Header image alt text

கொஸ்கமுவ தீ விபத்தில் இராணுவவீரர் உயிரிழப்பு-

asdsadsdகொஸ்கமவிலுள்ள சாலாவ இராணுவ முகாமில் ஏற்பட்ட தீ விபத்தில் இராணுவ வீரரொருவர் உயிரிழந்துள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். இது தவிர, காயமடைந்த இருவர், அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இச்சம்பவத்தில் காயமடைந்த எவரும், கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலை, கொழும்பு தேசிய வைத்தியசாலை ஆகியவற்றில் இதுவரை அனுமதிக்கப்படவில்லை. கொஸ்கம இராணுவ முகாமில் ஏற்பட்ட தீ விபத்தையடுத்து குறித்த முகாமை சுற்றியுள்ள வீடுகளில் இருந்து வெளியேறிய மக்கள், பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதுடன் மக்கள் கைவிட்டு சென்ற வீடுகளில் உள்ள பொருட்களை பாதுகாக்க இராணுவத்தினர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர் என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயனாத் ஜயவீர கூறியுள்ளார். அத்துடன் சாலாவ இராணுவ முகாமில் ஏற்பட்ட தீ விபத்துத் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு, குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு, சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்னாயக்க உத்தரவு பிறப்பித்துள்ளார். Read more

தியாகி பொன்.சிவகுமாரனின் 42ம்வருட நினைவுதினம்-

sdfdsfsfsதியாகி உரும்பிராய் பொன்.சிவகுமாரனின் 42ம் வருட நினைவுதினம் இன்றாகும். பொன்.சிவகுமாரன் தமிழ் மக்களின் விடிவிற்கான ஆயுதப் போராட்டத்தின் ஆரம்ப ஹர்த்தாக்களில் ஒருவராவார். பொன்.சிவகுமாரான் தமிழ் மக்கள் மத்தியில் அன்பையும், மதிப்பினையும் பெருமளவில் பெற்றிருந்தார்.

இலங்கை போராட்ட வரலாற்றில் தமிழ் மக்களின் விடிவிற்காக முதன்முறையாக தம் இன்னுயிரைத் தியாகம் செய்து ஒரு வரலாறினை இவர் படைத்தார். 1950ம் ஆண்டு ஜூன் மாதம் 26ம் திகதி பிறந்த இவர் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரின் முன்னாள் மாணவராவார். 1974ம் ஆண்டு ஜூன்மாதம் 5ம்திகதி அன்று பொலீசாரின் சுற்றிவளைப்பின்போது பொன். சிவகுமாரன் அவர்கள் அவர்களிடம் அகப்படாமல் தன்னுயிரை தியாகம் செய்தார்.

இராணுவ முகாம் தீ விபத்து, அவிசாவளை பாடசாலைகள், அரச நிறுவனங்களுக்கு விடுமுறை-

fireகொஸ்கம – சலாவ இராணுவ முகாமில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக, ஹைலெவல் வீதியின் ஹன்வெல்லவில் இருந்து கொஸ்கம வரையான பகுதி மூடப்பட்டுள்ளது. குறித்த முகாமிலுள்ள ஆயுதக் கிடங்கில் ஏற்பட்ட திடீர் வெடிப்பே தீ விபத்துக்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது. மேலும், சலாவ இராணுவ முகாமுக்கு அருகிலுள்ள வீடுகளிலுள்ளவர்களை அங்கிருந்து வெளியேறுமாறும் பொலிஸார் கோரியுள்ளனர். கொஸ்கம – சலாவ இராணுவ முகாமில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக, அப் பகுதியை கண்காணிக்க விமானப் படை விமானங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, விமானப் படைப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். மேலும், அப் பகுதியில் தீயணைப்பு வாகனங்களும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இதேவேளை தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர, தரைப் படை, கடற்படை மற்றும் வான் படையினர் அங்கு உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டு தீயணைப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. Read more

ஐதேகவுடன் இணைந்தே போட்டி-அமைச்சர் சரத் பொன்சேகா-

sarathஎதிர்வரும் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து கூட்டமைப்பாக போட்டியிட எதிர்பார்த்துள்ளதாக, ஜனநாயகக் கட்சியின் தலைவர், அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

தற்போதும் தமது கட்சி ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து கூட்டணியாகவே செயற்படுவதாக அவர் கூறியுள்ளார். இன்று காலை கண்டியில் வைத்தே சரத் பென்சேகா இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

பங்களாதேஷ் இலங்கை மக்களுக்கு மீண்டும் உதவி-

bangladeshவெள்ளம் மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிப் பொருட்களை ஏற்றிக் கொண்டு கப்பல் ஒன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

பங்களாதேஷில் இருந்து வந்துள்ள குறித்த கப்பல் இன்று பகல் கொழும்பை அடைந்ததாக தெரியவந்துள்ளது. இதேவேளை, பங்களாதேஷ் முன்னதாகவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விமானம் மூலம் உதவிப் பொருட்களை அனுப்பி வைத்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

பல அரச அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை-

sri lanka300ற்கும் மேற்பட்ட அரச அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக அரச சேவை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. சில ஒழுக்காற்று நடவடிக்கைகள் தொடர்பான விசாரணைகள் பல வருடங்களாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஆணைக்குழு செயலாளர் காமினி செனவிரத்ன தெரிவித்துள்ளார். அரச நிர்வாக சேவை,கணக்காளர்கள்,கல்வி நிர்வாக சேவை, வைத்தியர்கள் உள்ளிட்ட அரச அதிகாரிகளுக்கு எதிராக கிடைத்துள்ள முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. ஒழுக்காற்று நடவடிக்கைகள் காரணமாக சில அதிகாரிகள் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அரச சேவை ஆணைக்குழுவின் செயலாளர் காமினி செனவிரத்ன குறிப்பிட்டுள்ளார். அத்துடன் ஒழுக்காற்று விசாரணைகளை தாமதப்படுத்தப்படுவதை தடுப்பதற்கு விசேட வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

யுத்தக் குற்றங்கள் குறித்து அமர்வில் முறையிட முடிவு-

sivajiயுத்த காலத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து நியாயமான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு, ஜெனிவா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் கோரிக்கை முன்வைக்கவுள்ளதாக, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். ஐ.நா சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அமர்வுகள் ஜூலை மாதம் 13ம் திகதி அளவில் ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ளது. இதன்போதே குறித்த கோரிக்கைகளை முன்வைக்கவுள்ளதாக, அவர் தெரிவித்துள்ளார். இவருடன் வட மாகாண சபை உறுப்பினர்களான அனந்தி சகிகரனும் செல்லவுள்ளதாக தெரியவருகின்றது.

