஹரோ பகுதியில் போட்டியிடுகிறார். இவர் தொழிற்கட்சி சார்பில் போட்டியிடுகின்றார். உமா குமரனின் பெற்றோர் இலங்கை போரினால், லண்டனுக்கு குடிபெயர்ந்தவர்கள். லண்டன் குயீன்ஸ் மேரி பல்கலைக்கழகத்தில், அரசியலில் பட்டம்பெற்ற உமா குமரன், பொதுக் கொள்கையில், முதுமாணிப் பட்டம் பெற்றுள்ளார். இதேபோல் கேம்பிரிஜில் சமலி பெர்ணாண்டோ என்ற பெண்ணும், ஹெம்சயரில் ரணில் ஜயவர்தன என்பவரும் போட்டிடுகின்றனர்.

சுழிபுரம் பாரதி கலைமன்றத்தில் மன்றத் தலைவி தலைமையில் நிகழ்வு-

ainkaranயாழ். சுழிபுரம் பாரதி கலைமன்றத்தில் மன்றத் தலைவி. திருமதி. சுதாகரன் தலைமையில் சர்வதேச மகளிர் தினம் அனுஸ்டிக்கப்பட்டது. இவ் நிகழ்வின்போது வலிமேற்கு பிரதேசசபைத் தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தார். முன்னதாக அருகில் உள்ள ஆலயத்தில் வழிபாடுகள் இம் பெற்றதனைத் தொடர்ந்து மழலைகள் வரவேற்புடன் பிரதம விருந்தினர் மங்கல விளக்கேற்றி நிகழ்வினை ஆரம்பித்து வைத்தாhர். இவ் நிகழ்வில் பல சிறுவர் மற்றும் மகளிர் நிகழ்வுகள் இடம்பெற்றன. இவ் நிகழ்வில் கலந்து சிறப்பித்துக்கொண்ட வலிமேற்கு பிரதேசசபைத் தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் உரையாற்றுகையில் இன்று இங்கு மேற்கொள்ளப்பட்ட மகளிர் நிகழ்வுகள் மனதுககு மிக மகிழ்ச்சியினை அளிக்கின்றது. இவ் மகளிர் நிகழ்வுகள் ஊடாக மகளிரது பல்வேறு அல்லது பல்துறை ஆற்றல்களும் வெளிபாடுகளும்

Read more

திருவள்ளுவர் விழா 2015 – சுவிஸ் சூரிக்

neu - V5

Read more

வட்டு கிழக்கு அறிவொளி சனசமூக நிலையத்தில் அபிவிருத்திக் கூட்டம்-

-0=--யாழ். சித்தன்கேணி வட்டு கிழக்கு அறிவொளி சனசமூக நிலையத்தில் பிரதேச ரீதியான அபிவிருத்தி தொடர்பிலான கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இவ் நிகழ்வில் வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன், வலி மேற்கு பிரதேச சபையின் செயலாளர் திருமதி. சாரதா உருத்திரசாம்பவன், சனசமூக நிலைய உத்தியோகஸ்தர் கிராமசேவகர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகஸ்தர். மற்றும் வலிமேற்கு பிரதேசசபை தொழில்நுட்ப உத்தியோகஸ்தர் ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர். இங்கு கிராமத்தினுடைய பல்;வேறு அபிவிருத்தித் திட்டங்கள் முன்மொழியப்பட்டு அவற்றில் மிக முக்கியமான திட்டங்கள் தொடர்பில் முக்கியத்துவம் வழங்கப்பட்டு ஆராயப்பட்டதற்கும் மேலாக குறித்த திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் சந்தர்ப்பத்தில் மேற்படி கிராம மட்ட அமைப்பினரே அவற்றைக் கண்காணிக்கவேண்டும் என்பதும் சுட்டிக்காட்டப்பட்டது.

பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கைது-

johnston fernandoமுன்னாள் வர்த்தக அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, நிதி குற்ற விசாரணை பொலிஸ் பிரிவினரால்; கைதுசெய்யப்படடுள்ளார். பணம்; கொடுக்காமல் லங்கா சதொசவில் 5 மில்லியன் ரூபாய் பெறுமதியான பொருட்களை கொள்வனவு செய்தமை தொடர்பில் வாக்குமூலம் வழங்க நிதி குற்ற விசாரணை பொலிஸ் பிரிவுக்கு சென்றிருந்தபோதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். நிதி குற்ற விசாரணை பொலிஸ் பிரிவுக்கு கிடைத்த வாக்குமூலத்தை அடுத்து முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. நிதி குற்ற விசாரணை பொலிஸ் பிரிவுக்கு கிடைக்கப்பறெ;ற வாக்குமூலத்தை அடுத்தே முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார்.

பசில் ராஜபக்சவின் விளக்கமறியல் நீடிப்பு-

basilவிளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, இன்று முற்பகல், கடுவெல நீதவான் நீதிமன்றத்துக்கு அம்பியூலன்ஸ் வண்டியில் அழைத்துவரப்பட்டார். கடந்த மாதம் 22ஆம் திகதி கைதுசெய்யப்பட்ட பசில் ராஜபக்ஷவை இன்றுவரை விளக்கமறியலில் வைக்குமாறு கடுவெல நீதவான் நீதிமன்றம், அன்று உத்தரவிட்டிருந்தது. அத்துடன், வழக்கு விசாரணையையும் இன்றுவரை ஒத்திவைத்திருந்தது. இன்று, இந்த வழக்கு விசாரணை மீண்டும் இடம்பெற்ற நிலையில், வைத்தியசாலையிலிருந்து அம்பியூலன்ஸ் வண்டிமூலம் பசில் ராஜபக்ஷ, நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டிருந்தார். இந்நிலையில் அவருக்கான விளக்கமறியல், மே மாதம் 7 ஆம் திகதி வரையிலும் நீடிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, திவிநெகும நிதி மோசடி தொடர்பில் அவருடன் கைது செய்யப்பட்டு விளக்கமறியல் வைக்கப்பட்டுள்ள ஏனைய மூவரின் விளக்கமறியலும் 7ஆம் திகதி வரையிலும் நீடிக்கப்பட்டுள்ளது.

