 யாழ். மூளாய் இந்து இளைஞர் சங்கத்தின் 75ம் ஆண்டு நிறைவு பவள விழா இன்று (21.10.2018) பிற்பகல் 2.30மணியளவில் மூளாய் இந்து இளைஞர் மன்றத் தலைவர் சி.யனாத்தனன் தலைமையில் மூளாய் பிரசாத் அரங்கில் நடைபெற்றது.
யாழ். மூளாய் இந்து இளைஞர் சங்கத்தின் 75ம் ஆண்டு நிறைவு பவள விழா இன்று (21.10.2018) பிற்பகல் 2.30மணியளவில் மூளாய் இந்து இளைஞர் மன்றத் தலைவர் சி.யனாத்தனன் தலைமையில் மூளாய் பிரசாத் அரங்கில் நடைபெற்றது. 
நிகழ்வின் முதன்மை விருந்தினராக வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் அவர்களும், விசேட விருந்தினர்களாக யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் கலாநிதி இ.விக்கினேஸ்வரன், புளொட் தலைவரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன், பூநகரி பிரதேச செயலாளர் ச.கிரு~னேந்திரன் ஆகியோரும் கலந்து சிறப்பித்திருந்தார்கள். ஆரம்ப நிகழ்வாக ஆலய வழிபாடு இடம்பெற்று, விருந்தினர்கள் கௌரவிக்கப்பட்டு மங்கல இசையுடன் வரவேற்கப்பட்டனர். தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட வரவுசெலவுத் திட்ட நிதியொதுக்கீட்டில் புனரமைக்கப்பட்ட மன்றக் கட்டிடத்தை வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் அவர்கள் வைபவ ரீதியாக திறந்துவைத்தார். Read more
 
		     யாழ். ஏழாலை மேற்கு மாதர் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் புதிய கட்டடத் திறப்பு விழா இன்று (21.10.2018) ஞாயிற்றுக்கிழமை காலை 9மணியளவில் சங்கத்தின் தலைவர் திருமதி மைதிலி சிவநாதன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.