யாழில் மதுபானம் அருந்திய பாடசாலை மாணவர்கள் கைது-

arrest (2)யாழ். சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சபாபதிபிள்ளை சந்தி பகுதியில், மதுபானம் அருந்திக்கொண்டிருந்த பாடசாலை மாணவர்கள் ஐவரை நேற்றுமாலை கைது செய்துள்ளதாக சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எச்.எல்.துஸ்மந்த தெரிவித்தார். யாழ். நகரின் பிரபல பாடசாலையொன்றில் கல்வி கற்கும் மாணவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். மது அருந்திக்கொண்டிருந்த இளைஞர் கும்பலொன்று, பொலிஸாரை கண்டதும் தப்பியோட முயன்றுள்ளது. இவர்களை துரத்தி பிடித்த பொலிஸார் பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு வந்து விசாரணை செய்தபோது இவர்கள் பாடசாலை மாணவர்கள் என தெரியவந்துள்ளது. கைதுசெய்யப்பட்ட மாணவர்களுக்கு எதிராக பொதுவிடத்தில் மதுபானம் அருந்திய குற்றச்சாட்டில் வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அரநாயக்கவின் 2ஆயிரத்து 260பேர் முகாம்களில் தங்கவைப்பு-

aranaikeஅரநாயக்க சாமசர மலை மற்றும் அம்பலகந்த ஆகிய பிரதேசங்களில் ஏற்பட்ட மண்சரிவுகளினால் இடம்பெயர்ந்த 2 ஆயிரத்து 260 பேர் இன்னும் 12 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

794 குடும்பங்களை சேர்ந்த இவர்கள், அரநாயக்க பிரதேச செயலாளர் காரியாலம் வசம் உள்ள பாடசாலைகள் மற்றும் விகாரைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அனர்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது

பாரியளவு சுண்ணாம்பு கல் அகழ்வில் ஈடுபட்ட 12 பேர் கைது-

sunnampuயாழ். காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலைக்கு சட்டவிரோதமான முறையில் சுண்ணாம்பு கல் அகழ்ந்து கொண்டுச்சென்ற சந்தேகத்தில் 12 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அச்சுவேலி வலளாய் பகுதியிலிருந்து பெக்கோ இயந்திரத்தை பயன்படுத்தி திருட்டுத்தனமாக, பாரியளவில் சுண்ணாம்பு கற்களை அகழ்ந்து எடுத்த குற்றச்சாட்டில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பெக்கோ இயந்திரங்கள் 5 மற்றும் டிப்பர் ரக வாகனங்கள் 2 என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காணாமற்போனோர் அலுவலகத்திற்கு உதவ அமெரிக்கா முன்வருகை-

americaஇறுதிக்கட்டப் போரில் காணாமல்போனோர் தொடர்பில் அமைக்கப்படவுள்ள அலுவலகத்திற்கு அமெரிக்கா உதவிகளை வழங்கவுள்ளது இதன்படி அமெரிக்கா இந்த அலுவலகம் தொடர்பில் தகவல்களை பரிமாறிக்கொள்ளவுள்ளது. அமெரிக்க பிரஜைகள் மற்றும் அந்நாட்டின் சட்டரீதியான வதிவிடவாளர்களின் நலன் கருதி, அமெரிக்காவின் ஒத்துழைப்பு இந்த அலுவலகத்துக்கு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது. அத்துடன் ஜெனீவாவில் இலங்கையுடன் இணைந்து யோசனையை முன்வைத்த தரப்பு என்ற அடிப்படையிலும் இந்த உதவி வழங்கப்படுவதாக அத்தூதரகம் குறிப்பிட்டுள்ளது. பிரித்தானியா இலங்கை அரசாங்கத்தின் குறித்த அலுவலக யோசனைக்கு ஆதரவை வெளியிட்டுள்ளது. எனினும் இந்தியா, அவுஸ்திரேலியா உட்பட்ட நாடுகளின் கருத்துக்கள் இன்னும் வெளியாகவில்லை. இதேவேளை இந்த அலுவலகம் குறித்து கருத்து வெளியிட்டுள்ள முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, போரின்போது காணாமல் போனதாக கூறப்படும் பலர் வெளிநாடுகளில் வேறு பெயர்களில் வசிப்பதாக கூறியுள்ளார்.

25,000 பேருக்கு இரட்டைக் குடியுரிமை-

passportவெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் உள்ளிட்ட வெளிநாட்டவர்கள் 25 ஆயிரம் பேருக்கு இந்த ஆண்டின் இறுதிக்குள் இரட்டைக் குடியுரிமை வழங்கப்படும் என உள்நாட்டலுவல்கள் அமைச்சர் நவீன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், மஹிந்த ஆட்சிக் காலத்தில் அவர்களின் குடும்பத்துக்கு நெருக்கமானவர்களுக்கு மாத்திரம் இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட்டது. எமது அரசாங்கம் இதில் மாற்றத்தை செய்துள்ளது. அரசியல் கட்சி, நிறம், இனம், மதம், ஜாதி பேதம் பாராது இரட்டைக் குடியுரிமை வழங்கவுள்ளது. இதுவரையில் அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த 10 ஆயிரம் பேருக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. மாதம் குறைந்தது இரண்டாயிரம் பேருக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கவுள்ளோம். இதனடிப்படையில் இந்த ஆண்டுக்குள் 25 ஆயிரம் வெளிநாட்டவர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