கோண்டாவில் பகுதியில் பதற்ற நிலைமை-

rtrtrயாழ். கோண்டாவில் டிப்போவுக்கு முன்பாக, வீதியில் நின்ற வயோதிபரை இன்று காலையில் பிஸ்கட் கம்பனியின் கன்டர் வாகனம் மோதியதையடுத்து அந்தப் பகுதியில் பதற்றநிலை ஏற்பட்டதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கன்டர் மோதியதில் உரும்பிராய் தெற்கு சேர்ந்த சீனியர் ஞானம் (வயது 55) என்பவர் உயிரிழந்தார். இதனையடுத்து, அவ்விடத்துக்கு வந்த பொதுமக்கள், கன்டர் வாகனத்தை பெற்றோல் ஊற்றி கொளுத்த முற்பட்டனர்.அவ்விடத்துக்கு சென்ற கோப்பாய் பொலிஸார் பதற்றத்தை தணித்து, பொதுமக்களை விரட்டினர். அப்பகுதியில் பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கோண்டாவிலிருந்து உரும்பிராய் நோக்கிச் சென்றுகொண்டிருந்த பிஸ்கட் கம்பனியொன்றின் கன்ரர் வாகனம் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியின் அருகிலிருந்து மின்கம்பத்தை மோதியதுடன், அருகில் நின்றிருந்த வயோபதிபர் ஒருவரையும் மோதியது. அதில் அவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. கன்ரர் வாகன சாரதியை கைது செய்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் சிறுவன் கொலை: சந்தேகநபர் கைது-

arrestவவுனியாவில் 10 வயது சிறுவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தில் பேரில் 18 வயது இளைஞன் ஒருவர் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். வவுனியா, சாம்பல் தோட்டம் பகுதியில் கடந்த மாதம் 9ஆம் திகதி 10வயது சிறுவன் சடலமாக மீட்கப்பட்டார். சந்திரசேகரன் சஞ்சய் என்ற சிறுவனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டிருந்தான். இது தொடர்பாக வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் அணி விசாரணைகளை முன்னெடுத்திருந்தது. இந்நிலையில் இக்கொலையுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் சிறுவனின் உறவினரான 18வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் சிறுவனின் வீட்டில் இருந்த உண்டியலில் உள்ள பணத்தை திருடும் பொருட்டு அங்கு சென்றுள்ளார். அதை கண்ட குறித்த சிறுவன் விடயத்தை பெற்றோரிடம் சொல்லப் போவதாக தெரிவித்துள்ளான். இதனையடுத்து சந்தேகநபர் சிறுவனின் கழுத்தை வெட்டிக் கொலையை புரிந்துள்ளார் என விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

திஸ்ஸவை கட்சியிலிருந்து நீக்கியது செல்லுபடியற்றது-

courts (2)ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவைஅக் கட்சியில் இருந்து நீக்கியமை செல்லுபடியற்றது என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது ஐ.தே.க.விலிருந்து வெளியேறிய திஸ்ஸ அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கு ஆதரவளித்ததுடன், சுகாதார அமைச்சராகவும் பதவியேற்றிருந்தார். அவரது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக ஐ.தே.கவின் மத்திய செயற்குழு கட்சியிலிருந்து திஸ்ஸவை நீக்கியது. இதனைத் தொடர்ந்து கட்சியின் நடவடிக்கைக்கு எதிராக திஸ்ஸ நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார். இம் மனுமீது இன்று தீர்ப்பளித்த உயர் நீதிமன்றம் திஸ்ஸவை கட்சியிலிருந்து நீக்குவதற்குரிய நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என கூறியதுடன், அத்தீர்மானம் சட்டவிரோதமானது என தீர்ப்பளித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

விமானப்படை முகாமில் தற்கொலைச் சம்பவம்-

shotகொழும்பு, ரத்மலானை வான்படை முகாமில் பாதுகாப்பு சாவடியில் பணியாற்றிய இராணுவத்தைச் சேர்ந்த ஒருவர் இன்று முற்பகல் தமது துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக காவல்துறை ஊடக பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். காவல்துறையினர் இது தொடர்பில், விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும், நீதிமன்ற விசாரணைகள் மற்றும் பிரேத பரிசோதனைகளை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார் இரத்மலானை விமானப்படை முகாமில் துப்பாக்கிச்சூட்டு காயங்களுடன் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இத்தகவலை விமானப்படை பேச்சாளரும் தெரிவித்துள்ளார்.

ரயில் விபத்துக்களினால் 12பேர் உயிரிழப்பு-

madu trainரயில் விபத்துக்களினால் 12பேர்வரை மாதாந்தம் உயிரிழப்பதாக ரயில்வே திணைக்களம் தெரிவிக்கின்றது. கவனயீனமே இந்த விபத்துக்களுக்கு முக்கிய காரணம் என திணைக்களத்தின் பொது முகாமையாளர் விஜய அமரதுங்க கூறினார். ரயில் கடவைகளை கடக்கின்ற சந்தர்ப்பங்களில், சமிக்ஞைகளை பொருட்படுத்தாது பயணிக்கின்றமையால் அதிக விபத்துக்கள் இடம்பெறுவதாக ரயில்வே பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார். போக்குவரத்து விதிமுறைகளை மீறும் ரயில் சாரதிகளை சட்டத்தின்முன் நிறுத்துவதற்கான திட்டமொன்றை பொலிஸாருடன் இணைந்து தயாரித்து வருவதாக அவர் கூறினார். அத்துடன், ரயில் கடவைகள் தொடர்பான போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றுவது குறித்த தெளிவூட்டல்களையும் வழங்கவுள்ளதாக ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டது.

