காணாமல் போனோர் தொடர்பான ஆணைக்குழுவின் காலஎல்லை நீடிப்பு-

missingகாணாமல் போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் காலஎல்லை நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி மேலும் மூன்று மாதங்களுக்கு, குறித்த ஆணைக்குழுவுக்கு செயற்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, அதன் செயலாளர் எச்.டப்ளியூ. குணதாஸ குறிப்பிட்டுள்ளார்.

காணாமல் போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் காலஎல்லை இம் மாதம் 15ம் திகதியுடன் நிறைவடைகின்றது. இந்நிலையில் இதன் காலஎல்லையை நீடிக்குமாறு ஆணைக்குழுவால் ஜனாதிபதியிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்ட நிலையில், மே மாதம் 15ம் திகதி வரை ஆணைக்குழு தொடர்ந்தும் செயற்பட அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக குணதாஸ மேலும் தெரிவித்துள்ளார்.

வவுனியா வடக்கு பலநோக்கு கூட்டுறவு சங்க ஊழியர்கள் போராட்டம்-

dgfgfgfgநெடுங்கேணி வவுனியா வடக்கு பல்நோக்கு கூட்டுறவு சங்கத்தின் ஊழியர்கள் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இன்று முற்பகல் வவுனியா வடக்கு பல்நோக்கு கூட்டுறவு சங்க கட்டடத்திற்கு முன்பாக இந்த உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

வவுனியா வடக்கு பல்நோக்கு கூட்டுறவு சங்கத்தில் முறைகேடுகள் இடம்பெறுவதாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம் சுமத்தினர். உண்ணாவிரதப் போராட்டம் இடம்பெற்ற இடத்திற்கு சென்றிருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இந்த பிரச்சினை தொடர்பில் வடமாகாண கூட்டுறவு அமைச்சர் பொ. ஐங்கரநேசனுடன் ஆலோசித்து தீர்வொன்றை வழங்குவதாக உண்ணாவிரதத்தை முன்னெடுத்தவர்களிடம் வாக்குறுதியளித்துள்ளார்.

வடக்கு மக்களின் மனங்களை வெல்வதே எதிர்பார்ப்பு-

reginold coorayவடக்கு மக்களின் மனங்களை வெல்வதே தனது எதிர்பார்ப்பு என, அம் மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.

வட மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்ட பின்னர் மல்வத்துபீட அஸ்கிரிய மகாநாயக்கரை சந்தித்து பின், ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அமைதி மற்றும் நல்லிணக்க தகவலை வடக்கு மக்களுக்கு கொண்டு செல்ல தான் தகுதியானவன் எனவும் அவர் இதன்போது மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில், கடந்த 14ம் திகதி வடக்கின் புதிய ஆளுநராக ரெஜினோல்ட் குரே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

சுன்னாகம் நீர் மாசு, உரிய முறையில் குடிநீர் விநியோகமின்மையால் அவதி-

chunnakamயாழ். சுன்னாகம் நிலத்தடி நீர் மாசடைந்துள்ளமையால் பாதிக்கப்பட்டுள்ள சுன்னாகம் தெற்கு பகுதியில் உள்ள கிராம மக்களுக்கான குடிநீர் விநியோகம் உரிய முறையில் முன்னெடுக்கப்படுவதில்லை என பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். அத்துடன் தாம் மாசடைந்த நீரையே அன்றாட தேவைகளுக்கு பயன்படுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் மக்கள் கூறுகின்றனர். சுன்னாகம் தெற்கு பகுதி மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினை தொடர்பில் வலி தெற்கு பிரதேச செயலாளர் கூறுகையில், சுன்னாகம் தெற்கு பகுதிகளுக்கான குடிநீர் விநியோகத்தை உடுவில் பிரதேச செயலகம் தனியார் அமைப்பொன்றுடன் இணைந்து முன்னெடுத்ததாவும், குறித்த தனியார் நிறுவனத்தின் ஒப்பந்த காலம் நிறைவடைந்ததும் அவர்கள் தமது பணியினை நிறுத்தியுள்ளதாகவும் ஊடகத்திற்கு கூறியுள்ளார். தம்மிடம் உள்ள வளங்களுக்கு அமைய தாம் குடிநீர் விநியோகத்தை மேற்கொண்டு வருவதாகவும் அதற்கு மேலதிகமான குடிநீர் விநியோகத்தை மேற்கொள்ள தம்மிடம் போதிய வளங்கள் இல்லையெனவும் வலி தெற்கு பிரதேச செயலாளர் ஊடகத்திற்கு தெரிவித்துள்ளார்.