மண்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகள் வழங்க அனுமதி-

landslide_5மண்சரிவினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்துள்ள கேகாலை மாவட்ட மக்களுக்கு காணிகள் மற்றும் வீடுகள் வழங்கும் திட்டத்திற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இறுதி அனுமதி கிடைத்துள்ளது. அனர்த்தங்களை எதிர்கொண்ட கேகாலை மாவட்ட மக்களை மீள்குடியேற்றம் செய்வது சம்பந்தமாக இடம்பெற்ற விஷேட கலந்துரையாடலின்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதற்கு அனுமதி வழங்கியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது. மீள்குடியேற்றம் செய்வதற்கு தகுதியான இடம் மற்றும் தேவையான அளவுகள் இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்காக அரச மற்றும் தனியார் பெருந்தோட்ட காணிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. பெருந்தோட்ட தொழிலுக்கு பாதிப்புக்கள் ஏற்படாத விதமாக மற்றும் குடியேற்றத்திற்கு தேவையான அடிப்படை வசதிகளை வழங்க கூடிய விதமான காணிகளை சுவீகரிக்குமாறு ஜனாதிபதி இதன்போது ஆலோசனை வழங்கியுள்ளார்.

தலைசிறந்த உலக குத்துச் சண்டை வீரர் மொஹமட் அலி காலமானார்-

xasdsadsபிரபல உலக குத்துச் சண்டை வீரரும் முன்னாள் உலக ஹெவிவெயிட் குத்துச்சண்டை சாம்பியனுமான மொஹமட் அலி தனது 74 வது வயதில் காலமானார். சுவாசக் கோளாறு காரணமாக அவர் கடந்த வியாழக்கிழவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளார்.

காஸ்சியுஸ் மர்செல்லஸ் கிளே என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 1964ம் ஆண்டு இஸ்லாம் தேசம் இயக்கத்தில் சேர்ந்த பின் தன் பிறப்பு பெயரை முகம்மத் அலி என மாற்றிகொண்டார். 1942ம் ஆண்டு ஜனவரி 17ம் திகதி பிறந்த தி கிரேடேஸ்ட் தி லூயிவிள்ளே லிப் என்ற பல்வேறு பட்டப் பெயர்களாலும் அழைக்கப்பட்டார். இவர் கலந்து கொண்ட 61 குத்துச் சண்டை போட்டிகளில் 56 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளதுடன் 05 போட்டிகளிலேயே தோல்வியடைந்துள்ளார்.

பெண் சட்டத்தரணிக்கு ஏற்பட்ட அபகீர்த்தி தொடர்பில் கண்டனம்-

saasassகிளிநொச்சியில் உள்ள பெண் சட்டத்தரணி ஒருவருக்;கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் இணையத்தளங்களில் வெளியாகிய செய்தி தொடர்பாக கிளிநொச்சி மாவட்ட சட்டத்தரணிகள் சங்கம் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.

கிளிநொச்சியில் உயர்பதவியில் இருக்கும் பெண் சட்டத்தரணி ஒருவருக்கு அபகீரத்தியை ஏற்படுத்தும் வகையில் அவரது கணவர் தொடர்பாகவும் அவரது குடும்பத்துக்கு அவப்பெயரை உருவாக்கவும் நீதிமன்றை அவமதிக்கும் வகையிலும் வெளியான செய்தி தொடர்பாக கடும் கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கின்றோம். குறித்த செய்தியில் எந்தவித உண்மையும் இல்லை. இது திட்டமிட்டு மேற்;கொள்ளப்பட்ட ஓர் விடயம் என கிளிநொச்சி மாவட்ட சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.

சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு 1.5 பில்லியன் நிதியுதவி-

int fund monitaryஇலங்கைக்கு 1. 5 பில்லியன் அமெரிக்க டொலர்களை நிதியுதவியாக வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக்குழு அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இந்த நிதியுதவி சர்வதேச நாணய நிதியத்தின் 3 வருட விரிவாக்கப்பட்ட நிதிவசதியளிப்புத் திட்டத்தின் கீழ் வழங்கப்படவுள்ளது.

இலங்கையின் பொருளாதார மறுசீரமைப்புக்காக இந்த நிதியுதவி வழங்கப்படவுள்ளது. இது தவிர, இருதரப்பு மற்றும் பலதரப்பு கடன் உதவியாக 650 மில்லியன் அமெரிக்க டொலர் தொகையையும் வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியம் தீர்மானித்துள்ளது.

இளவாலை கன்னியர்மடம் மகாவித்தியாலய பாடசாலை மட்ட மாணவர் பாராளுமன்றம்-2016-(படங்கள் இணைப்பு)

20160526_091909யாழ். இளவாலை கன்னியர்மடம் மகாவித்தியாலய பாடசாலை மட்ட மாணவர் பாராளுமன்றம்-2016 இற்கான கன்னி அமர்வு கடந்த 26.05.2016 வியாழக்கிழமை காலை 9.00 மணியளவில் ஆரம்பமாகி நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக புளொட் தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கலந்துகொண்டிருந்தார். ஆரம்ப நிகழ்வாக பிரதம விருந்தினர் வரவேற்பு நிகழ்வினைத் தொடர்ந்து தேசியக் கொடியேற்றல், பாடசாலைக் கொடியேற்றல், இறைவணக்கம், தீப நடனம், தீபமேற்றல், மௌன வணக்கம் என்பன இடம்பெற்றன. தொடர்ந்து ஆசியுரையினை இளவாலை புனித ஹென்றீஸ் கல்லூரியின் பிரதி அதிபர் அருட்பணி பி. ஜோன் றெக்சன் அவர்கள் ஆற்றினார். வரவேற்புரையினை மாணவர் பாராளுமன்ற பிரதமர் செல்வி ஜே. எமறன்சியா ஆற்றியதையடுத்து, தலைமையுரையினை பாடசாலையின் அதிபர் அருட்சகோதரி செ.ஜெயநாயகி அவர்கள் ஆற்றினார். தொடர்ந்து நிகழ்வுகளாக சத்தியப் பிரமாணம், செங்கோல், மேலங்கி, கோவைகள் வழங்குதல், உறுப்பினர்களின் சத்தியப் பிரமாணமும், பொறுப்புக்கள் கையளித்தலும், பாராளுமன்றம் ஆரம்பித்தல், பிரேரணை முன்வைத்தல் என்பன இடம்பெற்றன. இதனையடுத்து சிறப்புரை, பொறுப்பாசிரியர் உரை என்பன இடம்பெற்றன. தொடர்ந்து கலாசார நிலை அன்றும் இன்றும் என்ற விவாத அரங்கு இடம்பெற்றது. இதனையடுத்து பிரதம அதிதியின் உரை இடம்பெற்று நன்றியுரையைத் தொடர்ந்து நன்றிப் பாடலுடன் நிகழ்வுகள் நிறைவடைந்தன.
Read more