இலங்கையர்களுக்கு புதிய கடவுச் சீட்டு-

passportபுதிய கடவுச் சீட்டொன்றை அறிமுகப்படுத்துவது தொடர்பில் பொது அமைதி அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது. இதற்கான முன்னோடி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார். உத்தேச புதிய கடவுச் சீட்டில் உள்ளடக்கப்படவேண்டிய விபரங்கள் குறித்து ஆராய்ந்து, அமைச்சரவை பத்திரமொன்றை தாக்கல் செய்யவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எவ்வாறாயினும் இந்த நடவடிக்கை பூர்த்தியாவதற்கு நீண்ட நாட்கள் தேவைப்படலாம் எனவும் பொது அமைதி அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார். ஆள் அடையாளத்தை உறுதிபடுத்துவதற்காக, கைவிரல் அடையாளத்தை பயன்படுத்துவது தொடர்பிலும், இதன்போது ஆலோசித்து வருவதாக அமைச்சர் ஜோன் அமரதுங்க மேலும் தெரிவித்துள்ளார்.

வடமாகாண அபிவிருத்தி உதவியாளர்கள் ஒன்றிய போசகராக முன்னாள் அரச அதிபர் தெரிவு. 

dfdddபட்டதாரிகளை அரச சேவையில் இணைக்கும் திட்டத்தின் பிரகாரம் 2005ம் ஆண்டு அரச சேவைக்கு உள்ளீர்ப்பு செய்த அபிவிருத்தி உதவியாளர்கள் தாம் தற்போது தொழில்நிமித்தம் எதிர்கொள்ளும் பலதரப்பட்ட சிக்கல்கள் தொடர்பாக மாவட்ட ரீதியாக கலந்துரையாடல்கள் மேற்கொண்டு தமது மாவட்ட ரீதியான தொழில் சங்கத்தினை ஏற்கனவே ஆரம்பித்திருந்தனர். இதனை மேலும் விஸ்தரிக்கும் முகமாக வடமாகாணம் தழுவிய வடமாகாண அபிவிருத்தி உதவியாளர்கள் ஒன்றியம் எனும் அமைப்பினை ஆரம்பித்துள்ளனர். இந்த ஒன்றியத்தின் போசகரும் ஆலோசகருமாக இந்த துறையுடன் நன்கு தேர்ச்சி பெற்றவரும் இலங்கை நிர்வாக சேவையின் சிரேஸ்ட ஓய்வுநிலை அதிகாரியும் யாழ் மற்றும் வவுனியா மாவட்ட முன்னைநாள் அரச அதிபராக கடமையாற்றி பின்னர் வடக்கு கிழக்கு மாகாண வீடமைப்பு புனரமைப்புத்திட்ட பணிப்பாளராகவும் பின்னர் வடக்கு மாகாண விவசாய மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் செயலராகவும் கடமையாற்றிய செல்லையா பத்மநாதன் அவர்கள் அபிவிருத்தி உதவியாளர்கள் அனைவரது விருப்பத்தினையும் வேண்டுகோளையும் ஏற்று ஒன்றியத்தின் போசகராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இதன் ஆரம்ப கூட்டம் 02.05.2015 அன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. இக் கலந்துரையாடலில் யாழ் மாவட்ட ஒன்றிய பிரதிநிதிகளுடன் வடமாகாணத்தின் ஏனைய மாவட்ட பிரதிநிதிகளும் கலந்துகொண்டு தமது மாவட்டத்தில் தாம் எதிர்நோக்கும் தொழில் நிலைமைகள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டு எதிர்காலத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான ஆக்கபூர்வமான தீர்மானங்களும் எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

வடமாகாண அபிவிருத்தி உதவியாளர்கள் ஒன்றியம். வடமாகாணம்.

காணாமல் போனவர்கள் பற்றிய விசாரணைக்கு விசேட குழுக்கள்-

missingகாணாமல் போனவர்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகளுக்கென இவ்வாரம் நான்கு விசேட குழுக்கள் அமைக்கப்படவுள்ளன. இது தொடர்பான தகவலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளித்துள்ளதாக காணாமல் போனவர்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன்படி விசாரணைக் குழுவை ஜனாதிபதி நியமிக்கவுள்ளார். ஜனாதிபதியிடம் அண்மையில் கையளித்த அறிக்கையில் விசாரணைக்கென நான்கு பேர் அடங்கிய நான்கு விசாரணைக் குழு நியமிக்கப்பட வேண்டும் என பரிந்துரை செய்துள்ளதாக காணாமல் போனவர்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது. காணாமல் போனவர்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு சுமார் 16,000 முறைப்பாடுகள் குறித்து விசாரணை செய்யவுள்ளது.

நியுசிலாந்தில் 5.6ரிச்டர் அளவில் நிலநடுக்கம்-

new zealandநியூசிலாந்தின் தெற்கு தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது இதனால் அங்குள்ள வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. பல வீடுகளின் கண்ணாடி ஜன்னல்கள் உடைந்து நொறுங்கியுள்ளன. இதனால் அச்சமடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் ஓடியதுடன் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் புகுந்தனர். அங்கு 5.6 ரிக்டரில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது, பூமிக்கு அடியில் 10 கி.மீற்றர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. தெற்கு தீவில் வனாகா என்ற நகரம் சுற்றுலா மையமாகும் இங்கு 6,500 மக்கள் வசிக்கின்றனர். இந்நிலையில் நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து அங்கு தங்கியிருந்த பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வெளியேற்றப்பட்டதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலை நிறுத்தம் செய்யப்போவதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் எச்சரிக்கை-

busவவுனியா பஸ் நிலையத்தில் இருந்து பயணத்தை ஆரம்பிக்கும் பஸ்கள் உரிய நேர அட்டவணை இல்லாமையால் பிரச்சினைகளை எதிர்கொண்டு வருவதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். நேர அட்டவணை இல்லாததால் இபோச பஸ்களில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து தனியார் பஸ்கள் நட்டத்தை எதிர்கொண்டு வருவதாக சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. அதனால் நேர அட்டவணை ஒன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு வவுனியா தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அப்படி இல்லையேல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாகவும் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நேபாளத்தில் 2000 பேருக்கு இலங்கை குழு சிகிச்சையளிப்பு-

nepal treatmentநேபாளத்தில் உள்ள இலங்கை படையினர் அங்கு நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்ட சுமார் 2000 பேருக்கு இதுவரை சிகிச்சையளித்துள்ளதாக நிவாரணக் குழுவின் தலைவர் மேஜர் ஜெனரல் மைத்திரி டயஸ் தெரிவித்துள்ளார். நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வீதிகளை சரிசெய்து கிராமங்கள் நோக்கி தமது குழு சென்று கொண்டிருப்பதாக அவர் கூறியுள்ளார். பொறியியலாளர் குழுவொன்று நேபாள் வந்துள்ளதால் தமது நிவாரணப் பணி மேலும் விரிவடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகம் ஒன்றிற்கு அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, நேபாள் நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலங்கை செஞ்சிலுவை சங்கமும் உதவி அளித்து வருகின்றமை இங்கு சுட்டிக்காட்டத்தக்க விடயமாகும்.

