Header image alt text

வவுனியா ராஜ் முன்பள்ளியின் மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி-(படங்கள் இணைப்பு)

IMG_4869வவுனியா யேசுபுரம், புதிய வீட்டுத்திட்டத்தில் அமைந்துள்ள ராஜ் முன்பள்ளியின் வருடாந்த மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி கிராம சேவையாளர் திரு ஜி.எஸ். நந்தகோபாலன் தலைமையில் நடைபெற்றது.

இவ் நிகழ்வின் சிறப்பு விருந்தினர்களாக வவுனியா நகர சபையின் முன்னாள் உப நகர பிதா திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்), தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் அமெரிக்க இணைப்பாளர் திரு கோபி மோகன், தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் தலைவர் திரு சு.காண்டீபன், பிரதேச அபிவிருத்தி உத்தியோகஸ்தர் திருமதி தி.சோபனா,

சமூர்த்தி உத்தியோகஸ்தர் திருமதி. மகேஸ்வரி, ஒளிச்சுடர் சமூக மட்ட அமைப்புகளின் தலைவர் வைத்தியர் எ.செல்வநாயகம் (சுரேஷ்), கோமரசங்குளம் உடற்கல்வி ஆசிரியர் திரு ப.தங்கவேல் ஆகியோருடன் கிராம மக்கள் என பலரும் கலந்து சிறார்களின் விளையாட்டு விழாவினை சிறப்பித்திருந்தனர். Read more

காணாமல் போனோர் தொடர்பான ஆணைக்குழுவின் காலஎல்லை நீடிப்பு-

missingகாணாமல் போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் காலஎல்லை நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி மேலும் மூன்று மாதங்களுக்கு, குறித்த ஆணைக்குழுவுக்கு செயற்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, அதன் செயலாளர் எச்.டப்ளியூ. குணதாஸ குறிப்பிட்டுள்ளார்.

காணாமல் போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் காலஎல்லை இம் மாதம் 15ம் திகதியுடன் நிறைவடைகின்றது. இந்நிலையில் இதன் காலஎல்லையை நீடிக்குமாறு ஆணைக்குழுவால் ஜனாதிபதியிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்ட நிலையில், மே மாதம் 15ம் திகதி வரை ஆணைக்குழு தொடர்ந்தும் செயற்பட அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக குணதாஸ மேலும் தெரிவித்துள்ளார்.

வவுனியா வடக்கு பலநோக்கு கூட்டுறவு சங்க ஊழியர்கள் போராட்டம்-

dgfgfgfgநெடுங்கேணி வவுனியா வடக்கு பல்நோக்கு கூட்டுறவு சங்கத்தின் ஊழியர்கள் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இன்று முற்பகல் வவுனியா வடக்கு பல்நோக்கு கூட்டுறவு சங்க கட்டடத்திற்கு முன்பாக இந்த உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

வவுனியா வடக்கு பல்நோக்கு கூட்டுறவு சங்கத்தில் முறைகேடுகள் இடம்பெறுவதாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம் சுமத்தினர். உண்ணாவிரதப் போராட்டம் இடம்பெற்ற இடத்திற்கு சென்றிருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இந்த பிரச்சினை தொடர்பில் வடமாகாண கூட்டுறவு அமைச்சர் பொ. ஐங்கரநேசனுடன் ஆலோசித்து தீர்வொன்றை வழங்குவதாக உண்ணாவிரதத்தை முன்னெடுத்தவர்களிடம் வாக்குறுதியளித்துள்ளார்.

வடக்கு மக்களின் மனங்களை வெல்வதே எதிர்பார்ப்பு-

reginold coorayவடக்கு மக்களின் மனங்களை வெல்வதே தனது எதிர்பார்ப்பு என, அம் மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.