புலிகள் மீதான அமெரிக்கத் தடை நீடிப்பு-

americaதமிழீழ விடுதலைப் புலிகளின் நிதி வலையமைப்பு இயக்க நிலையிலேயே தொடர்ந்தும் காணப்படுகின்றது எனவும் இதனால் புலிகளின் மீதான தடையை நீடிப்பதாகவும் அமெரிக்கா அறிவித்துள்ளது. அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2009ம் ஆண்டு போர் நிறைவுக்குக் கொண்டு வரப்பட்டதன் பின்னர் இலங்கையில் எந்தவிதமான தாக்குதல்களையும் தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொள்ளவில்லை. எனினும், இந்தியாவில் அமைந்துள்ள அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தூதரகங்கள் மீது தாக்குதல் நடத்த முயற்சித்தவர்கள் உள்ளிட்ட 13 புலி ஆதரவாளர்கள் கடந்த 2014ம் ஆண்டு மலேசியாவில் கைதுசெய்யப்பட்டனர். மேலும், 2015ம் ஆண்டில் இந்தியா மற்றும் மலேசியாவில் ஏனைய சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. எனவே, புலிகள் மீதான தடையை நீடிப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

வித்தியாவின் தாயாரை அச்சுறுத்தியவர்களுக்கு விளக்கமறியல்-

vithya murderபுங்குடுதீவு மாணவி வித்தியாவின் தாயாரை அச்சுறுத்திய சந்தேகநபர்களின் உறவினர்களை எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க ஊர்காவல்துறை நீதவான் நீதிமன்ற பதில் நீதிபதி க.ஜீவராணி உத்தரவிட்டுள்ளார். ஊர்காவல்துறை நீதவான் நீதிமன்றில் குறித்த வழக்கு நேற்று விசாரனைக்கு வந்தபோது நீதிபதி மேற்படி உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

வித்தியாவின் படுகொலை தொடர்பான வழக்கு விசாரனைகள் இடம்பெற்று வருகின்ற நிலையில், வித்தியாவின் தாயாரை சந்தேகநபர்களின் உறவினர்கள் அச்சுறுத்தியுள்ளனர். இந்நிலையில், கடந்த சில வழக்கு தவனைகளின் போது வித்தியாவின் தாயார் சட்டத்தரணி ஊடாக நீதிமன்றில் இது தொடர்பாக தெரிவித்திருந்தார். அதன்படி இது தொடர்பாக விசாரனை செய்யுமாறு ஊர்காவல்துறை பொலிஸாருக்கு நீதிவான் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மகிந்தவின் ஊடகப்பேச்சாளர் நாடு கடத்தல்-

dsfssdsசிஎஸ்என் தொலைக்காட்சியின் முன்னாள் தலைவரும், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஊடகப் பேச்சாளருமான ரொகான் வெலிவிட்டவை, சிங்கப்பூர் அரசாங்கம் நாடு கடத்தியுள்ளது. ஆசிய ஒலிபரப்பு கண்காட்சியில் பங்கேற்பதற்காக, கடந்த திங்கட்கிழமை ரொகான் வெலிவிட்ட சிங்கப்பூர் பயணம் செய்திருந்தார்.

சிங்கப்பூர் விமானநிலையத்தில் வைத்து அவரை மூன்று மணிநேரம் தடுத்து வைத்து விசாரணை செய்த அந்நாட்டின் குடிவரவு -குடியகல்வுத்துறை அதிகாரிகள் சிங்கப்பூருக்குள் அவர் நுழைவதற்கான அனுமதியினை வழங்க முடியாது என்று கூறி கொழும்புக்கு திருப்பி அனுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சபாநாயகர் கரு ஜயசூரிய பங்களாதேஷிற்கு விஜயம்-

karuஇலங்கை பாராளுமன்றத்தின் சபாநாயகர் கரு ஜயசூரிய பங்களாதேஷிற்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். டாக்காவில் இடம்பெற உள்ள மத நிகழ்வொன்றில் பங்குபற்றுவதற்காகவே அவர் அங்கு செல்வதாக அவரின் ஊடகப் பிரிவு கூறியுள்ளது.

சபாநாயகரின் இந்த விஜயத்தின் போது, பங்களாதேஷ் ஜனாதிபதி அப்துல் ஹமீத், பங்களாதேஷ் எதிர்கட்சி தலைவி பேகம் இர்ஷாட், அந்நாட்டின் பிரதி சபாநாயகர் உள்ளிட்ட அதிகாரிகள் பலரை சந்திக்கவுள்ளார்.