வாக்காளர் இடாப்பு பதிவு பத்திரம் விநியோகம்-

election boxஎதிர்வரும் 15ம் திகதி தொடக்கம் வாக்காளர் இடாப்பு தொடர்பான பத்திரத்தை கிராம சேவகர்கள் வீட்டுக்கு வீடு சென்று விநியோகிப்பர் என தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. இப்பணி ஜூன் 15ம்திகதி நிறைவுபெறும் என செயலகம் கூறியுள்ளது. சேவை அவசியம் கருதி அக்காலம் நீடிக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் கிராம சேவகர்களுக்கு தெளிவுபடுத்தியுள்ளதாக தேர்தல்கள் செயலகம் குறிப்பிட்டுள்ளது. கிராம சேவகர் வழங்கும் பத்திரத்தை சரியாக நிரப்பி மீண்டும் கிராம சேவகரிடம் கையளிக்க வேண்டும். இந்த பத்திரத்தில் கையொப்பமிடும் நடவடிக்கை தேர்தல்கள் ஆணையாளரால் செப்டெம்பர் இடம்பெறவுள்ளது. அதன்படி அடுத்த தேர்தலில் 2015 வாக்காளர் இடாப்பை பயன்படுத்த முடியும் எனவும் கூறப்பட்டுள்ளது.

மேதிரிகிரிய மினி சூறாவளியால் 30 வீடுகளுக்கு பாதிப்பு-

medirigriyaபொலன்னறுவை, மெதிரிகிரிய மற்றும் கல்லேல்ல உள்ளிட்ட பல பிரதேசங்களை ஊடறுத்து வீசிய மினி சூறாவளியினால் 30 வீடுகளின் கூரைகள் அள்ளுண்டு சென்றன. மெதிரிகிரிய தலாகொல வௌ, வடிகவௌ ஆகிய பிரதேசங்களில் 15 வீடுகளும் கல்லேல்ல மற்றும் மஜின்புர ஆகிய பிரதேசங்களில் 15 வீடுகளுமே சேதமடைந்துள்ளன என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. நேற்றுமாலை வீசிய இந்த மினி சூறாவளியுடன் ஐஸ் கட்டிகளும் விழுந்ததாக பிரதேசவாசிகள் nதிவித்துள்ளனர்.

புகலிடக் கோரிக்கையாளர்கள் 3ஆயிரத்து 700பேர் மீட்பு-

boatகடந்த இரு தினங்களில் சுமார் 3,700 புகலிடக் கோரிக்கையாளர்கள் லிபியாவை ஒட்டிய கடற்பிராந்தியத்தில் வைத்து மீட்கப்பட்டதாக இத்தாலிய கடலோரக் காவல் படையினர் தெரிவித்துள்ளனர். மரத்தாலான மற்றும் காற்றடைக்கப்பட்ட பலூன் படகுகளின் ஊடாக குறித்த புகலிடக் கோரிக்கையாளர்கள் பயணித்த நிலையில் மீட்கப்பட்டனர். இதன்பொருட்டு, இத்தாலிய மற்றும் பிரான்ஸ் கப்பல்கள் தனித்தனியாக 17 மீட்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளன. இந்நிலையில், புகலிடக் கோரிக்கையாளர்கள் இத்தாலிக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையிலும், மீட்புப் பணிகள் தொடர்கின்றன. இந்த வருடத்தில் மாத்திரம் மத்திய தரைக் கடலை கடக்க முனைந்த சுமார் 1,750 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

காணியை மீட்டுத் தருமாறு வுனியா மக்கள் கோரிக்கை-

arpattamவவுனியா, பேயாடிகூழாங்குளம் பகுதி மக்கள், பொது காணியை தமது கிராமத்தின் தேவைக்காக மீட்டுத்தருமாறு கோரி இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வவுனியா ஏ9 வீதியுடன் உள்ள பேயாடிகூழாங்குளம் கிராமத்திற்கு சொந்தமான பொது காணி, கலாசார அமைப்பொன்றுக்கு வழங்கப்பட்டமையை எதிர்த்தே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. பிரதேச செயலர் பொதுமக்களின் கோரிக்கைக்கு மாறாகவே இக் காணியை வழங்கியுள்ளதாக அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். தமது கிராமத்திற்கு சொந்தமான காணியை கலாசார அமைப்புக்கு வழங்கியுள்ளமையால், தமது கிராமத்திற்கு பொது கட்டிடங்கள் இல்லை எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்த கிராமத்திற்கு பொது கட்டிடம், முன்பள்ளி, பாடசாலை கட்டிடம் ஆகியன காணப்பட்ட போதிலும், அவை இராணுவ கட்டுப்பாட்டில் உள்ளதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவித்துள்ளனர். இதேவேளை, இந்த காணி சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டே வழங்கப்பட்டுள்ளதாகவும், இந்த காணி குறித்து ஏதேனும் பிரச்சினைகள் காணப்படுமாயின் அரசாங்க அதிபருக்கு அறிவிக்குமாறும் வவுனியா பிரதேச செயலாளர் தெரிவித்துள்ளார்.

