வவுனியா உமாமகேஸ்வரன் இல்லத்தில் புளொட் காரியாலயம் திறந்துவைப்பு-(படங்கள் இணைப்பு)-
 வவுனியா மாவட்ட புளொட் காரியாலயங்களில் ஒன்றான கோவில்குளம், உமா மகேஸ்வரன் வீதி, சிவன் ஆலயத்திற்கு அருகாமையிலுள்ள உமா மகேஸ்வரன் இல்லத்தில் அமைந்துள்ள அலுவலகம் புனருத்தாபனம் செய்யப்பட்ட நிலையில் மக்கள் செயற்பாடுகளுக்காக இன்றையதினம் 14.02.2016 ஞாயிற்றுக்கிழமை காலை 10.20 மணியளவில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் மேற்படி காரியாலயத்தினை திறந்து வைத்தார்.

இன்றைய நிகழ்வுகள் கட்சியின் வவுனியா மாவட்ட இணைப்பாளரும், வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகர பிதாவுமாகிய திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்களது தலைமையில் நடைபெற்றது. ஆரம்ப நிகழ்வாக கோவில்குளம் சிவன் ஆலயத்தில் கட்சியின் சார்பில் விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து கட்சியின் பெயர்ப்பலகையை கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் திரைநீக்கம் செய்ததுடன், கட்சியின் கொடியினையும் ஏற்றிவைத்து, காரியாலயத்தினை நாடா வெட்டி உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து மங்கள தீபங்கள் ஏற்றப்பட்டு, அதிதிகளின் உரைகளுடன் நிகழ்வுகள் வெகு சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது. 
இன்றைய நிகழ்வுகளில் கட்சியின் கௌரவ செயலாளர் திரு சதானந்தம், முன்னாள் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திரு வை.பாலச்சந்திரன், மாகாண சபை உறுப்பினர்களான திரு ஜி.ரி.லிங்கநாதன்(விசு), திரு க.சிவநேசன்(பவன்), வட கிழக்கு மாகாண உள்ளுராட்சி மன்றங்களின் முன்னாள் தலைவர்கள், உறுப்பினர்கள், கட்சியின் மத்தியகுழு உறுப்பினர்கள், சிரேஸ்ட உறுப்பினர்கள், கட்சியின் மாவட்ட இணைப்பாளர்கள், கட்சியின் அமெரிக்க கிளை இணைப்பாளர் திரு கோபி மோகன், மாவட்ட இளைஞரணி செயற்பாட்டாளர்கள், கட்சியின் சுவிஸ் கிளை உறுப்பினர் செல்லப்பா, முன்னாள் அதிபர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பெருந்திரளானோர் கலந்துகொண்டிருந்தனர்.