மஹிந்தவின் இராணுவ பாதுகாப்பு முழுமையாக நீக்கம்-

mahinda (4)முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டிருந்த இராணுவத்தினர் 50பேரையும், இரண்டு கட்டங்களாக நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் பிரகாரம், இன்று 25பேரும் நாளை 25 பேருமாக, அனைத்து இராணுவத்தினரும் நீக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக்கென நியமிக்கப்பட்டிருந்த இராணுவ உத்தியோகஸ்தர்கள் 100பேரில் 50 பேர், ஒரு மாதத்துக்கு முன்னர், நீக்கப்பட்டிருந்தனர். ஏனைய 50 பேரையும், கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் நீக்குவதாக அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில், அந்தத் தீர்மானம் ஒற்றிவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையிலேயே, இன்றும் நாளையும், அவர்களை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. Read more

அரசியலமைப்பை மாற்றுவதே எதிர்பார்ப்பு-சபாநாயகர்-

karu jeyasuriyaநாடாளுமன்றத்தில் சகலரின் ஆதரவு மற்றும் இணக்கப்பாட்டுடன், நாட்டுக்குப் பொருத்தமான அரசியலமைப்பை முன்வைப்பதற்கு நாங்கள் எதிர்பார்த்துள்ளோம் என்று, சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார். அரசியலமைப்புச் சீர்திருத்தம் தொடர்பான பொதுமக்கள் கருத்தறியும் குழுவின் இறுதியறிக்கை, அக்குழுவின் தலைவர் லால் விஜேநாயக்க தலைமையிலான குழுவினால், நாடாளுமன்றில் உள்ள சபாநாயகரின் காரியாலயத்தில் வைத்து கையளிக்கப்பட்டது. அதன்பின் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்தபோதே சபாநாயகர், இதனை தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், யதார்த்தத்துக்கு உகந்த வகையில், அரசியலமைப்பை மாற்றவேண்டும் என்பதே நாட்டு மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பாகும். அப்படியில்லாவிடின், புதிய அரசியலமைப்பை உருவாக்குவதாகும். அது மக்களின் உரிமைகளை பாதுகாப்பவையாக இருத்தல்வேண்டும். நாடாளுமன்றத்தின் அதிகாரம், அரசியலமைப்பை மாற்றுவதற்காகும். எனவே, நான் விசேடமாக உறுதியளிக்கின்றேன். சகலருடைய கருத்துகளைப் பெற்றுக்கொண்டு, நாட்டுக்கு உகந்த அரசியலமைப்பை கட்டாயமாக முன்வைக்;கமுடியும் என குறிப்பிட்டார்.

வெளிநாட்டு கடவுச்சீட்டு விநியோகிப்பதற்கான தடை நீக்கம்-

passportமோதல் மற்றும் அரசியல் காரணங்கள் காரணமாக வெளிநாடுகளுக்கு சென்ற இலங்கையர்களுக்கு வெளிநாட்டு கடவுச் சீட்டு விநியோகிப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நேற்றுடன் நீக்கப்பட்டுள்ளது. கடந்த 2011 ஆம் ஆண்டு விடுக்கப்பட்ட குறித்த தடையை நீக்குவதற்கான சுற்றரிக்கை நேற்று வெளியிடப்பட்டதாகவும் வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்து அகதி அந்தஸ்து பெற்றுள்ள மற்றும் அகதி அந்தஸ்து பெறுவதற்கு விண்ணப்பித்திருந்தவர்களுக்கு வெளிநாட்டு கடவுச் சீட்டு விநியோகிக்க வேண்டாம் என வெளிநாடுகளிலிருந்த இலங்கை தூதுவராலயஙகளுக்கு 2011 ஆம் ஆண்டு மார்ச் மாதம் பணிப்புரை விடுக்கப்பட்டது. இந்த சுற்றறிக்கை காரணமாக குடியுரிமை பாரிய அளவில் மீறப்பட்டுள்ளதாகவும், அரசியல் காரணங்களுக்காக வெளிநாடுகளில் தஞ்சமடைந்வர்கள் குடிவரவு, குடியகழ்வு திணைக்களத்தின் அனுமதிப் பத்திரமின்றி பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்ததாகவும் வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. நாட்டு மக்களிடையே காணப்படும் அரசியல் ரீதியான கருத்து வேறுபாடுகளை நீக்கி அனைவரும் சுதந்திரமாக சுற்றுலா செல்வது உள்ளிட்ட பல காரணங்களை அடிப்படையாக கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டிருந்த பகீரதி விடுதலை-

bakeerathiகடந்த 2015ஆம் ஆண்டு மார்ச் மாதம் 2ஆம் திகதியன்று, பிரான்ஸிலிருந்து இலங்கை வந்தபோது, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டவரும் புலிகள் இயக்கத்தின் கடற்புலி பிரிவுத் தலைவியென குற்றஞ்சாட்டப்பட்டவருமான பகீரதி முருகேசு என்பவர், சட்டமா அதிபரின் பரிந்துரையின் பேரில், அவருக்கு எதிரான வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். அத்துடன், நீதிமன்றத்தின் பொறுப்புக்கு எடுக்கப்பட்ட பகீரதியின் கடவுச்சீட்டையும், அவரிடமே வழங்குமாறு, கொழும்பு மேலதிக நீதவான் அருணி ஆட்டிகல, நேற்று நீதிமன்ற பதிவாளருக்குப் பணிப்புரை விடுத்தார். 1991ஆம் ஆண்டில், புலிகள் இயக்கத்தில் பயிற்சி பெற்ற பகீரதி, 1996இல் கடற்புலிகளின் பெண்புலிகள் பிரிவின் தலைவியாக நியமிக்கப்ட்டாரென, பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால், குற்றஞ்சாட்டப்பட்டிருந்தார். சுப்பிரமணியம் ஜெயநேசன் என்பவரைத் திருமணம் செய்த இவர், 2005இல், தனது கணவனுடன் பிரான்ஸ{க்குச் சென்றார். இவர் சார்பில், சட்டத்தரணிகளான கே.வி.தவராசா, நளினி இளங்கோவன் மற்றும் சுபராஜா துஷ்யந்தன் ஆகியோர் ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