ஜோன் கெரி தமிழ் தேசிய கூட்டமைப்பு சந்திப்பு-

johnஇலங்கை வந்துள்ள அமெரிக்காவின் ராஜாங்க செயலாளர் ஜோன் கெரியை தமிழ் தேசிய கூட்டமைப்பு சந்தித்துள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான குழுவினர் இச்சந்திப்பில் பங்கேற்றிருந்தனர். தற்சமயம் ஏற்பட்டுள்ள சிறந்த சூழ்நிலையை சாதகமாக பயன்படுத்தி, தமிழ் மக்களுக்கான பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜோன் கெரி தமிழ் தேசிய கூட்டமைப்பை கோரியதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனைத் தொடர்ந்து ஜோன் கெர்ரி இலங்கையிலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார். இன்றுமுற்பகல் 11.40அளவில் அவரது விசேட விமானம் நாட்டிலிருந்து கென்யா நோக்கி புறப்பட்டு சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றுக்காலை இலங்கை வந்த அவர், வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவை முதலில் சந்தித்திருந்தார். பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமா ரணில் விக்ரமசிங்க ஆகியோருடன் சந்திப்பை நடத்தியதுடன், இன்றுகாலை அவர் தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட பல தரப்பினரையும் சந்தித்திருந்தார்.

வெசாக் போயா தினத்தை முன்னிட்டு சிறைக்கைதிகள் விடுதலை-

jailவெசாக் போயா தினத்தை முன்னிட்டு பொதுமன்னிப்பின் கீழ், நாடெங்கிலும் உள்ள சிறைச்சாலைகளில் இருந்து சிறு குற்றங்கள் புரிந்த 488 கைதிகள் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர். சிறுகுற்றம், தண்டப்பணம் செலுத்த தவறிய கைதிகளே இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இதற்கமைவாக யாழ்ப்பாணம் சிறைச்சாலையிலிருந்து 8 பேரும் மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து 14 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 70 வயதினை கடந்தவர்களும், அபராதம் செலுத்த முடியாதவர்கள் மற்றும் சிறு குற்றங்களுக்காக சிறைத்தண்டனை அனுபவித்தவர்களும் வெசாக் பூரணையை முன்னிட்டு பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் ரோஹன புஷ்பகுமார கூறியுள்ளார். எவ்வாறாயினும், போதைப்பொருள், கொலை உள்ளிட்ட பாரிய குற்றங்கள் தொடர்பில் சிறையில் அடைக்கப்பட்டவர்களுக்கு மன்னிப்பு வழங்கப்படவில்லை எனவும் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் ரோஹன புஷ்பகுமார சுட்டிக்காட்டியுள்ளார்.

பொதுத் தேர்தலுக்கு முன் தேர்தல் ஆணையாளர் ஓய்வு-

mahindaதேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய எதிர்வரும் ஜுன் 6ஆம் திகதியுடன் 60 வயதை பூர்த்தி செய்வதோடு, அவரது பதவியில் இருந்தும் ஓய்வுப் பெறவேண்டும். அவர் தொடர்ந்தும் அப்பதவியில் நீடிக்க விரும்பினால் முன்னரே அதற்கான கோரிக்கையை முன்வைத்திருக்க வேண்டும். எனினும், அவர் இதுவரை அவர் பதவியில் நீடிக்க வேண்டும் என எவ்வித கோரிக்கையும் முன்வைக்கவில்லை என தகவல்கள் கூறுகின்றன. நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 19ஆவது திருத்தச் சட்டத்துக்கமைய சுயாதீனத் தேர்தல் ஆணைக்குழு ஆரம்பிக்கப்படவுள்ளது. சுயாதீனத் தேர்தல் ஆணைக்குழு ஆரம்பிக்கப்பட்ட பின்னர் தேர்தல் ஆணையாளரின் அதிகாரம் தேர்தல் ஆணைக் குழுவின் கீழ் வரவுள்ளது. எனினும் 19ஆவது திருத்தச் சட்டத்துக்கமைய தேர்தல் ஆணையாளர் தனது பதவிக் காலத்தை 65வயது வரை நீடித்துக்கொள்வதற்கான வாய்ப்புகளும் உள்ளன.

ஊடகப்படுகொலை தினம், உதயன் குழுமத்தினால் அனுஸ்டிப்பு-

vetkaiஉதயன் பத்திரிகை நிறுவன ஏற்பாட்டில் கடந்த அசாதாரண சூழலின்போது சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் இன்று நினைவு கூரப்பட்டனர். குறித்த நினைவு கூறல் யாழ்.பொதுநூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதன்போது சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நிகழ்வில் கலந்து கொண்டவர்களினால் சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. பொதுச்சுடரை உதயன் குழுமத்தின் தலைவர் ஈ.சரவணபவன் ஏற்றி வைத்தார். இந்நிகழ்வில் வடமாகாண சபை அமைச்சர் ஐங்கரநேசன், வடமாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே சிவஞானம், வடமாகாண சபை உறுப்பினர்களான பா. கஜதீபன், தர்மலிங்கம் சித்தார்த்தன், விந்தன் கனகரத்தினம், பரஞ்சோதி, வைத்தியசாலை பணிப்பாளர் பவானந்தராஜா, பிரதேச சபை உறுப்பினர்கள், பிரதேச செயலர்கள் எனப் பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் குடும்பத்தினருக்கு உதயன் குழுமத்தின் தலைவர் ஈ.சரவணபவனால் உதவித் தொகைகள் வழங்கி வைக்கப்பட்டது. இதேவேளை வரலாற்று முக்கியத்துவமான புகைப்படங்கள் மற்றும் உதயன் ஆரம்பகால நாளிதழ்கள் என்பன காட்சிப்படுத்தப்பட்டன. மேலும் குறித்த கண்காட்சி இன்று 9 மணியிலிருந்து 3 வரை இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

