வவுனியா மன்னார் வீதியை மறித்து எட்டு கிராமங்களின் மக்கள் எதிர்ப்பு-

fffவவுனியா, வேளன்குளம் பிரதேசத்தின் 08 கிராமங்களை சேர்ந்த மக்கள் வவுனியா – மன்னார் பிரதான வீதியை மறித்து எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். பூவரசன்குளம் சந்தியில் இருந்து திவன வீதி 35 ஆண்டுகளாக புனரமைப்பு செய்யப்படவில்லை என்று கூறி அந்த மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். வெள்ளாங்குளம், மடுக்குளம், சிவநகர், கோவில்மூட்டை, சின்னத்தம்பனை, செங்கப்படை, புன்வுகுடம், கோவில்புதுகுளம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 400 குடும்பங்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர். யுத்தம் காரணமாக 1999ம் ஆண்டு இந்த கிராமங்களில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் 2010ம் ஆண்டு மீண்டும் இப்பிரதேசங்களில் மீள்குடியேறியிருந்தனர். எவ்வாறாயினும் ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற இடத்திற்கு வருகை தந்த வவுனியா மாவட்ட செயலாளர் ரோஹண புஷ்பகுமார குறித்த பிரச்சினைக்கு விரைவில் தீர்வு வழங்குவதாக உறுதியளித்த பின்னர் ஆர்ப்பாட்டக்காரர்கள் அவ்விடயத்திலிருந்து கலைந்து சென்றனர்.

இந்திய வெளியுறவமைச்சர் சுஷ்மா சுவராஜ் இலங்கைக்கு விஜயம்-

sushmaஇலங்கை – இந்திய ஒன்றிணைந்த ஆணைக்குழுவின் 9ஆவது மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு விஜயம் செய்துள்ள

இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவ்ராஜ், இன்றுபகல் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார்.

அவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோரை சந்திக்கவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை, அவர் அலரிமாளிகையில் வைத்து இன்று பிற்பகல் சந்திக்கவுள்ளார்.

இலங்கை, பாகிஸ்தான், மாலைதீவு இணைந்து இராணுவ பயிற்சி-

etஇலங்கை, பாகிஸ்தான் மற்றும் மாலைத்தீவு ஆகிய நாடுகளின் படையினர் இணைந்து பயங்கரவாத எதிர்ப்பு பயிற்சி நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.

இந்த இராணுவ பயிற்சி பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் இரண்டு வாரங்கள் இடம்பெற்றதாக பாகிஸ்தான் இராணுவம் அறிவித்துள்ளது.

இதன்போது பயங்கரவாதத்துக்கு எதிரான தாக்குதல் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டதாக அந்த நாட்டின் இராணுவம் அறிவித்துள்ளது.

அத்துடன் இந்த நாடுகளுக்கிடையில் விஷேட இராணுவ உறவை மேம்படுத்தக்கூடியதாக இருந்ததாகவும் பாகிஸ்தானின் உயர் இராணுவ அதிகாரி கூறியுள்ளார். இந்த கூட்டு இராணுவ பயிற்சி நடவடிக்கை ஈகல் டேஷ் 1 என்று பெயரிடப்பட்டுள்ளது.

மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ஜே.வி.பி முறைப்பாடு-

tyyuyசம்பூர் மின் திட்டம் காரணமாக பாதிப்புக்கு உள்ளாகியுள்ள மக்களின் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளமை சம்பந்தமாக

மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை பதிவுசெய்ய மக்கள் விடுதலை முன்னணி தீர்மானித்துள்ளது.

கிழக்கு மக்களின் குரல் அமைப்புடன் இணைந்து இந்த முறைப்பாட்டை மேற்கொள்ள உள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி கூறியுள்ளது.

இதன்போது ஜே.வி.பியின் அரசியற்குழு உறுப்பினரான கே.டி. லால்காந்த கிழக்கு மக்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளரும், இந்த திட்டத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகள் சிலரும் கலந்து கொள்ளவுள்ளதாக கூறப்படுகின்றது.

750 பேருக்கு இரட்டை பிரஜாவுரிமை வழங்க தீர்மானம்-

ewrer750 பேருக்கு இரட்டை பிரஜாவுரிமை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இரட்டை பிரஜாவுரிமைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களை பரிசீலித்த பின்னரே இதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக குடிவரவு – குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் எம்.என்.ரணசிங்க தெரிவித்தார்.

இரட்டை பிரஜாவுரிமைக்காக விண்ணப்பித்தவர்களில் 3500 பேருக்கு இதுவரை இரட்டைப் பிரஜாவுரிமை வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரட்டை பிரஜாவுரிமை வழங்கும் நடவடிக்கைகள், கடந்த மார்ச் முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டன. இரட்டைப் பிரஜாவுரிமை வழங்கும் நிகழ்வு, பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று முற்பகல் நடைபெற்றிருந்தது.