யாழில் இரு கல்லூரிகளின் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்-

asddsdபாதுகாப்பு படையினரால் விடுவிக்கப்பட்ட யாழ் காங்கேசன்துறை நடேஷ்வரா கல்லூரி மற்றும் காங்கேசன்துறை கனிஷ்ட வித்தியாலம் ஆகியவற்றின் கல்வி நடவடிக்கைகள் பூர்வீக இடங்களில் இன்று மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சுமார் 26 வருடங்களின் பின் இந்த இரு பாடசாலைகளினதும் கல்வி நடவடிக்கைகள் இன்று பூர்வீக இடத்தில் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன. வலிகாமம் வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ்.சந்திரராநா தலைமையில் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன. ஆரம்ப விழாவில் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களும், மாகாண சபை அமைச்சர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களும் கலந்துகொண்டிருந்தனர். யுத்தத்தின் பின் பாதுகாப்பு பிரிவினர் நிலைகொண்டிருந்த குறித்த இரு பாடசாலைகளும் கடந்த மார்ச் 12ஆம் திகதி விடுவிக்கப்பட்டன. காங்கேசன்துறை நடேஷ்வரா கல்லூரி மற்றும் காங்கேசன்துறை கனிஷ்ட் வித்தியாலயம் ஆகியவற்றின் கல்வி நடவடிக்கைகள் கடந்த 26 வருடங்களாக தௌ;ளிப்பழை துர்க்கையம்மன் ஆலயத்திற்கு அருகில் தனியார் காணியில் நடத்தப்பட்டன. காங்கேசன்துறை, மாவிட்டபுரம், தெல்லிப்பழை, மயிலிட்டி, தையிட்டி, ஊரணி ஆகிய பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் இந்த இரு பாடசாலைகளிலும் கல்வி பயில்கின்றனர். மேலும் யுத்ததால் இடம்பெயர்ந்து சபாபதிபிள்ளை முகாம் மற்றும் கண்ணகிபுரம் முகாமில் தங்கியுள்ள மாணவர்களும் இந்த இரண்டு பாடசாலைகளிலும் கல்வி பயில்கின்றனர்.

பொலிஸ்மா அதிபர் அமெரிக்காவுக்கு விஜயம்-

pujitha jayasundaraபொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர அமெரிக்காவிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். நேற்று இரவு பொலிஸ்மா அதிபர் அமெரிக்காவின் நியுயோர்க் நகரம் நோக்கி சென்றதாக பொலிஸ் தலைமையகம் கூறியுள்ளது. ஐக்கிய நாடுகள் பொலிஸ் மா அதிபர்களுக்கான மாநாட்டில் பங்கேற்பதற்காக அவர் அமெரிக்காவிற்கு விஜயம் செய்துள்ளார். மோசசடி நிகழ்வுகள், சர்வதேச குற்றங்கள் மற்றும் உலக குற்ற விசாரணை சம்பந்தமாக பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர இம்மாநாட்டில் உரையாற்றவுள்ளார். இதற்கிடையில் பூஜித் ஜயசுந்தர மீளவும் நாடு திரும்பும் வரையில் பதில் பொலிஸ் மா அதிபராக, சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் எஸ்.எம். விக்ரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் 09ம் திகதி இந்த நியமனம் செல்லுபடியாகும் என்று பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.

காணிப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக விசேட இணக்க சபை-

sri lankaயுத்தம் காரணமாக பாதிக்கப்பட்ட வட மாகாண மக்களின் காணி, வீடு மற்றும் உடைமைகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக விசேட இணக்க சபையை நியமிக்க நீதி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கான நடவடிக்கைகள் நீதி அமைச்சின் இணக்க சபை ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், இணக்க சபையின் உறுப்பினர்களுக்கான நியமனங்களும் வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் வட மாகாண மக்கள் இழந்த தமது பூர்வீக காணிகள், வீடுகளின் மற்றும் உடைமைகளின் சட்டரீதியான உரிமையாளர்களை அடையாளம் காணும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. உண்மையான உரிமையாளர்களிடம் அவர்களின் உடைமைகளை ஒப்படைப்பதற்கு அரசாங்கம் விசேட விதிமுறைகள் சட்டத்தையும் அண்மையில் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பித்துள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் வட மாகாணத்தில் வாழ்ந்து வரும் மக்களின் காணியுரிமையை உறுதிசெய்வதில் காணப்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணமுடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யானை தாக்கி 6வயது சிறுமி மரணம்-

sfddகாட்டு யானை தாக்கியதில் முதலாம் ஆண்டில் கல்வி பயிலும் 6 வயது சிறுமி பரிதாபகரமான முறையில் பலியான சம்பவம் மட்டக்களப்பு வவுணதீவு பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. இராசையா ரோஜினி என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் சிறுமியின் தந்தை படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்றிரவு 9.00 மணியளவில் வவுணதீவு கற்பகக்கேணி கிராமத்தில் குறித்த சம்பவம் இடம்பெற்றதாக தெரியவருகின்றது. பலியான சிறுமியின் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. வவுணதீவு பொலிசார் விசாரணைளை மேற்கொண்டு வருகின்றனர். குறித்த பகுதியில் காட்டு யானையின் தாக்குதலினால் பலர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

30 குடும்பங்களை சேர்ந்த 142 பேரை இடம்பெயர கோரிக்கை-

landslide_5பொகவந்தலாவ லோய்னோன் தோட்ட பகுதியில் மண் சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கபட்டுள்ளமையால் 30 குடும்பங்களை சேர்ந்த 142 பேரை இடம்பெயருமாறு வலியுறுத்தி உள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று காலை தோட்ட நிர்வாகத்தால் இந்த அறிவுறுத்தல் வழங்கபட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவிக்கின்றனர். கடந்த 2014ம் வருடம் டிசம்பர் மாதம் 31ம் திகதி ஏற்பட்ட மண்சரிவின் போது ஒரே குடும்பத்தை சேர்ந்த தாயும் மகளும் பலியானதை அடுத்து, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் பரிசோதனையின் போது குறித்த தோட்ட மக்களை வெளியேறுமாறு முன்கூட்டிய அறிவித்துள்ள போதிலும் இந்த அறிவித்தலை தோட்ட நிர்வாகம் மக்களுக்கு அறிவிக்கவில்லையென அம் மக்கள் குற்றம் சுமத்துகின்றனர். எனவே லோய்னோன் தோட்ட மக்களின் குடியிருப்புக்களில் பாரிய வெடிப்புகள் காணப்படுவததோடு குடியிருப்புகளுக்கு அருகாமையில் மண்மேடு சரிந்து விழும் அபாயத்தில் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. Read more