நேபாள நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 6,621ஆக உயர்வு-

nepal................நேபாளத்தில் கடந்த 25ம் திகதி 7.9 ரிக்டரில் கடும் பூகம்பம் ஏற்பட்டது. அதில், காத்மாண்டு, கீர்த்தி நகர் மற்றும் போக்ரா உள்ளிட்ட பகுதிகளில் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின. பூகம்பம் நடந்து ஒரு வாரமாகியும் தொடர்ந்து மீட்புபணி நடந்து வருகிறது. மீட்பு மற்றும் உதவிப் பணிகளில் இலங்கை மற்றும் இந்தியா என்பன தீவிர பங்கு வகிக்கின்றன. அது தவிர பல்வேறு வெளிநாடுகளும் மீட்புக் குழுவை அனுப்பி இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும பணியில் ஈடுபட்டுள்ளன. இதுவரை 6621 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 14,023 பேர் காயமடைந்துள்ளனர். மீட்புப் பணியில் 20க்கும் மேற்பட்ட நாடுகள் ஈடுபட்டுள்ளன. மோப்ப நாய்கள் மற்றும் அதிநவீன கருவிகளுடன் உயிருடன் இருப்பவர்கள் மீட்கப்பட்டு வருகின்றனர். இதேவேளை நேபாள நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நடவடிக்கைகளுக்காக, இலங்கையில் இருந்து மற்றுமொரு குழு புறப்பட்டுச் சென்றுள்ளது. இன்றுகாலை 10.45 அளவில் இலங்கை விமானப்படைக்கு சொந்தமான விமானம் ஒன்றிலேயே இவர்கள் புறப்பட்டுச் சென்றுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உணவு, குடிநீர் மற்றும் மருந்துப் பொருட்கள் சகிதம் இவர்கள் தமது பயணத்தை மேற்கொண்டுள்ளனர். இதேவேளை முன்னதாக இரு உதவிக் குழுக்கள் இலங்கையில் இருந்து நேபாளத்திற்கு சென்றிருந்தநிலையில், இவர்கள் மூன்றாவது குழுவினராகும்.

ஜோன் கெர்ரி ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் சந்திப்பு-

maiththir john geryஅமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெர்ரி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரைச் சந்தித்துள்ளார். இன்றுநண்பகல் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இருநாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெர்ரி இன்று காலை இலங்கையை வந்தடைந்தார். இவருடன் 32 பிரதிநிதிகளும் நாட்டுக்கு வந்துள்ளனர். இவர்களை இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர உள்ளிட்ட குழுவினர் விமான நிலையத்திற்கு சென்று வரவேற்றனர். இந்த விஜயத்தின்போது, கெர்ரி, இரண்டு முக்கிய தமிழ் கட்சித் தலைவர்கள் மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகளுடனும் கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை நாட்டில் ஜனநாயகத்தை கட்டியெழுப்ப அமெரிக்க மக்கள் இலங்கையுடன் இணைந்திருப்பார்கள் என, அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெர்ரி குறிப்பிட்டுள்ளார். வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவுடன் கலந்துகொண்ட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இலங்கையுடனான உறவை விரிவுபடுத்தவும் ஆழப்படுத்தவும் உத்தேசித்து உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அத்துடன் இலங்கை அரசாங்கத்திற்கு திறைசேரி மற்றும் வர்த்தகத் துறைகளிலுள்ள அமெரிக்க அதிகாரிகளால் தொழில்நுட்ப உதவிகளை வழங்கவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இரணைமடு கனகாம்பிகை அம்பாள் தேர்த்திருவிழா-

kovilஇலங்கையின் வடபால் அமைந்துள்ள கிளிநொச்சியின் அடையாளங்களுள் ஒன்றாக விளங்கும் இரணைமடு குளத்தின் கரையில் கோயில்கொண்டு எழுந்தருளிய திருவருள்மிகு கனகாம்பிகை அம்பாள் ஆலய வருடாந்த பெருந்திருவிழாவின் தேர்த்திருவிழா இன்று (02.05.2015) வெகு விமரிசையாக இடம்பெற்றது. கிளிநொச்சியின் அன்னை எனப் போற்றப்படும் அம்பாளுக்கு அதிகாலை விசேட அபிஷேகத்துடன் பூஜைகள் ஆரம்பமாகியது. காலை 9.30 மணிக்கு அம்பாள், விநாயகர், சுப்பிரமணியர் சகிதமாய் மூன்று அழகிய சித்திர தேர்களில் ஆரோகணித்து பவனி வந்ததை ஆயிரக்கணக்கான பக்தர்கள் மெய்யுருக வழிபட்டனர். ஏராளமான பறவைக் காவடிகள், அங்கப் பிரதட்சணைகள் செய்து ஆண்களும் மற்றும் அடி அளித்து கற்பூரச் சட்டி ஏந்தி பெண்களும் தங்களது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றினார்கள். ஊர்மக்கள் மட்டுமல்லாது இலங்கையின் பிறபாகங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் கூட ஏராளமான பக்தர்கள் வந்து அம்பாளின் அருளைப் பெற்றனர். வன்னி பிரதேசத்திலேயே மிகப்பெரிய சித்திர தேர் உள்ளதும் மூன்று சித்திரை தேர்களை கொண்டதுமாக இவ்வாலயம் விளங்குவதும் இந்த ஆலயத்தின் வரலாற்றுப் பெருமைகளில் ஒன்று. நாளை (03-04-2015) ஞாயிற்றுக்கிழமை சித்திராபூரணை தினத்தன்று இரணைமடுக்குளத்தில் தீர்த்தம் நடைபெறும். தொடர்ந்து மாலை திருவிளக்கு பூசை, இரணை மடுக்குளத்து நீரை எடுத்து வந்து அம்பிகையின் பாதத்திலே ஊற்றும் நிகழ்வான கும்பதீர்த்தம் எடுத்தலும், ஆயிரம் பானைகள் வைத்து பொங்கும் பொங்கல் நிகழ்வும் இடம்பெற்று கொடியிறக்கமும் மறுநாள் வெள்ளியன்று மாலை சங்காபிஷேகம் இடம்பெற்று அன்றிரவு பூங்காவனத் திருவிழா இடம்பெற்று அம்பாளின் வருடாந்த பெரும் திருவிழா இனிதே நிறைவுபெறும்.