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் யாழ் விஜயத்தின்போது ஆர்ப்பாட்டம்-

wrerereஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செய்யித் அல் ஹ_ஸைனின் யாழ். விஜயத்தின் போது காணாமல் போனவர்களின் உறவுகள் ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுக்கவுள்ளனர். அகில் இலங்கை தமிழ் காங்கிரஸின் ஏற்பாட்டில் நாளை மறுதினம்இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. யாழ். நல்லூர் ஆலய முன்றலில் காலை 9.30 மணியளவில் நடைபெறவுள்ள இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெறவுள்ளது. குறித்த ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுப்பதற்கான ஆரம்ப கலந்துரையாடல் இன்று வெள்ளிக்கிழமை யாழ். பிரதான வீதியில் அமைந்துள்ள திருமறைக் கலாமன்றத்தில் நடைபெற்றது. அந்த கலந்துரையாடலில், காணாமல் போனோரின் உறவினர்கள் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உட்பட பலர் கலந்துகொண்டிருந்தனர். ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் ஹ_சைனை சந்திப்பதற்கு ஐநா வதிவிட காரியாலயத்திடம் கோரிக்கையை முன்வைத்துள்ளனர். காணாமல் போனவர்கள் மற்றும் இராணுவத்தில் சரணடைந்தவர்களின் விபரங்களை அரசாங்கம் வெளியிட வேண்டுமென்றும், இனியும் தம்மை ஏமாற்ற வேண்டாமென்றும் காணாமல் போனவர்களின் உறவினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

சித்தன்கேணியில் அன்னதான மண்டபம் திறந்துவைப்பு-படங்கள் இணைப்பு-

P1060546வட்டுக் கிழக்கு சித்தன்கேணியில் அமைவு பெற்றுள்ள துறட்டிப்பனை முத்துமாரி அம்பாள் ஆலயத்திற்கு அருகில் தலைவர் திரு.இதயக் அவர்கள் தலைமையில் அண்மையில் இடம்பெற்ற நிகழ்வில் திரு.திருமதி. கனகரத்தினம் மனோன்மணி அவர்களது உபயத்தில் அழகிய அன்னதான மண்பம் அமையப்பெற்றது. இவ் நிகழ்வில் பிரதம அதிதிகளாக முன்னாள் வலிமேற்கு பிரதேசசபையின் தவிசாள் திருமதி.நாகரஞ்சினி.ஐங்கரன், மற்றும் வலி மேற்கு பிரசே செயலர் திரு.ஆ.சேதிநாதன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். முன்னதாக துறட்டிப்பனை முத்துமாரி அம்பாள் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் இடம் பெற்று விருந்தினர்கள் மங்கள வாத்தியம் முழங்க அழைத்து வரப்பட்டனர். தொடர்ந்து முன்னாள் வலி மேற்கு பிரதேச சபையின் தவிசாள் திருமதி.நாகரஞ்சினி.ஐங்கரன், மற்றும் வலிமேற்கு பிரசே செயலர் திரு.ஆ.சேதிநாதன், இழைப்பாறிய கிராம சேவை அலுவலர் திரு சிறீதரன் ஆகியோர் மங்கல விழக்கேற்pனர். தொடர்ந்து முன்னாள் வலி மேற்கு பிரதேச சபையின் தவிசாள் திருமதி.நாகரஞ்சினி.ஐங்கரன், அவர்கள் நாடாவெட்டி மண்டபத்தினை திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து வலி மேற்கு பிரசே செயலர் திரு.ஆ.சேதிநாதன் அவர்கள் மண்டபத்தின் நுளைவாயிலினை திரை நீக்கம் செய்தார். தொடர்ந்து மண்டபத்தின் நினைவுக்கல்லை திரு.திருமதி சந்திரன் தம்பதிகள் திரைநீக்கம் செய்தனர்.இவ் நிகழ்வில் முன்னாள் வலி மேற்கு பிரதேச சபையின் தவிசாள் திருமதி.நாகரஞ்சினி.ஐங்கரன், மற்றும் வலி மேற்கு பிரசே செயலர் திரு.ஆ.சேதிநாதன் மற்றும் கட்டிட ஆக்கப்பணியில் அயராது சேவையாற்றிய திரு.சிவகுமார் அவர்களை நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர்.

P1060458 P1060469 P1060470 P1060472 P1060482 P1060490 P1060498 P1060499 P1060511 P1060515 P1060521 P1060530 P1060531
P1060544
P1060548 P1060549