யாழ். பொது நூலகம் எரிக்கப்பட்ட 35ம் ஆண்டு நினைவுதினம்-

burning libraryஇன்று யாழ்ப்பாணம் பொது நூலகம் எரிக்கப்பட்ட 35ம் ஆண்டு நினைவு தினமாகும். 1981ம் ஆண்டு ஜூன்மாதம் 01ம்திகதி யாழ் நூலகம் எரிக்கப்பட்ட செய்தி கேட்டு யாழ். நடமாடும் நூலகம் என போற்றப்பட்டு வந்த பன்மொழிப் புலவர் தாவிது அடிகளார் மாரடைப்பால் மரணமானார். தென்னாசியாவிலேயே மிகவும் பெரியதும் 98,000ற்கும் அதிகமான புத்தகங்களையும், தேடற்கரிய கையெழுத்து பிரதிகளை உடையதுமான யாழ். பொதுநூலகம் மனிதகுலத்திற்கே விரோதமான ஒரு குற்றச்செயலாகவும், பண்பாட்டுப் படுகொலையாகவும் தீயிட்டு கொளுத்தப்பட்டது. இந்நிகழ்வு ஈழத் தமிழ் மக்களை மாத்திரமின்றி உலகத்தையே பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. 20ஆம் நூற்றாண்டின் இன, நூலழிப்புகளில் ஒரு மிகப்பெரும் வன்முறையாகவும் இது கருதப்படுகிறது. 1996ம் ஆண்டின் பிற்பகுதியில் யாழ். நூல்நிலையத்தை மறுநிர்மாணம் செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து புளொட், அமைப்பினரும், சில தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகளும், தமிழ் அரசியல் பிரமுகர்களும் இப்பணிகளில் முனைப்புடன் ஈடுபட்டு வந்தனர். யாழ். பொது நூலகத்தை மறுநிர்மாணம் செய்வதற்கு பாடுபட்டவர்கள் அனைவரும் என்றும் நினைவுகூரப்பட வேண்டியவர்களே. இதேவேளை யாழ்.பொது நூலகம் எரிக்கப்பட்டு 35ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு இன்று காலை 9 மணியளவில் யாழ். நூலகத்தில் நினைவஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.

வித்தியா கொலை வழக்கின் சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு-

vithya murderபுங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ள பன்னிரண்டு சந்தேகநபர்களையும் எதிர்வரும் 15ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு இன்று ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் பதில் நீதிவான் கருப்பையா ஜீவராணி முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது. கடந்த வழக்குத் தவணையின்போது மாணவி கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ள சுவிஸ் குமார் என அழைக்கப்படும் மகாலிங்கம் சசிக்குமார் என்பவர் பொதுமக்களால் பிடிக்கப்பட்டு, பொலிசாரிடம் கையளிக்கப்பட்ட பின்னர் எவ்வாறு கொழும்புக்கு தப்பிச் சென்றார் என்பது தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு அறிக்கை சமர்பிக்க ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.றியாழ் உத்தரவிட்டிருந்தார். அது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதனால் அடுத்த தவணையில் அறிக்கைகளை சமர்ப்பிப்பதாக குற்ற தடுப்பு புலனாய்வு பிரிவு பொலிசார் இன்றையதினம் பதில் நீதிவானிடம் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து பன்னிரண்டு சந்தேகநபர்களையும் எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதிவான் கருப்பையா ஜீவராணி உத்தரவிட்டுள்ளார்.

இராணுவ அதிகாரிகளின் மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள அனுமதி-

prageeth ekneligodaபிரகீத் எக்னலிகொட காணாமல் போனதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமையால் தமது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக, கூறி இராணுவத்தின் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் சிலர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உயர்நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் மற்றும் பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட குழுவினர் பிரதிவாதிகளாக குறித்த மனுவில் பெயரிடப்பட்டுள்ளனர். எந்தவொரு நியாயமும் இன்றி தீவிரவாத தடைச் சட்டத்தின் கீழ் தம்மைக் கைதுசெய்து விளக்கமறியலில் வைக்க குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளதாக, மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தம்மை விளக்கமறியலில் வைக்கும்படி, ஹோமாகம நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்டமை மூலம் தமது சுதந்திரம் இழக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். விடயங்களை ஆராய்ந்த உயர்நீதிமன்றம் எதிர்வரும் ஆகஸ்ட் 29ம் திகதி குறித்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ள குற்றப் புலனாய்வுத் திணைக்களப் பணிப்பாளர், பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட குழுவினருக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

நோர்வே இராஜாங்க செயலாளர் வடக்கு முதல்வர் மற்றும் ஆளுநருடன் சந்திப்பு-

ewrerererssssssமூன்று நாள் விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள நோர்வே வெளிவிவகார அமைச்சின் இராஜாங்க செயலாளர் டொரே ஹேடர்ம் உள்ளிட்ட ஐவர் அடங்கிய குழுவினர்கள் இன்று யாழ் மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தனர். அவர் இன்று யாழ் மாவட்டத்தில் அமைந்துள்ள வடமாகாண ஆளுநர் அலுவகத்திற்கு விஜயம் செய்ததுடன் வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இதன்போது, வட மாகாணத்தில் நோர்வே அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுகின்ற அபிவிருத்தி திட்டங்கள், நோர்வே அரசாங்கத்தினால் புதிதாக ஆரம்பிக்கப்பட இருக்கும் உட்கட்டுமான பணிகள், சமூக நலன் மேம்பாட்டுத் திட்டங்கள், பொருளாதார ரீதியாக பெண்களை தலைமைத்துவமாக கொண்ட குடும்பங்களின் வாழ்வாதார கட்டமைப்புக்களை உருவாக்கல் போன்ற விடயங்கள் பற்றியும் இங்கு கலந்துரையாடப்பட்டன. மேலும் மீனவ குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகளை பெற்றுக் கொடுக்க பல்வேறு வகையிலான உதவிகளை வழங்க எதிர்பார்த்துள்ளதாக டொரே ஹேடர்ம் தெரிவித்தாக வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே கூறினார். இதனை தொடர்ந்து அவர் வடமாகாண முதலமைச்சரை கைத்தடியில் அமைந்துள்ள வடமாகாண முதலமைச்சரின் அலுவலகத்தில் சந்தித்தார். இதன்போது, வடமாகாண சபையின் தற்போதைய நிலைமைகள், அதனுடாக மக்களுக்கு முன்னெடுக்கும் பணிகள் போன்ற பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளன.