உலக பத்திரிக்கை சுதந்திர நாள் (03.05.2015)-

mrs ainkaran (7)இன்றைய நாள் உலக பத்திரிக்கை சுதந்திர நாள். இன்றைய நவீன ஜனநாயக நிலையில் ஜனநயகத்தின் தூண்களில் ஒன்றாகவே ஊடகம் அமைந்துள்ளது. இவ் நாள் பத்திரிக்கை சுதந்திரத்தினை பரப்பும் நோக்கிலும் மனித உரிமைகள் சாசனத்தின் பகுதி 19இல் இடம்பெற்றுள்ள பேச்சுரிமைக்கான சுதந்திரத்தினை உலக நாடுகளின் அரசுகளுக்கு நினைவூட்டவும் ஐ.நா அமையத்தினால் சிறப்பு நாளாக பிரகடனப்படுத்தப்பட்டது. 1993ம் ஆண்டில் இடம்பெற்ற ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானத்தின் படி ஒவ்வோர் ஆண்டும் வைகாசி 3ம்நாள் பத்திரிக்கை சுதந்திர நாளாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. இந்த வகையில் எமது தேசியம் நோக்கிய நகர்வுகளில் கடந்த காலத்தில் ஊடகங்கள் மிகப் பாரிய பணியினை மேற்கொண்டிருந்தமை இன்றும் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருபவை இனத்தின் வரலாற்றில் பொன் எழுத்தக்களால் பொறிக்கப்படவேண்டிய ஒன்றாகவே உள்ளது. எமது இனத்தின் வரலாற்றில் பல இருண்ட யுகங்கள் பல அடக்கு முறைகள் இவற்றுக்கும் மேலாக எமது குரல்கள் ஒங்கி ஒலித்தபோதும் எமது உணர்வுகளை எடுத்துக் காட்ட முடியாத நிலை போன்ற பல சந்தர்ப்பங்களில் உடகங்கள் சிறப்பாக செயற்பட்டு உலக அரங்கில் எமது உரிமைக் குரல் ஒலிக்க வழி ஏற்பட்டது. ஒவ்வோர் ஊடகவியலாளர்களும் ஒர் போராளியாகவே தொழிற்பட்டு செயற்பட்டனர். ஒவ்வோர் விடியலின் ஆரம்பங்களும் ஊடகவியலாளர்களின் பேனாமுனைகளால் அலங்கரிக்கப்பட்டது. இந்நிலையில் பல ஊடகவியலாளர்களும் ஊடகங்களும் திட்டமிட்ட வகையில் சிதைக்கப்பட்டனர். கருவறுக்கப்பட்டனர். இவ்வாறான நிலையிலும் ஊடகபணி முழுமூச்சோடு செயற்பட்டது. ஒடிந்து ஒய்வுநிலை நோக்கிய இனத்தின் நகர்வின்போதும் விடியலின் தூரம் வெகுதொலைவில் இல்லை என்பதை அழுத்தி இனத்தின் விடுதலை நோக்கிய பயணத்தில் புதிய உணர்வையும் உறவையும் உருவாக்கி தலைவன் வழியில் இனத்தின் பாதச் சுவடுகளை அடியெடுக்க வழி சமைத்து வரலாற்றை புதிய நிலைக்கு நகர்வுற செய்ய பெரும் பணி இவ் ஊடகங்களுக்கே உரித்தானது. பேனா முனைகளால் விடுதலைக்கு உரமுட்டி இன்று எம்முடன் இல்லாது இந்த இனத்தில் விடுதலை நாளை ஆவலோடு காத்திருக்கும் மறைந்த ஊடகவியலாளர்களை இவ் பொன்னாளில் தழிழ் உணர்வுகளால் பூசித்து அவர்களின் நினைவாக ஒர் நினைவிடத்தை உருவாக்க ஒன்றிணைவோம்.
திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன், தவிசாளர், வலி மேற்கு பிரதேச சபை.

உண்மையைக் கண்டறிய அமெரிக்கா ஒத்துழைப்பு-

susan riseஇலங்கை உள்ளிட்ட நாடுகளில் இடம்பெற்ற குற்றங்கள் பற்றிய உண்மைகளைக் கண்டறிவதற்காக விசாரணைக் குழுக்களையும், பொறிமுறைகளையும் உருவாக்குவதற்கு அமெரிக்கா ஒத்துழைப்புகளை வழங்கியுள்ளது என அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சூசன் ரைஸ் தெரிவித்துள்ளார். “கொடூரங்கள் இழைக்கப்படும்போது, உலகெங்கும் நாம் பொறுப்புக் கூறலை உண்மையை வலுப்படுத்துகிறோம். இலங்கை, கிர்கிஸ்தான், லிபியா, ஐவரிகோஸ்ட் மற்றும் மிக அண்மையில் வடகொரியாவில் நிகழ்ந்த அட்டூழியங்கள் குற்றங்கள் தொடர்பான உண்மைகளை கண்டறிய உதவும் விசாரணைக் குழுக்களை அமைக்கவும், பொறிமுறைகளை உருவாக்கவும் நாம் ஆதரவளித்துள்ளோம்.’ என்றும் அவர் தெரிவித்துள்ளார். நியூஜேர்சியில் உள்ள செற்றன் ஹோல் பல்கலைக் கழகத்தில், உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அறிவுக்கு ஒவ்வாத குற்றங்களுக்குப் பொறுப்பானவர்களை நீதியின் முன் நிறுத்துவதற்கு எமது பங்காளர்களுடன் இணைந்து பணியாற்ற நாம் கடமைப்பட்டுள்ளோம்.” ஏன சூசன் ரைஸ் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

சூரிச்சில் நடைபெற்ற மாபெரும் மே தின ஊர்வலத்தில் புளொட்டும் பங்கேற்பு- (படங்கள் இணைப்பு)

plote may day15 - 18.சுவிற்சர்லாந்து சூரிச் மாநிலத்தில்; சுவிஸ் தொழிற்சங்கங்கள், இடதுசாரி அமைப்புக்கள், முற்போக்கு முன்னணிகள் மற்றும் உலகில் உரிமைக்காகப் போராடும் பல இன மக்களும் இணைந்து இன்று நடாத்திய மேதின (தொழிலாளர்தின) ஊர்வலத்தில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) சுவிஸ் கிளையினரும் கலந்துகொண்டிருந்தனர்.