வட மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்ட பின்னர் மல்வத்துபீட அஸ்கிரிய மகாநாயக்கரை சந்தித்து பின், ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அமைதி மற்றும் நல்லிணக்க தகவலை வடக்கு மக்களுக்கு கொண்டு செல்ல தான் தகுதியானவன் எனவும் அவர் இதன்போது மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில், கடந்த 14ம் திகதி வடக்கின் புதிய ஆளுநராக ரெஜினோல்ட் குரே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

சுன்னாகம் நீர் மாசு, உரிய முறையில் குடிநீர் விநியோகமின்மையால் அவதி-

chunnakamயாழ். சுன்னாகம் நிலத்தடி நீர் மாசடைந்துள்ளமையால் பாதிக்கப்பட்டுள்ள சுன்னாகம் தெற்கு பகுதியில் உள்ள கிராம மக்களுக்கான குடிநீர் விநியோகம் உரிய முறையில் முன்னெடுக்கப்படுவதில்லை என பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். அத்துடன் தாம் மாசடைந்த நீரையே அன்றாட தேவைகளுக்கு பயன்படுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் மக்கள் கூறுகின்றனர். சுன்னாகம் தெற்கு பகுதி மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினை தொடர்பில் வலி தெற்கு பிரதேச செயலாளர் கூறுகையில், சுன்னாகம் தெற்கு பகுதிகளுக்கான குடிநீர் விநியோகத்தை உடுவில் பிரதேச செயலகம் தனியார் அமைப்பொன்றுடன் இணைந்து முன்னெடுத்ததாவும், குறித்த தனியார் நிறுவனத்தின் ஒப்பந்த காலம் நிறைவடைந்ததும் அவர்கள் தமது பணியினை நிறுத்தியுள்ளதாகவும் ஊடகத்திற்கு கூறியுள்ளார். தம்மிடம் உள்ள வளங்களுக்கு அமைய தாம் குடிநீர் விநியோகத்தை மேற்கொண்டு வருவதாகவும் அதற்கு மேலதிகமான குடிநீர் விநியோகத்தை மேற்கொள்ள தம்மிடம் போதிய வளங்கள் இல்லையெனவும் வலி தெற்கு பிரதேச செயலாளர் ஊடகத்திற்கு தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதிக்கும் ஜேர்மன் உயரதிகாரிகளுக்குமிடையே விசேட கலந்துரையாடல்-

fdgfgமூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு ஜேர்மனி சென்றடைந்த ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று அதிகாலை பேர்லின் விமான நிலையத்தில் வரவேற்கப்பட்டுள்ளார். விமானநிலையத்தை சென்றடைந்த ஜனாதிபதியையும் ஜனாதிபதியின் பாரியார் ஜயந்தி சிறிசேனவையும் ஜேர்மனி அரசாங்கத்தின் பிரதம மரபுச் சீர்முறை அலுவலர் ஜெர்கன் கிரிஸ்டியன் மேர்டன்ஸ், ஜேர்மனிக்கான இலங்கைத் தூதுவர் கருணாதிலக அமுனுகம உள்ளிட்ட இலங்கைத் தூதரக அலுவலர்கள் வரவேற்றனர். ஜேர்மனியில் மூன்று நாட்கள் தங்கியிருக்கும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஜேர்மன் அதிபர் அன்ஜலா மேர்கல், சபாநாயகர் பேராசிரியர் நோபட் ஜெமன்ட் மற்றும் ஜேர்மனியின் சமஷ்டித் தலைவர் ஜோகிம் கோர்க் ஆகியோர் உள்ளிட்ட ஜேர்மனியின் முக்கிய பிரதிநிதிகளைச் சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார். இந்த விஜயத்தின்போது ஜேர்மனிக்கும் இலங்கைக்குமிடையிலான வர்த்தக, கலாசார உறவுகளைப் பலப்படுத்துவதற்கு முக்கிய கவனம் செலுத்தப்படவுள்ளது. இதன்மூலம் ஜேர்மனியுடனான இலங்கையின் வர்த்தக உறவுகள் பெரிதும் முன்னேற்றமடையுமென எதிர்பார்க்கப்படுகிறது. Read more