உலக வாக்காளர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்வுகள்-

sadsasssதேர்தல் திணைக்களம், யாழ் மாவட்ட செயலகம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் உலக வாக்காளர்கள் தினத்தினை முன்னிட்டு வாக்காளர்களின் வாக்கு உரிமைகளைப் பற்றி அறிவுருத்தும் வகையில் விழிப்புணர்வு நிகழ்வுகள் இன்று யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் இடம்பெற்றது. இவ் ஊர்வலம் இன்று யாழ் மத்திய பேஷரூந்துநிலையத்தில் ஆரம்பமாகி யாழ் ஆஸ்பத்திரி வீதியூடாக மாவட்ட செயலகம் வரை சென்று அங்கு விழிப்புணர்வு நிகழ்வுகளும் இடம்பெற்றன. இதில் வாக்காளர்களின் வாக்கு உரிமைகள் பற்றி விழிப்புணர்வு நாடகம் மற்றும் உலக வாக்காளர்கள் தினத்தின் முக்கியத்துவம், வாக்காளர்களின் வாக்கு உரிமைகள், இதனுடாக மக்களுக்கான முக்கியத்துவம் போன்ற விடயங்கள் பற்றி விழிப்புணர்வு சிறப்புரைகளும் இடம்பெற்றன. இவ் விழிப்புணர்வு நிகழ்வில் மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட், தேர்தல் ஆணைக்குழு தலைவர் போராசிரியர் எஸ்.ரட்ணஜீவன் மற்றும் மாவட்ட செயலக அதிகாரிகள் திணைக்கள அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

தமிழில் தேசிய கீதம் பாடுவதற்கு எதிரான மனு பரிசீலணை-

national anthem in tamilஇலங்கை தேசிய கீதத்தை தமிழ் மொழியில் பாடுவது அரசியலமைப்புக்கு முரணானது என அறிவிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை, ஜூலை மாதம் 7ம் திகதி பரிசீலணைக்கு எடுத்துக் கொள்ள உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. களனி பகுதியைச் சேர்ந்த மூவரால் குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக, எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். கடந்த சுதந்திர தின நிகழ்வின்போது தமிழில் தேசிய கீதம் பாட அமைச்சரவை எடுத்த முடிவு, அரசியலமைப்புக்கு எதிரான செயற்பாடு எனவும் அந்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை மூலம் அமைச்சரவை அரசியலமைப்பை மீறியுள்ளதாக, தீர்ப்பளிக்குமாறும் உயர்நீதிமன்றத்திடம் மனுதாரரால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி வேண்டி கவனயீர்ப்பு-

asAபடுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி வேண்டி மட்டக்களப்பில் இன்று கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு காந்தி பூங்காவிற்கு முன்பாக இடம்பெற்ற இந்த கவனயீர்ப்பு போராட்டத்தை, மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் ஏற்பாடு செய்திருந்தது. படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் 12 ஆவது நினைவு தினத்தினை முன்னிட்டு இந்த கவனயீர்ப்பு போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஊடகவியலாளர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் பொது அமைப்புகளின் பிரதிநிதிககள், அரசியல் பிரதிநிதிகள் சிவில் சமூக பிரதிநிதிகள் மற்றும் பொது மக்கள் என பலரும் இதன்போது கலந்துகொண்டிருந்தனர். ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பான விசாரணையை துரிதப்படுத்துமாறும் ஊடக அடக்குமுறையை நிறுத்துமாறும் இதன்போது கோரிக்கை விடுக்கப்பட்டது. பத்திரிகையாளராக மத்திரமன்றி சிறந்த எழுத்தாளராகவும் பல நூல்களை எழுதியுள்ள ஐயாத்துரை நடேசன் 2004 ஆம் ஆண்டு மே மாதம் 31 ஆம் திகதி மட்டக்களப்பில் சுட்டுக்கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

நிரந்தர நியமனம் கோரி கைக்குழந்தைகளுடன் ஆர்ப்பாட்டம்-

gfffநிரந்தர நியமனம் கோரி, தமது கைக்குழந்தைகளை கையில் ஏந்தியவாறு சுகாதார ஊழியர்கள் வடமாகாண ஆளுநர் அலுவலகத்தின் முன்பாக இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இதன்போது, வடமாகாண ஆளுநரை சந்தித்து நிரந்தர நியமனம் குறித்து கலந்துரையாடினர். யாழ். மாவட்டத்தில் உள்ள வைத்தியசாலைகள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர் அலுவலகங்களின் கீழ் சுமார் 320க்கும் மேற்பட்டவர்கள் கடமையாற்றினர். 15 வருடங்கள் மற்றும் அதற்கு குறைவான காலப்பகுதிகளில் ஒப்பந்தத்தின் அடிப்படையில் கடமையாற்றிய குறித்த சுகாதார ஊழியர்கள் கடமையிலிருந்து யாழ். மாவட்ட சுகாதார பணிமனையினால் நீக்கப்பட்டனர். இவ்வாறு நீக்கப்பட்டதன் பின்னரும் பல பொதுசுகாதார பரிசோதகர்கள் அலுவலகத்தில் கடமையாற்றி வருகின்றனர். இவ்வாறு கடமையாற்றி வரும் தமக்கு நிரந்தர நியமனம் வழங்க கோரி கடந்த பல மாதங்களாக வடமாகாண சபை முன்பாகவும் வடமாகாண சுகாதார அமைச்சரின் அலுவலகத்தின் முன்பாகவும் போராட்டங்களை குறித்த ஊழியர்கள் முன்னெடுத்து வந்தனர். Read more