இந்த நிகழ்வின்போது தமிழ் மக்களின் பிரச்சினைக்கு உரிய அரசியல் தீர்வு எட்டப்பட வேண்டும், அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும், இடம்பெயர்ந்துள்ள மற்றும் மீள்குடியேறிய மக்களின் அடிப்படை உரிமைகள் வழங்கப்பட வேண்டும். காணாமற் போனவர்கள் விடயத்தில் உரிய தீர்வு வழங்கப்பட வேண்டும். அனைத்து அதிகாரங்களும் உழைக்கும் மக்களுக்கே, அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் உள்ளிட்ட பல கோஷங்கள் எழுப்பப்பட்டன. Read more

 தமிழ் தேசியக் கூட்டமைப்பு மேதினக் கொண்டாட்டம் – யாழில் (படங்கள் இணைப்பு)

may_day_jaffna_13நல்லூர் சங்கிலியன் பூங்கா வளாகத்திலிருந்து உலக தொழிலாளர் தினத்தை நினைவுபடுத்தும் ஊர்திகள் சகிதம் பிற்பகல் 2.00மணியளவில் ஆரம்பமான தொழிலாளர் தின ஊர்வலம்; வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனால் ஆரம்பித்து  வைக்கப்பட்டது.
அங்கிருந்து பருத்துறை வீதி ஊடாக நல்லூர் ஆலயத்தை அடைந்து, பின்னர் ஆரியகுளம் சந்தியை அடைந்து, யாழ். நகருக்குள் வந்து காங்கேசன்துறை வீதி ஊடாக யாழ்.வீரசிங்கம் மண்டபத்தை சென்றடைந்தது.
வீரசிங்கம் மண்டபத்தில் தொடர்ந்து உலக தொழிலாளர் தினத்தை ஒட்டிய எழுச்சி கூட்டம் நடைபெற்ற நிலையில் வடமாகாண அமைச்சர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் எழுச்சி கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினர். மேற்படி கூட்டம் மாலை 6 மணிவரையில் நடைபெற்றது. Read more

வட மாகாணசபை உறுப்பினராக கந்தையா சிவனேசன்(பவன்) நியமனம்-

K.Sivanesan Bavanவட மாகாணசபையின் முல்லைத்தீவு மாவட்ட உறுப்பினர் வீரவாகு கனகசுந்தரசுவாமி அவர்களின் மரணத்தினால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு புளொட் அமைப்பைச் சேர்ந்த கந்தையா சிவனேசன் (பவன்) தேர்தல்கள் ஆணையாளரினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐ.தே.கட்சி, சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் மேதின கூட்டங்கள்-

unpஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு இணைந்து நடத்திய மே தின கூட்டம் கொழும்பு ஹைட்பார்க் மைதானத்தில் நடைபெற்றது. ஐக்கிய மே தின பேரணி மூன்று பகுதிகளில் இருந்து ஆரம்பமானது. லிப்டன் சுற்றுவட்டம், டார்லி வீதி – தீயணைப்புப் பிரிவுக்கு அருகில் இருந்தும் டோசன் வீதியிலிருந்தும் ஆரம்பமாகிய பேரணிகள் ஹைட்பார்க் மைதானத்தை வந்தடைந்தன. மேதினக் கூட்டத்தின்போது 19ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கான சில யோசனைகளும் நிறைவேற்றப்பட்டன. இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியின் மே தின கூட்டம் ”உழைக்கும் சக்திக்கு பச்சை சமிக்ஞை” என்ற தொனிப்பொருளில் நடைபெற்றது. மாளிகாவத்தை ப்ரதீபா மாவத்தைக்கு அருகிலிருந்து பேரணியாகச் சென்ற ஐக்கிய தேசியக் கட்சியினருடன் தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் ஆதரவாளர்கள் இணைந்து கொண்டனர். மேலும் சில பேரணிகள் ஐக்கிய தேசியக் கட்சியின் பேரணியுடன் இணைந்ததன் பின்னர், சங்கராஜ சுற்றுவட்டம், மருதானை சந்தி, பொரளை சந்தி, பேஸ்லைன் வீதி ஊடாக கெம்பல் மைதானம் வரை அவை பயணித்தன. இந்த பேரணியின் பின்னர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் பொரளை கெம்பல் மைதானத்தில் மே தினக்கூட்டம் ஆரம்பமாகி நடைபெற்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தில் மே தின கொண்டாட்டங்கள்

east-tna-may-07வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அரசியல் கட்சிகள் பலவும் மே தின கொண்டாட்டங்களை இன்று ஏற்பாடு செய்திருந்தன. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மே தின கூட்டம் யாழ். பருத்தித்துறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த மே தினக் கூட்டம் கட்சித் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் தலைமையில் நடைபெற்றது. புதிய ஜனநாயக மாக்சிச லெனின் கட்சியின் மே தின நிகழ்வுகள் வவுனியாவில் இடம்பெற்றது. வவுனியா தமிழ் மகாவித்தியாலயத்திற்கு முன்பாக ஆரம்பமான ஊர்வலம் வவுனியா நகரசபை மண்டபத்தை சென்றடைந்தது. ஆத்துடன் மலையகத்தின் பல பகுதிகளிலும் மேதினக் கொண்டாட்டங்கள் இடம்பெற்றன ஐக்கிய தொழிற் சங்கத்தின் மேதினக் கொண்டாட்டங்கள் பல பகுதிகளிலும் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. ஐக்கிய தொழிற்சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற பூஜை வழிபாடுகளில் மக்கள் கலந்து சிறப்பித்தனர். இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மேதினக் கூட்டம் கட்சித் தலைவர் முத்து சிவலிங்கம் தலைமையில் தலவாக்கலையில் இடம்பெற்றது. தலாவக்கலை நகரிலிருந்து மேதினப் பேரணி தலவாக்கலை நகரசபை விளையாட்டு மைதானத்திற்கு வருகை தந்தது. பெருந்திரளான மக்கள் மோதினக் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டனர்.